USD/JPY - Currency Forex Trading
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
USD/JPY - Currency Forex Trading
தற்போதைய மார்க்கெட் நிலவரத்தில் USD/JPY இணைக்கரன்சியானது 121 விலையினை பிவோட் பாயிண்டினை மையமாகக் கொண்டுள்ளது. இதிலிருந்து தொடர்ச்சி மேல் எழும்பிச் செல்லும் என்பதனை 123 என்ற விலையும்.... இல்லை கீழே சரிந்துவிடும் என்பதனை பிவோட் பாயிண்டினைத் தாண்டி கீழே விழும் பொழுதும் அடுத்தக்கட்ட இலக்கினை எதிர்நோக்க முடியும்.
ஜப்பானிலிருந்து இந்த வாரம் பெரிய வர்த்தக செய்தியும் இல்லை என்பதால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வர்த்தகச் செய்தியே மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தினைக் கொடுக்க இருக்கிறது. அதிலும் வரும் புதன் கிழமை, இதில் ஒர் வர்த்தக வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.
வலுவான டாலர் அடுத்தக்கட்ட உச்சத்தினை எட்டிச் செல்லும் என்பதனை எதிர்பார்க்கலாம்.