[youtube]https://www.youtube.com/watch?v=qqmKcTjrGdE[/youtube]
ஆயில் வர்த்தம் கம்மொடிட்டி வர்த்தகத்தில் மிக முக்கியமான ஒன்று. ஆயில் வர்த்தகம் செய்வோர் பலர் நல்ல இலாபத்தினை ஆண்டுதோறும் சம்பாதித்து வருகின்றனர்.
மார்க்கெட்டில் அனுபவம் உள்ளவர்கள் பலர், அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டிய மார்க்கெட் ரிப்போர்ட் செய்திகளை தினம் சரியாக பார்த்துத் தெரிந்து கொண்டு, சரியான விலையில் ஆர்டர் புக் செய்து நல்ல இலாபத்தினைப் பார்க்கிறார்கள்.
நாமும் ஒர் தேர்ந்த வர்த்தகரைப்போல் நிதானமாக, வாங்குவதற்கு தகுந்த சரியான விலையில் மட்டும் ஆர்டரினை புக் செய்தோம் என்றுச் சொன்னால் உறுதியாக இலாபத்தினைப் பார்க்கலாம்.
மேல் உள்ள விடியோவில், ஆயில் வர்த்தம் செய்வதற்கு தேவையான பண்டமெண்டல் பகுப்பாய்வு விவரம் கொடுத்துள்ளேன். அதன்படி பார்த்தல், தற்போதைய ஆயில் விலை என்பது வாங்கக்கூடாத கூடுதல் விலை என்றே அறிய முடிகிறது. ஆகையால், வர்த்தகத்தினை கையாளும் முதலீட்டாளர்களை நம்பாமல், அடிப்படையான பொருளின் விலையின் நிலையினை அறிந்து அதற்குத் தகுந்த மாதிரி பின்பற்றினால் இலாபம் உறுதி.
தற்போதைய BREXIT -இல் நிலையில் 5% மார்க்கெட் டவுன் ஆகியுள்ளது. அடுத்தக்கட்ட பெரிய டவுனை நான் மீண்டும் எதிர்பார்க்கிறேன். அவ்வாறு மார்க்கெட் நான் எதிர்பார்த்திருப்பது போல கீழே சென்றால்... அதில் கண்டிப்பாக ஒர் தொகைக்கு ஆயில் பேரல் வாங்கி வைப்பேன்.
ஆயில் குறைந்த விலையில் இருக்கும் பொழுது வாங்குவதன் மூலம் குறைந்தப்பட்சம் 50% இலாபத்தினைப் பார்க்க முடியும். 2016 ஆம் ஆண்டின் இரண்டாவது கால் பகுதியில் தான் நாம் இப்பொழுது இருக்கிறோம், இன்னும் இரண்டு கால் பகுதியிருப்பதால், பொறுமையாக காத்திருந்து நமது இலாபத்தினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆயில் வர்த்தக அடிப்படைப் பகுப்பாய்வு & இலாபம் கொடுக்கும் ஆர்டர் டிப்ஸ்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked