இலாபத்திற்கான அடுத்தக் களம் - USD / CAD

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இலாபத்திற்கான அடுத்தக் களம் - USD / CAD

Post by ஆதித்தன் » Fri Nov 08, 2013 11:03 pm

Image
கடந்த நான்கு வாரத்திற்கும் மேலாக நாம் EUR/USD -யில் செல் ஆர்டர்க்கு 1.3350 என்ற இடத்திலிருந்தே முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வந்தோம். ஆனால், மார்க்கெட் நம்மை நெகட்டிவாக 1.3831 என்றப் புள்ளி வரை.. அதாவது கிட்டத்தட்ட 500 பிப்ஸ் நம்மை இழுத்துச் சென்றது, இப்பொழுதுதான் நமது இடத்திற்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறது.


நாம் எப்பொழுதுமே ஆர்டர் போட்டால், அவ்வப் பொழுது கிடைக்கும் இலாபத்தோடு வெளியேறிட வேண்டும். அல்லது இலாபம் கிடைக்கும் வரை காத்திருந்து வெளியேற வேண்டும் என்பதுதான்.

1.3350 என்ற இடத்தில் லாக் ஆனவர்கள், கடந்த நான்கு வாரங்களாக, அதாது 20 நாட்களாக எந்தவொரு புதிய ஆர்டரும் போட முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் அமைந்திருக்கலாம். அப்படி காந்திருந்ததால் நமக்கு எந்தவொரு நட்டமும் இல்லை. ஆனால், பெற வேண்டிய இலாபத்தினை இழந்துவிட்டோம்.


நஷ்டத்தில் ஆர்டரினை க்ளோஸ் செய்தல் கூடாது என்ற நமது முடிவால், நட்டம் இல்லாது தப்பித்தாகிவிட்டது.

அடுத்து இலாபத்தினை நோக்கிய பயணத்தினை அமைக்க வேண்டும். அதற்கு, நாம் 100 டாலர் இன்ஸ்வட்மெண்ட் செய்திருப்பதால் தானே, 0.01 என்ற சைசில் ஒரே ஒர் ஆர்டர் போட்டுக் காத்திருக்க வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.

200 டாலர் டெபாசிட் செய்தால், கூடுதலாக மற்றொரு ஆர்டர் போடலாம் இல்லையா?


அவ்வாறு கூடுதலான இரண்டாவது ஆர்டரினை எங்கு போடுதல் வேண்டும் என்றால், 1.3350 என்ற இடத்தில் மிஸ் ஆகி நெகட்டிவ் சென்றுவிட்டது என்றால், இரண்டாவது ஆர்டரினை அதன் தொடர்ச்சியான 100 பிப்ஸ் நெகட்டிவில் மீண்டும் ஆர்டரினை போட்டு கிடைக்கும் இலாபத்தினை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இலாபத்தினை எடுத்துக் கொண்டே இருங்கள்.. நெகட்டிவினை ஒர் பொழுதும் க்ளோஸ் செய்யாதீர்கள்.


நாம் ஆர்டரினை ரெஸிஸ்டன்ஸ் & பாட்டம் ஏரியா பார்த்து போடுவதால் பெரும்பாலும் விரைவாக ரிட்டர்ன் வந்துவிடும். ஆனாலும் சில நேரங்களில் தொடர்ச்சியாக நெகட்டிவ் செல்லும் பொழுது... அதாவது இந்த முறை நம்மை 3 வாரங்கள் காக்க வைத்தது போல, தொடர்ச்சியாக 500 பிப்ஸ் நெகட்டிவ் சென்றுவிட்டால்???

அப்படியும் நடக்கும் என்பதற்காகத்தான், ரெசிஸ்டன்ஸ் & பாட்டம் என 200 பிப்ஸ் நெகட்டிவில் தேர்ந்தெடுத்தாலும், ஆர்டர் 1000 பிப்ஸ் நெகட்டிவ் தாங்கும் அளவிற்கு 0.01 = 100 டாலர் என ஒர் ஆர்டர்க்கு ஓதுக்கி வைத்துள்ளோம்.

உங்களுக்கு மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கரன்சி இணை(Currency Pair) என்பது இரண்டு நாடுகளின் பொருளாதார மதிப்பினையும் சேர்த்தே தாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால், இரண்டு நாடுகளும், தன் மதிப்பினை உயர்த்திக் கொள்ள பாடுபடுவதோடு மட்டுமில்லாமல், மதிப்பினை இழக்கவும் ஏற்றுக் கொள்ளாது.


அதே நேரத்தில் வங்கிகள், தனது இலாபத்திற்காகவும் செயல்படுவது என்பது இயற்கை. இந்த வங்கிகளின் செயல்பாடுகள் கொடுப்பது தான் சார்ட் பேட்டர்ன் அமைப்பு. இதனை டேட்டா ரிலீஸ் சில நேரம் பாதித்தாலும், வங்கிகள் தனது இலாப நோக்கில் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கும். ஆகையால் தான், நானும் எப்பொழுதும் வங்கிகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கிச் செயல்படுங்கள் என்று சொல்வதோடு, அதனை தினசரி மார்க்கெட்டில் எதிர்பார்க்காமல், வீக் டூ வீக் என ஒர் மாத எல்லையில் நமக்கு இலாபம் கிடைக்குமா? என நீண்ட பார்வையில் மார்க்கெட்டில் ஆர்டர் போடுங்கள் என்று சொல்கிறேன். இவ்வாறுதான் வங்கிகள் & ப்ரைவேட் கம்பெனிகள், நீண்ட நாட்கள் ஆதாயமாக இன்வஸ்ட் செய்கின்றன. இவர்களது பல கோடி முதலீடுதான் மார்க்கெட்டினை உறுதியாக ஒரே ட்ரெண்டில் அழைத்துச் செல்கிறது. அதைப்போல், அவர்கள் வெளியேறும் பொழுது, பின் வாங்குகிறது.

இப்பொழுது மேல் உள்ள EUR/USD சார்ட் பாருங்கள். கரண்ட் மார்க்கெட் ரேட், 1.3350. ரெசிஸ்டன்ஸ் (1.3800) & பாட்டம் (1.2800) ஆகிய இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது.


அதாவது, மேலும் நெகட்டிவ் 500 பிப்ஸ், கீழும் நெகட்டிவ் 500 பிப்ஸ்.

நமது திட்டப்படி, 500 டாலர் இன்வஸ்ட் செய்து, ஒவ்வொரு 100பிப்ஸ் நெகட்டிவிற்கும் 1 ஆர்டர் எனப் போட்டு அவ்வப் பொழுது ப்ராபிட்டுடன் வெளியேறுவது, நெகட்டிவினை அப்படியே விட்டுவிடுவது என்பதுதான். இப்படியிருக்க, இப்பொழுது, மார்க்கெட்டில் எந்தப் பக்கத்தினை நோக்கி இறங்கினால், எதிர்பார்க்கும் நெகட்டிவினைக் காட்டிலும் கூடுதலாகச் செல்லும் ஒர் 500 பிப்ஸ்க்கு நம்மால் கூடச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, மீண்டும் 1000 பிப்ஸ் வந்து கீழ் இறங்கும் என்பதும் நமது திட்டப்படி கிடையாது. 500, பிப்ஸ் கூடுதல் நெகட்டிவ் மட்டுமே உறுதியாக திரும்பும்.


ஆகையால், நடுவில் வந்துவிட்ட, EUR/USD -ஐ விட்டுவிட்டு, நமக்குச் சாதகமான அடுத்தக் கரன்சிக்குள் தாவி விட வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்திருப்பது USD/CAD.
Image
இந்த சார்ட்டினைப் பாருங்கள், தற்போதைய மார்க்கெட் விலை 1.050. இதன் உச்சக்கட்ட ரெசிஸ்டன்ஸ் லைன் 1.060 என 100 பிப்ஸ் அருகே தான் காணப்படுகிறது. ஆனால், பாட்டம் கிட்டத்தட்ட 500 பிப்ஸ் கீழே 1.002 அருகே தான் காணப்படுகிறது.

ஆகையால், USD/CAD என்ற கரன்சியில் 1.050-க்கு மேல் நாம் செல் ஆர்டர் என முழுமையாகத் தொடர்ந்து செல்வதால் உறுதியான இலாபத்தினை அடையலாம்.


எல்லோர்க்கும் இப்பொழுது மார்க்கெட் என்பது ஏற்ற இறக்கம் என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். அது மட்டுமில்லாமல், நல்லதொரு பேலன்ஸ் ஈக்குவிட்டி வைந்திருந்தால் ஆர்டர் எளிதில் க்ளோஸ் ஆகாது என்பதோடு, சரியான ஆர்டிரினை தேர்வு செய்தால் நெகட்டிவ் ரிட்டர்ன் ஆகிவிடுகிறது என்ற உண்மையும் தெரிந்திருக்கும்.

ஆகையால், இனி மேலாவது, ஆர்டர்களை பெரிய சைசில் போட்டு லாஸ் ஆவதினை விடுத்து, பெரிய தொகையினை டெபாசிட் செய்து நல்ல இலாபங்களை அடையுங்கள்.


மேலும், 500 டாலர் டெபாசிட் செய்பவர்கள் தான், 0.01 என ஆர்டர் போட்டு அவ்வப் பொழுது இலாபங்களை எடுத்துக் கொள்வது, 100 பிப்ஸ் நெகட்டிவில் மீண்டும் அதே அடுத்த ஆர்டர் போடுவது என காத்திருக்க வேண்டும்.


1000 டாலர் இன்வஸ்ட் செய்பவர்கள், 0.01 ஆர்டர் சைடில் 35 பைப்ஸ் ப்ராபிட் செட் செய்து, தினம் தினம் வருவாய் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மேலும், நெகட்டிவ் செல்லும் பொழுது அதே அடுத்த ஆர்டர் எனப் போடுவது என தொடர்ச்சியாக ஆர்டர் போட நம்மிடம் பேலன்ஸ் இருப்பதால்... மார்க்கெட் பற்றிய எந்தவொரு பதட்டமின்றி, ஆர்டர்களைப் போட்டு போட்டு இலாபம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.


0.01- இல் > 35 பிப்ஸ் > 3.5 டாலர் = ரூ. 150 தினசரி நிச்சயமான வருவாய் > மாதம் 3000.

1500 டாலர் என்றால், 0.2 சைஸ் > வருவாய் 6000.

2000 டாலர் என்றால், மாதம் 10000 ஆயிரம் உறுதியாகப் பார்க்கலாம்.

என்னும் நீங்கள் கொஞ்சம் சுமார்ட்டாக செயல்பட்டால், 20,000 வரை சம்பாதிக்க முடியும்.


அதற்கு மேல் நீங்கள் ஆசைப்பட்டு பெரிய ஆர்டர் சைஸ் போடுவது, நெகட்டிவில் க்ளோஸ் செய்வது என தவறான முடிவுகளை எடுத்தால், கடைசியில் ஆவரேஜ் ஆக இருக்கும் அல்லது போட்டப் பணம் காணாமல் போய்விடும்.

ஆகையால், சரியான திட்டமிடுதலுடன், நல்ல பேலன்ஸோடும் இருந்தால் மட்டுமே மார்க்கெட்டில் இலாபம் சம்பாதிக்க முடியும்.


சும்மா, க்ளிக் செய்து உடனே உடனே இலாபம் பார்த்துவிடலாம் என்பது எல்லாம், நல்ல பேலன்ஸ் வைத்துக் கொண்டே நெகட்டிவ் வரும் பொழுது விட்டுவிட்டு அடுத்த ஆர்டரினைப் போடுவது எனச் செய்தால் கூட 2000 டாலரை வைத்து, மாதம் ரூ.30,000-க்கு சம்பாதிக்கலாம்.

ஆனால், குறைந்த பணத்தினையும், பெரிய ஆர்டரினையும் போட்டு ஈசியா சம்பாதித்துவிடலாம் என ஆசைப்பட்டால், அதிர்ஷ்டக்காரர்களுக்கு வேண்டும் என்றால் நடந்துவிடலாம்... ஆனால் மார்க்கெட்டில் அது முடியாத ஒன்று. ஏனெனில் இதனை எல்லாம் நானும் அனுபவித்தவன்... ஒர் சிங்கிள் பைப்பிற்கு 50 டாலர் ப்ராபிட் என..பெரிய பெரிய ஆர்டர் சைஸ் போட்டு ஒரே வாரத்தில் 1000- 2000 டாலர் சம்பாதித்து, அதே வேகத்திலே...2000 டாலர் என இழந்தும் போயாச்சு.

இப்படி ஒரே மாதத்தில் பணத்தினை இழந்தப் பின்னர் தான், எப்படியும் இழந்ததை அதே பாரக்ஸ் மூலம் திரும்பப் பெற வேண்டும் என்று விடாப்பிடியான முடிவோடு, பாரக்ஸ் மார்க்கெட்டினைப் பற்றி, 3 மாதங்கள் தொடர்ச்சியாக, பல வெப்சைட்களிலும் கொடுக்கப்பட்ட ஆர்ட்டிகள் ட்ரிக்ஸ், இழப்பிற்கான காரணம் என்ன, எவ்வாறு இலாபங்களைச் சம்பாதிப்பது, எப்படி சரியான ஆர்டர் ப்லோஸ்மெண்ட் செய்வது என எல்லாவற்றினையும் நன்றாக படித்துவிட்டதோடு நில்லாமல், அதனை அப்படியே இங்கும் பதிவுகளாகச் செய்து என் மனதில் முழுமையாக ஏற்றிக் கொண்டேன்.

அதுமட்டுமில்லாமல், கடந்த ஒர் வருடமாக பாரக்ஸ் மார்க்கெட்டினை தினசரி வாட்ச் செய்து வருவதால், போர்க்காலச் செய்தி, வங்கிச் செய்தி, ஆட்சி மாற்றச் செய்தி, திட்ட அறிவிப்பு, காலண்டர் என பல பண்டமண்டல் பாதிப்புகளையும் மார்க்கெட்டில் நடப்பதைனை பார்த்துவிட்டேன், சார்ட் பேட்டர்ன் பார்முலாவினை எவ்வளவுக்கு எவ்வளவு நம்பலாம் என்பதனையும் பார்த்துவிட்டேன்.

தற்பொழுதைய எனது அனுபவத்தால் நஷ்டம் இல்லை. ஆனால் இருந்த பணத்தினை ஆரம்பத்தில் இழந்துவிட்டதால், இருக்கின்ற கொஞ்ச பணத்தில் அதிக இலாபம் எடுக்க முடியவில்லை. காத்திருந்து காத்திருந்து சிறிய சிறிய இலாபம் மட்டுமே எடுக்க முடிகிறது.

படுகை பயிற்சிகள் என்பது எல்லாமே பதிவுகள் தான். எனது பதிவுகளைச் சரியாகப் படித்து பின் தொடர்பவர்கள், கண்டிப்பாக நல்ல வெற்றியாளராக உருவாக வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். அதுமட்டுமில்லாமல்,

உங்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்வது, கொஞ்சம் பணத்தினை வைத்துக் கொண்டு பாரக்ஸ் மார்க்கெட்டிலேயே உட்கார்ந்து இருக்காதீர்கள், கொஞ்சம் வெளியில் வந்து, மார்க்கெட்டினை நன்றாக அலசி, ஒர் புள்ளி + நேரத்தினை ஆர்டர் ப்ளேசாக தேர்ந்தெடுத்து ஆர்டர் போடுங்கள். அப்படியான வாய்ப்பு கிடைக்காவிட்டால் விட்டுவிடுங்கள். அடுத்துப் பார்க்கலாம்.

நிறையப் பணம் வைத்திருப்பவர்கள், பெரிய ஆர்டர் சைசில் போட்டு நிறைய சம்பாதித்துவிடலாம் என எண்ணாமல், சிறிய ஆர்டர் சைசில், நல்ல இடைவெளியில் ஒரே வித ஆர்டரை அடுக்கி, அவ்வப்பொழுது இலாபத்தினை எடுத்துக் கொண்டே இருங்கள்.

நஷ்டத்தினை மார்க்கெட்டிலேயே விட்டுவிட்டால் திரும்பி ஓடிவிடும். அதைப்போல், வந்த இலாபத்தினை விட்டுவிடாதீர்கள், பின் தொடர்ந்தாலும் ட்ரையல் ஸ்டாப் வைத்து செல்லுங்கள்.
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”