வார கடைசி நாளில் பாரக்ஸ் வர்த்தகம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

வார கடைசி நாளில் பாரக்ஸ் வர்த்தகம்

Post by ஆதித்தன் » Fri Mar 13, 2015 10:06 am

நேற்றைய வர்த்தகம் எதிர்பார்த்த Retails Sales ரிப்போர்ட் நெகட்டிவ் காரணமாக மேல் நோக்கிச் சென்றுவிட்டது.

Retails Sales நெகட்டிவ் ரிப்போர்ட்டினால் டாலரின் காளை அடங்கிவிட்டு என்று முழுமையாகச் சொல்ல முடியாது. கொஞ்சம் வெயில் அடிக்க ஆரம்பிச்சிட்டா மக்கள் பையை கையில எடுத்துக்கிட்டு கிளம்பிடுவாங்க என்ற கதைதான் இந்த கதை. ஏனெனில் ஜாப்லெஸ் க்ளைம் பாசிட்டிவ் ரிசல்ட்டாக வந்திருப்பது நமக்குத் தெரிந்ததுதானே, ஆகையால் மக்கள் பணத்தினை சேகரித்து வைத்திருக்கிறார்கள் என நம்பலாம்... அடுத்த ஆபர் போட்டு சேல்சினைத் தூக்கி மேல் வைத்துவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

நேற்று நடந்த கூத்து என்பது ட்ரேடர்ஸின் Sell-Off & Re-Sell என்பதுதான் நடந்திருக்க வேண்டும்.

தற்பொழுது மார்க்கெட் நேற்றைய ஏற்றத்திற்கான இறக்கமான 38.2% -இல் பிவோட்டாக முக்கோண வடிவத்தினை அமைத்துக் காணப்படுகிறது.

அடுத்தக்கட்டமாக மார்க்கெட் மேல் அல்லது கீழ் என்ற இரட்டை வாய்ப்பினைக் கொண்டிருக்கிறது என்பதனை தெளிவாக ஒவர்-ஆல் ட்ரெண்ட் சேனல் மூலம் மேல் .... நிகழ்நாள் ட்ரெண்ட் மூலம் கீழ் என்று தெரிந்துவிட்டதால் .... இரண்டுக்கும் வாய்ப்பினைக் கொடுத்து, மொத்தமாக கடைசி வாய்ப்பினை கீழே வையுங்கள், நட்டமில்லாமல் தப்பிப்பதோடு இலாபத்தினையும் பார்க்க முடியும்.

இன்று சர்வர் டைம் 14.30 (மாலை 5) -க்கு Producer Price Index ரிப்போர்ட் வர இருக்கிறது. நேற்றைய RS ரிப்போர்ட் நெகட்டிவாக வந்ததும், கடந்தமுறை PPI பெரிய நெகட்டிவாக வந்ததும்... இந்த முறை PPI கூடுதல் எதிர்பார்ப்பும் மார்க்கெட்டில் கொஞ்சம் டாலர்க்கு தொய்வினைக் கொடுக்கும் போலத்தான் தெரிகிறது.

நீங்கள் சார்ட் பேட்டர்னுக்கு பின்னே நிதானமாகச் சென்று வெல்லுங்கள்..

அதிகப்படியான வாய்ப்பு - கீழ்
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”