Page 1 of 1

பிட்காயின் புதிய மாற்றம் - ஹார்டு & சாப்ட் ஆக பிரிகிறது பிட்காயின்

Posted: Fri Jul 21, 2017 9:52 am
by ஆதித்தன்
ஒர் சில மாதங்களுக்கு முன்னர் பிட்காயின் நிர்வாகக் குழு மாற்றியமைக்கப்பட்டப் பின்னர், பிட்காயின் ட்ரான்ஸ்சாக்சன் வேகத்தினைக் கூட்டுவதற்கு என அதன் கன்பார்மேஷன் ப்ளாக்செயின் ப்ளாக் அளவினை அதிகப்படுத்தியதோடு, கட்டணத்தினையும் அதிகரித்தனர். கட்டணத்தின் காரணமாக தற்பொழுது சிறிய தொகை அளவிலான பிட்காயின் பரிமாற்றம் குறைந்துவிட்டது. அதோடு பிட்காயின் இரண்டாக பிரிக்கும் திட்டம் இருந்தாலும், போதிய ஆதரவு கிடைக்காமல்.. அது பயன்பாட்டுக்கு வராமல் போனது.

அடுத்ததாக வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி புதிய அப்டேட் வழங்க இருக்கிறதாக பிட்காயின் நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இதில் முக்கியமாக பிட்காயின் இரண்டாகப் பிரிக்கப்பட இருக்கிறது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

User Activated Soft Fork (UASF - பழைய பிட்காயின்) , User Activated Hard Fork ( UAHF - புதிய பிட்காயின் ) என இரண்டாக பிரிக்கப்பட இருக்கிறது, UAHF பிட்காயினுக்கு தனி ப்ளாக்செயின் நெட்வொர்க் பயன்படுத்தப்பட இருப்பதால், தற்போது சேவை வழங்கிக் கொண்டிருக்கும் பிட்காயின் வாலட் தளங்கள் இதற்கான சேவை இல்லை என அறிவித்துவிட்டன. குறிப்பாக காயின்பேஸ், யுனோகாயின் போன்ற தளங்கள், ஹார்டு போர்க் பிட்காயின் சேவை இல்லை என்று உறுப்பினர்களுக்கு அறிவித்ததோடு, அவ்வாறு ஹார்டு போர்க் பிட்காயினாக மாற்றம் செய்ய விரும்பினால், தளத்திலிருந்து வித்ட்ரா எடுத்துக் கொள்ளும்படி தகவல் கொடுத்துவிட்டனர்.

இவை சாப்ட் போர்க் அப்டேட் மாற்றத்திற்காக காத்திருப்பதோடு, அப்டேட் காலக்கட்டத்தில் ஏதேனும் அசாம்பாவிதம் நடவாமல் இருக்கும் விதமாக, சேவையினை தற்காலிகமாக அக்காலக்கட்டத்தில் நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாப்ட் போர்க் பிட்காயின் ஆகிய தற்போதைய பிட்காயினி தனித்தன்மையான ஆதார ஐடி கொடுக்க இருப்பதாகக் கூறியுள்ளனர். இது பயன்பாட்டில் அத்தனை பாதிப்பினை ஏற்படுத்தாது என்றாலும், புதிய பிட்காயின் ப்ளாக்செயின் உருவாக்கம் குழப்பத்தினை பயனாளர்கள் மத்தியில் உருவாக்கும் என்று நினைக்கத் தோன்றையில், பிட்காயின் விலை உயர்வு என்பது ஒர் வினோதமாக உள்ளது.

வினோதமான மார்க்கெட் வர்த்தகத்தில் கவனமாக இருத்தல் வேண்டும் என்பதனை மனதில் கொண்டு செயல்படுங்கள்.