Page 1 of 1

இரகசியப் பூ

Posted: Sat Jan 07, 2023 9:43 pm
by ஆதித்தன்
நித்தம் நித்தம் பசிக்குது
நித்திரைக்கு மயங்குது

படிக்காத பாடம் கேட்குது
பார்க்காததை தேடுது

பேசாமல் கண்கள் பேசுது
பார்த்திட துடிக்குது

வாலிபம் கடந்த மனது
வயதை மறக்குது

நுனியைத் தேடி வருடுது
நகங்கள் சீண்டுது

மலர்ந்தது மலரென தேனாகுது
மயக்கம் குடித்தது