படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
nilashni
Posts: 15
Joined: Sun Jan 22, 2017 9:56 pm
Cash on hand: Locked

படுகையில் புதிதாய் மலர்ந்த மலரின் அறிமுகம்

Post by nilashni » Sun Feb 26, 2017 7:49 pm

என் பெயர் என்னவென்று சொல்ல விரும்பவில்லை.

என் குழந்த பெயர் நிலாஷ்னி. அவள் பெயரில் தான் படுகை உறுப்பினராய் சேர்ந்துள்ளேன்.
எப்போதும் ஜாலியாக இருப்பதையும், ஜாலியாக இருப்பவர்களையும் அதிகம் விரும்புவேன்.
வாழ்வது மிடில் கிளாஸ் என்றாலும், என் எண்ணங்கள் எல்லாம் ஹை கிளாஸ் தான்.
எனக்கு கதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புகள் எழுதுவதில் ஆர்வம் இருக்கிறது. உணர்ச்சிகரமான எண்ணங்களும்,கலைகளும், என் உள்ளத்தில் உடுருவி இருக்கின்றன. ஆனால், அதை வார்த்தை வடிவில் எழுதும் போது மட்டும் ஏனோ, என் எண்ணங்கள் உணர்ச்சியில்லாமல் உயிரற்று போகின்றன. அனைவரையும் கவர்கின்ற அளவுக்கு ,எழுத்து திறமை எனக்கு இன்னும் வரவில்லை என்பதே இதன் முழு அர்த்தம். ஆனால், அதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொண்டு வர படுகை தளம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
மேலும், எனக்கு வீட்டில் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கவும் ஆசை தான். அதனால் தான், படுகையில் இணைந்து, என்னை உங்களுக்கு அறிமுகம் செய்துள்ளேன். படுகை, பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன்.
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”