Forex கரன்சி ட்ரேடிங் வர்த்தக நேரம் - எந்த நேரத்தில் ட்ரேடிங் செய்யலாம்?

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex கரன்சி ட்ரேடிங் வர்த்தக நேரம் - எந்த நேரத்தில் ட்ரேடிங் செய்யலாம்?

Post by ஆதித்தன் » Thu Jan 12, 2017 7:46 pm

பாரக்ஸ் ட்ரேடிங்க் என்பது 24 மணி நேர வர்த்தகம் என்றுச் சொன்னாலும் குறிப்பிட்ட வர்த்தக நேரத்தில் ட்ரேடிங் செய்யும் பொழுதுதான் நல்ல இலாபத்தினைப் பார்க்க முடியும். தற்பொழுது மொபைல் வழியாக வர்த்தகம் செய்ய முடியும் என்பதால் எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் வர்த்தகம் செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்றுச் சொன்னால்லும், அவ்வாறு குறிப்பிட்ட வர்த்தக நேரத்தில் ட்ரேடிங்க் செய்ய முடியாதவர்கள் கிடைக்கும் நேரத்தில் பெண்டிங் ஆர்டர் புக் செய்து வர்த்தக நேரத்தில் ஆர்டர் ரன் ஆகும்படி செய்தும் இலாபம் பார்க்கலாம்.


பாரக்ஸ் உலக அளவிலான வர்த்தகம் ஆகும். பாரக்ஸ் வர்த்தக நாடுகளை நான்கு பிரிவுகளாக பிரித்து வர்த்தக நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். அவை, பசிபிக் வர்த்தக நேரம், எசியன் வர்த்தக நேரம், இரோப்பியன் வர்த்தக நேரம் மற்றும் அமெரிக்கன் வர்த்தக நேரம்.


வர்த்தக கடிகாரம் GMT எனப்படும் Greenwich Mean Time என்ற நேரப்படி காட்டப்படுகிறது.


பசிபிக் வர்த்தக நேரம், GMT 21.00 ஆரம்பித்து 07.00 இல் முடிவடைகிறது. ஆஸ்திரேலியா & நியுசிலாந்து போன்ற நாட்டு வங்கிகள் இந்த நேரத்தில் பங்கெடுத்து கொள்கின்றன. ஆகையால், AUD/USD & NZD/USD ஆகிய கரன்சி இணைகள் இந்த நேரத்தில் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. மற்ற கரன்சிகள் அதிகம் ஏற்றம் இறக்கம் இருக்காது என்பதால் பசிபிக் நேரத்தில் மற்றவர்களும் இதனையே வர்த்தகத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

பசிபிக் வர்த்தக நேரம் தொடங்கிய இரண்டு மணி நேரம் கழித்து, ஆசியன் வர்த்தகம் தொடங்குகிறது. இந்த நேரத்தில் மார்க்கெட் கொஞ்சம் வேகமெடுத்து இயங்க ஆரம்பிக்கும். GMT 23.00 ஆரம்பித்து GMT 09.00 வரை இயங்கும் ஆசியன் மார்க்கெட்டில் USD/JPY & EUR/JPY ஆகிய கரன்சி இணைகள் அதிகளவில் ட்ரேடிங் ஆகுகிறது. ஆகையால் இந்திய நேரப்படி காலை வர்த்தகத்திற்கு USD/JPY கரன்சி உகந்ததாக பார்க்கப்படுகிறது.


GMT 7.00 - மணிக்கு இரோப்பியன் வர்த்தக நேரம் ஆரம்பமாகிவிடுகிறது. இந்திய நேரப்படி தோராயமாக மதியம் 12 மணிக்கு இரோப் வர்த்தகம் ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் வர்த்தகம் கொஞ்சம் வேகம் அதிகரிக்க ஆரம்பிக்கும். EURO & Pound ஆகிய முக்கிய கரன்சியாக இந்த நேரத்தில் வர்த்தகம் ஆவதால் அதனைச் சார்ந்த EUR/USD & GBP/USD ஆகிய கரன்சி இணைகள் அதிக அளவில் ட்ரேடிங் செய்யப்படும்.



GMT 12.00 மணிக்கு அமெரிக்க வர்த்தகம் தொடங்கிவிடுகிறது. இந்த டாலர் அதிகம் வர்த்தம் செய்யப்படும். அதே நேரத்தில் இரோப்பியன் மார்க்கெட்டும் ஒபனில் இருப்பதால் EUR/USD கரன்சி பெரிய அளவில் ட்ரேடிங் செய்யப்படும். USD/JPY , USD/CAD கரன்சி இணைகளும் ட்ரேடிங் வேகத்தில் இருக்கும்.


இரோப்பியன் மற்றும் அமெரிக்கன் ஆகிய இரண்டு மார்க்கெட்களும் சேர்ந்த நேரமான GMT 10.00 to 17.00 வர்த்தகர்களுக்கான சிறந்த ட்ரேடிங் நேரம் ஆகும். இந்த நேரம் மார்க்கெட் நல்ல ஏற்ற இறக்கத்துடன் வேகமாக இயங்கி நகர்வதால் வர்த்தகர்கள் இலாபம் சம்பாதிக்க முடியும்.


இந்திய நேரப்படி பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பாரக்ஸ் ட்ரேடிங் செய்ய உகந்த நேரம் ஆகும்.

இதில் குறிப்பாக செய்தி நேரத்தினை கணக்கிட்டு செய்வது என்றுச் சொன்னால், மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரைக்கும் மார்க்கெட் வேகமாக இயங்கும், மாலை 5.30 முதல் 8 மணி வரை மிக வேகமாக இயங்கும். ஆகையால் இந்த நேரத்தினையே அனுபவ வர்த்தகர்கள் ட்ரேடிங்கிற்கு உகந்த நேரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்பொழுது இதே நேரத்தில் இந்திய கரன்சி எக்சேஞ் மார்க்கெட்டும் ஜனவரி 2017 முதல் இணைந்துள்ளதால், மார்க்கெட் வேகம் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதோடு பெரிய அளவில் ட்ரேடிங்கில் பணம் சம்பாதிக்கலாம்.

பாரக்ஸ் ட்ரேடிங் மற்றும் ஆப்சன் ட்ரேடிங் ஆகிய இரண்டிற்கும் இதே கால நேரமே பயன்படுத்தப்படுகிறது.


வர்த்தக செய்தி என்பதும் இலாபம் சம்பாதிக்க மிகவும் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று.


புதியவர்கள் ட்ரேடிங் பயிற்சியினை சரியான வர்த்தக நேரத்தில் செய்து பழக வேண்டும் என்பதற்காக இந்தத் தகவலை ஆரம்பித்திலேயே கொடுத்துவிட்டேன்.


அடுத்து ஆப்சன் ட்ரேடிங்கில் சரியான ஆப்சனைத் தேர்ந்தெடுக்க மார்க்கெட் நிலவரத்தினை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது என்பதனைப் பற்றிப் பார்க்கலாம்.

click2m.com , ஆப்சன் ட்ரேடிங்கில் பணம் சம்பாதிக்க வாழ்த்துகள்.
User avatar
vk90923
Posts: 55
Joined: Sun Mar 20, 2016 7:46 pm
Cash on hand: Locked

Re: Forex கரன்சி ட்ரேடிங் வர்த்தக நேரம் - எந்த நேரத்தில் ட்ரேடிங் செய்யலாம்?

Post by vk90923 » Mon Jan 30, 2017 6:57 pm

ஆதி சார் இன்றும் ஒரு தகவல்:

உலக வர்த்தக நேரம்(GMT) +05:30 இந்திய நேரம்

பசிபிக் =21:00 to 07:00 03:30 to 13:30 பசிபிக் வர்த்தகம் ஆஸ்திரேலியா
நியூஸ்லாந்த்

ஆசியன்=23:00 to 09:00 05:30 to 15:30 ஆசியன் வர்த்தகம் ஜப்பான்

இரோப்பியன்=10:00 to 20:00 12:30 to 22:30 இரோப்பியன் வர்த்தகம் இரோ, ஜெர்ம்னி
ஸ்விட்ஸர்லாந்த்

அமெரிக்கன்=12:00 to 22:00 17:30 to 03:30 அமெரிக்கன் வர்த்தகம் அமெரிக்கன்
கனடியன்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”