நாடகம் இயக்குகிறேன்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நாடகம் இயக்குகிறேன்

Post by ஆதித்தன் » Wed Jan 04, 2023 8:55 pm

நானே நான் தானே
நடிகன் தானே அரிதாரமின்றி
நாடகம் இயக்குகிறேன்
நடிகையை பொம்மையாக்கி
நாவில் சொல்லில்லாமல்
நாடியின் நாட்டம் தேடும்
நாயகன் நானே தானே
நயவஞ்சனை ஏதுமில்லாமல்
நறுக்கென சொல்வேனே
நெஞ்சினில் காதலில்லை
நெருஞ்சிமுள் வேதனைதானே
நொடிந்திடும் மன்மதா
நட்டாமல் நட்டமில்லாமல்
நிமிர்ந்து விடைகொடு
நாளை உறுதியில்லை
நிலைகொள்ள துணையுமில்லை
நிச்சயமாய் காதலில்லை
நித்திரை சொப்பனசுந்தரியே
நிரந்தரமாய் விடைகொடு
நிஷ்டையில் அமரவிடு
நீலகண்டனோடு போய்கிறேன்
நிழலாக தொடராதே
நீளக்கூந்தலால் இருளாக்காதே
நீரூற்றை சீண்டாதே சீண்டாதே
நானே நான் தானே
நடிகன் தானே அரிதாரமின்றி
நாடகம் இயக்குகிறேன்
நாயகியை பொம்மையாக்கி
நாவில் சொல்லில்லாமல்
நாடியின் நாட்டம் தேடும்
நாயகன் நான் தானே
Post Reply

Return to “கவிதை ஓடை”