சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

படுகைக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பரே, தோழியரே வாருங்கள், நீங்களும் எங்களுடன் இணைந்து புதிய நட்பு இணைப்பை உருவாக்குங்கள், வாருங்கள்!!!
Post Reply
தாமோதரன்
Posts: 50
Joined: Sun Dec 06, 2015 11:40 am
Cash on hand: Locked

சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

Post by தாமோதரன் » Sun Dec 13, 2015 9:56 pm

சிலருடைய வாழ்க்கை பார்ப்பதற்குச் சீராக இருக்கும். சிலருடையது சீர்
இல்லாமல் இருக்கும்.

சீராக இருப்பவனைக் கேட்டால், “என்னங்க உப்புச் சப்பில்லாமல் ஒரே மாதிரி
வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது - அப்ஸ் அண்ட் டவுன் இருந்தால்தானே
சுவாரசியமாக இருக்கும்” என்பான்.

அடுத்தவனைக் கேட்டால், “என்னங்க, நாய்ப் பிழைப்பாக இருக்கிறது. எப்போது
நல்ல காலம் வரும்? பணம், காசு வேண்டாங்க, நிம்மதி வேண்டும்! அந்த நிம்மதி
கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறேன்” என்பான்.

எல்லோருக்குமே ஆசைகளும், கனவுகளும் அதிகமாகி விட்டன! பணத்
தேவைகளும், தேடல்களும் அதிகமாகி விட்டன!

‘திருக்குறளைப் பற்றியும், பட்டினத்தாரைப் பற்றியும் எழுதினாலோ அல்லது
எழுதிப்புத்தகமாகப் போட்டாலோ, ஒருத்தனும் வாங்க மாட்டான். வாங்கிப் படிக்க
மாட்டான்.

'பங்குச் சந்தையில் பணம் பண்ணுவது எப்படி?', 'இருக்கின்ற பணத்தை இரட்டிப்
பாக்குவது எப்படி?' என்று எழுதினால் மாய்ந்து மாய்ந்து படிப்பான். அதுதான்
இன்றைய நிலைமை!

ஒரு மனைவி, ஒரு வீடு, ஒரு வாகனம் என்று ஒவ்வொன்று இருந்தால் போதாதா?
இல்லை பத்தாது என்பான்.

அம்பத்தூரில் வீடு இருப்பவன், அண்ணாநகரில் வீடு வேண்டும் என்பான்.
அண்ணா நகரில் வீடு இருப்பவன், நுங்கம்பாக்கத்தில் வீடு வேண்டும் என்பான்.
நுங்கம்பாக்கத்தில் வீடு இருப்பவன், தி.நகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் வீடு
வேண்டும் என்பான்.

மாருதி வைத்திருப்பவன், டொயோட்டா வேண்டும் என்பான், டொயோட்டா
வைத்திருப்பவன் பென்ஸ் வேண்டும் என்பான்.

மொத்தத்தில் இருப்பவனும் நிம்மதியாக இல்லை; இல்லாதவனும் உள்ளபடியே
நிம்மதியாக இல்லை.சீரான வாழ்க்கைக்கு இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன்.

ரயில்வேயில், ஆரம்பத்தில் சரக்கு ரயிலில் Guard ஆகச் சேருகிறவன், பதவி
உயர்வுகள் பெற்று, Passenger Train, Express Train, Sathapthi Super Fast என்று பல
வண்டிகளையும், பல ஸ்டேசன்களையும், பல டிவிசன்களையும் பார்த்து விட்டுக்
கடைசியில் கட்டாய ஓய்வு பெறுவான். அவனுடைய வாழ்க்கை இரயிலுடனே
இருந்திருக்கும் அல்லது முடிந்திருக்கும்.

அதேபோல சாதாரண செய்தி நிருபராகப் பத்திரிக்கையில் சேர்ந்து, பல பதவி
உயர்வுகளைப் பெற்றுக் கடைசியில் செய்தி ஆசிரியர் பதவிவரை பார்த்துவிட்டுப்
பிரிதொருவனின் வாழ்க்கை, நாளிதழ் ஒன்றில் நாராக முடிந்திருக்கும்.

அத்தனை பேர்களுக்குமா பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் சினிமா
அல்லது வியாபாரத்துறைகளில் வாழ்க்கை அமைந்து விடுகிறது?

சினிமாவில் கூட ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசிப்பவன் கடைசிவரை
வயலின்ஸ்ட்டாகவே இருந்து மாய்ந்து விடுவதில்லையா?

இன்று பணம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது என்றாலும், பணம் வருவது
போவது நம் கையில் இல்லை!

எல்லாம் வாங்கி வந்த வரம்!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாக இப்படிச் சொன்னார்

”உன்னைக்கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?”


சரி, வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது?

அதற்கும் வழி இருக்கிறது.

ஒரு சிந்தனையாளன் இப்படிச் சொன்னான்

Life is 10 percent what you make it and 90 percent how you take it.
--Irving Berlin

வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் - அந்தக் குணம்தான் இனிய
வாழ்க்கைக்கு வழிவகுக்கும்

அதற்கும் ஒரு தீர்வைக் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்து விட்டுப்போயிருக்கிறார்

”வந்ததை வரவில் வைப்போம்
சென்றதைச் செலவில் வைப்போம்”

என்ன, சரிதானே இது?

மொத்தத்தில் வாழ்க்கை சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் இருந்தால் போதும்

விவேகானந்தர் சொன்னார்: “உன்னுடைய சுதந்திரத்தைப் பறிக்கக்கூடியது எதுவாக
இருந்தாலும் அதன்மீது எச்சரிக்கையாக இரு!”

“Beware of Everything that takes away your freedom!"
-Swami Vivekananda

தந்தை பெரியார் சுயமரியாதையைப் பற்றி நிறையவே சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்

ஆகவே சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் இருந்தால் போதும் என்று நினையுங்கள்
மகிழ்ச்சி தானாகவே தேடிவரும்! நிம்மதியும் அதன் பின்னாலாயே ஓடி வரும்!


வாழ்க்கை சாராசரியாக இருந்தால் போதும். ரோட்டி,கப்டா, மக்கானுக்கு எவரையும்
எதிர்பார்க்காத நிலை இருந்தால் போதும்.

என் தந்தை சொல்லுவார், ”எளிமையாக இரு. எல்லா உணவும் ஒன்றுதான். தொண்டை
வரைக்கும்தான் ருசி. அதற்குப் பிறகு அது பாசுமதி அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான்
ஐ.ஆர் 20 அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். உறக்கம் வரும் வரைதான் இடம்

வேறுபடும். வந்து விட்டால் எல்லா இடங்களும் ஒன்றுதான். ஃபைவ் ஸ்டார் ஓட்டலாக
இருந்தாலும் சரி அல்லது திண்ணையாக இருந்தாலும் சரி! உடலை மறைக்கத்தான்
உடை. அது காதியாக இருந்தாலென்ன - அல்லது பீட்டர் இங்கிலாந்து பிராண்ட்
சட்டையாக இருந்தாலென்ன?”

ஆகவே வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர் கொள்ளுங்கள். எல்லாம் வசப்படும்!
SARAVANAMUTHU
Posts: 1
Joined: Fri Mar 18, 2016 1:59 pm
Cash on hand: Locked

Re: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

Post by SARAVANAMUTHU » Fri Mar 18, 2016 2:02 pm

panam
வெங்கட்
Cash on hand: Locked

Re: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

Post by வெங்கட் » Fri Mar 18, 2016 5:46 pm

எனக்கு மிகச் சாியாக நினைவில்லாவிட்டாலும்

"கொடுத்ததை வரவில் வைப்போம்.
எடுத்ததை செலவில் வைப்போம்"

என்பதுதானே சாி?

அதேபோல் பலன் என்னவாயிருந்தாலும் சோா்ந்துவிடப் போவதில்லை என்ற எண்ணத்துடன் முயற்சியை தொடா்ந்து செய்வதே சாி என்பது என் கருந்து. (ஆனால் பலா் பலன்மீது மட்டும் கண் வைத்து என்ன செய்கிறோம்என்றுசீா்தூக்கிப் பாராமல் செய்வதால்தான் தீமை விளைகிறது.) மற்றபடி முன்னேறுவதற்குச் செய்யும் அனைத்து நியாயமான முயற்சிகளும் சாியே.

வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்பது கால்நடை வாழ்க்கையன்றி வேறென்ன?
வெங்கட்
Cash on hand: Locked

Re: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

Post by வெங்கட் » Sat Mar 19, 2016 1:07 pm

சொல்ல மறந்துவிட்டேன்.

உங்களது பொதுவான உட்கருத்து மிகவும் உண்மை மற்றும் பயனுள்ளது. இதில் சிறுமாற்றமாக சராசாி வாழ்க்கை என்பதற்கு நான் "முயற்சியை செய். பலன் குறித்து கவலை கொள்ளாதே" என்ற மனநிலையாகப் பொருள் கொள்கிறேன். பேராசையுடன் முயற்சி செய்வதற்கும், நடுநிலையுடன் முயற்சி செய்வதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. (பேராசையானது சுதந்திரம், சுயமாியாதை பற்றியெல்லாம் நம்மை சிந்திக்கவிடாது.)

உண்மையில் நீங்கள் சொன்னதுபோல்
தொண்டை வரைக்கும்தான் ருசி. அதற்குப் பிறகு அது பாசுமதி அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான் ஐ.ஆர் 20 அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். உறக்கம் வரும் வரைதான் இடம் வேறுபடும். வந்து விட்டால் எல்லா இடங்களும் ஒன்றுதான். ஃபைவ் ஸ்டார் ஓட்டலாக இருந்தாலும் சரி அல்லது தி்ண்ணையாக இருந்தாலும் சரி! உடலை மறைக்கத்தான் உடை. அது காதியாக இருந்தாலென்ன - அல்லது பீட்டர் இங்கிலாந்து பிராண்ட் சட்டையாக இருந்தாலென்ன?
என்ற கருத்தில் மிகவும் உடன்படுகிறேன்.
தாமோதரன்
Posts: 50
Joined: Sun Dec 06, 2015 11:40 am
Cash on hand: Locked

Re: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

Post by தாமோதரன் » Mon May 16, 2016 9:54 am

வெங்கட் wrote:சொல்ல மறந்துவிட்டேன்.

உங்களது பொதுவான உட்கருத்து மிகவும் உண்மை மற்றும் பயனுள்ளது. இதில் சிறுமாற்றமாக சராசாி வாழ்க்கை என்பதற்கு நான் "முயற்சியை செய். பலன் குறித்து கவலை கொள்ளாதே" என்ற மனநிலையாகப் பொருள் கொள்கிறேன். பேராசையுடன் முயற்சி செய்வதற்கும், நடுநிலையுடன் முயற்சி செய்வதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. (பேராசையானது சுதந்திரம், சுயமாியாதை பற்றியெல்லாம் நம்மை சிந்திக்கவிடாது.)

உண்மையில் நீங்கள் சொன்னதுபோல்
தொண்டை வரைக்கும்தான் ருசி. அதற்குப் பிறகு அது பாசுமதி அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான் ஐ.ஆர் 20 அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். உறக்கம் வரும் வரைதான் இடம் வேறுபடும். வந்து விட்டால் எல்லா இடங்களும் ஒன்றுதான். ஃபைவ் ஸ்டார் ஓட்டலாக இருந்தாலும் சரி அல்லது தி்ண்ணையாக இருந்தாலும் சரி! உடலை மறைக்கத்தான் உடை. அது காதியாக இருந்தாலென்ன - அல்லது பீட்டர் இங்கிலாந்து பிராண்ட் சட்டையாக இருந்தாலென்ன?
என்ற கருத்தில் மிகவும் உடன்படுகிறேன்.

பதிவை படித்ததற்கு மிக்க நன்றிங்க, நான் ஆன்லைன் வந்து பலநாட்கள் ஆகி விட்டது
இன்று தான் உங்களது பதிவை படித்தேன்
Post Reply

Return to “படுகை உறவுப்பாலம்”