செய்தி நேர வர்த்தகத்தின் மூலம் இலாபம் கைகொள்வது எப்படி? நம்பகமான யூக்தி

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

செய்தி நேர வர்த்தகத்தின் மூலம் இலாபம் கைகொள்வது எப்படி? நம்பகமான யூக்தி

Post by ஆதித்தன் » Mon Jun 06, 2016 12:04 pm

Image
நம்பகமான ஒர் சில யூக்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவ்வப்பொழுது வரும் முக்கிய மார்க்கெட் செய்திகள் மூலம் உறுதியான இலாபத்தினைக் கைக் கொள்ளலாம் என்பதனை ஒவ்வொருவரும் அறிந்ததுதான். ஆனால் நிகழ்வுதகவுகளைச் சொல்லித் தரவோ, நம்பகமான யூக்தியினை பகிரவோ வர்த்தக அனுபவஸ்தர்கள் பலரும் முன்வருவதில்லை. அப்படியான சின்னச் சின்னத் தகவல்களை, ஒரே பதிவில் வெளிப்படையாகக் கொடுக்காமல்.... அங்கு இங்கு என தேடுவார்க்கு மட்டுமே கிடைக்கும் வகையில் ஒவ்வொரு முக்கியப் பதிவிலும் ஒர் சின்னத் தகவல் என பலவற்றினைக் கொடுத்துள்ளேன். அப்படியான ஒன்றில் இன்று நாம் பார்க்க இருப்பது செய்தி நேர வர்த்தக யூக்தி.

செய்தி நேர வர்த்தக யூக்தியினை படிப்பதற்கு நீங்கள் ஆர்வமகாக இருந்தாலும், இதனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு விடியோக்களை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்தாக வேண்டும். இரண்டு விடியோக்களையும் பார்த்துவிட்டு இப்பதிவினைப் படித்தால் மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடிவதோடு உண்மை நிலவரமும் உங்களால் முழுமையாக உணர்ந்து, இலாப வர்த்தகத்தினை எவ்வாறு கைக்கொள்வது என்ற முறையும் தெளிந்துவிடும்.

பார்க்க வேண்டிய இரண்டு விடியோக்கள்,

முதல் விடியோ > https://www.youtube.com/watch?v=lieUILeKags

இரண்டாவது விடியோ > https://www.youtube.com/watch?v=5iyeRh0wNj4

இரண்டு விடியோவினையும் பார்த்துவிட்டு, கீழ் உள்ளதனைப் படிக்கத் தொடருங்கள்.
Image
ஜீன் மாதம் 3-ஆம் தேதி வெளியான முக்கியச் செய்தியான Nonfarm Payrolls & Private Nonfarm Payrolls பற்றிய விடியோதான் மேல் கொடுக்கப்பட்டிருப்பது. விடியோவில் வர்த்தக வாய்ப்பினைப் பற்றி கொடுத்திருப்பேன்.. அதில் எந்த அளவுக்கு ஒர் மாற்றமான தகவல் எதிர்பார்ப்பிலிருந்து கிடைத்திருக்கிறது என்பதனைத்தான் விடியோவில் காட்டியிருப்பேன்.

எதிர்பார்க்கப்பட்ட மதிப்பிலிருந்து கிடைத்தது வெறும் ~23% * & ~16.5% தான் என்கிற பொழுது மார்க்கெட் நிலவரம் எந்த அளவுக்கு மாற்றமாகி 200 பிப்ஸ் ஒரே பக்கமாக சாய்ந்திருக்கிறது என்பதனை விடியோவில் பார்த்திருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் மேல் இமேஜ் கொடுத்திருப்பதும் அந்த நேரத்தின் சார்ட் தான்.

நமக்கு நன்றாகவே தெரியும் ... ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையானால், நான்பேர்ம் பேரோல் நியூஸ் வரும்னு.. அப்படி இருக்கையில், வரும் ரிசல்ட் எந்த அளவில் எதிர்பார்க்கப்பட்டதிலிருந்து வந்திருக்கிறது என்பதனை கணக்கிட்டு, மார்க்கெட் எந்த அளவிற்கு மாற்றமாகும் என்பதனை ஒர் 6 மாத டேட்டாஸ் எடுத்து அனலைஸ் செய்து பார்த்துவிட்டால் போதும்.. மிக எளிதாக வருகிற மாதம் என்ன அளவில் வந்தால், எந்த வகையில் வர்த்தகம் செய்யலாம் என்பதற்கான உறுதித்தன்மைக்கு வந்துவிடலாம்.

அதிலும், மேல் காட்டியது போன்ற ப்ளேஒவர் சார்ட் அவ்வப்பொழுது ஏதேனும் ஒர் செய்தி நேரத்தில் வரும். அவ்வாறு ப்லே ஒவர் வரும் பொழுது சரியாக வாய்ப்பினைப் பயன்படுத்தி, ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் லைனை தெளிவாக வரைந்துவிட வேண்டும். அடுத்தக்கட்டமான அருகாமை சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் லைனை வரைந்து வர்த்தகத்திற்கு தயாராக வேண்டும்.

எப்பொழுதுமே காணும் செய்திகள் எல்லாம் ஒர் அதிகப்படியான & நிகழ்வுக்கு ஒவ்வாத குறைந்தப்பட்ச சதவீத நிகழ்தகவு கொண்டதாகவே இருக்கும் என்பதனை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சொல்லப் போனால் தொலைக்காட்சியில் ஒர் கிளிக்கில் ஒர் கோடின்னு ப்ரோக்கிராம் வைத்து நம்பர் கிளிக் செய்யச் சொல்லுவாங்க... ஆனால் கிளிக் பண்றவங்களுக்கு கோடி கிடைக்காது... ஏதோ ஆறுதல் கிடைத்தாலே ஓகேங்கிற போல இருந்தாலும், அடுத்து விழுந்திடாதா.. அடுத்து இவர் ஒர் கோடி வாங்கிடுவாரோ... என்று பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கும். இப்படி பார்த்திக்கிட்டே இருக்கும் பொழுது, இதுக்கு முன்னாடி எத்தனை பேர் முயற்சித்துவிட்டு போனார்கள் என்பதனை எல்லாம் மறந்து ஒர் நபர் கோடி வாங்கிவிட்டால் அதுவே முழுமையான நிகழ்தகவாக நம் மனதில் பதிந்துவிடுவது என்பதில் ஒர் வினோத ஆசை என்றாலும் நம்பிக்கைக்கு பாராட்டத்தான் செய்ய வேண்டும்.

செய்தி நேரத்தில், 5 நிமிடத்தில் 200 பிப்ஸ் மாற்றம் ஒர் பக்கத்தில் நிகழ்கிறது என்பதனை பார்க்கிறோம் என்பதற்காக அந்த 200 பிப்ஸ்சையும் அடைந்திட வேண்டும் என்று நினைக்கலாம்... அதிலும் வால்யூம் அதிகமாக போட்டு 200 பிப்ஸ்சையும் ப்ராபிட்டாக பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை, ஒவ்வொருவருக்கும் இருக்கும். இந்த ஆசைதான் மார்க்கெட் மீது ஒர் அதித ஆர்வத்தினைத் தூண்டுவதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது கிடைக்கும் சின்னச் சின்ன வெற்றிகள் நம்பிக்கையையும் ஊட்டுகிறது.

நாம் எதில் ஆர்வமாக இருக்கிறோமோ அதனையே கொடுப்பதுதான் வியாபார யூக்தி. ஏனெனில் விருப்பமில்லா ஒன்றினை வாங்கப்போவதில்லை. ஆகையால் செய்தி நேர வர்த்தகத்தில் 200 பிப்சையும் முழுசாக எடுக்கிறது எப்படி என்ற ஆர்வம் உங்கள் மனதில் முழுமையாக ஆக்கிரமித்து இருப்பதோடு, இதனையோ தேடியும் அழைகிறோம், நிகழ்தகவு என்ற ஒன்றினை அறியாமல்.

நமக்கான வர்த்தக அடிப்படைகள் பலவற்றினை பல்வேறு வடிவத்தில் அறிந்தே இருக்கிறோம், ஆனால் அதனை சரியாக இடத்திற்கு இடம் புகுத்திப் பார்க்கத் தெரியவில்லை என்பது நமக்கான இலாபத்தினை தடைக்கல்லாக்கும் ஒர் காரணி. இதனை நாம் நிதானமாக சிந்தித்து அல்லது அவதானித்துப் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியுமே தவிர, கண்ணைக்கெட்டி காட்டுக்குள் விட்டக்கதையாக வர்த்தக நேரத்தில் நடந்துகொண்டு கைச்சூட்டுடன் வெளியேற நேரிடலாம்.

என்னால் முடிந்தவரை உங்களை இலாபம் எடுக்க வைக்க வேண்டும் என்ற ஆசையே தவிர, நிகழ்தகவுகளை உடைத்தெறிந்து வெற்றி பெறுவேன் என்பதில்லை.

நிகழ்தகவின் உண்மையை எடுத்துக் கொள்ளாமல், நான் சொல்வதனை ஏற்க முடியாது. அவ்வாறு நான் சொல்வதனை ஏற்காமல் ஓடுபவர்கள், நிகழ்தகவின் உண்மையை மறைத்தோ பேசினார்களானால் ஆசையோடு ஆசையாய் இணைந்து... ஆசைக்கு வீழ்ந்த கதையாய் ஆகிடுமே தவிர விரும்பிய ஆசையை அடைதல் என்பது முடியாது என்பதனைத்தான் நிகழ்தகவு சொல்கிறது.

ஆகையால் நான் கொடுத்துள்ளது என்பது சாத்தியமான கூற்று என்பதோடு இதனை வர்த்தகை யூக்தியாகவும்... வர்த்தக நடைமுறையாகவும், வர்த்தக விதிமுறையாகவும் என ஏதேனும் ஒர் பெயரைச் சூட்டி, சரியாகக் கடைபிடிப்பீர்களானால், கண்டிப்பாக வர்த்தகத்தில் உறுதியான இலாபத்தினையே அடையலாம்.

நான் கொடுத்திருக்கும் முறை என்பது சிறிய இலாபத்தினைக் கைக் கொள்வதாக இருந்தாலும் அப்படியே இலாபமாகப் பெறக்கூடியதாக இருக்கும் வகையில் சரியான நேரத்தில் இறங்கி, சரியாக வர்த்தகத்தினை முடிப்பதற்குச் சொல்கிறேன்.

மொத்தமாக 200 எடுக்கலாம் என்று குறைந்தப்பற்ற வாய்ப்பில் அதிர்ஷ்டத்தினை நம்புவதனைக் காட்டிலும், அதிகப்படியான வாய்ப்பில் குறைந்த இலாபம் கிடைத்தாலும் போதும் என நினைத்தால் பெரிய அளவில் எல்லோரும் இலாபம் பெறலாம்.

சரியான டிப்ஸ் விடியோவில் உள்ளது, புரிந்து கொள்ளுங்கள்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”