ஆன்லைன் தேடுதல் பயன்பாட்டினை கட்டுக்குள் கொண்டுவந்த கூகுள் - பாதிக்கப்பட்ட சிறிய வெப்சைட் ஓனர்ஸ்

ஆன்லைன் உலகில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் நாமும் பணம் சம்பாதிக்கலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் தேடுதல் பயன்பாட்டினை கட்டுக்குள் கொண்டுவந்த கூகுள் - பாதிக்கப்பட்ட சிறிய வெப்சைட் ஓனர்ஸ்

Post by ஆதித்தன் » Thu Jun 13, 2019 10:57 am

இணையத்திற்கு புதியதாக வரும் பலர் தகவல்களைத் தேட கூகுள் இணைய தளத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். அதைப்போல், சோசியல் மீடியா என்றால் பேஸ்புக் வாட்சப் என நுழைகிறார்கள். பேஸ்புக் & கூகுள் இரண்டும் போட்டிப்போட்டு டிஜிட்டல் உலகத்தினை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.

பேஸ்புக் ஒர் பக்கம் இணையதள விளம்பரம் மற்றும் கம்பெனி ஆபர்ஸ் விற்பனை பேஜஸ் என தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுடன் கைகோர்த்து தன் உறுப்பினர்கள் வாயிலாக வருவாய் பார்க்க ஆரம்பித்துவிட்டது. ஆகையால், சிறிய இணையதளங்கள் நடத்துபவர்கள், ஆன்லைன் தொழில் வைத்திருப்பவர்கள் என பலரும் அங்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். மக்களுடன் தொடர்பில் உள்ள தினசரி நாளிதழ் தளங்கள் கூட, சோசியல் மீடியா மூலம்தான் ஆன்லைன் இளம் வாசகர்களைப் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன.

தற்பொழுது கூகுள் தேடு பொறி மூலம் இலவச வாசகர்களைப் பெற்றுக் கொண்டிருந்த வெப்சைட்களும், கூகுளின் இந்த வருட அப்டேட் மூலம் முழுமையாக முடக்கப்பட்டது.

கூகுள் விரும்பும் இணையதளங்கள் மற்றும் அவர்களுக்கு பேமண்ட் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து முதல் பக்க ரிசல்ட்களில் வருமாறு சர்ச் இன்ஜின் அல்காரியத்தினை மாற்றியமைத்துவிட்டனர்.

இதன் மூலம், சமூக அக்கறை கொண்ட தளங்கள் என பெரிய கம்பெனிகள் பற்றி விமர்சனங்கள் செய்யும் தளங்களுக்கு வாசகர்கள் கூகுள் மூலம் செல்வது தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளன.

தான் விரும்பாத கிரிப்டோ கரன்சி பற்றிய தளங்கள் பலவும் கூகுள் இலவச சர்ச் ட்ராபிக் பெற்று வளர்ந்திருந்தன. ஆனால் அவையும் இப்பொழுது புதிய அப்டேட் மூலம் முடங்கிவிட்டன. 90% கூகுள் ட்ராபிக் புதிய அப்டேட் மூலம் இல்லாமல் போய்விட்டது என பல சிறிய வெப்சைட் ஓனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூகுளில் தேடுபவர்களுக்கு எந்த வெப்சைட்டிலிருந்து தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும் என தனக்குள் லிஸ்ட் எடுத்துக் கொண்டது போல தெரிகிறது.

மக்கள் மத்தியில் தொலைக்காட்சி செய்திகள் மற்றும் நாளிதழ் போன்ற பெரிய மீடியாக்கள் வழங்கும் செய்திகளே திணிக்கப்படுவது போல, ஆன்லைனிலும் அவ்வாறு அவர்கள் விரும்பும் தகவல்களை திணிக்கும் வகையில் தயார் செய்துவிட்டனர்.

யுடியூப் இதுவரை பெரிய அளவில் உண்மைக்கு புறம்பான மீடியா செய்திகளை வெளிக்கொண்டு வந்தன. அவையும் விரைவில் கட்டுக்குள் வைத்து முடக்கப்படலாம். பின்னர், அந்தந்த மீடியாக்களின் யுடியூப் சேனல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, அவர்களையே விவ்வர்ஸ்க்கு வழங்கும் சூழல் வரலாம்.

கூகுள் ட்ராபிக் மூலம் இத்தனை வருடங்களாக பல சிறிய வெப்சைட்கள் அவர்களது, அல்காரிதம்படி செயல்பட்டு புதிய வாசகர்களைப் பெற்று வந்தார்கள்.

ஆனால் தற்பொழுது அப்டேட் ஆகியிருக்கும் வருவாய் விளம்பரம் மற்றும் தொழில் சார்ந்த அல்காரிதம் அப்டேட்டினால், கூகுள் விரும்பும் தொழில் மற்றும் அவர்களுக்கான விளம்பர வருவாய் ஆகியவற்றில் பங்கு கொள்ளும் நபர்களே கூகுள் ட்ராபிக் பெறுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டு மற்றவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் கூகுள் விளம்பரத்தினை வெளிப்படுத்து பெரிய வலைதளங்கள் என கூகுள் ட்ராபிக் மாற்றப்படுகிறது.

ஆகையால், இலவச ட்ராபிக் நம்புவதனை விடுத்து, பணம் மூலம் தான் ஆன்லைன் ட்ராபிக் பெற முடியும்.
Post Reply

Return to “டிஜிட்டல் மார்க்கெட்டிங்”