மௌனம் மொழி

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
thamilselvi
Posts: 95
Joined: Mon Mar 12, 2012 10:34 am
Cash on hand: Locked

மௌனம் மொழி

Post by thamilselvi » Mon Jul 02, 2012 3:23 pm

பார்வைகள் சந்தித்ததில்லை
ஸ்பரிசங்களை சுகித்ததில்லை
உன்னையும் என்னையும்
இணைத்து கிசு கிசு ஏதுமில்லை
எப்போதாவது
சந்திக்கும் நொடிகளும்
தலை குனிந்து செல்லும்
உன் பாத சுவடுகளின் பயணத்தில்
மறைந்து போகிறது
உனக்கு தெரியுமோ தெரியாதோ
நான் உன்னை காதலிக்கிறேன் என்று
ஒரு தலை காதலாய் ஒதுங்கிடலாகாதென்று
உரத்து சொல்கிறேன்
என் காதலை – காற்றில் கரைந்த
வார்த்தைகள் சப்திக்காமல்
மௌனத்தையே பிரசவிக்கிறது
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

Re: மௌனம் மொழி

Post by Thamillmadhan » Thu Jul 05, 2012 5:00 pm

மௌனம்தான் உலகின் சிறந்த மொழி. அருமையாக வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: மௌனம் மொழி

Post by umajana1950 » Thu Jul 05, 2012 5:23 pm

உனக்கு தெரியுமோ தெரியாதோ
நான் உன்னை காதலிக்கிறேன் என்று
ஒரு தலை காதலாய் ஒதுங்கிடலாகாதென்று
உரத்து சொல்கிறேன்
என் காதலை – காற்றில் கரைந்த
வார்த்தைகள் சப்திக்காமல்
மௌனத்தையே பிரசவிக்கிறது
அழகான கவிதை வரிகள். ஆழ்ந்த உள்ளுணர்வுகளை பிரதிபலிக்கின்றன உங்கள் கவிதை.
Really Superb.......
Post Reply

Return to “கவிதை ஓடை”