பாரக்ஸ் டெபாசிட் போனசை உடனே வித்ட்ரா வாங்கலாமா?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் டெபாசிட் போனசை உடனே வித்ட்ரா வாங்கலாமா?

Post by ஆதித்தன் » Sun Jan 15, 2017 3:39 pm

பாரக்ஸ் ட்ரேடிங் செய்பவர்களை உற்சாகப்படுத்த எடுத்தவுடனே டெபாசிட் போனஸ் என்ற ஒர் வாசகம் தான் நம் கண்களை பறிக்கும்.

100 டாலர் டெபாசிட் செய்தால் 20% போனஸ் ... 35% போனஸ்... சில நேரம் 100% போனஸ் கூட கொடுப்பார்கள்.

அடிப்படையாக எப்பொழுதும் கிடைப்பது 20% போனஸ்.. சிறப்பு நாட்களில் 100% கிடைக்கும்.

இப்படி டெபாசிட் செய்தாலே போனஸ் என்று கூடுதல் தொகையை வழங்கிவிடுகிறார்களே? இதனை அப்படியே வித்ட்ரா கொடுத்து வாங்கிடலாமா? என்று பலர் கருதுவார்கள். சிலர் அவ்வாறு டெபாசிட் செய்து, பேலன்ஸ் டபுளாக கிரிடிட் ஆனவுடனே வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.

போனஸ் பணத்தை வித்ட்ரா கொடுத்தால் என்ன ஆகும் என்பதனை ஆப்சன் பாரக்ஸ் அக்கவுண்ட் நடைமுறைப்படி விவரத்தினை சொல்கிறேன்.

ஆப்சன் பாரக்ஸ் அக்கவுண்டில் 100 டாலரை 20% போனஸ் வீதத்தில் டெபாசிட் செய்தால் 120$ கிரிடிட் ஆகும். அதே நேரத்தில் வேஜர்/பிணை என்றொரு மற்றொரு கணக்கீடும் உள்ளே போனஸ் பெற்ற டாலரை 35-ஆல் பெருக்கி வரும் தொகையான 700 டாலர் தொகையில் நிர்வகிக்கப்படும்.

பிணை அக்கவுண்டில் உள்ள 700 டாலர் எப்பொழுது சுழியம்/பூஜ்ஜியம் ஆகிறதோ அதற்குப் பின்னர் தான் பணம் வித்ட்ரா ரெக்யூஸ்ட் ஏற்கப்பட்டு பணம் தரப்படும்.

பிணை அக்கவுண்டில் உள்ள 700 டாலர் பூஜ்ஜியம் ஆவதற்கு, நீங்கள் புக் செய்யும் ஒவ்வொரு ஆர்டரின் மதிப்பும் இங்கே கழிக்கப்பட்டுக் கொண்டே வரும். அதாவது 10 டாலரில் ஒர் டீல் ஒபன் செய்து, வெற்றியோ தோல்வியோ ரிசல்ட் வந்துவிட்டது என்றுச் சொன்னால், டீல் தொகையான பத்து டாலர் பிணை அக்கவுண்டில் கழிக்கப்படும். இப்படி நீங்கள் 700 டாலர்க்கு டீல் செய்தப் பின்னர் தான் வித்ட்ரா கொடுத்து பணம் பெற்றுக் கொள்ள முடியும்.

100% போனஸ் ஆபரில் 100 டாலர் டெபாசிட் செய்து போனசாக 100 டாலர் பெற்று 200 டாலர் அக்கவுண்டில் கிரிடிட் ஆனால், போனஸ் டாலரான 100$ X 35 = 3500 $ பிணை அக்கவுண்டில் வைக்கப்படும். டீல் ஒபன் செய்து, 3500 டாலர் பிணை அக்கவுண்ட் பூஜ்ஜியம் ஆனப் பின்னர் தான் வித்ட்ரா பெற முடியும்.

ஒபன் செய்யும் டீல் முடிவுகள் அப்படியே சரியாக வெற்றியானால் இலாபத்தோடு மெயின் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிடும்.

பிணை அக்கவுண்ட் பேலன்ஸ் பூஜ்ஜியம் ஆக்க டீல் ஒபன் செய்துதான் செய்ய வேண்டும்.

டீல் வெற்றி தோல்வி எப்பொழுதும் போல மெயின் அக்கவுண்டில் கிரிடிட் ஆகிவிடும் என்பதால், இலாபங்களை மொத்தமாக வித்ட்ரா கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

டெபாசிட் செய்த பொழுது கிடைத்த போனஸ் பணத்தினை வித்ட்ரா செய்ய நினைத்த பொழுது நடந்த அனுபவத்தினை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இதன் மூலம் நீங்கள் டெபாசிட் செய்வதற்கு முன்னரே போனஸ் தொகை வாங்கினால் பிணை அக்கவுண்ட் உருவாகும் என்பதனை அறிந்து கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல் செயல்பட்டுக் கொள்ள இது ஒர் படிப்பாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி.


பாரக்ஸில் கவனத்துடன் செயல்பட்டு பணம் சம்பாதிக்க வாழ்த்துகள்.

www.click2m.com
User avatar
jegi0905
Posts: 2
Joined: Mon Jun 06, 2016 4:43 pm
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் டெபாசிட் போனசை உடனே வித்ட்ரா வாங்கலாமா?

Post by jegi0905 » Mon Jan 23, 2017 5:07 pm

Deposit Bonus -ன் சூட்சுமத்தை தெளிவாக விளக்கியதற்கு நன்றி.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”