பங்குச் சந்தை: தோற்பதையும் திட்டமிட்டு தோற்கிறார்கள்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பங்குச் சந்தை: தோற்பதையும் திட்டமிட்டு தோற்கிறார்கள்

Post by ஆதித்தன் » Sat May 09, 2015 2:23 pm

Image
பங்குச்சந்தையில் மிக எளிதாக நிறைய நபர்கள் திட்டமிட்டு பல இலட்சங்களை சொற்ப நாட்களில் இழந்துவிடுகிறார்கள், ஆனால் இலாபம் சம்பாதிக்க சிந்திக்கமாட்டேன் என்கிறார்கள், அது ஏன் என்பதுதான் புரியாத புதிர்.

கடந்த மூன்று வருடத்தில் பலதரப்பட்ட நபர்களை பாரக்ஸ் மூலம் அறிந்துள்ளேன். அதில் பலர் சொல்வது நஷ்டம் அடைந்துவிட்டேன். எப்படி பாரக்ஸில் இலாபம் பார்ப்பது என்பதே தெரியவில்லை... உங்களது விடியோ பார்த்தேன்... மிகவும் அருமை. அதனைப்போல், எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பாரக்ஸ் தொழிலில் எனக்கு வெற்றி தோல்விகளை கணக்குப் பார்த்தால் FBS-லிருந்து இலாபம் தான் வருகிறது, அதற்கான பயிற்சிகள் படுகை.காம் கொடுத்துள்ளேன்.

என்னுடைய விடியோக்களை முழுமையாக பார்த்தால்... எனது பதிவுகளை முழுமையாக புரிந்து படித்தால் என்னிடம் கேட்க வேண்டிய அவசியமே இருக்கக்கூடாது என்று நினைப்பவன் நான். ஏனென்றால் நான் அத்தனைப் பெரிய ஒய்வு விரும்பி. சும்மா இருந்தாலும் இருப்பேனே தவிர... சும்மா சிந்திக்காமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதில்லை. ஆனால், அடுத்த பதிவிலாவது பதிலில்லா கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிடுவதே என் வழக்கம்... தெரிந்தும் கொடுக்காவிட்டால் எனக்கு தூக்கம் வராது.

நமக்கு கொடுக்கப்பட வேண்டியது என்பதனை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் கொடுத்துக் கொண்டேதான் வருவார்கள், அதனை நாம் சரியாக பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று எளிமையை நாடாமல், நாமே பெற முயற்சிப்போம் என்று கொஞ்சம் முயற்சித்து சிந்தித்தும் கிடைக்காத பொழுது கேட்டு தெளிவு பெற வேண்டியது அவசியம்.

உங்களுக்குள் இருக்கும் அறிவுக்கதவு திறந்து செயல்படாவிட்டால் எந்தவொரு எதிர்பார்ப்புகளையும் அடைதல் என்பது முடியவே முடியாது என்பதனையும் மனதில் கொள்ளுங்கள்.

உங்களது அறிவு செயல்பட வேண்டும் என்பதற்காக எனக்குத் தெரிந்ததை எல்லாம் பதிவுகளாக கொடுத்துவிடுவது, அடுத்து என்ன என்று எனக்குத் தெரியாததை தேட ஆரம்பித்துவிடுவேன். தேடலில் கிடைப்பதை எல்லாம் இங்கு பதிவாகிக் கொண்டே வரும்... வரும் பதிவுகளை எல்லாம் படித்துக் கொண்டால் என் அளவுக்கு மட்டுமே தெரிந்து கொள்ளலாம். நீங்களும் தேடினால் என்னையும் தாண்டிய பெரிய ஆளாக வரலாம். இப்படி ஒவ்வொரு ஆயுட்காலத்திலும் சொல்லப்பட்டதனைத் தாண்டித் தேடி புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன.

பாரக்ஸ் சிலர் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், பாரக்ஸில் நிறையபேர் இலட்சம் இலட்சமாக இழந்திருக்கிறேன் என்று சொல்லி வருவார்கள். ஆனால், சமீபத்தில் நானறிந்த ஒருவர் 1 இலட்சத்தினை இழந்தார், அதன் பிரதிபளிப்புதான் இந்த பதிவு. அதுவும்.. அவ்ள சொல்லியும் கேளாமல் செயல்படுவோரின் திட்டங்களைப் பார்க்கும் பொழுது மனது கேட்கவில்லை.

ஒருவர் சொல்கிறாரா, சொல்றது அனைத்தினையும் முதலில் முழுமையாக உள்வாங்குங்கள். உள்வாங்கிவிட்டு, நீங்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுத்தால் கண்டிப்பாக சரியாக இருக்கும். அவ்வாறு சுயமாக நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்ற ரீதியில் தான் படுகையில் எனது பாரக்ஸ் பயிற்சிகள் அமைந்துள்ளன. அதனையே அனைவருக்கும் சொல்லிக் கொண்டும் வருகிறேன். அதன்படி சுயமாக சிந்திக்க ஆரம்பித்தவர்கள் தோல்விகளைத் தாண்டி ஜெயிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

சிந்திப்பது என்பதனைத்தான் அடுத்தக்கட்டமாக திட்டமிடுதல் என்று சொல்வார்கள். ஒர் காரியத்தில் இறங்குகிறீர்கள் என்றுச் சொன்னால் சிந்தித்து திட்டமிட்டுச் செய்யுங்கள் என்று சொல்வார்கள்.

என்னிடம் நிறையபேர் பாரக்ஸ் பற்றி கேள்வி கேட்பார்கள்... அதாவது அவர்கள் திட்டமிடுகிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பல நேரம் பதிலே சொல்ல முடியாது, அந்த அளவிற்கு கேள்விகளைக் கேட்பார்கள்... பதிலே தேவையில்லாத கேள்விகளை கையில் எடுத்துக் கொண்டு கேட்டால், அதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும். இதுக்கான பதிலை இந்த கேள்வியிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று மற்றொரு கேள்வியினைத்தான் காட்ட முடியும்.. அப்படி மற்றொரு கேள்வியினைச் சொன்னால்... அது அவர்களுக்கு தெரியாது.. அவர்களது திட்டத்தில் அப்படி ஒர் கேள்வியும் கிடையாது.

அடிப்படையாக பிறரிடம் கற்க வேண்டியதை கற்று, தன்நிலையிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய பதிலை... பிறரிடம் கேட்டால் எப்படி பதில் கிடைக்கும்??? அப்படி ஒருவர் சொன்னால் அது சரியான பதில் ஆகுமா?... அது ஒர் சின்ன நம்பிக்கை, அந்த நம்பிக்கையினை உறுதியாக்க உங்களுக்கு அடிப்படை தெரிதல் வேண்டாமா?

ஒர் இலட்சம் போட்டால் தினம் ஐயாயிரம் சம்பாதிக்கலாம்... சரி. அதென்ன பெரிய கஷ்டமா.. ஒர் ஆர்டர் போட்டால் 10 பிப்ள வந்திடப் போகுது. அந்த 10 பிப் எடுக்கிறதுக்குள்ள 100 பிப்ப கோட்டை விட்டுட்டீங்கன்னா மிச்சமா ஒன்றும் இருக்காதே?

முதல்ல விளம்பரம்னா என்னென்னு தெரியுமா? விளம்பரம் கொடுத்தவர்கள் அடிப்படை திறன் தெரியுமா?
இந்த இரண்டுமே மிக முக்கியம் சார், இந்த இரண்டையும் பார்த்துட்டுத்தான் அடுத்தக்கட்ட ஆய்வுக்குள்ளேயே போக முடியும்.

விளம்பரம் என்பது அதிகப்பட்ச முடியுமானதினை சொல்வது. ஏமாற்று என்பது முடியவே முடியாததை சொல்வது.

இன்னும் விளக்கமாகச் சொன்னால் கணிதத்தில் 100 மதிப்பெண் வாங்கலாம் என்பது முடியுமானது. எங்க பள்ளியில் படித்தால் 100 மதிப்பெண் வாங்கலாம் என்பது விளம்பரம். படிக்கிறவன் 100 மதிப்பெண் எடுப்பான்... எடுக்க முடியும். 40 மதிப்பெண் எடுக்கிறவங்க இருக்கிறாங்க என்பதற்காக 100 மதிப்பெண் எடுக்க முடியும் என்பது பொய் ஆகாது. வாத்தியார் அந்தளவுக்கு திறமை இல்லைன்னால் கூட சில மாணவர்கள் 100 எடுத்துவிடுவார்கள். அது அவனுடைய சுய திறனில் வெளிப்படுவது... பெரும்பான்மையான மாணவர்கள் சுய திறனில் தான் மதிப்பெண் எடுக்கிறார்கள். ஆசிரியர்களின் வேலை அடிப்படையை கற்றுக் கொடுப்பதுதான். அதற்கும் ஒர்படி மேல் சொல்கிறேன் என்று விளம்பரத்தில் 110 மதிப்பெண் எடுக்கலாம் என்றுச் சொன்னால் அது ஏமாற்று.

5 நிமிடத்தில் 5000 ரூபாய் எடுக்க முடியும் என்று விடியோ எடுத்து காட்டியவணும் நான் தான்.

30 நாட்கள் தொடர்ச்சியாக ட்ரேடிங்க் செய்து இலாபத்தோடு முடித்து காட்டியவணும் நான் தான்.

ஆனால் அதனைச் செய்வதற்கு எத்தனை வருடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன், எத்தனை அனுபவங்களைச் சந்தித்தேன்... அப்படியான ஒர் நிகழ்வினைக் கொடுக்க எத்தனை பொறுமையாக காத்திருந்தேன் என்பது தெரியுமா?

அப்படி 6 மாத படிப்பும்... 6 மாத பயிற்சியுமாய் தெரிந்து கொண்டதனை... உடனே உங்களால் கற்றுக் கொள்ள முடியுமா?

5 நிமிடத்தில் ஐய்யாயிரம் சம்பாதிக்கிறது ஒன்றும் கஷ்டம் இல்லப்பா.. கொஞ்சம் தெரிய வேண்டிய அடிப்படைப் பாடங்கள் தெரிய வேண்டும். தவிர்க்க வேண்டியதனை தவிர்க்க வேண்டும், இலாபம் எடுக்க முடியாவிட்டால் விலகிட வேண்டும. அதற்காக நஷ்டம் அடைய வேண்டிய அவசியமில்லை.

வால்யூம்னா என்ன ... பிப்ஸ்னா என்ன... இலாபம்னா என்ன... எந்தத் தொகைக்கு எந்த வால்யூம் தேர்ந்தெடுப்பது... எந்த நேரத்தில் அதை மீறுவது... என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது... தற்போதைய ட்ரெண்ட் என்ன... எந்தந்த வகையில் ட்ரெண்ட் அமையும்... இப்படி பல கேள்விகளுக்கு விடைகளைக் கொண்டு திட்டமிட்டால் வெற்றியடையலாம்.

ஆனால் தோற்கிறவங்க திட்டமே வேற...அவங்க கேள்வியே வேற...

ஒர் இலட்சம் டெபாசிட் செய்தால் டேலி 5000 ரூ ப்ராபிட் பார்க்கலாமா? ஆம் பார்க்கலாம்...

வித்ட்ரா உடனே கொடுத்திடுவாங்களா... ஹும்... தினம் தினம் வாங்கிக் கொள்ளலாம். மற்றக் கம்பெனி மாதிரி எல்லாம் கிடையாது, அன்றைன்றுக்கு பணத்தினை வாங்கிக் கொள்ளலாம்.

அப்புறம் என்ன திட்டம் போட்டுறுவாங்க.. என்ன திட்டம் போடுவாங்க... எப்படி ஒர் இலட்சம் திரட்டுறது? அதுதான் இப்ப எளிதாகிவிட்டதே ... அதிலும் சிலர் பத்து இலட்சம் கூட அசால்ட்டா கடன் வாங்குறாங்க....

பணத்தினை திரட்டியாச்சி.. டெபாசிட் செய்தாற்றி... ஆர்டர் போட்டால் உடனே காசு தான்.... நாளைக்கே கார் வாங்கணும்... பங்களா கெட்டணும்.

இதெல்லாம் நீங்க சொல்லியா தெரியணும்... இந்த திட்டம் இல்லா மனிதன் உண்டா... நான் தான் உண்டா?

ஆர்டர் எப்படி ஒபன் செய்யணும்... எப்படி க்ளோஸ் செய்யணும் என்ற ஒன்றை மட்டும் 5 நிமிடத்தில் கற்றுக் கொண்டு, 5 நிமிடத்தில் 5 ஆயிரம் சம்பாதிக்க ஆரம்பிச்சிடுறாங்க.

50 விடியோ க்ளிப்ஸ் கொடுத்திருக்கேன்... அத்தனையும் பாருங்க... புரியும் வரைக்கும் பாருங்க... கொஞ்சம் ஆர்ட்டிகள் கொடுத்திருக்கேன்... அத்தனையும் படிங்க .. படிச்சிட்டு ஏதாவது டவுட் இருந்திச்சின்னா படுகையில் கேளுங்க... கேட்டு தெளிவாகிக்கோங்க... என்று சொன்னால்... ஒருத்தரும் அதனை நினைப்பதே கிடையாது.

அதான் ஆர்டர் போட கற்றுக் கொண்டாகிவிட்டது.. க்ளோஸ் செய்யவும் கற்றாகிவிட்டது... க்ளோஸ் செய்தால் பணம் அக்கவுண்ட் ஏறிடுது... ஏறனதை வித்ட்ரா செய்தால் போற்று... இதுக்கு எதுக்கு அதனை எல்லாம் படிக்கணும்... எதுக்கு லைன் போடணும்??

போடு செல் ..... போடு பை...

அப்படி பையையும் செல்லையும் போட்டால் கூட ஜெயிச்சிடலாமய்யா... அதக்கூட சரியாகச் செய்யாமல்.. ஒரே நாளில் அல்லவா மொத்தமா மார்க்கெட்டில் இருக்கும் பல நாட்டு மக்களின் பல மில்லியன் கோடிகளையும் தான் ஒருத்தரே அள்ளிட வேண்டும் என்று அல்லவா முட்டி மோதுறாங்க.

முடியுமா? ஒரே நாளில் இலாவகமாக ஆர்டர் போட்டு சம்பாதிக்கும் நேக்கினை கற்றுக் கொள்ள முடியுமா?

கொஞ்சம் அடிப்படைகளை எல்லாம் கற்று அதன்படி,, ஒர் மூன்று மாதம் செயல்பட்டால் தானே சரியானபடி திட்டமிட்டு வெற்றியடைய முடியும்.

அடிப்படையே கற்றுக் கொள்ளமாட்டேன் என்றுச் சொன்னால் எப்படி முடியும்?

க்ரூப் தேர்வுக்கு ஒழுங்கா படிச்சோம் என்றால்... 1 இல் இல்லை என்றாலும் 4-இல்லாவது வெற்றியடைய முடியும் அல்லவா.

பாரக்ஸ்னா என்ன என்று முழுமையாக பயிற்சி எடுங்கள் ... 3 மாதம் பயிற்சி எடுப்பதில் ஒன்றும் பெரிய தவறில்லை.

கடன் வாங்கி ட்ரேடிங்க் செய்யாதீர்கள்... இருந்தா போடுங்க... இல்லைன்னாலும் தினம் ரூ. 1000 முதல் 5000 வரை பாரக்சில் சம்பாதிக்க முடியும். அதனையும் படுகை பயிற்சியில் சொல்லிக் கொடுத்துள்ளேன். ஆகையால் பாரக்சினை நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள்.

பங்குச் சந்தை என்றாலும் சரி, பாரக்ஸ் என்றாலும் சரி... கையிலிருக்கும் தொகையினை சரியாக 5 -ஆக பிரித்து ஒன்றைக் கொண்டு சரியாக வெல்ல முயலுங்கள். எல்லாமே இரண்டால் ஆனது போல்... பாரக்சிலும் லாஸ் வரும்... ப்ராபிட் வரும்.. லாஸ் பார்க்காமல் இலாபம் பார்க்க முடியாது. இரண்டையும் கூட்டினால் இலாபம் கிடைக்கிறதா? அது போதும் நமக்கு.

ஆசைக் கனவில் வகுக்கும் திட்டம் தோல்வியினைக் கொடுத்துவிடும், திட்டமிட்டு பயிற்சியினைச் செய்தால் இலாபத்தினைக் கொடுக்கும்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”