பரிசுத் தொடர் - உன்னை ஈர்க்கும் கவிதைகள்

மனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித! நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பரிசுத் தொடர் - உன்னை ஈர்க்கும் கவிதைகள்

Post by ஆதித்தன் » Mon May 23, 2016 12:07 am

Image
தனித்துவமான வேலை பயிற்சியினை ஆன்லைன் மூலம் வருவாய்ப் பார்க்க கொடுத்துக் கொண்டிருக்கும் நமது படுகை.காம், ஒர் புதிய முயற்சியாக உறுப்பினர்களின் கவிதைகளைப் பணமாக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. ஆகையால், இப்பதிவின் பின்னூட்டமாக கொடுக்கப்படும் உறுப்பினர்கள் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுத்தொகை உடனுக்கூடன் விரைவாக பரீசிலனைச் செய்து பிட்காயின் வழியாக வழங்கப்படும்.

இங்கு கொடுக்கப்படும் கவிதைகள் உங்களது சொந்தக் கவிதைகளாக மட்டும் இருக்க வேண்டும் என்பதோடு, பிற உபயோகத்திற்கு நீங்கள் பயன்படுத்துதல் என்பது கூடவே கூடாது.

தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு ரூ.10 முதல் ரூ100 என கவிதையின் தரத்திற்கும் தொடர்ச்சியான பங்களிப்பிற்கும் ஏற்ப பரிசுத் தொகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், படுகையின் கவிதைத் தளம், புத்தகம், பேஸ்புக் பேஜ், யூடியுப் சேனல் என எல்லா இடங்களிலும் பகிரப்படும் என்பதோடு விற்பனை செய்யவும் உரிமை உள்ளது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

வருவாய் வாய்ப்பில் கவிதைகளை தொழில்முறையாக பயன்படுத்துவதால், தயவுசெய்து இங்கு பதிவு செய்யும் கவிதைகளை பிற நண்பர்களிடமும் சரி, பேஸ்புக்.. உங்களது வலைத்தளம் என எங்கும் பயன்படுத்துதல் கூடாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள். இங்கு பகிரும் கவிதைக்கு படுகைக்கு மட்டுமே முழு உரிமையினை வழங்கிவிட்டோம் என்பதனையும் மனதில் கொள்ளுங்கள்.

கவிதைகள் 25 வரிக்கு மேல் இருக்க வேண்டும். அதனை சிறு சிறு கவிதை தொகுப்பாகவும் கொடுக்கலாம். கவிதைகள் எந்தவொரு கருவினையும் சுமந்து நிற்கலாம். அதாவது, காதல், சோகம், ஊக்கம், மகிழ்ச்சி, அன்பு, அறிவுரை, நிகழ்வு என எந்தவொரு கருவினையும் கொண்டு எழுதலாம்.

கவிதைத் தேர்வு மற்றும் பரிசுத் தொகை என்பது நிர்வாக உரிமைக்கு உட்பட்டது. ஆகையால், குறைந்தப்பட்ச தொகைக்கு சரி என்ற நிலையில் மட்டும் கவிதையினை பின்னூட்டமாகக் கொடுங்கள்.
புதிய நிபந்தனைகள் எப்பொழுது வேண்டும் என்றாலும் சேர்க்கப்படும் என்பதனை அறிவுறுத்திக் கொள்கிறேன்.
Post Reply

Return to “கவிதை ஓடை”