bitcoin volume

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

bitcoin volume

Post by marmayogi » Sun Jun 21, 2015 11:47 am

Image
Image
சார் , bitcoin volume என்றால் என்ன ?. Bitcoin % என்றால் என்ன?. ( example
BTC/USD245.18 -3.22(-1.30%) )

Number மாதிரி ஏதோ கொடுத்து இருக்காங்க.
ஒரு சில time ல இந்த Number வேகமாக ஏறுது இறங்குது. ஒரு சில time ல medium ஆ moment ஆகுது. இது எதற்காக?. இந்த ஏற்ற இறக்கத்தை எப்படி analysis செய்வது?.

இதை மட்டும் ஓய்வு நேரத்தில் சொல்லுங்கள்.கொஞ்சம் குழப்பமாக உள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: bitcoin volume

Post by ஆதித்தன் » Sun Jun 21, 2015 4:10 pm

( example : BTC/USD 245.18 -3.22(-1.30%) )


மேல் கொடுத்த உதாரணத்திற்கான விளக்கம்,

Current Rate = 245.18

Yesterday Closing Rate = 245.18 - (-3.22) = 248.40

Today Change Value = CR - YCR = -3.22

Today change % = -3.22/245.18*100 = -1.31% ( ~1.30%)

நிகழ் நேர மார்க்கெட் மாற்றத்திற்கு தகுந்தவாறு % மாறிக்கொண்டே இருக்கும்.

====================================================

Volume ... மார்க்கெட்டில் எந்த இடத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பதனைக் கொண்டே சரியாகச் சொல்ல முடியும்.

உதாரணத்திற்கு பொதுவாக சொல்கிறேன், நீங்கள் 1 பிட்காயின் ட்ரேடிங்க் செய்கிறீர்கள் என்பது உங்களது வால்யூம். அதனைப்போல், அந்த ப்ளாட்பார்மில் எத்தனை நபர்கள் எவ்வளவு வால்யூம் பயன்படுத்துகிறார்கள் என்பதனைக் கொண்டு... எங்களது ப்ளாட்பார்மில் ஒர் நாளைக்கு 1500 BTC வால்யூம் ட்ரேடிங்க் செய்யப்படுகிறது என்றுச் சொல்லலாம்.

ஆகையால் சரியாக தகவல்//// அல்லது எந்த ப்ளாட்பார்மின் பயன்பாடு என்றுச் சொன்னால் அவர்களது உபயோகத்தின்படி கண்டு விளக்கம் கொடுக்க முடியும்.
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: bitcoin volume

Post by கிருஷ்ணன் » Sun Jun 21, 2015 11:13 pm

VOLUME என்பது எல்லா வகையான ட்ரேடிங்கிலும்(STOCK,COMMODITY,FOREX..)மிக முக்கியமான இடத்தினைப் பிடிக்கும் ஒர் கணிப்புக் கருவி ஆகும்.ஒரு கட்டிடத்தின் BASEMENT போல விலைப்போக்கு எந்த திசையில் எவ்வளவு பலத்துடன் செல்லும் என்பதை இதனைக் கொண்டே நிர்ணயிக்கிறார்கள்.

ஆதி சார் சொல்வதைப் போல அது பயன்படுத்தப்படும் இடத்தினைப் பொறுத்து அதன் மதிப்பு வேறுபடும்.

உதாரணமாக நேற்று சுமார் 1000 டிரேடர்கள் சேர்ந்து சுமார் 1000BTC அளவிற்கு ட்ரேடிங் செய்திருக்கிறார்கள்.ஆனால் அன்றைய விலை அதற்கு முந்தைய நாள் விலையினை விட 5% அதிகரிக்கிறது என வைத்துக் கொள்வோம்.

மறுநாள் சுமார் 1500 ட்ரேடர்கள் சேர்ந்து சுமார் 2000 BTC க்கு ட்ரேடிங் செய்கிறார்கள்.இது நேற்றைய‌ விலையினை விட 5% மேலும் அதிகரிக்கிறது என‌வும் வைத்துக் கொள்வோம்.

இப்படி சரியான VOLUME ல் விலை அதிகரிக்கத் தொடங்கினால் அந்த விலைப் போக்கு உண்மையான உயர்வினை நோக்கிச் செல்கிறது என்பதை நாம் உணர்ந்து நமது ட்ரேடிங்கினையும் வாங்கி விற்கும் நிலைக்கு (BUY& SELL)எடுத்துச் செல்லலாம்.

இதற்கு மாறாக இதே VOLUME ட்ரேடிங்கில் விலை சரியத் தொடங்கினால் நாம் நமது ட்ரேடிங்கினை விற்று வாங்கும் நிலைக்கு (SELL & BUY)மாற்றிக் கொள்ள வேண்டும்.

இதே போல‌ பெரிய பெரிய பண முதலைகள் சேர்ந்து SPECULATION (யூக வணிகம்)செய்வார்கள்.

அதாவது 1000 பேர் சேர்ந்து செய்யும் 1000BTC ட்ரேடிங்கினைப் போன்ற அளவில் சுமார் 50 பேர் மட்டுமே சேர்ந்து 1000BTC ட்ரேடிங் செய்து விலையினை அதிகரிப்ப்பார்கள்.

ஒரு சில நாட்கள் இப்படிக் கூட்டுச் சேர்ந்து விலையினை உயர்த்துவார்கள் .விலை உயர்வினை மட்டும் பார்க்கும் நம்மைப் போன்ற‌ சில்லரை முதலீட்டார்கள் மள மளவென உள்ளே நுழையத் தொடங்கியதும் அவர்கள் இலாபத்துடன் உருவிக் கொண்டு சென்று விடுவார்கள்.இழப்பு சில்லரை முதலீட்டார்களுக்கே.

எனவே எங்கு வால்யூம் உடன் கூடிய விலைப் போக்கு உள்ளதோ அந்த திசையில்தான் நமது ட்ரேடிங்கினையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.விலை அதிகரித்தாலும் அங்கே கடந்த கால சராசரி வால்யூமினை விட மிகக் குறைவான வால்யூம் ட்ரேடிங் நடந்தால் அதனைத் தவிர்க்க வேண்டும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: bitcoin volume

Post by ஆதித்தன் » Mon Jun 22, 2015 12:08 am

கிருஷ்ணன் சார் தெளிவான விளக்கத்தினைக் கொடுத்துவிட்டார்கள், இதனைக் கொண்டே நீங்கள் மிக எளிதாக பகுத்தாய்வு செய்துவிடலாம்.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: bitcoin volume

Post by marmayogi » Mon Jun 22, 2015 5:04 am

இப்போது புரிகிறது. மிக்க நன்றி இருவருக்கும்.

:thanks: :thanks: :thanks:
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: bitcoin market depth graph

Post by marmayogi » Sat Aug 08, 2015 3:32 pm

சார்.
1)bitcoin market depth என்றால் என்ன?. ஒரு example கொடுங்க. bitcoin or any other alternate coin விலை வீழ்ச்சி எதனால் ஏற்படுகிறது ?. விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன ?

2)2014 ஆம் ஆண்டில் mtgox bitcoin exchange company ல் 30 million dollars bitcoin loss .
market depth குறைந்தால் விலை வீழ்ச்சி ஏற்படுமா ?

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: bitcoin volume

Post by ஆதித்தன் » Sat Aug 08, 2015 8:04 pm

சரியானவற்றினை நீட்டி என் மனதில் உள்ளதனை எழுதியதில்... குழப்பமாக இருந்தால், தேவையில்லாததை விடுத்து... சுருங்க தேவையை மட்டும் எடுத்துக் கொள்ளவும், புரியாவிட்டால் கேட்கவும்.




chart -இன் அடியில் பிட்காயின் விலை 260-லிருந்து 300 வரை உள்ளது. அதில் ~ 278 என்பது தற்போதைய மார்கெட் பிட்காயின் விலை.


மார்க்கெட் விலை 278 மையமாகக் கொண்டு பச்சை & சிவப்பு (வாங்கல்/விற்றல்) என இரண்டு லைன் பிடிசி தேவை & விலை ஆர்டர் டிமாண்ட் மதிப்பு ஆகியவற்றினைக் கொண்டு வரையப்பட்டுள்ளன.

ஒர் பொருளின் விலை அதிகமாக வேண்டும் என்றுச் சொன்னால், விற்பனையாளர்களின் பொருட்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் வாங்குபவர்களின் தேவை எண்ணிக்கை + கையிருப்பு பணம் அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வாங்கும் நபர்களைவிட, விற்கும் நபர்கள் அதிகமாகிவிட்டால் விலை குறையலாம்.

மேல் உள்ள சார்ட்டில், கிரின்/வாங்கும் பிட்டின் பிட்காயின் மதிப்பின் ஏற்றம் ...10000...20000, 30000 என மெதுவாக ஏறுகிறது. ஆனால், ரெட்/விற்பனையாளரின் அஸ்க் பிட்காயின் ஏற்றம் அதிகமாக காணப்படுகிறது.

வாங்குபவர் விலை குறைவாக வாங்கவே விரும்புவார்கள் ... அந்த வகையில் 275-க்கு கொடுத்தால் தேவைக்கான பிட்காயினை விட 280-க்கு விற்பனைக்கு இருக்கும் பிட்காயின் தொகை அதிகம்.

அதாவது வாங்க 10000 பிட் பண்ணியிருக்கிறார்கள் என்றால், விற்க 14000 புட் செய்திருக்கிறார்கள். ஆகையால் இங்கே விலை சரியவே அதிக வாய்ப்பு.

பொருளுக்காக டிமாண்ட் குறைந்தால் விலை குறையும்,

ஆழம் அதிகமாக.. அதிகமாக...வர்த்தக பிட்காயின் எண்ணிக்கை குறைகிறது.. வர்த்தகம் செய்ய ஆளில்லை. இதில் நீங்கள் இருபக்க டிமாண்ட் பார்த்து செயல்படுங்கள்.

சார்ட் அமைப்பு, ஒர் பள்ளத்தினைக் குறிக்கும் வகையில் அமைவதால் அதனை டெப்த் சார்ட் என்று அழைக்கிறார்கள்.


விலை மாற்றத்திற்கு பல காரணிகள் உண்டு, ஒவ்வொரு நபரின் மனநிலைக்கு ஏற்ப கூட மாறும். ஏன் நீங்களே கூட வீழ்ச்சிக்கு வித்திடலாம்... ஏனெனில் எதுவானாலும் வீழ்ந்துதானே ஆக வேண்டும், மனிதன் கூட..

ஆம், தற்பொழுது இந்தியா என்றொரு நாட்டினை ஏற்றி... பின் அப்படியே வீழ்த்திக்காட்டவும் ஒர் குழுவால் முடியும்.

குறிப்பாக இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத் தலைமையில் 13 நபர்கள் கொண்ட குழுவினை இலுமினாட்டி என்றும், கிறிஸ்து எதிரானவர்கள் என்றும் அழைக்கிறார்கள். இவர்களே உலகினை ஆட்டிப்படைப்பதோடு, விதியின் ஆட்டத்தினையையும் கையாள்கிறார்கள்.

உலகத்தையே ஆள இராணுவத்தினை முதலில் கையாண்டவர்கள், தற்பொழுது மார்கெட்டால் ஆள்கிறார்கள்... இந்தியாவையும் அவர்களே ஆள்கிறார்கள்... அமெரிக்காவினையும் அவர்களே ஆள்கிறார்கள்... உலகமே இவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதே இவர்களது உறுதிமொழி.

வர்த்தகத்தினை தன் கைக்குள் வைக்க, செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்க இரட்டை மாடி கட்டிட இடிப்பு கூட இவர்களது முன் கூட்டிய திட்டமே என்ற சந்தேகம் முழுமையாக உண்டு... இருக்கும் என்பதனை நானும் நம்புகிறேன். ஆம், அமெரிக்க வர்த்தகத்தில் முதலீடுகளை செய்வது... நல்ல எழுச்சியினை உண்டு செய்து இலாபத்தினை எடுப்பது... மீண்டும் அந்த கம்பெனி சேர்கள் தன் வசம் இருந்தாலே அதனை ஆள முடியும் என்பதால்... மீண்டும் வீழ்ச்சிக்காக சூழலையே மாற்றி அமைப்பது, வாங்கிக் கொள்வது.

இரண்டு நாடுகளுக்கு சண்டையை மூட்டிவிட்டுக்கூட விலை வீழ்ச்சியினை உருவாக்கலாம்.

தங்கச் சுரங்கத்தினை தகர்த்துக்கூட விலை மாற்றத்தினை உருவாக்கலாம்.

ஒருவர்க்கு தேவை ஒன்றென்றால் தேவையில்லாதது தொண்ணூறு. அப்படி தேவையில்லாதது, மற்றொருவர்க்கு தேவை என்பதனைக் கண்டுகொள்ளாமல்.. தன் தேவைக்கு அதிகமான ஆசைக்காக எதனையும் செய்பவர்களே இந்த இலுமினாட்டி.

ஆள்பவர்கள் மக்களின் நலனை சிந்திக்க வேண்டும்... ஆனால் இவர்கள் அப்படியில்லை. மக்களினை பணத்தினை உருவுவதற்காகவும், தங்களின் நலனிற்காக செயல்படுபவர்களாவும் உள்ளனர்.

13 பேர் குழுவில்... வங்கியினை எப்படி கையாள வேண்டும்.. கம்பெனிகளை எப்படி கையாள வேண்டும்... வர்த்தக மேடையை எப்படி கையாள வேண்டும்.. சூழலை எப்படி கையாள வேண்டும் என்று அனைத்தினையும் மிகச் சரியாக செய்கிறார்கள்.

குறிப்பாக, எனது குரங்கு பேர வர்த்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறேனோ.. அதனையே ஒர் நாட்டினை மையமாகக் கொண்டும் இவர்கள் செய்கிறார்கள்.

இவர்களின் பிடியிலிருந்து அமெரிக்காவாலும் வெளிவர முடியவில்லை... இன்றும் கடனில் இயங்கும் அமெரிக்க அரசுக்கு டாலர் அச்சடிச்சி கொடுப்பது இவர்களே.

தற்பொழுதும் கடன் என்றப் பெயரிலும், கம்பெனி என்றப் பெயரிலும் இந்தியாவினையும் முழுமையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மார்க்கெட்டில் தினசரி வர்த்தகத்தினை முன் வைத்து எந்தவொரு திட்டமிடல் செய்தாலும், அதனை பல காரணிகளுக்கு முன்னால் நம்மால் சரியாக செய்திட முடியுமா என்றால் கஷ்டமே., எப்பொழுது நீண்டகால திட்டத்தில் செயல்படவும்.


ப்ளாட்பார்மினை கையாளும் நபர்கள் யார் என்று சிந்திந்து, அவரது திட்டத்தினை நோக்கி செயல்படவும்... அல்லது நீங்களே ஒர் ப்ளாட்பார்மினை உருவாக்கிவிடுங்கள். இதுவே எனது தற்போதைய திட்ட எண்ணம்...


2)2014 ஆம் ஆண்டில் mtgox bitcoin exchange company ல் 30 million dollars bitcoin loss .
market depth குறைந்தால் விலை வீழ்ச்சி ஏற்படுமா ?

எக்சேஞ்சர்க்கு ஏன் லாஸ்??? ...இல்லை.

30 மில்லியன் டாலர் இழப்பு என்பது திருட்டு என்று எழுதப்பட்டிருக்கலாம்.. டேட்டா லாஸ் என்று எழுதப்பட்டிருக்கலாம்... எதுவானாலும் இழப்பு மெம்பர்ஸ்க்கே.. சில நேரம் இதனால் எக்சேஞ்சர் தளம் மூடப்படுவதும் உண்டு... கடந்த வருடத்தில் ஜப்பானில் ஒர் முக்கிய பிட்காயின் வர்த்தக மேடை மூடப்பட்டது..


டெப்த் சார்ட்டில் இருக்கும் பை & செல் டிமாண்டினைப் பார்த்து விலை மாற்றத்திற்கு ஒர் காரணியாக கொள்ளலாம்.
=============================

கீழே உள்ள விவரம் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கலாம்... ஆகையால் பாதி எழுதியவன் வேண்டாம் என்று அழிப்பதற்கு பதில் திருத்தாமல் அப்படியே கொடுக்கிறேன் சரியாக திருந்த படித்த்துக் கொள்ளுங்கள்.

நாளை நல்லதொரு முகூர்த்த நாள், காலையில் சாம்பார் வைத்தே ஆக வேண்டும்(டிமாண்ட்). மார்க்கெட்டில் முருங்கைக்காயின் விலை கிலை ரூ.10 என்று 1000 கிலோ உள்ளது. அவசரத்திற்கு என்று உடனே உற்பத்தி செய்ய முடியாது... இருப்பதனை சமாளிக்க வேண்டும்.

முகூர்த்த நாள் என்பதால் எப்படியும் 2000 கிலோ தேவைப்பாடு இருக்கும் என்பதனை வியாபாரி முன் கூட்டியே அறிந்து, விலையினை 15 ஆக மாற்றுகிறார்.

வாங்குபவர்களின் மொத்தத் தொகை 5000 -ம் தான் இருக்கிறது என்றுச் சொன்னால்... 5000-த்துக்கு என்ன கிடைக்குமோ அதனை (500-கிலோ) வாங்கலாம். அல்லது கடனை வாங்கி இருக்கிற 1000 கிலோவினையும் வாங்கலாம்.

கடனை வாங்கி முழுவதனையும் வாங்கிவிட்டால் வியாபரிக்கு நல்ல இலாபம்.

இதே நேரத்தில் மற்றொரு வியாபரி, இரண்டு நாட்கள் கழித்து பறிக்கப்பட வேண்டிய முருங்கைக்காயினை இன்றே மார்க்கெட் டிமாண்ட் தெரிந்து விற்பனைக்கு கொண்டு வந்தால், அந்த நேரத்தில் ஒன்று விலை கூடலாம் ... அல்லது சரியலாம். இது வாங்கும் சக்தியினைப் பொறுத்தது. ஏனெனில் 10 காய் போட வேண்டியதற்கு பதில் 4 காய் போட்டுக்கூட சாம்பார் வைத்துவிடலாம். பெரிய பணக்காரர் என்றால் என்ன விலை என்றாலும் வாங்கி பயன்படுத்தலாம்.

தேவையை விட பொருள் குறைவாக இருந்தால் கண்டிப்பாக விலை கூடும் என்பதனை மனதில் கொள்ளுங்கள். ஏனெனில் இங்கு கையிருப்பு பணம் & பொருள் இரண்டையும் சமப்படுத்த வேண்டும்.

மார்க்கெட்டில் முருங்கைக்காய் வரத்து அதிகமாகி தேவையைவிட மிஞ்சிவிட்டால்.... வியாபரிகள் தன் கையிலிருப்பதனை முதலில் விற்று காசாக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால் பொருள் வீணாய் போய்விடும் என்று... விலையினைக் குறைப்பார்கள்.

அவசர பணத்தேவைக்காக இப்பொழுதே விற்றாக வேண்டும் என்று, மற்றவரைக்காட்டிலும் குறைந்த விலைக்கு விற்கலாம்.

ஒரே வியாபாரி இருந்தால் கடந்த ஒர் வார சராசரி விலையிலிருந்து இறங்கமாட்டார். ஏனெனில் வாங்க வருபவர் அந்த சராசரி விலையினை மனதில் பணம் ரெடி செய்திருப்பார். சில வியாபாரிகள், விற்கும் வரை விற்கட்டும் வில்லாததை மாட்டுக்குப் போடலாம் என்ற மனநிலையினையும் கொண்டிருப்பர். ஒர் சில வியாரிகள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூடுதலாக மார்க்கெட்டுக்கு வந்ததை வாங்குபவரிடமே கொடுத்து அழித்துவிடலாம். இங்கு என்ன தேவையோ அதனை காசுக்கும்.. தேவைக்கு மிஞ்சியதை இல்லாமலும் கொடுப்பர்.. அதாவது ஒருவர் தன் கையில் 1000 ரூபாய் வைத்திருக்கிறார் என்றால்... அந்த ஆயிரத்தினையும் பிடுங்கும் வகையில் அமைவது ஆபர்ஸ்/ பிசினஸ் தந்திரம்.

இங்கு அடி வாங்குபவர் விவசாயியே தவிர, வியாபரி கிடையாது... அவர் வரத்துக்கு தகுந்த விலையில் வாங்கி, கூடுதல் விலையில் விற்பதே அவர் வேலை. ஆகையால் எக்சேஞ்சர் நஷ்டமடைய வாய்ப்பில்லை.
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: bitcoin volume

Post by marmayogi » Sat Aug 08, 2015 9:26 pm

நன்றாக புரிந்து கொண்டேன். உங்கள் valuable ஆன நேரத்தை ஒதுக்கி விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி சார்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”