எதிர்பார்ப்புகளை நோக்கிய விடாமுயற்சி வெற்றி தரும் - GBDgift

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

எதிர்பார்ப்புகளை நோக்கிய விடாமுயற்சி வெற்றி தரும் - GBDgift

Post by ஆதித்தன் » Thu Mar 03, 2016 3:08 pm

[youtube]https://www.youtube.com/watch?v=Fv1lpfJPwek[/youtube]

எந்தவொரு செயலில் வெற்றி பெற வேண்டும் என்றுச் சொன்னாலும் இலக்கு என்பது கண்டிப்பாக வேண்டும். இலக்கிற்கான சரியான பாதையை வடிவமைத்து இயங்கும் பொழுது உறுதியாக வெற்றியினை எட்டிப் பிடித்துவிடலாம், இதற்கு விடாமுயற்சி ஒன்றே உறுதுணையாக நிற்குமே தவிர வேறேதும் இல்லை.

விடாது முயன்றவர்கள் தோல்விகளை படிக்கட்டுகளாகவே எண்ணிக் கொள்வார்களே தவிர ஒர் போதும் தோற்றுவிட்டதாக கருதித் திரும்பமாட்டார்கள். தொடர்ந்து படிக்கட்டுகளை அடுக்கிவிட்டால், எளிதில் வெற்றியினை எட்டிவிடலாம் என்ற அவர்களது உறுதித்தன்மை விடாமுயற்சியினைத் தூண்டிக் கொண்டே இருக்கும். வெற்றி தன்னைத் தேடி வரும் அளவிற்கு சாதூர்யமாகவும் வெற்றியினை எதிர்பார்ப்புகளையும் தன்னகத்தே காட்டிக் கொண்டே முன்னேறும் பொழுது, வெற்றியும் தனக்கானது என்று கீழே இறங்குவதால் விரைவாகவும் வெற்றியினை எட்ட முடியும்.


எல்லோரிடமும் இணையம் என்ற நிலைக்கு அருகே நாம் வந்துவிட்டாலும், இணையப் பயன்பாட்டு நம்பிக்கை என்பது இன்னும் தொலைவில் தான் இருக்கிறது என்பதனை உலகளவில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளும் சுட்டுகின்றன. அந்த வகையில் என்னதான் ஆன்லைன் வேலை என்று தேடினாலும், நம்பகத்தின்மையினையே எல்லோரும் முதன்மையாக கவனிக்கின்றனர். அதில் முதன்மையாக இடம் பிடிப்பது, இந்த வேலை செய்பவரை நேரில் பார்க்க முடியுமா? நேரில் சந்தித்து பேசினால் கொஞ்சம் நன்றாக இருக்குமே என்றுதான் பலரும் விரும்புகின்றனர்.

என்னதான் வேலையை நன்றாகத் தெரிந்தாலும், நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. அவ்வாறான எண்ணத்தினை GBDgift பேஸ்புக் ஆன்லைன் வேலையிலும் பலர் கொண்டிருப்பது ஆச்சர்யமான விடயமில்லை. GBDgift பணியானது அவரவர் சொந்த வருவாய் பணிப் போன்று 100% வருவாய் தருவதோடு தனித்த அணியினை உருவாக்கவும் வாய்ப்பினைக் கொடுப்பதால், அதற்குத் தகுந்தாற்போல்... தானே தலைவனாக நின்று புதியவர்களை வழிநடத்தும் பொழுது, இலட்சம் இலட்சமாக சம்பாதிக்க முடியும்.

முதன்மையாய் நின்று வழிநடத்தத் தயார் என்ற நிலையிலிருக்கும் பொழுது, நம்மைச் சார்ந்து பின் தொடர்ந்து வருபவர்களை தேடி அழைவதற்குப் பதில், தேடுபவர்களை தன்னகத்தே அணைத்துக் கொள்ள ஏதுவாக அமைவதுதான் ஆன்லைன் வேலை. அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்குத் தகுந்த பணியினை நாம் செய்துவிட்டால் வெற்றி எளிதாகிவிடும். அதில் முதன்மையானதாக நம்மை அடைய, எளிதாக ஒர் பேனர் தயாரித்து அதில் நம்மை தொடர்பு கொள்ள ஏதுவாக மொபைல் எண் மற்றும் ஊர் பெயர் கொடுத்து மேல் உள்ளது போன்ற ஒர் இமேஜ் தயார் செய்து பேஸ்புக் க்ரூப்பில் பகிர்ந்து கொண்டே வந்தால், நம் அருகாமையில் இருக்கும் நபர் நேரடியாக மொபைல் மூலம் தொடர்பு கொள்ளவும், நமக்கு கீழே உறுப்பினராக சேர்ந்து கொள்ளவும் வாய்ப்பு உருவாகிவிடும்.

இரண்டாவது, Youtube தளத்தில் அந்த இமேஜினை அப்லோடிங்க் செய்து விடியோவாக வெளியிடுவதன் மூலம் மிக எளிதாக ஐந்து நபர்களை எட்டிவிடலாம். யூடியூப் தளத்தில் அப்ளோடிங்க் செய்யும் பொழுது தலைப்பினை, ஆன்லைன் ஜாப் என்று கொடுப்பதோடு, ஊர் பெயரினையும் குறிப்பிட்டுவிடுங்கள்... மிக எளிதாக உங்கள் அருகாமை நபர்களை பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்ந்து பல்வேறு முறைப்படி முயற்சிக்கும் பொழுது, ஏதேனும் ஒன்று சரியாக அமைந்துவிடுவதோடு, இலட்சமும் உறுதியாகிவிடும்.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”