BRexit Referendum - ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டன்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

BRexit Referendum - ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டன்

Post by ஆதித்தன் » Wed Jun 15, 2016 4:27 pm

[youtube]https://www.youtube.com/watch?v=kbEZpDt7R74[/youtube]

தற்பொழுது பாரக்ஸ் மார்க்கெட்டில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருப்பது வருகிற 23-ஜீன்-2016 இல் நடக்க இருக்கிற BREXIT Referendum/Poll தான்.

28 நாடுகள் சேர்ந்த ஐரோப்பிய யூனியன்(EU) அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேற இருக்கிறது என்பதே Br/பிரிட்டன் எக்சிட் வாக்கெடிப்பின் முக்கிய அம்சம்.


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றுச் சொல்வார்கள், அதைப்போல், 28 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஐரோப்பிய யூனியன் அமைப்பால் பல நன்மைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய யூனியன், நாடுகளுக்கிடையே குடியேற்றம், விசா செயல்பாடுகள், வர்த்தகப் போக்குவரத்து, வர்த்தக சந்தையினை கையாளுதல் என பல முக்கிய சட்டத்திட்டங்களை தன் கைக்குள் வைத்து, அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திக் கொண்டிருந்தது.

தற்பொழுது, பிரிட்டன் தனக்கான உரிமைச்சட்டம் கைவிட்டுப் போயுள்ளது எனக் கருதியும், தன் விருப்பப்படி தன் நாட்டிற்குள் சட்டத்தினை மாற்றியமைத்து வர்த்தக தேக்கத்தில் முன்னேற்றம் காணும் பொறுட்டும் வெளியேறவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் மக்களுக்கான ஐரோப்பிய யூனியன் சட்டத்திட்டம் தனக்கு ஒத்துவராது எனவும் கருதுகின்றனர். மேலும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆண்டிற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான கட்டண வருவாயினைக் கொடுத்தும், தான் பெறும் சலுகை என்னவோ 35% என மிகக் குறைந்தத் தொகையே எனவும் ஆதங்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன்/இங்கிலாந்து ஐரோப்பியன் யூனியனிலிருந்து வெளியேறுவது என்பது உறுதியாகிவிட்டது. அதனை சட்டப்படி அறிவிக்கவே இந்த வாக்கெடுப்பது நடத்தப்பட இருக்கிறது என்பதனையும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

பிரிட்டன் வெளியேறிவிட்டால், ஏற்றுமதி இறக்குமதி என வர்த்தகச் செயல்பாடுகளுக்காக பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு செய்ய வேண்டும் என்பதோடு, முன்பு ஐரோப்பிய யூனியன் வழியாகப் போடப்பட்ட உடன்பாடுகள் அனைத்தும் காலாவதி ஆவதோடு அமெரிக்காவுடன் செய்யப்பட்டிருந்த முக்கிய உடன்பாடுகளும் காலாவதி ஆகிவிடும்.

ஆக, புதியதாக எந்தளவுக்கு வர்த்தக உடன்பாடுகள் பிற நாடுகளுடன் பேசி ஒப்பந்தம் கொள்வார்கள் என்றக் கேள்விக்குறி அனைத்து வர்த்தகர்களுக்குமான கேள்வியாக உள்ளது.

புதிய ஒப்பந்தங்களில் சுனக்கம் காணப்படின், வர்த்தக நிலையும் சுனக்கம் காணும்.

எனவே பெரும்பாலும், ஆரம்பக்கட்டம் பிரிட்டன் கரன்சிக்கு எதிராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் மேலும் பல புள்ளிவிவர தகவல்களைக் கொண்டு ஆராயும் பொழுது மட்டுமே சரியான தகவல் கிடைக்கும்.

மார்க்கெட்டினை கையாளும் முக்கியப் பெரிய வர்த்தகர்கள் தங்களுக்குச் சாதகமாக இந்தச் செய்தியினை கையாளும் நிகழ்வுகளும் நடக்கும்... எதுவாயினும்... பெரிய இலாபத்தினை எதிர்கொள்ள இருக்கும் ஒர் செய்தியில் இதுவும் ஒன்று.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BRexit Referendum - ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டன்

Post by ஆதித்தன் » Fri Jun 17, 2016 12:11 pm

[youtube]https://www.youtube.com/watch?v=OyrTZnYkOdc[/youtube]

செய்தியினைக் கொண்டு வர்த்தகத்தினை நிர்ணயம் செய்வதன் மூலமும் நல்லதொரு இலாபத்தினை ஈட்ட முடியும்... அந்த வகையில் தற்பொழுது ஹாட் டாபிக்காகச் சென்று கொண்டிருக்கும், பிரிட்டன் எக்சிட் வாக்கெடுப்புச் செய்தியினை மையமாகக் கொண்டு பலதரப்பட்ட வர்த்தக ஆலோசகர்களும் தங்களது கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் முக்கிய வர்த்தக ஆலோசகர்களாக கருத்தப்படுவர்கள், தங்களது எதிர்பார்ப்பாக எதனை விரும்புகிறார்கள் என்பதனைப் பற்றிய பார்வைதான் இந்த விடியோ.

GBP/USD & EUR/USD ஆகிய இரண்டிற்கும் அடுத்தக்கட்ட பாட்டத்தினை டார்கெட்டாக எதிர்பார்க்கிறார்கள்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: BRexit Referendum - ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டன்

Post by marmayogi » Fri Jun 24, 2016 11:34 am

doubt:

ஐரோப்பா யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்கெடுப்பு negative ஆக வந்ததனால் GBP/USD கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது .

வாக்கெடுப்பில் ஐரோப்பா யூனியனில் பிரிட்டன் சேர்ந்தே இருக்கலாம் என்று possitive ஆக செய்தி வந்திருந்தால் GBP/USD price up ஆகி இருக்குமா சார் ?.


இந்த செய்தியினால் GBPUSD க்கு மட்டும் தானே பாதிப்பு . ஏன் மற்ற currency யான USD/CAD, NZD/USD price up ஆகி இருக்கு. இந்த இரண்டு currency ம் ஏன் சரியவில்லை ?.
=======

ஒருசில நேரங்களில் price moment up and down இரண்டு பக்கமும் மேலயும் கீழேயும் போகிறது . அதற்கு என்ன காரணம் ?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: BRexit Referendum - ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் பிரிட்டன்

Post by ஆதித்தன் » Fri Jun 24, 2016 12:00 pm

marmayogi wrote:doubt:

ஐரோப்பா யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று வாக்கெடுப்பு negative ஆக வந்ததனால் GBP/USD கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது .

வாக்கெடுப்பில் ஐரோப்பா யூனியனில் பிரிட்டன் சேர்ந்தே இருக்கலாம் என்று possitive ஆக செய்தி வந்திருந்தால் GBP/USD price up ஆகி இருக்குமா சார் ?.

=======

BREXIT - ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகல்


இதில் Positive என்பது விலகுவதுதான் ... இன்று நடந்து முடிந்த வாக்கெடிப்பில் வென்றதும் விலகல் & பாசிட்டிவ் ரிசல்ட்

பாசிட்டிவ் ரிசல்ட் வருவதனால், பிரிட்டனுக்கு பாதகம் அதிகம் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கும் பாதகம்.

இதனைத்தான் முதல் பதிவு & இரண்டாம் பதிவில் சொல்லியிருக்கிறேன்.


விலகாமலிருந்தால், அப் சைடு கொஞ்சமாக இருக்கும்... ஏனெனில் இருப்பதுதானே...

விலகியதால் எல்லாமே மாறிவிடுகிறது... மீண்டும் புதிய வர்த்தக சட்டம் கொண்டு பிரிட்டன் இயங்க வேண்டியிருக்கிறது. ஆகையால் அதன் கரன்சி மதிப்பும் சரிந்துவிட்டது.....
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”