Forex Money Management Tricks for No Loss

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Forex Money Management Tricks for No Loss

Post by ஆதித்தன் » Sat Sep 28, 2013 11:37 am

EUR/USD ஒர் வருட மார்க்கெட் ஆய்வு:
சார்ட் ஆரம்ப நாள்/ 3.8.2012 விலை : 1.21199
சார்ட் கடைசி நாள் / 25.9.2013 விலை : 1.3471
சார்ட் Volatility / ஏற்ற இறக்கம் : 1503 பிப்ஸ் ( Diff between High & Low)
மார்க்கெட் ஆரம்ப விலை மாற்றம் : plus 1272 pips ( diff between current Rate & starting rate)
Day Average Volatility : 80 pips ( weekly one day more than 150 pips)
300 Days approximate pips : 80 * 300 = 24000 pips


ட்ரேடிங்க் என்று இறங்கிவிட்டால் இன்வஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும். இன்வஸ்ட்மெண்ட் செய்பவர்களுக்கு கொடுக்கும் முக்கியமான வார்னிங்க் Risk Warning: CFDs, which are leveraged products, incur a high level of risk and can result in the loss of all your invested capital. அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் முழுப்பணமும் நஷ்டத்தோடு முடியலாம் என்பதுதான்.


பாரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய இறங்கும் பொழுதே, முழுப்பணமும் நமது இல்லை. அது ட்ரேடிங்கிற்கு என்று எழுதப்பட்டது என்று மனதில் கொண்டு, அந்த நஷ்டத்தினை தடுத்து இலாபத்தினை பார்க்க என்ன செய்ய வேண்டும் என்று நிதானமாக யோசிப்பதுதான் மணி மேனஜ்மெண்ட். அந்த மணி மேனஜ்மெண்ட் டிரிக்ஸினை சுருக்கமாகவும் தெளிவாக இங்கு சொல்கிறேன்.. ஒர்முறைக்கு, நான்கு முறைப்படித்துக் கொள்ளுங்கள். புரியாவிட்டால், உங்கள் புரிதல் என்ன என்று சொல்லிச் சந்தேகத்தினைக் கேட்டால், என்னால் உங்களைப் புரிந்து கொண்டு தெளிவுப்படுத்த முடியும்.

இப்பொழுது மேல் உள்ள EUR/USD Day சார்ட் பாருங்கள், 3.8.2012-இல் ஆரம்பித்து, இன்றைய நாள் வரை இருக்கிறது. அதாவது, ஒர் வருடத்தில் மார்க்கெட் நிலவரத்தினைக் காட்டுகிறது.

ஒர் வருடத்திற்கு முன் 1.2199 என்ற விலையிலிருந்து, ஏற்றம் இறக்கத்துடன் கடந்து வந்து தற்பொழுது 1.3471 என்ற விலைக்கு உயர்ந்திருக்கிறது. விலை மாற்றத்தினை பைப்ஸில் கால்குலேட் செய்தால், 1272 pips (1.3471 - 1.2199 = 0.1272)

ஒர் வருடத்தின் மாற்றமாக 1272 பைப்ஸ் அப்சைடில் சென்றிருக்கிறது, அதே நேரத்தில் இந்த ஒர் வருட காலத்தின் ஏற்ற இறக்கத்திற்கான இடைவெளி பார்த்தோம் என்றால் 1503 பைப்ஸ். என்னும் தெளிவாகச் சொல்லப் போனால், ஒர் வருடத்தில் ஒருவரது அதிகப்பற்றமான இழப்பு என்று சொன்னால் 1503 பைப்ஸ் + ஸ்வாப் ஆகத்தான் இருக்க வேண்டும்.

இப்பொழுது ஒருவருடைய அதிகப்பற்ற இழப்பினை பைப்ஸிலிருந்து டாலரில் கன்வர்ட் செய்ய வால்யூம் சைசுக்கான டாலர் வேல்யூவில் பெருக்கினால், நஷ்டத் தொகை

0.01 என்ற சைசில் ஆர்டர் இட்டவர், 1500 * $ 0.1 = $150 + ஸ்வாப்
0.1 என்ற சைசில் ஆர்டர் இட்டவர் 1500 * $1 = $1500
1 சைசில் ஆர்டர் இட்டவர் 1500 * $10 = $15,000


தவறுதலாக ஆர்டர் இடுபவர்க்கு அதிகப்பட்ச நஷ்டம் என்பது 1500 பைப்ஸ் தான். அதில் தொகை என்பது நாம் தேர்வு செய்யும் ஆர்டர் சைசில் இருக்கிறது என்பதனை முழுமையாக மனதில் கொள்வதோடு, நஷ்டமடைதலுக்கான கால அளவினை நீட்டிக் கொள்ள வேண்டும்.

100 டாலர் இன்வஸ்ட்மெண்ட் செய்வோர், 0.01 என்ற ஆர்டர் சைசில் ட்ரேடிங்க் செய்தால் முழுமையாக 1000 பைப்ஸ் நஷ்டமடைய உங்களுக்கு கிட்டத்தட்ட 6 மாதம் முதல் 1 வருடம் ஆகலாம்.
இப்பொழுது மேல் படத்திலுள்ள 4 மணி நேர சார்ட் மூலம், 3 மாத கால மார்க்கெட் நிலவரத்தினை பாருங்கள். அதிகப்பட்ச இழப்பு என்பது 440 பைப்ஸ்.

நாம் முதலீடு செய்யும் 1000 பைப்ஸ் மூன்று மாதத்திலேயே நஷ்டமடைவதாகக் கொள்வோம். ஆனால், அந்த மூன்று மாதத்திற்குள் நஷ்டமடையாமல் இருக்க நமது எதிர்வினையினைச் செய்தல் வேண்டுமா, இல்லையா?

அதற்கு என்ன செய்தல் வேண்டும் என்ற சிந்தனைதான், தினசரி மார்க்கெட் நிலவரத்தினைப் பார்க்க வேண்டும்.

ஒர் வருட இடைவெளியில் அதிகப்பட்சமாக 1500 பிப்ஸ் மட்டுமே விரிவு கண்ட மார்க்கெட், ஒரே நாளில் ஆவரேஜாக 80 பிப்ஸ் ஏற்ற இறக்க விரிவு காண்கிறது. அதுவே சில முக்கிய டேட்டாஸ் ரிலீஸ் ஆகிற நாள் என்றால் 200 பிப்ஸ் கூட காண முடிகிறது.

ஒர் நாளின் விரிவு 80 பிப்ஸ் என்று வைத்துக் கொண்டாலும், 20 நாட்களில் 1600 பிப்ஸ். அதாவது ஒரே மாதத்தில் 1600 பிப்ஸ் மாற்றம் ஏற்ற இறக்கமாக ஒடுங்கிக் கிடக்கிறது. அதாவது ஒர் வருடத்தில் 20,000++ பிப்ஸ்க்கும் மேலாக அப் & டவுன் நடக்கிறது. அதில் நாம் ஒர் ஆர்டரினை நெகட்டிவில் க்ளோஸ் செய்யாமல் விட்டால், ஏற்றம் இறக்கம்... ஏற்றம் இறக்கம் என கடைசியில் மொத்த லாஸ் 1500 பிப்ஸ் மட்டும் தான். அதுவே... 10 பிப்ஸ் லாஸ் ... 20 பிப்ஸ் லாஸ் ...50 பிப்ஸ் லாஸ் என ஒவ்வொரு நாளும் லாசில் ஆர்டரில் க்ளோஸ் செய்தால் .... ஏற்ற இறக்கத்தோடு 10000 pips ஒரே சைடில் சென்றால் .. பை/செல் என மாற்றி மாற்றி லாசில் குவித்தால் 20,000 பிப்ஸ்க்கும் மேலாக லாஸ் ஆகிவிடும்.


அதாவது அதிகப்பற்றமாக 1500 பிப்ஸ் லாஸ் ஆக வேண்டிய ஒர் இடத்தில் நாமே, ஆர்டர்களை மாற்றி மாற்றி லாசில் போட்டுக் க்ளோஸ் செய்தல் கூடாது. அதற்குப் பதில், சரியான ஏற்ற இறக்கங்களை தேர்ந்தெடுத்து, 10 பைப்ஸ், 5 பைப்ஸ் என ப்ராபிட் பார்த்தாலும் போதும்.


சரியான ஏற்ற இறக்கங்களை அடையாளம் காண்பதற்காக, இதுவரை நான் வாரந்திர பாரக்ஸ் ரிப்போர்ட் மூலம் சேகரித்த இமேஜ்கள் அனைத்தையும் கீழ் உள்ள பாக்சில் கொடுத்துள்ளேன் நன்றாகப் புரிதலுடன் பாருங்கள்.
இந்தப் படங்களைப் பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு வாரமும் மார்க்கெட் 100 முதல் 250 பைப்ஸ் வரை ஏற்ற இறங்களைச் சந்தித்திருக்கிறது. அதில், ஒவ்வொரு 100 பைப்ஸ் அப்/டவுன் உறுதியாக திருப்பம் கண்டுள்ளது. மேலும் வாரத்தில் இரண்டு நல்ல திருப்பங்கள் காணப்படுகிறது என்பதுதான். மேலும், 24 வாரங்கள் அல்லது 120 நாட்கள் ஆகியும் ஏற்றம் இறக்கம் என மாறி மாறி, கூட்டிக் கழிச்சி மொத்தமே +450 பைப்ஸ் தான். ஆனால் ஒரே நாளில் 200 பைப்ஸ் அப் ஆகிவிட்டது என ஒருவர் தனது மொத்த தொகையையும் இழந்து நிற்கிறார் என்றால், அது அவருடைய தவறான மணி மேனஜ்மெண்ட் முறையால் தான்.

மேலுள்ள 20 படங்களும் தொடர்ச்சியான வாரங்களின் 30 மினிட் சார்ட் படங்கள். இப்படங்களை மீண்டும் நன்றாக உற்றுக் கவனியுங்கள். ஒவ்வொரு படமும் ஒர் வாரம், அதாவது 5 நாட்களை உள்ளடக்கியது. வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் ஏதேனும் ஒர் திசையில் 100 - 200 பைப்ஸ் சென்றுவிட்டது என்றால், அடுத்து அதன் எதிர் திசையில் 100 - 150 பைப்ஸ் செல்கிறது, பின் அங்கிருந்து எதிர் திசை... இப்படி வாரத்தில் மூன்று நாட்கள் 50 பைப்ஸ் ப்ராபிட்டில் ஆர்டர் போட நல்லதொரு வாய்ப்பு கிடைக்கிறது.

ஏதேனும் ஒர் வாரத்தில் முழுமையாக அப்சைடிலேயே/டவுன்சைடிலேயே அமைந்துவிட்டால், அதற்கு அடுத்த வாரம் அதற்கு எதிராக அமைந்திருக்கிறது என்பதனை படங்கள் நமக்குத் தெளிவாக காட்டுகின்றது. ஆகையால் வாரத்தின் முடிவினை மனதில் வைத்துக் கொண்டு, 150 பைப்ஸ்க்கு மேல் அல்லது கீழ் என எங்கு செல்கிறதோ அங்கிருந்து எதிராக ஆர்டரினை 50 பைப்ஸ் இலாபத்துடன் போட்டு வைக்கலாம். அதைப்போல், எல்லை அமைத்துவிட்டு திரும்பவும் 150 பைப்ஸ்க்கு மேல் எதிரில் சென்றப் பின்னர், அங்கும் எதிர் திசையில் ஆர்டர் போடலாம்.

இதில் நீங்கள் கொஞ்சம் 3 புள்ஸ் டேட்டா ரிலீஸ் நேரத்தினை கவனிக்க வேண்டும். ஏனெனில், அந்த உச்சத்திலிருந்தே, அடுத்த உச்சத்தினை கொடுக்கக் கூடியது, டேட்டா ரீலிஸ். இது சில சமயங்களிலே நடக்கும். மற்றப்படி பெரும்பான்மையாக திருப்பத்தினையே காட்டுகிறது என்பதனை மேலுள்ள சார்ட் ரிப்போர்ட் நமக்கு சொல்கிறது.
மேலுள்ள 5 நிமிட சார்ட் மூலம் 1 நாள் மார்க்கெட் நிலவரத்தினைப் பாருங்கள். இதில் ஒரே சைடில் 90 பைப்ஸ் உயர்வு பெற்று ~40பைப்ஸ் திரும்பியுள்ளது. அதாவது புரிதல் என்னவென்றால், தினசரி ஆர்டர் போட, ஒரே திசையில் 80 பிப்ஸ் - 150 பைப்ஸ் ஒரே திசையில் அமைந்தால் அதற்கு எதிர் திசையில் ஆர்டர் இட்டு 25 ப்ரசண்ட் ப்ராபிட் எதிர் பார்க்கலாம் என்பதுதான்.


இப்பொழுது மீண்டும், 5 நிமிட சார்ட், 30 நிமிட சார்ட், 4 மணி நேர சார்ட், 1 நாள் சார்ட் என ஒவ்வொன்றினையும் பாருங்கள். எல்லாவற்றிலுமே ஒர் திசையில் சென்று உறுதியாக திரும்பியிருப்பது 27% + என தெரியும். அதாவது 100 பைப்ஸ் மார்க்கெட்டில் 25+பிப்ஸ், 250 பிப்ஸ் மார்க்கெட்டில் 65+ பிப்ஸ் ... 1000 பிப்ஸ் மார்க்கெட்டில் 300+ பிப்ஸ்.

தினசரி மார்க்கெட் மூலம் 10 - 25 பைப்ஸ் என தினம் இலாபம் உறுதியாக பார்க்கலாம்.

வாரந்திர மார்க்கெட்டில் 25 - 50 பிப்ஸ் என மூன்று முறை இலாபம் பார்க்கலாம்.


அப்படியானால், நீங்கள் காத்திருக்க வேண்டியது இப்படியான நல்ல உச்ச நிலையிலான புள்ளிகளுக்காகத்தான். சரியான உச்ச நிலையில் ஆர்டர்களைப் போட்டீர்கள் என்றால், அன்றைய தினத்தில் தவறினாலும், அடுத்த சில நாட்களில் இலாபத்தினைக் கொடுத்துவிடும். மேலும் தினசரி ஆர்டர் போடுவதற்கு முன், செல் ஆர்டர் தேர்வு செய்யலாமா? பை ஆர்டர் தேர்வு செய்யலாமா? என்பதற்கு 4 மணி நேரச் சார்ட்டில் மார்க்கெட் பாட்டத்தில் இருக்கிறதா, ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் இருக்கிறதா, மற்றும் எங்கிருந்து எங்கு நோக்கிச் செல்கிறது என்பதனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, EUR/USD கரன்சி தற்பொழுது 1.35421 என்ற ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் இருக்கிறது. ஆகையால், 5 மினிட் சார்ட்டில் 100 பைப்ஸ் அப்சைடு ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் ஆர்டர் போடுதல் வேண்டும்.

மேலும் விவரம் இந்த வாரத்திற்குள் இதில் அப்டேட் செய்யப்படும்....
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: Forex Money Management Tricks for No Loss

Post by mathiworld » Sun Sep 29, 2013 8:56 pm

ஆதி சார், என்னோடைய அடிப்படை சந்தேகம். 1.35421 என்பது ஒரு 1 euro வாங்க நாம் கொடுக்க வேண்டியது அப்படிதானே?
அப்படி என்றால்
1. இந்த இடத்தில் நாம் Buy கொடுக்க வேண்டுமா இல்லை sell கொடுக்க வேண்டுமா?
2. எப்போது order close செய்ய வேண்டும் ?
விவரமாக கூறுங்களேன்.

மேலும் ஒரு சந்தேகம் என்னுடைய அக்கௌன்ட் டைப் MT4 என்று இருக்கிறது.
உங்களுடைய போஸ்ட்ல் படித்த நினைவு உள்ளது MT4 Micro என்று இருக்க வேண்டும் என்று. நான் என்ன செய்ய வேண்டும் என்பதனை விளக்கவும்.

நன்றி........
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Forex Money Management Tricks for No Loss

Post by ஆதித்தன் » Sun Sep 29, 2013 9:07 pm

mathiworld wrote:
மேலும் ஒரு சந்தேகம் என்னுடைய அக்கௌன்ட் டைப் MT4 என்று இருக்கிறது.
உங்களுடைய போஸ்ட்ல் படித்த நினைவு உள்ளது MT4 Micro என்று இருக்க வேண்டும் என்று. நான் என்ன செய்ய வேண்டும் என்பதனை விளக்கவும்.

.

மை அக்கவுண்ட் பகுதியின் வலப்பக்கம் மேலிருக்கும் Open Trading Account என்பதனைக் க்ளிக் செய்து வரும் பார்ம் மூலம் EA ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒபன் செய்ய வேண்டும்.

அதில் கேட்கப்படும்

Choose your partnership என்பதில் 316533 என்பதனை தேர்வு செய்து கொள்ளவும்.

Account Type என்பதில் > ஃFxpro Mt4 EA Micro

Currency Base > USD

Leverage > 1: 500

என தேர்வு செய்து கம்ப்ளிட் செய்தால் உடனே அப்ரூவல் ஆகி ஐடி பாஸ்வேர்டு அனுப்புவார்கள்.
mathiworld wrote:ஆதி சார், என்னோடைய அடிப்படை சந்தேகம். 1.35421 என்பது ஒரு 1 euro வாங்க நாம் கொடுக்க வேண்டியது அப்படிதானே?
அப்படி என்றால்
1. இந்த இடத்தில் நாம் Buy கொடுக்க வேண்டுமா இல்லை sell கொடுக்க வேண்டுமா?
2. எப்போது order close செய்ய வேண்டும் ?
விவரமாக கூறுங்களேன்.


EUR/USD = 1.3542 என்பது கரன்சி எக்சேஞ்ச் ரேட்.
ஒர் ஈரோ வாங்க கொடுக்க வேண்டிய டாலர் ரேட் 1.3542

உதாரணத்திற்கு,
USD/INR = 62.915
ஒர் டாலர் வாங்க கொடுக்க வேண்டிய ரூபாய் 62.915


ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் செல் கொடுக்க வேண்டும், ஏனெனில் அடுத்து விலை குறையும். ஆகையால் நல்ல ரேட்டில் விற்றுவிட்டால், விலை குறையும் பொழுது க்ளோஸ் செய்து இலாபம் பார்த்துக் கொள்ளலாம்.
Image
1.35421 என்றப் புள்ளி 4 அவர் சார்ட்டில் பார்க்கும் பொழுது ரெசிஸ்டன்ஸ் ஏரியாவில் இருக்கிறது. ஆகையால், செல் ஆர்டர் தான் போட வேண்டும்.

ஆனால், 5 மினிட் படி நடுவில் நிற்பதால், கொஞ்சம் ஏறவிட்டு செல் செய்யலாம். அல்லது கூடுதல் ரிஸ்க்கை ஏற்றுக் கொண்டு இப்பொழுதே செல் போட்டுவிட்டு காத்திருக்கலாம்.


போட்ட ஆர்டரினை எப்பொழுது வேண்டும் என்றாலும் க்ளோஸ் செய்து கொள்ளலாம். ஆனால் இலாபத்தோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

Re: Forex Money Management Tricks for No Loss

Post by mathiworld » Sun Sep 29, 2013 10:11 pm

நீங்கள் கூறியது போல் புதிய கணக்கு request கொடுத்துள்லேன்.
எனது சந்தேகமும் தீர்ந்தது மிகவும் நன்றி...
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”