பாரக்ஸ் வர்த்தகத்தின் நம்பிக்கை எடுபடுமா? May-5

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பாரக்ஸ் வர்த்தகத்தின் நம்பிக்கை எடுபடுமா? May-5

Post by ஆதித்தன் » Tue May 05, 2015 10:51 am

Image
நேற்றைய மார்க்கெட் எதிர்பார்த்தது போல ஒர் அலையினை தெளிவாகக் கொடுத்துவிட்டதால் எளிதாக இலாபம் அமைந்திருக்கும்.


அதைப்போல் இன்றைய நிலையிலும் ஒர் தெளிவான நிலையே மார்க்கெட்டில் காணப்படுகிறது. ஆகையால் இன்றைய நிலையிலும் இலாபத்தினை மிக எளிதாக சம்பாதிக்க முடியும் என்று கருதுகிறேன்.


ஷேர் மார்க்கெட்டில் ஒர் சில நம்பிக்கைகள் எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும்... அதாவது ஆத்தாவுக்கு கூல் ஊத்துனா... ஊர்ல நல்லா மழை பெய்யும் ... வீட்ல கஷ்டம் எல்லாம் தீர்ந்து போகும் என்பது போல...


பங்குச் சந்தையில் மே மாதம்னா வித்திட்டு போயிடு என்றொரு நம்பிக்கை பல வருடங்களாக பரப்பப்பட்டு வருகிறது. மே மாதம் என்பது விடுமுறை காலம் கூட ... ஆகையால் இருக்கிறதை வித்திட்டு, குடும்பத்தோடு விடுமுறையை மகிழ்வாகக் கொண்டாடப் போகிறோம் என்பதனையே இப்படியோர் நம்பிக்கை உருவாக காரணம் ஆகிவிட்டதோ தெரியவில்லை. ஆனால் இன்றும் அது பேசப்பட்டு வருகிறது.


பாரக்ஸ் பொறுத்த வரைக்கும்... இது அந்த அளவுக்கு பொறுந்தாது. பங்கிற்கும், கரன்சி பரிமாற்றத்திற்கும் உள்ள வித்தியாசம் நன்காகவே நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லாவிடில், படுகை வழங்கியுள்ள Forex trading training tutorial tamil video clips and website articles கொஞ்சம் மீண்டும் தேடி படியுங்கள். அதில் பல தகவல்கள் கொடுத்துள்ளேன்.

Image
இன்றைய மார்க்கெட் சார்ட் பேட்டர்ன் பார்க்கும் பொழுது கடைசியிலான நிலைகளில் ஒர் முக்கோண அமைப்பு கீழே சரிந்து கொண்டே போவதோடு ஒர் நிலையான பாட்டம் லைனை முட்டிக் கொண்டிருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது.


அந்த பாட்டம் லைனை உடைத்துச் சென்றால் அடுத்தக்கட்ட பாட்டம் லைனை நோக்கிச் செல்லும் என்பது சார்ட் பேட்டர்ன்படி உறுதியாக நம்பக்கூடிய ஒன்று.


இன்றைய செய்தி என்றுப் பார்தோமானால்.. இரோப்பிலிருந்து பெரிதாக எதுவும் இல்லை. ஆனால் அமெரிக்காவிலிருந்து ஒர் செய்தி இரவு வர இருக்கிறது.


இரவு 7.30-க்கும் வரும் அமெரிக்க உற்பத்தித்துறை சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி, டாலரினை வலுப்படுத்தும் என்றே மார்க்கெட் கருத்துரையாளர்கள் நம்புகிறார்கள்.


அதுமட்டுமில்லாமல், கடந்த வார வெள்ளிக்கிழமையே மார்க்கெட் திரும்புகிற சூழலை அடைந்துவிட்டது தெரிந்ததே.


ஆகையால் தொடர்ச்சியாக கீழே எதிர்பார்ப்பது மிக்க நல்லது.


===================================

Currency :: EUR/USD

Trend : DOWN

Chart :: Descending Triangle

Important News


17.00 - $$$$ - ISM Non-Manufacturing PMI (Apr)
uvenki35
Posts: 11
Joined: Mon Nov 24, 2014 6:55 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் வர்த்தகத்தின் நம்பிக்கை எடுபடுமா? May-5

Post by uvenki35 » Wed May 13, 2015 12:44 pm

Sir
How to get important news time in Forex??
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் வர்த்தகத்தின் நம்பிக்கை எடுபடுமா? May-5

Post by ஆதித்தன் » Wed May 13, 2015 1:06 pm

uvenki35 wrote:Sir
How to get important news time in Forex??

check daily calender news time >> http://forex.padugai.com/2013/09/forex- ... iming.html
uvenki35
Posts: 11
Joined: Mon Nov 24, 2014 6:55 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் வர்த்தகத்தின் நம்பிக்கை எடுபடுமா? May-5

Post by uvenki35 » Wed May 13, 2015 1:44 pm

That's news time Indian time or sever time sir???
Pls explain how to get Indian time
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பாரக்ஸ் வர்த்தகத்தின் நம்பிக்கை எடுபடுமா? May-5

Post by ஆதித்தன் » Wed May 13, 2015 2:09 pm

uvenki35 wrote:That's news time Indian time or sever time sir???
Pls explain how to get Indian time
not both.

காலண்டரின் மேல் பகுதியில் Adjust Time Zone என்ற வாசகம் இருக்கும்... அதனைக் க்லிக் செய்து செட் செய்து கொள்ளவும். அருகிலிருந்து DST off என்பதனை தேர்ந்தெடுத்து சப்மிட் செய்யவும்...

+2 server time

+5.30 Indian Standard time
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”