EUR/USD வர்த்தக யுக்தி - மார்ச் 18

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

EUR/USD வர்த்தக யுக்தி - மார்ச் 18

Post by ஆதித்தன் » Wed Mar 18, 2015 11:15 am

கடந்த இரண்டு நாட்களாக நாம் மார்க்கெட்டினை கீழ் எதிர்பார்த்து, அது ஒர் ஆவ்ரேஜ் தான் கொடுத்து வருகிறதே தவிர இலாபத்தினைக் கொடுக்கவில்லை.

நாம் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தது, டாலரின் வட்டி உயர்வு அதிகரிப்புதான். ஆனால், அதில் தொய்வு ஏற்பட்டு இன்வஸ்டர்ஸ் இரண்டாம் கெட்டான் மனநிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதனை கடந்த இரண்டு நாள் மார்க்கெட் காட்டுகிறது.

இன்றைய நாளில் நீங்கள் மிகக் கவனமாக வர்த்தகம் செய்தல் வேண்டும். ஏனெனில் இரோ/டாலர் மார்க்கெட் விலை பாட்டத்தில் இருக்கிறது. இங்கு நீங்கள் விற்பது என்பது கொஞ்சம் ஆபத்தானது என்றுச் சொன்னாலும்... கால சூழலினைப் பார்த்து நாம் அன்றைய நிலைக்குத் தகுந்தவாறு விற்று வெளியேறுகிறோம்.

சார்ட் பேட்டனைப் பார்க்கும் இன்னும் பெரிதாக காளைக்குச் சாதகமாகச் செல்லவில்லை என்று தெரிந்தாலும், எட்டிப் பார்க்கிறது என்பது புலப்படுகிறது.

இன்று இரவு சர்வர் டைம் 20 (இரவு 11.30) க்கு அமெரிக்கா மத்திய வங்கியின் மீட்டிங்கில் செய்திகள் வெளியிட இருக்கிறார்கள். இந்த 30 நிமிடத்தில் தான் சரியான நிலவரம் தெரியவரும். இன்றைய நாளில் மார்க்கெட்டில் ஸ்டாப் லாஸ் இல்லாமல் ஆர்டர் எதனையும் விட்டுவிட்டு செல்லாதீர்கள்.

கண்டிப்பாக இரவு செய்தியினைப் பாருங்கள்... அதில் கீழ் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்துங்கள். கீழ் என்பது 1.055 க்கு பின் தெரியும்.

மேலுக்கான வாய்ப்புகள் இன்று கொஞ்சம் கம்மியாகத்தான் தெரிகிறது. ஏனெனில் இத்தனைப் பெரிய இறக்கத்தினைக் இன்வஸ்டர்ஸ்...திரும்பி மேல் எழும்ப ஆரம்பிக்கும் பொழுது... ஒர் சட்டன் அப் காட்டுவார்கள். அது இன்னும் நிகழவில்லை. ஆகையால், கீழ் இறங்கி...சோல்டர் அல்லது டபுள் பாட்டத்தினை உறுதிகாட்டி சட்டன் ஏற்றத்தினைக் கொடுக்கலாம்.

இன்றைய யெல்லன் பேச்சு... ஒர் ஏமாற்றத்தினையோ... அல்லது ரேட் ஏற்றத்திற்கு இன்னும் 3 மாதம் இருக்கிறது அப்புறம் பார்க்கலாம் என்றோ... இன்னும் பல எக்கானமிக் நிலவரங்களை பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்றோ ஒர் சமாளிப்பு நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆகையால் ரேட் உயர்வு என்பதனை உறுதியாக இன்று அறிவிக்க இருப்பதாக தெரியவில்லை.

எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்ற முடிவோடு .. இன்றைய செய்தியினை முழுமையாக கவனித்து பின் மார்க்கெட்டினை தேர்ந்தெடுங்கள்.

வாய்ப்பு : கீழ்

==============================================================
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”