Page 1 of 1

தங்க ஆபரண நகைகளை இரட்டிப்பாக்க வாய்ப்பு

Posted: Tue Dec 27, 2016 12:56 pm
by ஆதித்தன்
பெண்கள் தான் சிறந்த புத்திசாலி. பெண்கள் நடவடிக்கையில் ஒர் நிதானமும் எதிர்கால சிந்தனையும் இருக்கும்.


தங்கம்னா கொள்ளை ஆசைப்படுறது பெண்கள் தான், அதே நேரத்தில் இன்று வரையில் தங்கம் வீட்டில் பொருளாதார தரத்தினை உயர்த்தியே கொண்டு வந்திருக்கிறதே தவிர, ஒர் பொழுதும் சரிக்கவில்லை. அதாவது தங்கம் வாங்கியதால் வீட்டிற்கு இலாபம் தான்.


அதே நேரத்தில் இன்றைய சூழல் நிலையினையும் கண்டிப்பாக யோசிச்சே ஆகவேண்டும்.


500 ரூபாய் 1000 ரூபாய் தடை பண்ணாங்க... ரொக்கமில்லா பரிமாற்றம்னாங்க... கருப்பு பணத்தினை எல்லாம் கண்டுபிடிக்கப்போறாம்னாங்க... பினாமி சொத்தை கவரப்போறோம்ங்றாங்க ... பெண்ணுங்க இவ்ளதான் தங்கம் வைத்திருக்கணும்கிறாங்க ...


இப்படி புதியதாக வந்து கொண்டிருக்கும் தாக்குதலால் தங்கத்தின் விலை நாளை என்னவாக இருக்கும் என்றுதான் ரொம்ப நேரம் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்..... ஒர் சில விடயத்தினை பார்க்கும் பொழுது கண்டிப்பாக தங்கத்தின் விலை குறையத்தான் செய்யும் என்பது நன்றாகவே தெரியுது.


சுருக்கமாகச் சொன்னால் ஒர் ஜோடி கம்மலை இன்றைய விலையில் விற்றுவிட்டால், அடுத்த சில மாதங்களில் ஏற்படப்போகும் தங்க விலை குறைவால் இரண்டு ஜோடி கம்மல் வாங்கலாங்க...


உண்மைதாங்க.... தங்கத்தின் விலை அதிரடி வீழ்ச்சியினை சந்திக்க இருக்கிறது என்பதனை இண்டர்நேசனல் டேட்டா பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதனால், வீட்டுப் பெட்டிக்குள் இருந்த பணத்தினை எல்லாம் வங்கியில் போட்டுட்டு சும்மா இருப்பது போல .... வைத்திருக்கிற தங்கத்தினையும் எடுத்து வித்திடலாம் என்று பெண்கள் முடிவெடுத்தால் அடுத்த சில மாதங்களில் விலை குறையும் பொழுது இரட்டிப்பாக வாங்கிக்கலாம், அதுவும் பிடித்த புதுமாடலில் வாங்கிக்கலாம்.


ஆனால் ஒரே ஒர் சிக்கல் இருக்கு. அது வேறு ஒன்றுமில்லை.. ஒர் பத்து பவுன் தங்கத்தினை விற்று காசு ஆக்கலாம்னு பார்த்தா, கையில பணமா கொடுக்க பணம் யார்கிட்டையும் இல்லை. எல்லாம் டிஜிட்டல் கரன்சியா வங்கியில்தான் இருக்கிறது.


தங்கத்தினை விற்றாலும் பணம் வங்கிக்குத்தான் கிடைக்கும். இது வருடக் கடைசியாக இருப்பதால் சுமை அதிகமாகிவிடக்கூடாத அளவுக்கு பார்த்துதான் அளவா விற்கணும். ஆக கொஞ்சம் நடைமுறைச் சிக்கல் இருக்கு..


இருந்தாலும் தங்கத்தின் விலை குறையப் போகிறது என்பது உண்மை. இன்று விற்றால் நாளைக்கு டபுலா வாங்கிக்கலாம். அல்லது, பாதியா மதிப்பு இழக்க நேரிடும்.


கொஞ்சம் யோசிங்க, சரியா முடிவெடுங்க ... தங்கத்தினை இரட்டிப்பு ஆக்குங்க.. மகிழ்ச்சியாக இருங்க..


நன்றி.

Re: தங்க ஆபரண நகைகளை இரட்டிப்பாக்க வாய்ப்பு

Posted: Mon Jan 30, 2017 7:20 pm
by vk90923
ஆதி சார் வணக்கம் ,இன்றும் ஒரு தகவல்: Dailyfx .com இது படுகை Forex நண்பர்களுக்காக இதை பற்றி அதிகம் உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கும் ஏனென்றால் நீங்கள் எங்களது வழிக்காட்டி நன்றி. :wav: