IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

ஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Thu May 21, 2015 10:27 pm

Image
ஒர் கரன்சி அல்லது பங்கில் வர்த்தகம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், அதன் கடந்த கால நடவடிக்கையினைப் பார்ப்பதுபோல் நிகழ்கால நிகழ்வுகளை கொஞ்சம் கண்முன்னே நோட்டமிட்டுக் கொண்டு சென்றால், விரைவில் அதன் ஏற்ற இறக்கம் எவ்வாறு அமைகிறது என்ற புரிதல் ஏற்படுவதோடு, அதற்குத் தகுந்தாற்போல் கவனித்து வந்த மனமும் சேர்ந்து இயங்க ஆரம்பிக்கும்.

மனம் எப்பொழுது ஒருமித்து செயல்பட ஆரம்பிக்கிறதோ, அப்பொழுதிலிருந்தே வர்த்தகத்தினை தொடங்கிவிடலாம். எப்பொழுது தயங்குகிறது என்று தெரிகிறதோ, அப்பொழுது வர்த்தகத்திலிருந்து ஒதுங்கிவிடுதலும் நல்லது.

ஆயில் வர்த்தகத்தினைப் பொறுத்த வரைக்கும் கொஞ்சம் பெரிய முதலீடு இருந்தால் மட்டுமே செயலில் இறங்க முடியும். நாணய வர்த்தகத்திற்கு பணத்தினை பெருக்கி அல்லது சில்லறையாய் உடைத்துப்போட்டு பயன்படுத்தும் வசதி இருப்பது போல இதற்கு கிடையாது.

ஆயில் வர்த்தகத்தினை மட்டும் சரியாக நோட்டமிட்டு செய்பவர்கள் பலருண்டு... அவர்கள் வரிசையில் ஆயில் பங்குச் சந்தை எவ்வாறு அமையும் என்று நாளைய நாளினை கணிக்கும் நபராக களமிறங்கும் முயற்சியில் இத்தொடரினை தொடங்குகிறேன்.

மேலும் ஆயில் ஒர் மக்கள் பயன்பாட்டு பொருள் என்பதோடு முக்கிய எரிசக்தியாக மாறியுள்ளது. ஆகையால் எப்பொழுதும் பாசிட்டிவ் நிலையில் இருப்பவர்களுக்கு எந்தவொரு பாதகமும் இல்லாமல் வர்த்தக யூக்தியோடு செயல்படுவார்க்கு அமையும்.

===================================================================================

முதல் நாள்

ஆரம்ப விலை : 64.35
விலை முடிவு : 64.82
உச்ச விலை : 65.16
மட்ட விலை : 64.13
விலை மாற்றம் : +0.47
விரிவு நிலை : 1.03
காளை : 0.81
கரடி : 0.22

1 நாள் - மொத்த மாற்றம் : +0.47

==========================================

ஒர் பேரல் விலை $64.35 என்பதனை 6435 பாயிண்ட்ஸ் என்று குறிப்பிட்டு... இன்று 47 பாயிண்ட்ஸ் உயர்வு அடைந்துள்ளது என்று குறிப்பிடலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Fri May 22, 2015 9:13 am

Image
நேற்றைய நாளில் மார்க்கெட் மேலும் கீழுமாய் விரிவு நிலை கொடுத்தது 103 பாயிண்ட்ஸ் ஆனால் இன்று நேராக ஏறுமுகமாய் அமைந்ததோடு 204 பாயிண்ட்ஸ் விரிவினைக் கொடுத்து முடிவாக 168 பாயிண்ட்ஸ் மாற்றத்தினை காளைப் பக்கம் அமைத்துள்ளது.

இடையில் 50 பாயிண்ட்ஸ் ஏற்ற இறக்க கோணங்கள் இருப்பதனையும் பார்க்கும் பொழுது... இடையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கவனத்தில் கொண்டு செயல்படுவது மிக முக்கியம் என்பதும்... இங்குதான் பலர் கோட்டைவிடுகிறோம் என்பதும் அறிந்ததே.

இரண்டாம் நாள்

ஆரம்ப விலை : 64.82
விலை முடிவு : 66.50
உச்ச விலை : 66.86
மட்ட விலை : 64.82
விலை மாற்றம் : +1.68
விரிவு நிலை : 2.04
காளை : 2.04
கரடி : 0

2 நாள் - மொத்த மாற்றம் : +2.15
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Sat May 23, 2015 11:27 am

Image

கடந்த இரண்டு நாட்களும் வர்த்தகம் காளைக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இன்று கரடிக்குச் சாதகமாக முடிந்துள்ளது.

சிறிய அலைகளை உடைத்து பெரிய அலைகளை உருவாகுவது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதற்கு முன்னராகவே நம் வேலையை அலைகளுக்கு அணை கட்டுவதில் வைத்துக் கொண்டால் தாண்டிச் செல்வதோடு நாமும் கரை தேர்ந்திடலாமோ?


மூன்றாம் நாள்

ஆரம்ப விலை : 66.50
விலை முடிவு : 65.53
உச்ச விலை : 66.59
மட்ட விலை : 65.10
விலை மாற்றம் : -0.93
விரிவு நிலை : 1.49
காளை : 0.09
கரடி : 1.40

3 நாள் - மொத்த மாற்றம் : +1.22
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Tue May 26, 2015 11:15 am

Image
நான்காம் நாள்

ஆரம்ப விலை : 65.53
விலை முடிவு : 65.69
உச்ச விலை : 66.19
மட்ட விலை : 64.74
விலை மாற்றம் : +0.16
விரிவு நிலை : 1.45
காளை : 0.66
கரடி : 0.74

4 நாள் - மொத்த மாற்றம் : +1.38

கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட வர்த்தக ஏற்ற இறக்க அமைப்பிற்கும், இன்றைய அமைப்பிற்கு கொஞ்சம் வித்தியாசம்... அது என்னாலும் வித்தியாசம் தான் அது வேறு சொல்லித் தெரியணுமா... சரி விடுங்க..

நேற்று கரடி முழுமையாக ஆக்கிரமித்து 140 பாயிண்ட்ஸ் எடுத்தது, அதன் தொடர்ச்சியாக இன்றும் ஆரம்பத்தில் 74 பாயிண்ட்ஸ் தன் பக்கத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது.

ஆனாலும் தன்னை விட்டுக் கொடுக்காத காளை, தன் ஆக்ரோஷப் பலத்தினைக் கொண்டு, இழந்த 74 பாயிண்ட்ஸையும் திரும்ப பெற்று, அதற்கும் மேலாக 66 பாயிண்ட்ஸ் தனக்கான உச்சமாக இன்றைய மார்க்கெட்டில் அமைத்திருக்கிறது.

கரடியும் காளையும் இரண்டும் ... 50 பாயிண்ட்ஸ்க்கு மேல் இலாபம் பார்த்திருக்கின்றன.

கடைசியில் மார்க்கெட் முடிவு என்றுப் பார்த்தால் 16 பாயிண்ட்ஸ் காளைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

வாங்கினாலும் இலாபம் விற்றாலும் இலாபம் என்பதும் அவ்வப்பொழுது மார்க்கெட்டில் நடப்பது என்பதனை இன்றைய நாள் நமக்கு உணர்த்துகிறது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Wed May 27, 2015 11:28 am

Image
ஐந்தாம் நாள்

ஆரம்ப விலை : 65.69
விலை முடிவு : 63.94
உச்ச விலை : 65.69
மட்ட விலை : 63.33
விலை மாற்றம் : -1.75
விரிவு நிலை : 2.36
காளை : 0.0
கரடி : 2.36

5 நாள் - மொத்த மாற்றம் : -0.37

நான்கு நாட்கள் மார்க்கெட் காளையின் கைக்குள் இருந்தது இன்று கரடியின் கைக்குள் வந்துவிட்டது. காளை இன்றைய நாளில் எதனையும் சாதிக்க முடியாத அளவிற்கு ஆரம்பத்திலிருந்தே தன் ஆதிக்கத்தினைச் செலுத்திய கரடி அதிகப்பட்சமாக 236 பாயிண்ட்ஸ் எடுத்துள்ளது. இதனை எதிர்கொள்ள முடியாத காளை கடைசில் மாற்ற 175 என்ற அளவிற்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறது.

கவனிக்க வேண்டியது... இன்றைய தினத்தில் 236 பாயிண்ட்ஸ் ஒரே திசையில் அமைந்துள்ளது. கண்டிப்பாக மார்க்கெட் ஏற்ற இறக்கத்துடன் தான் அமையும். அப்படியிருக்கும் பொழுது 236 பாயிண்ட்ஸ்க்கு என்ற ஒர் ரிவர்சல் இருக்கிறது அல்லவா, அதனைக் கணக்கில் கொண்டு.. மார்க்கெட் சூழலை மையமாக வைத்து, தினசரி ரிவர்சலுக்காக காத்திருந்தும் ஆர்டர் புக் செய்து இலாபம் சம்பாதிக்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Thu May 28, 2015 1:13 pm

Image

ஆறாம் நாள்

ஆரம்ப விலை : 63.94
விலை முடிவு : 62.34
உச்ச விலை : 64.64
மட்ட விலை : 61.98
விலை மாற்றம் : -1.60
விரிவு நிலை : 2.66
காளை : 0.70
கரடி : 1.96

6 நாள் - மொத்த மாற்றம் : -1.97

ஆரம்பத்தில் காளை ஆதிக்கம் செலுத்தியது, தற்பொழுது கரடி ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

நேற்றும் இன்றும் மார்க்கெட் கரடியின் ஆதிக்கத்தில் செயல்பட்டிருப்பதோடு, மொத்த மாற்றமாய் கரடி 197 பாயிண்ட்ஸ் கையில் எடுத்துள்ளது. இதனை என்று காளை சமன் செய்யப்போகிறது என்றுத் தெரியவில்லை. ஆனால் காளை சமன் செய்தே தீரும் என்பதனை ஆயில் மத்திம விலையான 85$ உறுதியாக நம்ப வைக்கிறது.

தினசரி சார்ட் ஒவ்வொன்றினையும் பார்க்க பார்க்க... எந்த சார்ட் அமைப்புதான் நஷ்டமில்லாமல் இருக்கும் என்று நோட்டமிட்டுக் கொண்டே வந்தால்...ஒர் சில அமைப்புகள்... உறுதியான வாய்ப்பு இருக்கிறது என்பதனை காட்டும் அதனை மனதில் கொண்டு பொறுமையாக காத்திருந்தால்.. இலாபம் பங்கு வர்த்தகத்தில் உறுதி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Fri May 29, 2015 11:22 am

Image

ஏழாம் நாள்

ஆரம்ப விலை : 62.34
விலை முடிவு : 62.89
உச்ச விலை : 62.94
மட்ட விலை : 61.27
விலை மாற்றம் : +0.55
விரிவு நிலை : 1.67
காளை : 0.60
கரடி : 1.04

7 நாள் - மொத்த மாற்றம் : -1.42

நேற்று கரடி தன் ஆதிக்கத்தினைச் செலுத்தியிருந்தது.

இன்றும் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக கரடி தன் வலுவினைக் காட்டி 100 பாயிண்ட்ஸ்க்கும் மேல் கீழே சென்றாலும், அதனை மீட்டெடுத்து தன் வலுவாக 60 பாயிண்ட்ஸினை எடுத்து இன்றைய நாளை தனதாக்கி காளையும் தன் வலுவினைக் காட்டியிருக்கிறது.

தொடங்கிய நிலையிலிருந்து ஏற்றம் இறக்கம் இரண்டிற்கும் வாய்ப்புகள் கொடுக்கும் நாள்களும் அவ்வப்பொழுது வந்து கொண்டே இருக்கிறது என்பதனை முன்பும் பார்த்திருந்தோம்... இப்பொழுதும் பார்க்கிறோம்.

ஒவ்வொரு நாளினையும் கவனத்தில் கொண்டு நிகழ்தகவுகளை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.. அதுவே உங்களை விவேகமாகச் செயல்பட வைக்கும்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Sun May 31, 2015 11:13 am

Image

எட்டாம் நாள்

ஆரம்ப விலை : 62.89
விலை முடிவு : 65.40
உச்ச விலை : 65.80
மட்ட விலை : 62.71
விலை மாற்றம் : +2.51
விரிவு நிலை : 3.09
காளை : 2.91
கரடி : 0.18

8 நாள் - மொத்த மாற்றம் : +1.09

கரடியின் பிடிக்குள் இருந்த மார்க்கெட் நிலையினை மீண்டும் காளை தன் வசப்படுத்தியுள்ளது.

எந்தவொரு பெரிய எதிர்ப்பும் இல்லாமல் மிக எளிதாக கரடியினை வென்றுள்ளது காளை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Tue Jun 02, 2015 8:42 am

Image

ஒன்பதாம் நாள்

ஆரம்ப விலை : 65.40
விலை முடிவு : 64.91
உச்ச விலை : 65.73
மட்ட விலை : 64.27
விலை மாற்றம் : -0.49
விரிவு நிலை : 1.46
காளை : 0.33
கரடி : 1.13

9 நாள் - மொத்த மாற்றம் : +0.60

கரடியும் காளையும் போட்டிப் போட்டதில் கடைசியாக கரடி 49 பாயிண்ட்ஸ் வென்றிருக்கிறது, காளை முயற்சித்து தோற்றுவிட்டது.

இன்றைய வரைபடம் பார்க்கும் பொழுதும் மேலும் கீழும் என்று பெரிதாக ஏதோ மேலே போய்ருக்கிற மாதிரியும்.. அப்படியே கீழே வந்திருக்கிற மாதிரியும் தெரியும்... ஆனால் மார்க்கெட்டினை எப்பொழுதும் விலைப்புள்ளிகளோடுதான் அணுக வேண்டுமே தவிர... பார்வையால் அல்ல. ஏனெனில் அது அவ்வப்பொழுது கண்ணை ஏமாற்றும்.

நேற்றைய மார்க்கெட் 309 பாயிண்ட்ஸ் விரிவு நிலை இருந்தது. இன்றைய சார்ட்டில் அதிலும் பாதியான 146 பாயிண்ட்ஸ் தான். ஆனால் நேற்றைய சார்ட்டும் ஒரே விண்டோ அளவில் தான் ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் பாயிண்ட் வரைந்தோம் .. இன்றும் அதே அளவிலான விண்டோவில் தான் ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் வரைந்தோம். ஆனால் விரிவு நிலை பாதிக்கு பாதிக்கு மாற்றமாக இருக்கிறது. ஆகையால் தான் சொல்கிறேன்... இவ்வளவு பாயிண்ட்ஸ் போயிருக்கிறது என்று ரெசிஸ்டன்ஸ் & பாட்டத்துக்கு மதிப்பு கொடுங்கள்.

ஒர் பக்கம் 200 பாயிண்ட்ஸ்க்கு மேல் போனால் அது நல்ல உச்சம் அல்லது மட்டம் என்று எதிர்நிலையை கொஞ்சம் நம்பி போகலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: IBRN-Oil Market Watch - ஆயில் ட்ரேடிங் வர்த்தக நோட்டம்

Post by ஆதித்தன் » Thu Jun 04, 2015 11:25 am

Image

பத்தாம் நாள்

ஆரம்ப விலை : 64.91
விலை முடிவு : 65.34
உச்ச விலை : 65.85
மட்ட விலை : 64.59
விலை மாற்றம் : +0.43
விரிவு நிலை : 1.26
காளை : 0.94
கரடி : 0.32

10 நாள் - மொத்த மாற்றம் : +1.43

மீண்டும் ஒர் குறைந்த விரிவு நிலையில் அலை அமைப்பினைக் கொடுத்து எவர்க்கும் நட்டமில்லாமல்.. இலாபத்தினைக் கொடுக்கும் அமைப்பினை பார்க்கிறோம்.

இதுபோன்ற அலைகள் தினமும் இருந்தால் மிக்க மகிழ்ச்சிதான்... ஆர்டரினை அப்படியும் இப்படியும் மாற்றிப் போட்டு இலாபம் பார்த்துவிடலாம்.

ஆனால், அது அமையப்போகும் நிலை நமக்குத் தெரியாது அல்லவா, ஆகையால் தெரியாத நிலையினை எப்படி கையாள்வது என்பதற்காகத்தான் தொடர்ச்சியாக நாம் பின் தொடர்கிறோம்.
Post Reply

Return to “FOREX Trading - கரன்சி வர்த்தகம்”