ஜெயலலிதாவும் - இந்திய பங்குச் சந்தையும்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஜெயலலிதாவும் - இந்திய பங்குச் சந்தையும்

Post by ஆதித்தன் » Wed Nov 23, 2016 6:09 am

[youtube]https://www.youtube.com/watch?v=gswUn0hyazg[/youtube]

ஜெயலலிதா - அப்போலோ ஆபத்து - சரியும் யூக வணிகம் :: உலக அரசியல் உண்மைகள் என்ற பகுதியில் தற்பொழுது தமிழகம் கட்டம் கட்டப்பட்டுள்ளதா என்ற கேள்வியினை எழுப்புவதால் ஏற்பட்டுள்ள வர்த்தக நிலை பதிவு இது.

தமிழக மக்களின் பெரும் ஆதரவு பெற்ற தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இன்று நவம்பர் 23 ஆம் தேதி ஆகிவிட்டது, அதாவது கிட்டத்தட 60 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சரியான உண்மைத் தகவல்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதனை அப்பல்லோ கொடுத்துக் கொண்டிருக்கும் நம்பகத்தன்மை அற்ற தகவல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஜெயலலிதா பற்றிய தகவல்கள் பொய்யாக இருந்தால் அப்பல்லோ மருத்துவமனை நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் சிலர் முன்பே யூகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பதனை பங்குச் சந்தை எனப்படும் யூக வர்த்தக மார்க்கெட் நிலவரத்தினைப் பார்த்தால் தெரியும்.

தற்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டுரை தமிழ் வாரப்பத்திரிகையான விகடன், தனது வெப்சைட்டில் கொடுத்திருக்கும் கட்டுரைதான். இக்கட்டுரை எழுப்பும் கேள்விகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடியது மட்டுமில்லாமல், இதற்கான சரியான பதில் கிடைக்கவில்லை என்பதனையும் 60 நாட்களில் தமிழக மக்கள் நன்றாக புரிந்திருப்பார்கள்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த கோபமும் தற்பொழுது அப்பல்லோ மருத்துவமனை மீதுதான் உள்ளது என்றுச் சொன்னாலும், அதனை நீர்த்துப் போகச் செய்ய மீடியாவுக்கு ரூ.500 & 1000 தடை வாய்த்துவிட்டது. வெளியில் ஒர் பிரச்சனையை நோக்கிக் கொண்டிருக்கையில் வீட்டின் உள்ளேயே ஒர் பிரச்சனையை உருவாக்கிய இந்த உலக அரசியல் காய் நகர்த்தலை புரிந்து கொள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் உண்மை ஆய்வாளர்கள்.

அப்பல்லோ மருத்துவமனையினை உலக அரசியல் மையத்தோடு தொடர்புப்படுத்திப் பார்த்தாலும் டார்ச் லைட் அடையாளம் நன்றாகவே பிரதாப் ரெட்டியினை இணைக்கிறது. ஆகையால், தமிழர்களே கேள்விகள் மேலும் உறுதித்தன்மையை அடைந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் பெரிதும் நம்பிக்கொண்டிருந்த தலைவர் ஜெயலலிதா அவர்கள் அரசியலில் ஈடுபடா நிலையில் இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் மக்களுக்கு தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை வழங்கிய செய்திகள் ஏற்கனவே உறுதிப்படுத்தக்கூடிய செய்தியாக இல்லை என்பதனை நன்றாக புரிந்து கொண்ட வர்த்தகர்கள், நாளை ஏதேனும் நடந்தால் மருத்துவமனைக்கு என்ன ஆகும் என்பதனை யூகித்து அப்போலோ பங்குகளை விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனை இன்னும் பலரும் தெரிந்து கொள்ளவில்லை என்பதனை தற்போதைய பங்குவிலை நிலவரத்தின்படி தெரிகிறது.

ஆனால், இன்னும் 60 நாட்கள் மருத்துவமனை காட்சிகள் இவ்வாறே தொடரப்போகிறது போல சந்தேகம் ஏற்படுகிறது. ஆகையால் நாளுக்கு நாள் பங்கின் விலை சரிந்து கொண்டுதான் செல்லும் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.

Trading name :: Apollo Hospitals
Type Public
Traded as BSE: 508869
NSE: APOLLOHOSP

அரசியலோடு வர்த்தகம் எப்பொழுதும் தொடர்புடையதுதான் என்பதனை வர்த்தக ஆலோசகர்கள் மக்களுக்கு அறிவுறுத்திய ஒன்றுதான். ஆகையால், மக்களே உண்மை உறுதிப்படுத்தப்படும் வரை சரிவு சரிவுதான்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”