Page 1 of 1

பிட்காயின் கரன்சி ட்ரேடிங் செய்வதற்கான பயிற்சி

Posted: Thu Nov 24, 2016 9:11 am
by ஆதித்தன்
பிட்காயின் டிஜிட்டல் கரன்சி!
ஆன்லைன் டிஜிட்டல் கரன்சியான பிட்காயின் தற்பொழுது மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. பிட்காயின் பற்றிய தகவல்களை நான் 2014-ஆம் ஆண்டே அறிமுகம் செய்துவிட்டேன், ஆகையால் பலரும் பிட்காயின் கரன்சியினைப் பற்றித் தெரிந்திருக்கலாம், இல்லாவிட்டாலும் இந்த விடியோ மூலம் நீங்கள் அறிந்து கொள்வதோடு, வர்த்தகம் செய்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதனை தெரிந்து கொள்ளலாம்.

பிட்காயின் என்பது ஒர் பீர் டூ பீர் டிஜிட்டல் கரன்சி, அதாவது நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சுதந்திரமா பரிமாற்றம் செய்து கொள்ள உதவும் மத்தியமம் ஆக்கப்பட்ட கரன்சி. இந்த கரன்சியினை எந்தவொர் அரசும் கட்டுப்படுத்த முடியாது. ஆகையால் சுதந்திரமாக இதனை இணையத்தில் வாங்கி பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தலாம்.

பங்கு வர்த்தகத்தினைக் காட்டிலும் மிகவும் எளிதான வகையில் பிட்காயின் வர்த்தகம் செய்து சம்பாதிக்க முடியும்.

பிட்காயின் கரன்சி 2009 ஆம் ஆண்டு சதோசி நகமோடோ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றைய காலத்திலிருந்தே பல டிஜிட்டல் கரன்சிகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், பிட்காயின் மட்டுமே பெரிய அளவில் வெற்றியடைந்ததோடு இன்று பியாட் கரன்சிகளான, டாலர், இரோ, ரூபாய், பவுண்ட் என அனைத்து கரன்சியோடும் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.

2014-ஆம் ஆண்டே பிட்காயின் பற்றிய ஒர் ஆர்ட்டிகளை எனது இணையதளத்தில் கொடுத்திருந்ததால் தமிழர்கள் பலரும் பிட்காயின் கரன்சி பற்றிய தகவல்களை அறிந்து கொண்டதோடு, ஆரம்பக்கட்டத்தில் இலவசமாக கொடுத்த பிட்காயின் மூலம் சிறிய அளவில் பணமும் சம்பாதித்துக் கொண்டார்கள்.

கடந்த வருடத்திலிருந்தே பிட்காயின் முதலீடு செய்தால் விரைவாகவும், உறுதியாகவும் நல்ல வருவாய் பார்க்கலாம் என்பதனை எனது விடியோவில் கொடுத்துக் கொண்டிருந்ததன் பலனாய், அதனை அறிந்துகொண்ட பலர் முதலீடு செய்தும் பணத்தினை சம்பாதித்துக் கொண்டார்கள்.

தற்பொழுது பல அரசுகள் பிட்காயின் கரன்சியினை தனது நாட்டுச் சட்டத்துடன் இணைக்க இருப்பதால் விரைவில் டாலரினைக்காட்டிலும் அதிகம் மதிப்புடைய ஒர் கரன்சியாக இது மாறிவிடும். அதுமட்டுமில்லாமல் இந்தியாவும் பிட்காயின் கரன்சியினை அரசுச் சட்டத்தில் சேர்க்கத் தேவையான தகவல்களையும் ஆய்வுகளையும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இந்திய மக்கள் பிட்காயின் பயன்படுத்துவதில் எந்தவொரு தடையும் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது அரசும் வங்கிகள் பயன்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற இருப்பதால் வரும் வருடத்தில் பெரிய அளவில் பிட்காயின் தேவைப்பாடு அதிகரிக்கும் என்பது உண்மை.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் ஏற்கனவே தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவில் கடந்த ஆண்டு ஒர் சில நிறுவனங்கள் பிட்காயினை முதலீடாக ஏற்படுத்திக் கொண்டுள்ளதோடு பரிமாற்ற வர்த்தகத்தினையும் செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவிலும் பிட்காயின் வாங்கல் விற்றல் கடந்த வருடத்திலிருந்து சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

உலகவிலான கரன்சி என்பதாலும் அரசுகள் தலையிட முடியா கரன்சி என்பதாலும் பெரிய பெரிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்து வருகின்றன.

தற்பொழுது தினசரி வர்த்தகம் செய்யும் அளவிற்கு பரிமாற்றமும், வணிகமும் நடந்து கொண்டிருப்பதால், அந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைவரும் சம்பாதிக்க ஏதுவான அனைத்து தகவல்களையும் அடுத்தடுத்து கொடுக்க இருக்கிறேன்.

இமெயில் ஐடி உள்ளவர்கள் பிட்காயின் கரன்சி ட்ரேடிங் செய்ய ஒர் கணக்கினை IndianCashier.com என்றத் தளத்தில் சென்று ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

அடுத்த பாகத்தில் பிட்காயின் வாங்குவது பற்றிப் பார்க்கலாம்,

[youtube]https://www.youtube.com/watch?v=hXQrTPxx8rs[/youtube]

பிட்காயின் ட்ரேடிங் வர்த்தகம் அக்கவுண்ட் ஒபனிங் பற்றிய விடியோ.

பிட்காயின் ட்ரேடிங் அக்கவுண்ட் ஒபன் செய்ய விரும்புபவர்கள், மெயில் ஐடி, பெயர், அட்ரஸ், மொபைல் எண் ஆகிய தகவல் கொடுத்தால், பிட்காயின் ட்ரேடிங் அக்கவுண்ட் ஒபன் செய்து தரப்படும்.

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங் செய்வதற்கான பயிற்சி

Posted: Fri Nov 25, 2016 11:07 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=hXQrTPxx8rs[/youtube]

பிட்காயின் ட்ரேடிங் வர்த்தகம் அக்கவுண்ட் ஒபனிங் பற்றிய விடியோ.

பிட்காயின் ட்ரேடிங் அக்கவுண்ட் ஒபன் செய்ய விரும்புபவர்கள், மெயில் ஐடி, பெயர், அட்ரஸ், மொபைல் எண் ஆகிய தகவல் கொடுத்தால், பிட்காயின் ட்ரேடிங் அக்கவுண்ட் ஒபன் செய்து தரப்படும்.

Re: பிட்காயின் கரன்சி ட்ரேடிங் செய்வதற்கான பயிற்சி

Posted: Mon Jan 09, 2017 4:44 pm
by jothisrijobs
வணக்கம்!

எப்பொழுது பீடிசி டிரேட் செய்வது பற்றி அப்டேட் செய்வீர்கள்..................