Page 1 of 1

EUR/USD SELL it, near 1.363

Posted: Tue Oct 15, 2013 7:43 am
by ஆதித்தன்
EUR/USD market price தற்பொழுது 1.355 என்றப் புள்ளியிலிருந்து மேல் நோக்கிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய ஐரோப்பா வர்த்தக நேரம் முடிவதற்குள், EUR/USD கரன்சி அமெரிக்க சட்டவுனை சாதகமாகப் பயன்படுத்தி, 1.363 என்ற நிலைக்குள் கொண்டு செல்லும் பற்றத்தில் திருப்பமாக 40 பைப்ஸ் காணப்பபடும்.


ஆகையால், மாலை 7 மணி வரை ஏற்படும் மார்க்கெட் நிலவரங்களைக் கொண்டு, முழுமையான ஏற்றத்தினை முடிவு செய்து செல் ஆர்டர் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Re: EUR/USD SELL it, near 1.363

Posted: Tue Oct 15, 2013 10:11 pm
by ஆதித்தன்
மார்க்கெட்டில் ஆர்டர் போடுவதற்கு முன்னர் நமக்கான வியூகத்தினை வகுத்துக் கொள்ளுதல் என்பது மிக முக்கியம். அவ்வாறு நமக்கு சிக்னல் என்று கிடைக்கும். அவை எப்பொழுதும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அவற்றினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.




இன்று காலை மார்க்கெட் 1.3556 என்ற நிலையில் இருக்கும் பொழுது, நான் 1.3630 என்றப் புள்ளியருகே செல் ஆர்டர் போடுங்கள் சொல்கிறேன் என்று சொன்னால், மார்க்கெட் 1.355-லிருந்து 1.363 என்பதனை நோக்கி செல்கிறது இல்லை. அவ்வாறு அந்தப் புள்ளியினைச் சென்று அடைந்துவிட்டால், கீழே இறங்கும் என்பதுதான் எனது வியூகம்.


அதாவது தினசரி மார்க்கெட் குறைந்தது 50 புள்ளிகள் ப்ளக்சிபுள் காணப்படுகிறது. அது கீழ் சென்று மேல் எழும்பலாம். அல்லது மேல் சென்று கீழிறங்கலாம். அல்லது ஒரே பக்கம் சென்றுவிட்டு அடுத்த நாள் பாதி திரும்பலாம்.


ஆனால், 1000 பைப்ஸ் ஒரே பக்கம் சென்றது, கண்டிப்பாக 23%(230 பிப்ஸ்) ரிட்டர்ன் கொடுக்கும். இந்த 1000-இல் 230 பைப்ஸ் ரிட்டர்னை கால்குலேட் செய்துதான் செல் ஆர்டர் தேர்வு செய்கிறோம். இது டெக்னிக்கல்.

ஆனால், பண்டமெண்டல் படி, இன்றைய நிலவரம்,,, அமெரிக்க அரசு சட்டவுனில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு வழங்கி வந்த உலக வங்கியின் கடனுரிமை என்னும் சில நாட்களில் முடிவடைகிறது. அப்படியான நேரத்தில், அரசு கூடுதல் ஆண்டுகளுக்கு ஓப்பந்தம் செய்தல் வேண்டும். ஆனால், அரசு சட்டவுனில் இருப்பதால், அது இயலாது ஆகி. பணப்புழக்கம் குறைந்து, டாலர் சரிவடைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் உலக பொருளாதாரமும் கொஞ்சம் ஆட்டம் காணும்.


இதனால், சைனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே அமெரிக்கவினை கண்டிக்க ஆரம்பித்துவிட்டன. ஆகையால் எந்த நேரம் வேண்டும் என்றாலும், சட்டவுன் வாபஸ் வாங்கப்பட்டு, அமெரிக்க அரசு செயல்பட ஆரம்பிக்கலாம்.

அமெரிக்க அரசு சட்டவுனில் இருக்கும் இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஒர் ஏற்றம் இறங்கங்களை உருவாக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களும் இருக்கின்றன. இவை பல இலட்ச டாலர்களை முதலீடு செய்து ஏதேனும் ஒர் பக்கத்திற்கு இழுத்து செல்வதும், பின் சட்டனாக இலாபத்தினை எடுத்துவிட்டு திரும்புவதும் என செயல்படலாம்.


அப்படியான நிகழ்வுதான் இன்று நடந்துள்ளது. அமெரிக்க சட்டவுன் தவிர்க்க பேச்சு வார்த்தை என்றதும், ஏறுமுகத்தில் இருந்தது, அப்படியே ஒவ்வொருவரும் பின் வாங்க... மார்க்கெட் டாலர்க்கு ஆதரவாக சரிய ஆரம்பித்துவிட்டது.


ஏற்கனவே நாம் ரெசிஸ்டன்சில் இருக்கும் மார்க்கெட் எப்பொழுது வேண்டும் என்றாலும் இறங்கலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும் பொழுது செல் ஆர்டர் மட்டும் தான் தேர்வு செய்ய வேண்டும். என்ன, நமது நெகட்டிவினைக் குறைப்பதற்காகவும், இலாபத்தினை விரைவாக எடுத்துவிட்டு நகண்டு செல்வதற்காகவும், 61.8% நெகட்டிவினை தொடும் வரை காத்திருந்து பின்னர் ஆர்டர் இடு வேண்டும் என்பதுதான் சிக்னல் கொடுப்பவர்களின் பார்முலா.


ஏனெனில், இந்த இடத்தில் ஆர்டர் போடுவதன் மூலம் தவறி மீண்டும் ..னெகட்டிவ் உயர்ந்தால், திரும்ப வந்துவிடும் என்பதுதான்.


இப்போதைய 1.347 பாட்டத்திற்கு அதிகப்பட்ச ரிட்டர்ன், 1.353 எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 23% ஏற்கனவே திரும்பி, அப் & டவுன் ஆகிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அப் & டவுன் ஆகி, பாட்டம் லைனை தொடர்ச்சியாக தொட்டுக் கொண்டிருந்தால், மீண்டும் அந்தப் பாட்டத்தினை உடைத்துவிட்டுச் செல்லும் என்பதனையும் டெக்னிக்கல் சொல்கிறது.

இப்படி மீண்டும் இறங்கும் என்று தெரிந்தாலும், ஒர் வாய்ப்பில் நாம் இறங்கி வெற்றியடைந்துவிட்டாலோ, அல்லது இப்பொழுது இறங்கும் என தெரிந்து வாய்ப்பினை தவற விட்டுவிட்டாலோ.. பின் மீண்டும் உடனே ஆர்டர் போடுதல் கூடாது.

கொஞ்சம் ஒர் அடுத்தக்கட்ட உச்சத்தினை தொடும் வரை அப்படியே விட்டுவிட்டுத்தான் பின் மீண்டும் ஆர்டரைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இனி அடுத்தக்கட்டமாக நாம் ஆர்டர் போட எதிர்பார்க்க வேண்டியது 1.356 என்ற நியர் டேம் ரெசிஸ்டன்ஸ் ஏரியாவினைத்தான். அதுவும், இந்த புள்ளியை எவ்வாறு சென்றடைகிறது என்ற மார்க்கெட் மூவ்மெண்டினை வைத்தே, ஆர்டர் போட வேண்டும். இது 1.353 என்ற நிலையிலிருந்தும் திரும்ப அதிக வாய்ப்பிருக்கிறது.

ஏனெனில் நியர் டேம் பாட்டமாகிய 1.343 என்ற 38% புள்ளியினை எட்டும் என்பது உறுதியாக நம்பப்படுகிறது. ஆகையால் ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் நிற்கும் Eur/Usd கரன்சியில் செல் ஆர்டர் மட்டும் தேர்வு செய்யுங்கள்.


அதே நேரத்தில் அமெரிக்க அரசு சட்டவுனில் இருப்பதால், கொஞ்சம் ஏற்றம் காணலாம். அந்த ஏற்றத்தினை கணக்கில் கொண்டு சரியாக வாய்ப்பு கிடைக்கும் பொழுது செல் ஆர்டர் போட்டு வெற்றியடையுங்கள்.


பை ஆர்டர் எப்பொழுதுமே ரெசிஸ்டன்ஸ் ஏறியாவில் போடாதீர்கள். ரெசிஸ்டன்ஸ் பாட்டம் கண்டுபிடிக்க 4 மணி நேரச் சாட்டில் 700 - 1000 பைப்ஸ் டிப்பரன்ஸ் பாருங்கள்.

Re: EUR/USD SELL it, near 1.363

Posted: Thu Oct 31, 2013 5:38 pm
by ஆதித்தன்
15 நாட்களுக்குப் பின்னர் மீண்டும், அதே 1.363 என்ற ஏரியாவுக்குள் திரும்பி வந்துவிட்டது.

ஆனால், 100 டாலர் வைத்துள்ளவர்கள், ஸ்டாப் லாஸ் இல்லாமல் 0.01-இல் ஆர்டர் போட்டிருந்தால், கடந்த 10 நாட்களில் ஆர்டர் போட முடியாது போயிருக்கும்.


ஆனால், 500 + டாலர் வைத்துக் கொண்டு,

0.01-இல் 5 ஆர்டர் போட தயாராக இருப்பவர்கள், 65 பைப்ஸ் நெகட்டிவ் போனப் பின்னர் மீண்டும் அதே ஆர்டர் போடுதல் ... மீண்டும் அதே ஆர்டர் போடுதல் என டாப் நெகட்டிவில் அதே ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தால், இலாபத்தினைப் பார்த்திருக்க முடியும்.


ஆகையால், ஒரே கரன்சியில் ... ஒரே திசையினைச் சரியாக எதிர்பார்த்து, அடுத்தடுத்த பிக் நெகட்டிவில் ஆர்டர்களை சரியான பேலன்சுடன் தொடர்ந்தால் இலாபம் கிடைக்கும் என்பது உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.


ஆகையால், குறைந்த பணத்துடன்... சட்டன் சட்டனாக ஆர்டர்களைப் போட்டு மாட்டிக் கொண்டிருப்பதற்குப் பதில், நிறைய பேலன்ஸ் வைத்துக் கொண்டு, ப்ராபிட் என்பதற்காக, நல்ல புள்ளிகளை எதிர்பார்த்து ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தால் வருவாய் உறுதி.