[youtube]https://www.youtube.com/watch?v=NPxxY5Z22Ow[/youtube]
வருகிற நவம்பர் எட்டாம் தேதி (8-11-2016) அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியிடப்பட இருக்கிறது.
பல கட்டங்களாக நடந்துவரும் தேர்தலில் கிளாரி கிளிண்டன் அல்லது டோனல்ட் ட்ரம்ப் ஆகிய இருவரில் யார் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்ற கடைசியாக கிடைத்தக் கருத்துக்கணிப்பின்படி, இருவருக்குமான வித்தியாசம் 1% அளவிலேயே உள்ளது என்பதனை ABC News வெளியிட்டுள்ளது. இதனால், கிளாரிதான் ஜெயிப்பார் என்றிருந்த நிலை மாறி, ட்ரம்ப்க்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற ஒர் கருத்து நிலவ ஆரம்பித்துவிட்டதால் டாலர் கொஞ்சம் தொய்வடைய ஆரம்பித்துள்ளது.
யார் வெற்றி பெறுவார் என்ற ஒர் கேள்வியினை வைத்தே மார்க்கெட் யூக வர்த்தகர்கள், தனக்கான ஒர் நடவடிக்கையாக பெரிய முதலீட்டாளர்களை கூட்டணி சேர்த்து, மார்க்கெட்டினை ஒர் ஆட்டு ஆட்டுவிப்பார்கள். இதில், பெரிய இலாபத்தினை சிறிய முதலீட்டாளர்கள் மிக கவனத்துடன் தான் பார்க்க முடியும், இல்லாவிட்டால் சிறுமுதலீட்டாளர்கள் பணத்தினை முழுவதுமாக அவர்கள் இலாபமாக்கிவிடுவார்கள்.
சிறுமுதலீட்டாளர்கள் செய்யும் ஆர்டர்களை கணக்கீடு செய்தே அவர்கள் காய் நகர்த்துவார்கள், எப்பொழுது மேல் செல்லும் எப்பொழுது கீழே தலைகீழாக விழும் அல்லது கீழே விழுந்து மேல் எழும்பும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு, அவர்கள் இலாபம் என்ற இலக்கினை நோக்கி சரியாக காய் நகர்த்தி செல்வார்கள். அதனை புரிந்து கொள்வதே கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும், கொஞ்சம் ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால் இலாபம் பார்க்கலாம்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பாரக்ஸ் மார்க்கெட்டினை தாக்கும் முக்கியச் செய்தி
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked