ஆதித்தனின் கற்பனை ஓடம்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆதித்தனின் கற்பனை ஓடம்

Post by ஆதித்தன் » Thu Mar 08, 2012 2:09 am

Image
ஆதித்தன் கற்பனை ஓடம்


படுகை என் ஓடத்தினை சுமையாக நினையாது என்ற நம்பிக்கையில் ....
மனதில் தோன்றும் சின்னச் சின்னக் கற்பனை வரிகளை, உங்கள் மனதிலும் தவழும் வகையில் எழுதிய 42 பதிவுகளை தொகுத்து இப்பதிவிலே கொடுத்துள்ளேன்.



43. அடுத்துதாங்க எழுதப்போறேன். அதுவரைக்கும், கீழ் உள்ளவற்றினைப் படித்துவிட்டால் வருவதாவது நன்றாக இருக்கட்டும் என பிரார்த்திக் கொண்டு, பொறுமையாக காத்திருங்கள் :)

தயவு செய்து கவிதை நல்லா இல்லைன்னா திட்டாமல் மட்டும் போயிடாதீங்க... நான் வருத்தப்படுவேன். (ஏன்னா, நல்லா இல்லைன்னு எனக்குத் தெரியும்)

==============================



எல்லோருக்கும்
என் இனிய காலை வணக்கத்தினை
எப்பொழுதும் போல் அல்லாது
ஏட்டினில் சொல்லியபடியும் அல்லாது

ஏதேச்சையாக சொல்ல நினைத்து
எப்படி சொல்வது எனச்சிந்தித்து

எங்கேயும் இப்படியிருந்திடக் கூடாது
எவரும் சொல்லியிருக்கக் கூடாது
என்றெல்லாம் ரொம்பவும் கஷ்டப்பட்டு

என்றும் மலராத
எவ்விடமும் காணாத
எந்தன் காலை வணக்கத்தை

என்னென்னு சொல்ல????

அம்மா..... பூ சாண்டி ...


==========================
காதல் கடிதம் ( Love Letter)

ஹாய்,

சரியா ! தவறா !

சாதனைக்கு முயற்சிகள் வேண்டும்
காதலுக்கு மனம் திறக்க வேண்டும்

பேரழகு என்று நினைக்கவில்லை
செல்வத்துக்கு முதலிடம் கொடுக்கவில்லை

ஆனால்,

கனவுகள் பல கண்டுவிட்டேன்
கவிதைகள் சில எழுதிவிட்டேன்

நீ என் காதலி என்று.

காதல் மொழி பேசிவிட்டேன்
பாதைகள் பல கடந்துவிட்டேன்
நீ அறிவாய்.

ஆனால் ,

உன் மொழி புரியவில்லை
என் விழி ஒதுங்கவில்லை .

அன்பே ,

ஊண் உண்டு பொழுதாச்சு
இமைகள் மூடி நாளாச்சு

உயிரே ,

நேற்று வரை விளங்கவில்லை
நாளை வரை உயிரில்லை

இன்று சொல்

நான் உன் காதலனா?


இப்படிக்கு
உன் இதயம்
================

காத்திருக்கிறேன்!

அகிலத்தையும் படைத்த
ஆண்டவா!

உன்னிடம் ஒன்று கேட்கவா?

படைத்தது எல்லாம் படைத்தாய்
பாவம் ஆணையும் பெண்ணையும்
ஏன் படைத்தாய்?

பால்ய வயது வரை ஏதும் தெரியவில்லை
பருவம் தொட்டது தானே உணர வைத்தாய்!-என்னை
பாடாய் படத்துகிறதே காதல் நோய்

புதைந்த விதை தூங்குவது போல்
மழை வரும் வரை காத்திராமல்

அரும்பு மீசை முளைக்கும் முன்னே
பிறந்த ஆசை மோகம்
வளர்ப்பிற்கும் ஆளின்றி
துணைக்கும் யாருமின்றி
சுற்றையும் சூழலையும் பார்த்து
தானே வளர்ந்தது காதலாய்...

புரிந்தும் புரியாமலும்
அறிந்தும் அறியாமலும்

அவள்
என்ற ஒற்றைச் சொல்லை
தேடித் தேடி அழைந்து
தேவதைகளை எல்லாம் கடந்து
அழுத்து உட்காரையிலே - என்
மனதினில் அமர்ந்தவளை
கண்ணால் நோக்கி
கவியால் சொல்லி
குறிஎழுத்தால் பிரசித்து
முன்னகம் கொண்டு வந்து
வந்தும் சொல்ல மறுக்கவே
மனதோடு கலைந்தது
காதல்

காட்சிகள் கடந்தது
கனவுகள் தொடர்ந்தது
பிடிவாதமும் உறுதியானது

ஆழமாய் பதிந்த
அன்பு முகத்தை மறைக்க
புதியதாய் தேடிய
முகமூடிகள் தான் எத்தனை எத்தனை!

அவள் என்ற ஒருவளை
எப்படியெல்லாம் வர்ணித்தானோ கவிஞன்
அதற்கும் அப்பால்
நிறைந்த அழகிகள் தான்
எத்தனை எத்தனை கடந்தேன்

கடந்து போகையில்
சூழலும் படிப்பிக்கின்றதே!
நவநாகரீகமும்
நடிப்புக் கூட்டமும்
வெளிச்சம் காட்ட
தவறுகளையும் படித்துக் கொண்டேன்.

பழிபாவம் அஞ்சும்
பயந்தான் கொள்ளியாய் போகவே
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
நடித்து நடித்து முயற்சித்தும்
நான் என்ற ஒர் முகம்
பிடிவாதமாய் வாழ்கிறது
அவள்
என்ற ஒருவளுக்காக!

வாழ்க்கை எனும் கடலில்
காதல் எனும் படகை
செலுத்தத் தெரியாத
நான் காத்திருக்கிறேன்.
:blove:
காதலுக்குப் பின்
ஏதென்று தெரியாமல்
காத்திருக்கிறேன்.
:wae: :wae: :wae:
==========================

காதலர் தின கனவு

ராவெல்லாம் கெட்ட கெட்ட கனவு
பச்சைக் கலரில் ஒர் தாவணியும்
சிவப்புக் கலரில் ஒர் தாவணியும்
முறைத்து முறைத்து
பார்த்துக் கொண்டே
எட்டும் திசைவரை சென்றது
என்னை என்னவோ செய்துவிட்டது

சிவப்பையும் பச்சையும்
நோக்கிய நான்
கண்களில் இருந்த முறைப்பையும்
பார்த்த நான்
திடிக்கிட்டுப் போனேன்...

யாரது யாரது என
துலாவி துலாவி கேட்டாலும்
சொல்ல மறுத்தது

மீண்டும் மீண்டும் கேட்டாலும்
சொல்ல மறுத்தது

மீண்டும் கேட்க எத்தனிக்கவே
கொக்கரக்கோ கொக்கரக்கோ என
கூவ மறைந்தது கனவு

சூரியன் உதித்தப் பின்னும்
நினைக்க மறக்கவில்லை
யாரென கேட்கவும் மறக்கவில்லை

விழிகளில்
விளக்கெண்ணை விட்டு
வீதியின்பால் சுழலவிட்டு
வெளிச்சம் முட்டும் பார்த்துவிட்டேன்

விடையும் தெரியல
கனவின் அர்த்தமும் புரியல

இப்படிக்கு
சிவப்புக் கொடி மறந்து
பச்சைக் கொடிக்காக காத்திருக்கும்
பையன் ;)
=================================

தமிழ் கானா பாட்டு


கானா பாட்டு பாடி வந்த கணவான்
காணாமல் தான் போயிட மாட்டான் கனவா

கண்ணை கொண்டு கண்டது எல்லாம் நிஜமா?
காணா திசையெங்கும் ஒலிக்கும் கானவென்ன நிழலா !

பாட்டி சொல்லி தந்ததில்ல இந்த பாட்டு
பாடாமல் நானிருக்க வாயில் இல்ல பூட்டு

நேச்சு வரை தெரியவில்லை இதன் மவுசு
நான் பிடிச்ச mouse-யைவிட இதிலிருக்கு மனசு

காதலிச்சா தாவணிப் பொண்ணு தயங்குறா! குனியுறா! -ஆனா
கட்டிவச்சா கன்னிப் பொண்ணு மயக்குறா! கவுத்துறா!

நேற்று வரை ரசித்ததில்ல இந்த கானா
நாட்கணக்கா பசித்த எனக்கு அவளென்ன தேனா?

கானா பாட்டு பாடி வந்த கணவான்
காணாமல் தான் போயிட மாட்டான் கனவா!
============================

மல்லிகைப்பூ ஏந்திகொண்டு
மானவள் துள்ளிகுதித்து
மந்தைவெளி ஓடிவந்து
மத்தாப்பூ சிரிப்புடன் - என்
மயிரிழை கோதிவிட்டு
மனதினை கிள்ளிவிட்டு
மடியினில் சாய்ந்தவள்

மழலை கொஞ்சும் தமிழ் வீழ!
மனதெல்லாம் உண்மைகொண்டு
முகத்திலே புன்முறுவல் பூக்க
முத்தான கண்களிரண்டும் முட்டு பெற்றதோ?
முதலுக்கும் முடிவுக்கும் அசையா நிற்க
மெளனமே மொழியாய்க் கொண்டு - என்
முகத்திரையை நோக்கியவள்
முத்தமது கொடுப்பாளே
முந்தாணை விரிப்பாளே என்று
முற்றான காதலுக்குள் நானிருக்க
சிணுங்கிச் சிணுங்கிப் பேசுகிறாள்
மழலைக் கொஞ்சும் தமிழ் வீழ!
மாது, காதல் மதுகொண்டு பேசுகிறாள்

===============================

அ-னா ஆ-வன்னா படிக்கலாமா
ஆட்டுப் பாலை குடிப்போமா

இ-னா ஈ-வன்னா சொல்லலாமா
ஈட்டி பிடிச்சு விளையாடுவோமா

உ-னா ஊ-வன்னா சொல்லட்டும்மா
ஊரைச் சுற்றிப் பார்க்கலாமா

எ-னா - ஏ -யன்னா சொல்லித்தரவா
ஏட்டுப் படிப்பை தாண்டுவோமா

ஐ !
ஐயம் தாண்டி சிந்திப்போமா

ஒ- ஓ சொல்ல கேட்போமா
ஓம் என்று நிற்போமா

ஒள !
ஒளவையார் சொல் நடப்போமா

======================================

க கா காதல்!
கண்டதும் காதலா
கனவிலே காதலா
காமத்திலே காதலா

கேள்விகள் பல கேட்டேன்
கண்டதில் சில சுட்டேன்

கண்ட கண்ட புத்தகம் படித்து
காணக்கூடா சினிமா பார்த்து
கண்டபடி கதைத் தறிந்து
கற்றுக் கொண்ட காதல் பாடம்


கனவான் குடிலில் ஒர் காதல்
கணக்கு குடும்பத்தில் ஒர் காதல்
காற்று வீட்டில் ஒர் காதல்

கண்ணும் கண்ணும் நோக்கி காதல்
கனவில் கண்ட தேவதையுடன் காதல்
காமத்தால் கூடவே வந்த காதல்

காதல் காதல் எத்தனை காதல்
கற்பனைக் காதல்
கதவில்லாத ஒர் தலைக்காதல்
காலம் கூட்டும் கல்யாணக் காதல்

கட்டுக் கட்டாய் எழுதலாம்
கற்பனைக் கூடையையும் நிரப்பலாம்

காற்றுக்கு வேண்டாம் வேலி-நிறை
காதலுக்கு வேண்டும் தாலி

==============================

அலை ஆடும் கடலிலே
அசைந்தாடும் ஓடமே!

வெண்ணிலா கடக்க பார்த்தாயோ
பூநிலா அசைந்தாட பார்த்தாயோ
அன்னம் தவழ்ந்தாட பார்த்தாயோ

அசைந்து அசைந்து
மேலும் கீழும்
அடியெடுத்து வைத்து

விடியல் தொடுமுன்னே
வான்சுவர் தொட்டாயோ!
கலங்கரை ஒளிதொலை கடந்தாயோ!

காத்திருந்து காத்திருந்து
கள்ளா! இதயம் வலிக்குது
முன்பனி முழுதும் உருகுது
பின்பனி உடலை நெருடுது
பகல் இரவு தாவுது
பத்தியம் தொடருது...கண்ணா!

கார்மேகம் காணாயோ
கண்ணீர் துளிகளிலே
கடிதம் வரைந்தேனே
கண்டு பெறாயோ....கந்தா!

காட்சி பல ஓடுது
நெஞ்சம் விம்முது
நெருஞ்சியாய் குத்துது...வேலா!


துடிக்கும் இருதயம்
தூங்கிட விரும்புது
துயிலும் நம்பிக்கை
துரிதம் காட்டுது ....மணிகண்டா!

மத்தியம் மறந்தேன்
ஜீவன் மறந்தேன் ....அம்மா!

ஆர்பரிக்கும் கடலில் - என்
அத்தானை பாரடி!!!!
வங்கம் சாப்பிடுமோ - என்
மஞ்சள் குங்குமத்த!!!!!!!!!!!!
========================================

கவிதை எழுத தோனையில்
5 வரிய எழுதி வச்சி
10 வரியா முடிக்க, நாளும் முனைகிறேன்

வார்த்த .. வார்த்த...
வரவே மாட்டேங்கிது.

என்னை பார்த்தால் அதற்கும் பயமோ என்னவோ!

என்று தான் அருள்வாளே!
அவள்
=====================================

விழுந்ததே!

பசியாறிவிட்டு
பாதை தவறாமல்
படுகை வரும் ஆர்வத்தில்

வெகு வேகமாய்
வெளிக்கிட்ட ஒர் கணத்தில்
விருட்டென வந்து
வாயிலைத் திறந்து

வாயைக் கழுவும் நோக்கில்
வந்ததும் குளியலறை செல்ல

வான் சுவர் மேலிருந்து
வாட்டமாய் விழுந்ததே! - அந்த

கலரோ கரும்புள்ளி வெண்புள்ளி
கால்களோ நான்கு - அவை
கவ்விக் கொள்ள காற்றிடப்பை

நாக்கோ நீளம் - அதன்
நுனியிலோ பற்றும் பசை

வாழிடமோ காடும் வீடும் - ஆதலால்
வாழ்க்கை குறியும் சொல்லும் - அது
விழுந்தால் மரணமும் உண்டாம்!

விழுந்ததே!

டொக் டொக் டொக்
டொக் டொக் டொக்

குறி சொல்லும்
குட்டிப் பல்லி - என்

உச்சந் தலையில் விழுந்ததே!

அய்யகோ!!!!!

================================

வந்து நிற்கையிலே
வானம் மறைந்தது

வான்முகில் சிரித்தது
வாடியமுகம் விரிந்தது

சோரென கேட்ட ஒலியில்
சோர்ந்த கால்களும் ஆடின

கீற்றின் வேகமும் பாடின
பூக்களும் பணிந்தன

என் தோட்டத்தில்
வான் மழை

========================

பாசாங்கு ஒரங்கம்

என்ன தவறு
ஏது தவறு
ஏதும் அறியேன்

அறிந்தும் செய்யவில்லை
அறியாமல் போகிடவுமில்லை
அலைமோதும் மனமிருக்க!

ஆட்டியது காலம்
ஆடியது நான்
ஆட்கொண்டது யாரோ!

பார்வைகள் விரிந்தாலும்
பாவைதான் பாவமா! - என்
பாசாங்கு ஒரங்கத்தில்?

அன்றே சொன்னானே -இன்று
அறிய பெற்றேனே!
அவள் மனது ஆழமென்று.

மனதோடு பேசினேன்
மனம் திறந்து பேசினேனா?

இல்லை இல்லை
இதுவும் சரியில்லை

கடன்பட்ட இதயம்
கணக்கு பார்க்காமல்
கலைந்து போனதே!
======================

வாழ்த்துக்கள்

அத்தனை அத்தனை பதிவா
ஆதலினும் இத்தனை பணிவா

இத்தனை இத்தனை பூக்கொண்டு
ஈட்டும் மாலையில் நானும் சேரேனோ

உண்ணத படைப்பில்
ஊரில்(மன்றத்தில்) பெருமிதம்

எழுதியவை சிறப்பாக
ஏட்டினிலே அச்சாக வாழ்த்தும் -நான்

ஐயம் கொள்ள புதியவனோ

ஒர் வார்த்தையில் சொல்வாயா
ஓராயிரம் முறை அறிய சொல்வாயா

ஒளவையின் உறவு - நீ என் உறவு!

============================

மழலைக்கும்
மழைக்கும்
மகிழ்ச்சிக்கும்

உண்டான
உறவு
உடைந்ததோ!

சோகத்தில்
சாயும்
செல்லம்!

இது உண்மையா? என்ற ஆலோசனை நடக்கும் முன்பே!
கரு முகில்கள் கூடி
என் கேள்விக்கு பதிலாய்
சின்னச் சின்னதாய் தூறல்களை இறக்கியது!

மழைத் துளிகள்
மண்ணில் விழும்
சத்தம் கேட்டும்
கால்கள் அதை தொட விரும்பவில்லை!

இது சாத்தியமா?
என் சின்னஞ் சிறுவயதில் இது சாத்தியமா?

தண்ணீரைக் கண்டாலே ஓடும் கால்களின்
தத்தக்கா புத்தக்கா வயதில் இது சாத்தியமா?

எத்தனை ஆனந்தம் தான் அந்த வயதில்!

ஓடும் மழை நீரில் கப்பல் செய்து விட்ட நாட்கள் மறக்குமா?
மழை அடங்கிய நேரத்தில் மண் வீடு கட்டிய நியாபகங்கள் மறக்குமா?
அந்த காலத்திற்கே உரித்தான நொண்டி விளையாட்டுத்தான் மறக்குமா?

மழலைக்கும்
மழைக்கும்
மகிழ்ச்சிக்கும்
உண்டான உறவு உடையுமா?
=================================

எத்தனை ஆனாலும் அவள் அம்மா!
பாசமிகு அன்னையே
பாலூட்டிய தாயே
சீராட்டிய உள்ளமே
சீக்கு போக்கிய கரங்களே

உன்னை அனுதினமும் பூசிக்கிறேன்
உருகியே மனதால் நேசிக்கிறேன் - என்

உள்ளம் தெரியாது
உண்மையும் புரியாது - ஆனால்

உருவாக்கிய இரத்தம் மாறிடுமா
உன் மீதுகொண்ட அன்பு குறைந்திடுமா -என்

கணப்பொழுது உடல் வலிக்கும்
கண்ணீர் கடலில் மிதந்தவள் - நோய்கள்
கரைந்து போகவே வேண்டியவள்

தன் உயிரை அரிதாக்கி
தனயன் என்னையே சுமந்தவள் - இன்று

அவளை சுமக்கிறது படுக்கை
அரிதாய் நிற்கிறது பாதங்கள்

குறைவாய் சுரக்கிறது இரத்தம்
கும்மி ஏங்குகிறது மனம் - அன்னையே!

என்
கருவிழி நீர்க் கோவையால் மூடுகிறது

கட்டுக்குள் அடங்கா உன் பாசம்
கடந்து ஏங்குவதை கண்டு தவிக்கிறது

கட்டற்ற கடல் அலைபோல் -தாயே
காலம் என்றும் வாழ வணங்குகிறேன்
உன் பொற் பாதங்கள் நடமாட வேண்டுகிறேன்

அம்மா
வாய் திறந்து பேச துடிக்கிறேன்
வா வா அம்மா
வேண்டுமாயின் என்னுயிர் கொன்று
வா வா அம்மா!

===========================

சுதந்திரத் தாகப் பெண்ணின் கவிதையின் பின்னுட்டமாக

சுதந்திரம் நாடிப் பறக்கும், ஈழத்தின் பாசப்பறவை .

கவிதை கண்டேன்! கனா கண்டேன்!
கண் சுவர்களில் வீக்கம் கொண்டேன்!

கடல் சூழ்ந்த மேடையிலே பிணம் கண்டேன்!
கட்டிளம் காளையா? வேல் ஏந்திய வீரனா?
குருத்து வாழையடா! நாளைய செல்வமடா!

காற்றோடு பறக்கும் மேகங்களே! சேதி சொல்வாயா!
காவலன் மறைந்த சேதி சொல்வாயா!
கடலாய் பரந்து கிடக்கும் பிணச் சேதி சொல்வாயா!
குருதிக ளில்லா எம்பிள்ளைச் சேதி சொல்வாயா!
குலம் ஒன்று அழியும் சேதி சொல்வாயா!

காலடித் தொலைவில் தூங்கும் தாயிடம் சொல்வாயா
காதுபடும் தூரத்தொலை உறவுகளிடம் சொல்வாயா
கடல் கடந்து வாழும் அண்ணனிடம் சொல்வாயா

காதறுந்த மூழி வலிச் சொல்வாயா
குடில் இல்லா துயரம் சொல்வாயா

கண்ணீராய் சிந்துகிறேன்
குதிரமாய் கொட்டுகிறேன்

காலைப் பகலவனே எழுந்து வா
குருதிக்குள் மிதக்கும் காலைப் பகவனே எழுந்து வா

காதல் மறைந்த பூமியிலே
கருஞ்சுடராய் நிற்கும் பகலவனே எழுந்து வா

கருப்புத் தினம் பிறக்கும் முன்னே
சுதந்திரக் காற்றை சுவாசிக்க எழுந்து வா

=====================================

ஏமாற்றம் தரும் உண்மை:


ஏமாற்றமும் தோல்வியும்
எனக்கு புதியதல்ல துவண்டு போக!!!

மதி கொண்டு செய்த காரியம் - ஆதலால்
விதி மருண்டு தாக்குமாயின்

தாங்குவதற்கே இதயம்
தாலாட்டாடிடவே சோகம்- இது

உறக்கத்திற்காக அல்ல
உண்மையை செதுக்க கொடுத்த ஒய்வு.

================================

உயிரின் உண்மை!

உருவாக உருவாக்கியதை
உண்டென உயிர்ப்பித்து
உவமையால் உருவேத்தி
உலக உருண்டைக்குள்
உண்மை ஊருக்குள்
ஊஞ்சலாட உண்டாக்கியவன்
உடலும் உள்ளமும்
உறுதியாய் உருண்டோட
உணவை ஊட்டி
உறுமி உசுப்பேத்தினாலும்
உனக்குள் உண்டான
உத்திரவாதமற்ற உயிரின்
உண்மை உரைத்தானா


- ஆதித்தன்

======================

காலம் ஒர் கோடங்கி-அவன்
சுழட்டி சுழட்டி அடிப்பான்
சூழலுக்கு ஏற்ப நடிப்பான் - ஆனால்
நடந்ததையும் சொல்வான்
நடப்பதையும் சொல்வான்
நடக்கக்கூடியதையும் சொல்வான்- என
நீ நம்பிவிட்டால்
நல்ல காலம் பிறந்துவிடும்.


பின் குறிப்பு : நம்பி ஏமாந்தால் நான் பொறுப்பல்ல.

================================


இலவசம் என்னும்
பூட்டிக்கிடக்கும் கருவறையின்
சாவி நீ - அதனை

திருட முயற்சிக்கும்
கள்ளச் சாவியை (இலஞ்சம்)
ஒழித்துவிட்டால்

அதுவும் சுகமே!
நாம் செய்த உதவி அல்லவா?

============================

நட்பொன்று ஏது?

நடக்கப் பயிலயிலே
மிட்டாய் கொடுத்தவரா?

நடமாடும் வேலையிலே
விளையாட வந்தவரா?

நற்ப்பள்ளியிலே கற்க
துணையாக நின்றவரா?

நற்ப்பண்பு துவழயிலே
ஊன்றுகோளாய் காத்தவரா?

நெடுகோங்கும் காதலுக்கு
தூதாய் அமைந்தவரா?

நெடிய சாதனைக்கு
அச்சானியாய் இருந்தவரா?

நடுவாழ் பயணத்திலே
மூன்றும் உரைத்தவரா?

நற்கதி யடைத்தான்
நலம்பேணி வந்தவரா?

நடுமையாய் பிரிக்க
எத்தனை நட்பு?

அடங்கிலும் அடங்கா
அருகாமை விளங்கா
அன்பும் மகிழ்வும்
அனைத்திலும் நிறைந்த - நட்பு

நதியோடும் பாதையில்
நந்தியாய் அமையுமா?

=======================================

ஏழை வீட்டுக் கூரை

எத்தனை நட்சத்திரங்கள்!
கட்டாந்தரையில்
மல்லாந்து படுத்து
எண்ணிக் கொண்டிருந்தான்
பசியுடன்!

=====================

நீ அறிவாயா?
எத்தனை எத்தனை ஆனந்தம்...

ரீங்கராமிட்டு
சுற்றி சுற்றி வந்ததிலே
மலர்ந்த என்னிடம் தான்
எத்தனை அழகு - ஆனாலும்

உன்னைத் தானே எண்ணி
ஏங்கி நின்றேன்
நீ அறிவாயா?
வாடிய என்னை அறிவாயா?

உனக்காகவே காத்திருந்த என்
காதல் அறிவாயா?

வாடிய பின்னே என்
காதல் அறிவாயா?

வடியாத காதல்
தீதனே அறிவாயா?

===========================

வெறுமை வீசி
வட்டிக்கு வாங்கியாந்த
வசந்ததின் முதலெதிர்
வட்டிக்காரன் பரிசாய்
வாடகை வீடு

====================

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதுதான் மிச்சம்

கடும் புயல் வீசியும்
கடலலைகூட தீண்டவில்லை

திரும்பிச் செல்கிறேன்
திரட்டிய வலையுடன்....

==================

சீறும் காளையை
சிந்தனை சிதறாமலும்
சிங்கம்போல் நிமிர்ந்தும்

சும்மா சுருக்குனு
சிலந்தி வலையாய்
சூழ்ந்து விரிந்தும்

சிறந்து மிரட்டும்
சினம்கொண்ட காளையை

சிவந்த கண்களுடன்
சிவந்த உடல்களுடன்
சுருண்டுபோக வைக்கும்

சீமை மாணவன்
செந்தமிழ்ச் செல்வன்

=========================

மீண்டும் மீண்டும் பதிவோம்
மீண்டும் மீண்டும் வெல்ல உழைப்போம்
மீண்டும் மீண்டும் பின்னூட்டமிட்டே உதவுவோம்

பதிந்த ஒவ்வொரு தலைப்பும்
பதிலிட்ட ஒவ்வொரு உறவும்
பாதை காண உதவிடுவோம்

நேற்று என்பது இன்றில்லை
நாளை என்பது ஒர்போதும் இல்லை


இன்றைய உறவை மதித்திரு
இனிதே உறவாட பதிவிடு
இல்லாமை போக்க உதவிடு


படுகை.

======================


திரு திரு கண் இரண்டும்
திசை மாறாது காண
இச்சு இச்சாய் 100 முத்தம்
இடிந்தே போனான் கணவன்!
குண்டு கன்னம் எங்கும்
குழம்பிய தாய் நெடி

=============

எங்கெங்கு தேடினாலும்
யாதுமாய் அவனிருப்பான்

ஏதுமறியாமல் தேடினாலோ
எவ்விடத்திலும் காணான்

அறியா உலகத்தில்
அவரவர் கேள்விக்கு
அவனவன் பதிலே
ஆண்டவன்.

அவனை
அன்பென்று சொல்வதா


அவளை
தாயென்று சொல்வதா -இல்லை

அவன்
கல்லாய்
உருவாய்
அருவாய்

எப்படியாயினும்
உண்டென்பது உண்மை.
கடவுள்
==========================

மன்னிக்கத்தான் பிறந்தோமடி
மானிடமாய் நாமும் இங்கே

மண்ணில் எத்தனை காயங்கள்
மனம் வேண்டி பெற்றதா?
மறு உணர்வு அறியத்தானே!

பட்ட புண் ஆறினாலும்
சுட்ட வடு ஆறியதா?

ஏன் இந்த பேதம்
எவனே செய்த மாயம்

இப்பொழுதும் சொல்கிறேன்

மன்னிக்கத்தான் பிறந்தோமடி
மானிடமாய் நாமும் இங்கே

ஒரறிவு பிரச்சனையில்லை
ஈரறிவு பிரச்சனையில்லை
மூன்றறிவும் பிரச்சனையில்லை

ஐந்தாம் அறிவில் பிரச்சனையா?
அறிந்ததை சொல்ல தெரியுமா?

அத்தனையும் அறிந்த நாம்
ஆறறிவு கொண்டவர்களாம்

இத்தனையும் புரிந்தவன்
இதன்படி நடந்தானா?

இதற்கெல்லாம் காரணம்
இவள்தான் குற்றமா?

யார் மீது நாம் பாய?

சுடர் சுடும் என்றாலும்
சுட்டுக் கொண்டதை மறக்க முடியுமா?
சூட்டு ஆசையில்
சூழ்ந்ததை ஏற்க முடியுமா?

இப்பொழுதும் சொல்கிறேன்

மன்னிக்கத்தான் பிறந்தோமடி
மானிடமாய் நாமும் இங்கே

ஒர் ஒரறிவாய் இழக்க
ஒற்றுப்போவது மன்னிப்பும் மறத்தலும்

ஒரே அறிவு நிலையில்
ஒன்றியிருக்க காப்பது பிழையுணர்வும் நிகழ்வும்

மன்னிக்கத்தான் பிறந்தோமடி
மானிடமாய் நாமும் இங்கே

மறந்துதான் போனேன்
மிருக மாதிரியானேன்

சமூகம் மறந்தேன்
சட்டை மறந்தேன்

சதையுண்டேன்
சதையுணர் மறந்தேன்

எங்கு செல்கிறது?

ஒற்றையடி பாதையடி?
ஒருவரையும் பின்பற்றாத பாதையடி?

================================


துரோகியாய் நிற்கும்
பட்டமரம் பச்சை காட்டுமா?


ரோஜாத் தோட்டத்தில்
இரத்தம் காணாத தோட்டக்காரனா?

பெளர்ணமி நிலவுதான்
அமாவாசை கொடுக்குதா?

ஏதும் புரியவில்லை!

புரிந்த பின் துவழுமா?

துடுப்பு அகலமால்
பரிசல் கடக்குமா?

தோல்வி யில்லாதோர்
வெற்றியா?

துரோகியாய் நிற்கும்
பட்டமரம் பச்சை காட்டுமா?

ஏதும் புரியவில்லை!

======================

பரந்து விரிந்த
பார்க்கடல் சூழினும்
உன் ஏக்கம் தீராதம்மா

அம்மா என்றழைக்க
தாயில்லா உன் குரல்
கேட்க மனம் வாடுகிறதே
விரிந்த உதடும் சுருங்குகிறதே

ஆயினும்-
உன் ஏக்கம் தீராதம்மா

தீயிட்ட மனம்
தீண்டத்தகாது செல்லும் வரை
தீராதம்மா
உன் ஏக்கம் தீராதம்மா!

==========================

விவாகரத்து பத்திரம்:

என்னவொரு களங்கம்

கண நேரமின்றி ஒர் நொடி
கனா காண்பாளா
கண்ட நேரத்திலாயாவது
கண்ணீர் துளி வாராதா
கரைபுரண்டு ஓடாதா
காகிதமும் நனைந்து மறுக்காதா

கைப்பிடித்த கரங்கள் நான்கும்
கைகோர்த்த நாட்கள் மறந்திடுமா
கடைக்காலம் வரை
கைத்தாங்கலாய் நிற்காதா

கண்டு சொல்வாயா வெண்ணிலவே

=====================================

சிவ சிவா பொன்னம்பலம்
திரு சிற்றம்பலம்

மறந்தேன்
ஆசையாய் வேண்டியவனை மறந்தேன்
வெற்றிக்காய் போற்றியவனை மறந்தேன்
அணுதினமும் பூஜிக்க நினைத்தவனை மறந்தேன்

மறந்தேன்
நான் என்பதையும் மறந்தேன்

என்னை சுற்றி விழும்
ஒவ்வொர் கண்ணீர்த் துளியால் மறந்தேன்
முற்றிலுமாக மறந்தேன்.

சொல் மறந்தேன்
சொல்லிய மந்திரம் மறந்தேன்

செயலே புண்ணியமென்று
செய்திட முனைந்திட்டேன்

மற்றவை மறந்தேன்
மடத்துவீடை மறந்தேன்.

============================

அழகு அழகு
வெண் மேகம் அழகு

அழகு அழகு
சிரிக்கும் பூ அழகு

அழகு அழகு
பச்சிளம் குழந்தை அழகு

அழகு அழகு
கார் மேகம் சிந்திட
வெட்ட வெளி வானம் அழகு

அழகு அழகு
எல்லாம் அழகு

கவலை என்னும் பேய்
கழுத்தை நெரிக்கும் வரை
எல்லாம் அழகு

நெரியும் கழுத்தும்
இறுகும் நெஞ்சமும்
மீண்டும் கொள்ளாதோ அழகு
துன்பம் தீர்ந்து கொள்ளாதோ அழகு

சிந்திவிடு
கண்ணீர் சிந்திவிடு
துன்பம் நீங்கிட ஒர்முறை சிந்திவிடு
அழுத்தம் குறைந்திட முழுமையாய் சிந்திவிடு
முகம் பூத்திட சிந்திவிடு.....
கண்ணீர் சிந்திவிடு!!!!!!

==========================

நட்பே!
நடப்பவை யாவும் புரியாதா?
நடந்தவை யாவும் தெரியாதா?

நாளும் கோளும் மாறிவிட்டால்
நாட்டாமைச் சொல்ல யாரெங்கே?- ஆயினும்

நிலம் மாறிவிட்டால்
நினைப்பு ஓழிந்திடுமா?

நித்தமும் சிந்திக்கும்
நினைவுகள் கூட மறந்திடுமா?

நட்பே!
நடந்தவை எல்லாம் இறந்தகாலம்
நடப்பதன்றோ நம் எதிர்காலம் - இன்று

நடிக்கத் தெரிந்தவன் செயலை
நாடகமாய் முடிய அறியப்பட்டேன்

நெஞ்சினில் நிறைந்த நட்பே
நெஞ்சுக்குள் காயத்தை ஏற்படுத்துமா?

நிஜமான நட்பு
நித்திரையில் மறந்திடுமா?

நட்பே!
நீ சொல்ல மாட்டேனோ!
நீர் சொன்னதாய் நம்புவேனா? -என்

நீர்ச் செறிக்கும் முகம் பார்த்திருப்பீரோ!
நீர்மம் அற்ற மனம் பார்த்திருப்பீரோ!

நிகழும்கால் கண்டேனே!
நித்தமும் பிரிவினில் கண்டேனே! - இதனை

நீ அறியமாட்டாயோ!
நிழலாய் தாங்கிட வரமாட்டாயோ!

=============================

வாழ்ந்த வாழ்வும்
வாழ்த்திய நிகழ்வும்
வளமான கவி சொல்ல
வரவேற்கும் நெஞ்சங்கள்
வாடிய பூவின்
வற்றிய உயிரின்
வாழ்வு ஒடுங்கும்
வாட்டமான கல்லறைக்கு
வளர் கொடுக்க
வாரி இறைத்தர்
நவதானியம்

==========================

இறைவன்
ஒன்றே ஒன்றே
ஒராயிரம் தோன்றினும் ஒன்றே
ஒன்று நான் சொல்ல
ஒன்றை நீ சொல்ல
ஒருவருக்கொருவருள் அன்பு மறிக்குமாயின்
ஒன்று கூட வேண்டாம் எனக்கு
ஒத்த அன்பே போதும்

===========================

பார்த்தேன் பார்த்தேன்
மீண்டும் மீண்டும் பார்த்தேன்

படமா? காதல் சின்னமா?
பாவை அவள் நிழலா?

பார்த்தேன்! கண்டேன்!
பகல் கனவில் விழுந்தேன்!

பள்ளிப் பருவம் வாலிப உருவம்
பார்வை திரும்பியது எதிர்பால் பக்கம்

பல பல வண்ணம்
பல பல கண்கள்
பல பல சிரிப்பு
பல பல விரிப்பு
படபடத்த இதயம்

இவளா?
இல்லை அவளா?
இல்லை, யார் அவள்? - என்
இதயத்தில் குடிகொண்ட பூமகள்!

ஒன்றுக்கு ஒன்றாய் இல்லாது
ஒராயிரம் எழுதிவிட்டேன்
ஒவ்வொன்றிலுமாய் மனதை நிரப்பிவிட்டேன்
காதல் போதையில் மயங்கிவிட்டேன்

நிகழ் மறந்து
நினைவிழந்து
நெடு நேரமும் காத்திருந்தேன்

எதற்காக!
எல்லாம் எதற்காக
இல்லாத ஒன்றிற்காக

இருந்ததும் ஒன்று
இல்லாததும் ஒன்று
இயன்றதும் ஒன்று
இதுவல்லாவா அது!

கோடி அன்புகள்
கோர்வையாய் போர்த்தினும்
கொள்ள முடியா!

உறவு கொடுத்து
உயிரினில் கலப்பவள்.

உன் ஒற்றை இதயத்தில் கண்டேன்
தாயாய் தாரமாய்
தந்தையாய் தமக்கையாய்
தம்பியாய் தோழனாய்
எத்தனை எத்தனை அன்புகள்
உன் ஒற்றை இதயத்தில்!!!

அவளன்றோ ஒற்ற பன்மை இதயம்!!!


காத்திருக்கிறேன்.

இவண்
ஆதித்தன்.

=============================

தீபாவளி பாட்டு

தீபாவளி தீபாவளி
தித்திக்கும் தீபாவளி

நாளை நாளை
நாட்காட்டியில் தீபாவளி

சுட சுட
கைத்துப்பாக்கியும் வாங்கனும்

வெடிக்க வெடிக்க
சரமும் பாமும் வாங்கனும்

பார்க்க பார்க்க
மத்தாப்பும் புஷ்வானமும் வாங்கனும்

தீபாவளி தீபாவளி
தித்திக்கும் தீபாவளி

தீபாவளி தீபாவளி
புத்தாடை உடுத்திக்கொண்டு
புதுக் கோயில் செல்லப் போறேன்

வேண்டாம் வேண்டாம்
ஜாதியும் மதமும் வேண்டாம் வேண்டாம்
நீயும் நானும் ஒன்னு உழைச்சிப்பிட்டா சோறு

தீபாவளி தீபாவளி
தித்திக்கும் தீபாவளி

டமார் டமார் சத்தம்
நான் வெடிச்சேன் குண்டு

டூமில் டூமில் சத்தம்
நான் சுட்டேன் ரீல்வெடி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பூ
நான் சுற்றினேன் மத்தாப்பூ

தீபாவளி தீபாவளி
தித்திக்கும் தீபாவளி

===========================

muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: ஆதித்தனின் கற்பனை ஓடம்

Post by muthulakshmi123 » Sat Mar 10, 2012 8:31 pm

கவிதை அனைத்தையும் படித்த பின் தான் சொல்ல முடியும் எப்படி இருக்கு என்று.. ஆனால் கவிதையையின் தலைப்பை கொடுத்து கவிதையை பார்க்க செய்திருக்கும் முறைக்கு பாராட்டுக்கள்..
Post Reply

Return to “கவிதை ஓடை”