forex doubt

FBS பாரக்ஸ், பாரக்ஸ் டெபாசிட், பாரக்ஸ் வித்ட்ரா, நெட்டெல்லர், ஸ்கிரில், பெர்பக்ட்மணி, ஒகேபே, பேய்சா, பிட்காயின், வெப்மணி, ஸ்டெல்லர் போன்ற டிஜிட்டல் ஆன்லைன் வாலட்டிலிருந்து டாலரை பணப்பரிமாற்றம் செய்து இந்திய ரூபாயாக அல்லது ரூபாயை டாலராக பெறுவதற்கான பயன்பாட்டு களம்.
Post Reply
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

forex doubt

Post by Thangamstl » Mon Jul 07, 2014 12:44 pm

ஆதி சார், நான் படுகையின் மூலம் பாரெக்சில் டெமோ அக்கவுண்ட் வைத்து இருக்கிறேன். நான் பயன்படுத்தும் பிளாட் பாரமும் நீங்கள் வீடியோவில் பயன்படுத்தும்
பிளாட் பாரமும் வேறு மாதிரி இருக்கறது. நான் ஏதும் தவறு செய்கிறேனா?

அடுத்து நான் டெமோ அக்கவுண்டில் சில ஆர்டர்களை புக் செய்திருக்கிறேன். அதை க்ளோஸ் செய்வது எப்படி என்று தெரியவில்ல? படமும் இணைத்துள்ளேன். தயவு செய்து எனக்கு உதவவும்... :thanks:

Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: forex doubt

Post by ஆதித்தன் » Mon Jul 07, 2014 2:31 pm

தவறு ஏதுமில்லை எல்லாம் சரிதான்.

நான் விடியோவில் பயன்படுத்தும் ப்ளாட்பார்ம் சற்று வித்தியாசப்படும் என்று சொன்னாலும், அதற்கும் இதற்கும் எந்தவொரு பெரிய வித்தியாசமும் இருக்காது.


திறந்த ஆர்டர்களை க்ளோஸ் செய்ய, ஆர்டர் ப்ளேஸ்மெண்ட் ரைட்சைட் ஓரத்தில் க்ளோஸ் பட்டன் இருக்கும், அதனைக் க்ளிக் செய்து க்ளோஸ் செய்து கொள்ளலாம்,

பார்க்க
நிறைய பணம் இருக்கும் பொழுது, நிறைய ஆர்டர் ஓபன் செய்வது தவறில்லை.


ஆனால், நாம் கொஞ்சமாக டெபாசிட் செய்து நிறைய ஆர்டர் ஒபன் செய்தால், அதுவே 0.01+0.01+0.01+ ///// என ஒர் பெரிய சைசாக மாறி நமக்கு எமனாக மாறிவிடும். ஆகையால், தொகைக்கு ஏற்ப கொஞ்ச ஆர்டர்கள் தேர்வு செய்தல் வேண்டும்.
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

paypal doubt

Post by Thangamstl » Tue Jul 29, 2014 2:34 pm

ஆதி சார், கடந்த மாதம் முழுவதும் உடல்நிலை காரணமாக படுகையை பார்க்க முடியவில்லை. தற்போது எனது வலைப்பூவின் மூலம் இருபது டாலர்கள் வரும் ஒன்றாம் தேதி வரவுள்ளது. பிரச்சனை என்னவெனில் எனது பேபால் கணக்கு வங்கிகணக்கு எண் உறுதி செய்யபடாமல் உள்ளது. இரண்டு சிறிய தொகையை டெபாசிட் செய்யவும் என்று வருகிறது. அதை எப்படி செய்வது சார்? தயவு செய்து விபரம் தெரிவிக்கவும்/. :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: paypal doubt

Post by ஆதித்தன் » Tue Jul 29, 2014 2:42 pm

Thangamstl wrote:ஆதி சார், கடந்த மாதம் முழுவதும் உடல்நிலை காரணமாக படுகையை பார்க்க முடியவில்லை. தற்போது எனது வலைப்பூவின் மூலம் இருபது டாலர்கள் வரும் ஒன்றாம் தேதி வரவுள்ளது. பிரச்சனை என்னவெனில் எனது பேபால் கணக்கு வங்கிகணக்கு எண் உறுதி செய்யபடாமல் உள்ளது. இரண்டு சிறிய தொகையை டெபாசிட் செய்யவும் என்று வருகிறது. அதை எப்படி செய்வது சார்? தயவு செய்து விபரம் தெரிவிக்கவும்/. :thanks:

பேங்க் அக்கவுண்ட் நம்பர் இணைத்திருந்தால், அவர்கள் அந்த அக்கவுண்ட்க்கு இரண்டுமுறை பணம் அனுப்பியிருப்பார்கள். அது எவ்வளவு என்பதனை ஸ்டேட் பார்த்து சரியாக கொடுத்தீர்கள் என்றால் ஓகே.

ஆகையால், பேங்க் ஸ்டேட்மெண்ட் பாருங்கள்.
User avatar
Thangamstl
Posts: 37
Joined: Mon Apr 21, 2014 10:24 am
Cash on hand: Locked

Post by Thangamstl » Tue Jul 29, 2014 2:50 pm

மிகவும் நன்றி சார்!! எனக்கு ஆங்கிலம் சில சமயம் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதில் வரும் குழப்பங்கள் தான் காரணம். உதவியதற்கு நன்றி.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re:

Post by ஆதித்தன் » Tue Jul 29, 2014 3:02 pm

Thangamstl wrote:மிகவும் நன்றி சார்!! எனக்கு ஆங்கிலம் சில சமயம் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதில் வரும் குழப்பங்கள் தான் காரணம். உதவியதற்கு நன்றி.
சந்தேகத்திற்கு உரியதனை உடனே கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

translate.google.com
Post Reply

Return to “IndianCashier Currency Exchange”