பல ஆன்லைன் ஜாப் தளங்களிலிருந்தும் பணத்தினை வாங்க பேபால், அனைவருக்கும் மிகவும் வசதியாக இருப்பதனைப் போல், பணத்தினை அவர்கள் வழியாக செலுத்த இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் வசதியாக இருப்பதில்லை.
பேபாலுக்கு பணத்தினைப் பெற்றாலும், அத்தொகையை நாம் பிறர்க்கு அனுப்ப பயன்படுத்த முடியாது.. அத்தொகையை அப்படியே நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவிடுவார்கள்.
பேபால் மூலம் பணம் செலுத்தும் வசதியினைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கிரிடிட் கார்டு வேண்டும் அல்லது பேபாலோடு இணைப்பு கொண்ட வங்கியின் டெபிட் கார்டு வேண்டும்.
விசா/மாஸ்டர் டெபிட் கார்டினை பேபாலில் இணைத்துக் கொண்டால்.... உங்களால் பேபால் மூலம் பணம் அனுப்ப முடியும்.
தற்போதைய எந்தெந்த வங்கிகளின் டெபிட் கார்டுகள் பேபால் ஏற்றுக் கொள்கிறது என்பதனை சரியாகச் சொல்ல முடியவில்லை. ஒவ்வொரு வங்கியும் ஐந்து வகைகளுக்கும்(பேசிக்/சில்வர்/டைமண்ட்/ப்லாட்டினம்) மேற்பட்ட கார்டு வகைகளைக் கொடுக்கிறது. அதில் எந்தக் கார்டினை ஏற்றுக் கொள்கிறது என்பதனை தங்களது கையில் இருக்கும் கார்டினைப் பயன்படுத்தித்தான் தெரிந்து கொள்ள முடியும்.
வங்கியில் சென்று எனக்கு பேபாலில் பயன்படுத்தக்கூடிய வகையிலான இண்டர்நேசனல் ஆன்லைன் பர்சேசிங்க் பயன்பாட்டு டெபிட் கார்டு கொடுங்க என்றுக் கேட்டாலும் .... எல்லாம் இண்டர்நேசனல் கார்டுதான் என்று சொல்வார்களே தவிர ... சரியான தெளிவு இருக்காது.
பெரும்பாலும் ஐசிஐசிஐ(ICICI) வங்கி டெபிட்கார்டுகள் எளிதாக கனெக்ட் ஆகின்றன். இந்தியன் ஒவர் சீஸ் பேங்க் (IOS) & HDFC கார்டுகள் கனெக்ட் ஆகின்றன.
கார்டு கனெக்ட் ஆனாலும்... இந்திய ரூபாயின் மதிப்பினைப் பொறுத்து அவ்வப்பொழுது ரூபாயினை அப்லோடிங்க் (விற்பது) செய்வது என்பதனை RBI தடுப்பதால் ... பேபால் மூலம் பணம் செலுத்துவதில் தடங்கல் இருக்கலாம். ஆனால் சில நாட்களில் பயன்படுத்த முடியும்.
Indian Bank, State Bank India, Dena Bank போன்ற மிகக் குறைந்த இருப்புத் தொகை கண்டிப்புடன் கூடிய நாம் ... 5000-க்கும் மேல் இருப்பத்தொகை கண்டிப்புடன் கூடிய ஐசிஐசிஐ வங்கியில் ... பேபால்க்காக கணக்கு தொடங்குவது என்றால் சரியாக பேலன்ஸ் மெயிண்டெயின் செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் டெபிட் போட்டே நம் கணக்கில் இருக்கும் தொகையை சாப்பிட்டுவிடுவார்கள்.
அதைவிட மிக முக்கியமாக சொல்ல வருவது .... நாம் செய்யும் ஆன்லைன் ஜாப்புக்கு 100$-க்கு மேல் நம்பி முதலீடு செய்யமுடியாது.
ஒவ்வொரு தளமும் பேபால் மட்டும் அல்லாது பிற பேமண்ட் கேட்வேக்களையும் கொண்டுள்ளன. அப்படியிருக்கையில்... நாம் நமக்கு வசதியான ஒர் பேமண்ட் வாலட்டில் 100$ சேகரித்து வைத்துக் கொண்டால் அவ்வப்பொழுது தேவைக்கு பயன்படுத்திவிட்டு... கூடுதலை மட்டும் வித்ட்ரா செய்து கொண்டால் .... ஏற்றுவது ..இறக்குவது என்ற எக்சேஞ்ச் காசினை மிச்சப்படுத்தலாம்.
பிற பேமண்ட் வாலட்டில் பணத்தினை ஆன்லைன் ஜாப் செய்தே சேகரித்துவிடலாம். அல்லது எக்சேஞ்சர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பேபால்=க்கு EntroPay என்ற டம்மி டெபிட் கார்டினையும் பயன்படுத்த முடியும். EntroPay பேபால் அக்சப்ட் செய்யாத இண்டர்நேசனல் டெபிட்கார்டினைக்கூட சில நேரங்களில் ஏற்றுக் கொள்வதால் முயற்சிக்கலாம். ஆனால் கட்டணம் அதிகரிப்பதால்.. இலாபம் நட்டம் கணக்கீடு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பேபால் தவிர்த்து பிற பேமண்ட் வாலட்டான பெர்பக்ட்மணி, பேய்சா, இகோபே, பிட்காயின், நெட்டெல்லர் போன்ற பணம் இருப்பு வைக்க பயன்படும் கணக்குகளுக்கு பணம் ஏற்ற வேண்டும் என்றுச் சொன்னால்... இப்பதிவில் பின்னூட்டம் (POST REPLY) செய்து கேட்டால் அன்றைய நிலவரப்படி முடிந்தால் நான் செய்து தருவேன். அதைப்போல் .. அங்கிருக்கும் தொகையை இந்திய ரூபாயக மாற்றுதலும் செய்து தரப்படும்.