அற்புத விடியல்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
Thamillmadhan
Posts: 67
Joined: Fri Mar 23, 2012 1:04 pm
Cash on hand: Locked

அற்புத விடியல்

Post by Thamillmadhan » Wed Apr 04, 2012 7:27 pm

பெண்ணே
உருகி வழிய - நீ
எறியும் மெழுகுவர்த்தி அல்ல ...
எரித்து , அளிக்க
காய்ந்த சருகும் அல்ல ...

கசக்கி எறியப்படும்
காகிதம் அல்ல நீ ...
பகிர்ந்து உணரப்படும்
நெகிழ்ந்த இதயம் நீ !

சதை கோளத்தின்
போகப் பொருளல்ல நீ ...
விதை கோளத்தின்
வீரிய சக்தி நீ!

அன்பின் பனிக்குடத்தில்
தவழ்ந்திடும் அதிசயம் நீ...
ஆளுமையின் விலங்கை
உடைத்திடும் சரித்திரம் நீ...

கள்ளிப்பாலின் கயமையை
கழுவேற்றும் காட்டாறு நீ...
கல்விப்பாளின் விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பேராற்றல் நீ...

விளம்பரப் படுத்தப்படும்
வசீகர அணிகலன் அல்ல நீ...
விண்வெளியில் பயணிக்கும்
விஞ்ஞான கொதிகலன் நீ...

விதியின் சூறாவளிப் போக்கை
மடைமாற்றும் மாயக்கலப்பை நீ...
விடியல் நோக்கிய பயணத்தில்
வெற்றி முகவரி காணும் சிகரமும் நீ...

பெண்ணே!
பெருமை கொள் ...
நீயின்றி உலகில்லை;இயக்கமில்லை...
இந்த பூமிப்பந்தின்
ஊற்றுக் கண்ணும் நீ தான் ...
இந்த மண்ணின்
அற்புத விடியலும் நீ தான்!
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: அற்புத விடியல்

Post by umajana1950 » Wed Apr 04, 2012 8:04 pm

விளம்பரப் படுத்தப்படும்
வசீகர அணிகலன் அல்ல நீ...
விண்வெளியில் பயணிக்கும்
விஞ்ஞான கொதிகலன் நீ...
மிகவும் அழகான வார்த்தைகள். சூப்பராக இருக்கிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: அற்புத விடியல்

Post by muthulakshmi123 » Wed Apr 04, 2012 11:53 pm

பெண்ணே
உருகி வழிய - நீ
எறியும் மெழுகுவர்த்தி அல்ல ...
எரித்து , அளிக்க
காய்ந்த சருகும் அல்ல ...

மிகவும் அருமை உங்கள் கவிதை ...தொடருங்கள் :ros:
sumayha
Posts: 125
Joined: Tue Mar 20, 2012 3:35 pm
Cash on hand: Locked

Re: அற்புத விடியல்

Post by sumayha » Thu Apr 05, 2012 11:02 pm

விளம்பரப் படுத்தப்படும்
வசீகர அணிகலன் அல்ல நீ...
விண்வெளியில் பயணிக்கும்
விஞ்ஞான கொதிகலன் நீ...

விதியின் சூறாவளிப் போக்கை
மடைமாற்றும் மாயக்கலப்பை நீ...
விடியல் நோக்கிய பயணத்தில்
வெற்றி முகவரி காணும் சிகரமும் நீ...
நல்ல வரிகள்... வாழ்த்துக்கள் தமிழ்மதன்.... எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் கவனிக்கவும்...
Post Reply

Return to “கவிதை ஓடை”