ஆயில் வர்த்தகம் - வாய்ப்பினை எதிர்நோக்குங்கள்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
ஆயில் வர்த்தகம் - வாய்ப்பினை எதிர்நோக்குங்கள்
பங்கு வர்த்தகத்தில் Commodity பங்கு வர்த்தகம் என்பது சிறப்பானது. Commodity Trading-இல் வருடத்தில் கிடைக்கும் ஒர் சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினாலே நாம் பணத்தினை இரட்டிப்பு (100%) இலாபத்துடன் பார்த்துவிடலாம்.
தற்பொழுது க்ரூடு ஆயில் குறைந்த விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வரும் நாட்களில் விலை குறையும் என்பது பல வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. அவ்வாறு விலையினை மேலும் சரித்துவிட்டார்கள் என்றுச் சொன்னால் மீண்டும் அதி விரைவாக மார்க்கெட் விலையேற்றத்தினைக் கண்டுவிடும்.
தற்பொழுதிருந்தே ஆயில் விலையினை கண்காணித்துக் கொண்டே இருப்பதோடு போதிய ரிஸ்க் நிலைக்கு வந்தவுடனே ஆயிலை வாங்க ஆரம்பியுங்கள்.
உலகச் சூழலும் வரும் நாட்களில் ஆயிலின் விலை ஏற்றத்தினை உறுதி செய்யும் வகையில் தான் பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
முக்கியப் பயன்பாட்டுப் பொருளான ஆயிலானது, இரண்டு முக்கிய நாடுகளுக்கிடையே சண்டை மூண்டாலும் விறுவிறு என உச்ச நிலைக்குச் சென்றுவிடும்.
வர்த்தகத்தில் வாய்ப்புகள் என்பது கொஞ்சமே கிடைக்கும். அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால்.. ஒவ்வொரு வருடமும் பணத்தினை இரட்டிப்பாக பார்த்துவிடலாம்.
முன்னேற்பாடாக டாலரினை ரெடி செய்து வைத்து, வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
[youtube]https://www.youtube.com/watch?v=QZGpGW6OjDw[/youtube]
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12146
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked