பாரக்ஸ் மார்க்கெட்டில் மிகப்பெரிய சரிவு - 4 மணி நேரத்தில் 1600 பிப்ஸ் டவுன்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் மார்க்கெட்டில் மிகப்பெரிய சரிவு - 4 மணி நேரத்தில் 1600 பிப்ஸ் டவுன்

Post by ஆதித்தன் » Fri Jun 24, 2016 11:50 am

[youtube]https://www.youtube.com/watch?v=optx95_gWHc[/youtube]

நாம் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்த, BREXIT REFERENDUM நிகழ்வு நேற்று நடந்து, இன்று அதிகாலை அதன் விடையும் கிடைத்துவிட்டது. அதற்கான பலனாய் நாம் பெரிதாக எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரிய நிகழ்வாகவே நடந்தேறியுள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து மிகப்பெரிய டவுனை எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஒரே நாளில் 1600 பிப்ஸ் (16000 பாயின்ட்ஸ்) GBP/USD என்ற கரன்சி இணையும் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை... அதுவும் நான்கு மணி நேரத்தில் விரைவாக சட் சட்டென நிகழ்ந்துவிட்டது.

இதுபோன்ற மிகப் பெரியச் செய்தி நேர வர்த்தகத்தினை நிகழ்வில் இருந்து பார்ப்பது எனக்கு இதுவே முதல்முறை... மற்றப்படி பெரும்பாலும் இது போன்ற நிகழ்வுகளின் விடை ஞாயிறு இரவே இருக்கும்...ஆகையால் மார்க்கெட் திங்கள் திறக்கும் பொழுது ஒர் பெரிய மாற்றத்தோடு இருக்கும்.

இந்த நிகழ்வு மார்க்கெட் நேரத்திலே நடந்ததோடு, இந்த முக்கியச் செய்தியினை கையாளும் வர்த்தகத்தாரிகள் மற்றும் சூதாட்டக்காரர்களின் விளைவால் மாறுபட்ட செய்திகள் வெளியாகுதல்... மார்க்கெட்டில் ஏறுக்கு மாறான நிகழ்வினை உருவாக்குதல் என செயலாக்கம் இருப்பதால், நான் கொஞ்சம் கேள்விக்குறியோடு நிகழ்வுகளையும் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒர் வாரமாகச் செய்தியினை உள்வாங்கி, இறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த நான், நேற்றைய இரவில் கிடைத்த செய்திகளின் கொஞ்சம் ஆர்டர்களில் மாற்றம் செய்து பாதுகாப்பினை உருவாக்கிக் கொண்டு, நகண்டு கொண்டேன். அதன் மூலம் கடந்த 15 நாட்களாக கிடந்த நெகட்டிவ் அனைத்தினையும் சரி செய்து, அடுத்தக்கட்ட ப்ராபிட் லெவலுக்கும் செல்லும் அளவிற்கு இலாபம் நேற்றைய மார்க்கெட்டில் க்ளோஸ் ஆகியிருந்தது.

ஏறுக்கு மாறான செய்திகளினால் கொஞ்சம் குழப்பம் ஆனதில் பெரிதாகக் கிடைக்க வேண்டிய இலாபங்களுக்கு எத்திசை செல்வது என்ற ஒர் குழப்பம் கடைசி நேரத்தில் வந்து... மார்க்கெட்டிலிருந்தே விலகிக் கொண்டேன்.

அடுத்தக்கட்டமாக ரிவர்சல் மூலம் இலாபத்தினை எடுத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், மார்க்கெட் செயல்பட்ட வேகத்தில் நான் அமைதியாகிவிட்டேன்.. அத்தனை வேகமாவும்... எதிர்பார்ப்புக்கும் அப்பாலும் சென்றதால்.... ஒதுங்கிக் கொள்வது நல்லது என்று ஒதுங்கிக் கொண்டேன்.

மற்றபடி ரிஸ்க் என்று செயல்படும் நபர்கள் பலர் இந்தச் செய்தியில் மிகப் பெரிய இலாபத்தினை எட்டியிருப்பார்கள்.

மார்க்கெட்டினைப் பொறுத்தவரைக்கும் எனது முதல் இலக்கு எனது பணத்தினைப் பாதுகாப்பதுதான்... அவ்வாறு பாதுகாப்பாக வைத்துக் கொண்டாலே அடுத்தடுத்து கிடைக்கும் நல்ல வாய்ப்பில் இலாபம் பார்த்துவிடலாம்.

ரிஸ்க் என்று உள்ளே சென்றால்.... அது ரிசிவ் பண்ண முடியா நிலைக்கு சென்றுவிடும் வாய்ப்பு இருப்பதால்.. நான் பெரிய இலாபம் கிடைக்கும் என்றாலும் விரும்புவதில்லை.

அதே நேரத்தில் இது எனக்கு முதல் அனுபவமும் என்பதாலும் ரிவர்சலில் செயல்படாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

மார்க்கெட்டில் தொடர்ந்து நிலைத்திருப்போம்..... வரும் வாய்ப்பினைப் நல்ல வாய்ப்புகளில் நல்ல இலாபத்தினை எட்டுவோம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் மார்க்கெட்டில் மிகப்பெரிய சரிவு - 4 மணி நேரத்தில் 1600 பிப்ஸ் டவுன்

Post by marmayogi » Fri Jun 24, 2016 6:11 pm

yes sir . இதுபோன்ற செய்திகள் மிகவும் ஆபத்து. மார்கெட் மேலும் கீழும் 300pipe போகும் என்று இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் பேசிகொண்டனர். அப்போதே நான் உஷாராகிகொண்டேன். இதுபோன்ற செய்திகளில் நான் வர்த்தகம் செய்வதில்லை . ஏனெனில் data release ல் இரண்டு மாதத்திற்கு முன்பு leverage அதிகமாக வைத்ததால் 150$ loss ஆகிவிட்டது .
அதிலிருந்து news ஐ கண்டாலே பயம் .

bitcoin forex ல் trading செய்ததனால் மீண்டும் இழந்த பணத்தை recovery செய்துவிட்டேன். பிட்காயின் விலை அதிகமானதனால் 580$ க்கு பிட்காயினை விற்றுவிட்டு முதலீட்டை காப்பாற்றிவிட்டேன். dollar ல் order போட்டு இருந்தால் மீண்டும் 150$ ஐ recovery செய்திருக்கவே முடியாது. பிட்காயினாக இருந்ததனால் தப்பித்தது பணம் . லாபம் வரவில்லையென்றாலும் பரவாயில்லை நட்டம் ஏற்பட கூடாது. அந்த நட்டத்தை தாங்கிகொள்ள முடியாது. . இனிமேலும் leverage ஐ அதிகம் செய்து சூதாட்டம் ஆடமாட்டேன் .
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”