#GBDgift பணி செய்வோர்கள் முன்னேற்றம் காண அருமையான வழி

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

#GBDgift பணி செய்வோர்கள் முன்னேற்றம் காண அருமையான வழி

Post by ஆதித்தன் » Thu Oct 15, 2015 5:05 am

Image
#GBDgift பணியில் நான்கு நபர்கள் சேர்ந்தார்கள்... அவர்கள் பணி செய்ய போதிய தகவல் கொடுத்திருப்பதோடு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப கடைபிடிக்க வேண்டிய பணிகள் என்பதன் அவசியத்தினையும் கூறியுள்ளேன். இப்பொழுது மீண்டும் உங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்கலாம் என்ற எனது கருத்தினைக் கொடுக்கிறேன்.

4 நபர்களே, GBDgift மூலம் வருவாய் பெறலாம் என்ற நம்பிக்கையோடு இணைந்துவிட்டீர்கள்... பாராட்டுகள்.

அடுத்ததாக நம்மிடம் இருக்க வேண்டியது, தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை தான் நம்மை உண்மையாக கையில் பணம் பெற வைக்கும். இது பற்றி ஒர் நீண்ட பதிவினை GBDgift பயிற்சியில் கொடுப்பதற்காக கடந்த ஒர் வாரமாக சிந்தித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்... விரைவில் இரண்டாம் பயிற்சியாக அது வெளிவரும்.

ஆனாலும், நீங்கள் தினம் செயல்பட வேண்டும் என்பதற்காக தினசரி அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

அதிலும் சிறிய தடங்கலாக நெட் பிரச்சனை வந்து ஒர் நாள் தொய்வு என மூன்று நாள் தொய்வாகிவிட்டது.

இதில் நன்றாக கவனிக்க வேண்டிய விஷயத்தினைச் சொல்லிவிடுகிறேன்... கவனித்து கடைபிடியுங்கள்.

இயற்கை என்பது நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. இது அவ்வப்பொழுது தன் நிலையினை மாற்றம் காட்டிக் கொண்டே இருக்கும்.. முக்கியமாக அம்மாவாசை & பெளர்ணமி என்ற வளர்பிறை தேய்பிறை என மாறி மாறி செயல்பட்டுக் கொண்டே இருப்பதனைப் பார்க்கலாம்.

நாம் கொஞ்சம் மனம் விட்டாலும் சரி, இவை தனது திசைக்கு ஏற்ப நம் மனதினை எளிதில் மாற்றி இயங்க வைக்கக்கூடியது. அதற்காக வளர்பிறை, நம்மை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பது இல்லை... நீங்கள் மாற்றாக ஒர் திசைக்கு செல்ல நினைத்தால் அதற்கு.. அதிலிருந்து மாற நினைக்கும் பொழுது அதற்கு என மாற்றி எங்கே போனாலும் இழுத்துச் செல்லும்.

நாம் தனியாளாக இருக்கும் வரை இந்தப் பிரச்சனை என்பது இருந்து கொண்டே இருக்கும் என்பது மட்டுமில்லாமல்.. நம்முள்ளே இருக்கும் அனிச்சை செயல் ஆதாரமான அக்னி இச்சையும், இந்த சந்திரனால் கவரப்படுவதால் பிரச்சனைகள் தொடரும்.

ஒர் சிலர் அக்னி இச்சையை கட்டுப்படுத்தி வென்றுவிட்டாலும், பெரும்பான்மையானவர்கள் மாட்டி உழல்வார்கள். எதில் போனாலும் முன்னேற முடியவில்லை என்று வருத்தமும் கொள்வார்கள்.

இந்த பிரச்சனையை தீர்க்க முதன்மையான வழி கூட்டு சேர்தல் மற்றும் மனம் விட்டு பேசுதல்.

எனக்கு ஆப்-லைனில் நண்பர்கள் கிடையாது.. நான் தனியாளாக ஒர் அறையில் இருப்பதால்... எனது கோடி ஆசையினை நிறைவேற்ற இப்பெல்லாம் சாப்பிட வெளியில் செல்லும் நேரம் தவிர்த்து, இரவிலும் முழுமையாக கம்ப்யூட்டர் ஆனிலேயே இருக்கிறது... கொஞ்சம் மனம் சோர்வானால் ஒர் குட்டித்தூக்கம் என்று கம்ப்யூட்டரை ஆப் செய்யாமலே படுத்துவிட்டு மீண்டும் உட்கார்ந்து கொள்கிறேன்... என்ன செய்கிறேன் என்பது கிடையாது.. என்ன செய்ய வேண்டும் என்று உலாவிக் கொண்டே இருப்பது. செய்ய நினைப்பதனை உடனே செய்துவிடுவது...

புதியதாக எதனையாவது பார்த்தால்.. GBDgift விட்டுவிட்டு, மனம் அதில் பாய தூண்டுகிறது... பாருங்கள் கடந்த 4 நாட்கள் எந்தவொரு பதிவினையும் செய்யவில்லை. ஆனாலும் ஆன்லைனில் சும்மாதான் உலாவிக் கொண்டே இருக்கிறேன்.. எனக்கான பணியாக GBDgift-இல் எவ்வளவோ இருக்கிறது.. ஆனாலும் செய்யாமல் இருக்கிறேன்..

இப்பிரச்சனையை தவிர்த்து, தினமும் அக்டிவாக பணியினைச் செய்து 10 இலட்சத்தினை அடைய வேண்டும் என்றுச் சொன்னால் கூட்டணி சேர்ந்தால் முடியும். ... மனம் விட்டு பதிவு செய்தால் முடியும்.

பெரிய வெற்றியினை அடைய வேண்டும் என்பதற்காகவே விளம்பரங்களை நம்பாமல்... எனது வேலை என்று இல்லாமல், கூட்டணி அமைக்க வேண்டும் என்பதற்காக பயிற்சிக்கு என ஆட்களை எடுத்தேன்.. நீங்களும் என்னோடு வந்துவிட்டீர்கள்.

நமது பிரச்சனைகள் அனைத்தும் இயல்பானது.. அதனைத் தாண்டி நாம் இயல்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இப்பதிவு.

வளர்பிறை தேய்பிறை என்று சந்திரனில் காட்சி மாறினாலும், படுகையில் GBDgift என்பதன் காட்சி மாறாமல், தினம் GBDgift பற்றிய பதிவினை யாரேனும் ஒருவர் முன்னெடுத்துச் சென்று கொண்டே இருக்க வேண்டும்.. தொய்வில் விடவேக்கூடாது.

ஒருவருக்கொருவர் என்ன செய்தீர்கள் என்று கேளுங்கள்..

இல்லை, முதலில் நாம் ஐந்து பேரும் ஒன்றுபட்டு ஒருவர்க்கு ஒருவர் என்ன செய்தோம் என்ற நிலையினை பரிமாற பழக வேண்டும்..

அப்பொழுதுதான், உங்களுக்கு கீழே சேரும் ஐந்து நபரை உங்களால் வழிநடத்தி என்ன செய்தீர்கள் என்று வேலை வாங்க முடியும்...

அப்படி ஒவ்வொருவரும் ஐந்து நபரோடு வேலை வாங்க வேண்டும் என்ற அடிப்படை பாடத்தினை குரு குலக்கல்வி போல பயிற்சிக்கப்பட வேண்டும்... வாழையடி வாழையாக செல்ல வேண்டும்..

அவ்வாறு செல்லுமாயின், ஏழாம் வீட்டில் நமக்கான 10 இலட்சம் உறுதியாகும்.

ஐந்துக்கும் ஏழுக்கும் ஒர் இயற்கை தொடர்பு உள்ளது... உங்களால் ஐந்து நபரினை வேலை வாங்க முடிந்தால் ஏழாம் வீட்டு 10 இலட்சம் தானாகவே வந்து சேரும். இதனை இறை அருள் என்று நம்பி செய்தாலும் சரி, அதுவே எனது அடிப்படை பணி என்று உழைத்தாலும் சரி, 5 நபரினை சரியாக வேலை வாங்குதல் என்பது போதுமானது.

தனக்கான பயிற்சியினை பெற்ற ஒருவர் 5 நபரினைச் சேர்க்க அதிகப்பட்சம் 10 நாட்களை எடுக்கலாம்...... ஒவ்வொருவரும் தன் பணியினைச் செய்கிறார்கள் என்கிற பொழுது நமக்கான 800 நபர்கள் என்பது 3 மாதத்தில் நடக்கூடிய ஒர் காரியம்... ஆனால் நாம் அதிகப்பட்சமாக மாதம் ஒர் இலட்சம் என்ற இலக்கோடு ஒர் வருடத்தில் 800 நபரினைக் கொண்ட அணியினை எட்டி, 10 இலட்சத்தினை உறுதியாக்கிவிட வேண்டும் என்பதுதான் திட்டம்.

அ..ஆ..இ..ஈ... என்பது எப்படி தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லப்படுகிறதோ... அதைப்போல், ஒவ்வொருவரும் அடிப்படையாக நான் கொடுக்கும் பயிற்சிப் பதிவுகளை முழுமையாகப் படித்து கருத்தினை எடுத்துச் சென்று தனது 5 டவுன்லைனிடம் எடுத்துச் செல்லுதல் வேண்டும். 5 நபரும், அதே பணியினை செய்து முடித்துவிட வேண்டும்...

ஒர் குருவிலிருந்து, மற்றொரு குரு உருவாவது போல... நீங்கள் 5 குருகளை உருவாக்க வேண்டும். உங்களது பணி ஆசிரியர் பணிக்கு இணையானது. ஆசிரியரைக் காட்டிலும் அதிகப்படியான வருவாய்க் கொடுக்ககூடியது.

நீங்கள் முக்கியமாக பயிற்சிக்க வேண்டியது, பணம் வாங்குதல் மற்றும் கொடுத்தல் ஆகிய இரண்டுக்குமான ஆன்லைன் வங்கிக் கணக்குகளைப் பற்றித்தான். அதில் டாலரை கொடுத்து வாங்க பழகிக் கொண்டாலே அடுத்தக்கட்ட பணியினை எளிதாக கற்று செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கான பதிவுகளை நான் இங்கே கொடுத்துள்ளேன்... ஆகையால் பணம் வாங்க கொடுக்க கற்றுக் கொடுத்தப்பின் இங்கே தள்ளிவிட்டு பழகிக் கொள்ள வைக்க வேண்டும்... அவர்கள் சரியாக பதிவுகளைப் படித்து செய்கிறாரா என்பதனை சரிபார்ப்பதே உங்களது அடுத்தப் பணி.

உங்களுக்கான ஐந்து நபர்கள் என்பது மிக எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை பதிவு எழுதச் சொல்கிறேன்... எழுதுவது என்பது உங்களுக்கு இப்பணியில் எந்தளவுக்கு தெரியும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.

எந்தளவுக்கு நமக்குத் தெரியும் என்று எழுதுகிறோமோ... அதனைவிட பலமடங்கு நம்மால் பேச முடியும்.

வாயுள்ள பிள்ள பிழைச்சுக்கும் என்றுச் சொல்வார்கள்.... ஆம், அடுத்தக்கட்டமாக நீங்கள் உங்களது மொபைல் எண் கொடுங்கள்... விருப்பம் உள்ளவர்கள் உங்களை தொடர்பு கொள்ள வழிவகை செய்யுங்கள்... தானாக ஐந்து நபர்கள் உங்களிடம் வருவார்கள்.

அதுவும், GBDgift பற்றி நான் முக்கிய பதிவினை செய்துவிடுகிறேன்.... புதிய நபர்கள் இப்பதிவினைப் படிக்க படுகை வழிவகை செய்துவிடுகிறது.

உங்களது வேலை, வரும் அந்த புதிய நபரிடம் பேசுவதும்/பின்னூட்டம் கொடுத்து லிங்கினை பகிர்ந்து, சேர்ப்பதும் தான்.

உங்களது கையொப்பப் பகுதியில் GBDgift ஆன்லைன் வேலை பயிற்சி & பணி என்று மொபைல் எண் கொடுத்து, ஊர் பெயரையும் கொடுத்தால்... அந்தந்த ஏரியா அருகே இருப்பவர்கள் சேர்வார்கள்.

உங்களை விளம்பரப்படுத்த... GBDgift பதிவு ஒன்று செய்தால்.. அவ்வாறு செய்கிறேன் என்பதனை உறுதிபடுத்தி பின்னூட்டமாய் கொடுப்பது, உங்களது கருத்துகளை கொடுப்பது... தான் இன்று என்ன செய்தேன் என்று சொல்வது என பதிவினை முன்னெடுத்துச் சென்றாலே போதும்...

இவ்வாறு ஒவ்வொருவரும் அக்டிவாக என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தால்... உங்களுக்காக நான் தினம் ஒர் பதிவு செய்வேன்... அந்த பதிவில் நீங்கள் பின்னூட்டம் மட்டும் சரியாக கொடுத்து வந்தாலே 5 நபரினை எளிதாக சேர்த்துக் கொள்ள முடியும்.

ஒருவர்க்கு ஒருவர் தான் இன்ன வேலை செய்தேன் என்று பகிர்ந்து கொள்வதன் மூலம் இயற்கையாக நமது மனம் ஒர் திசைக்கு மாறினாலும், உங்களால் அது மீண்டும் இங்கே இழுத்து வரப்பட வேண்டும்.

அதற்காக, நண்டுகள் போல, ஒருவர் காலை ஒருவர் இழுத்து தானே முன் என்று இருக்கக்கூடாது...

முன் செல்பவர் முன்னே செல்லட்டும்... பின்னே நமக்கும் பசி தீரும் என்று நம்பிக்கையுடன் தோள் கொடுக்க வேண்டும். உங்களது தோளின் வலிமையைப் பார்த்து, உங்களுக்காய் தோள் கொடுக்க மற்றொருவர் தானாக வருவார். அணியும் விரைவாக வளரும்.
Image
===============================

http://gbdgiftcash.blogspot.in/2015/10/ ... st_13.html

உங்களது முன்னேற்றம் பாராட்டக்கூடியது. அதே நேரத்தில் நீங்கள் என்னை நேரில் பார்க்க ஆசைப்பட்டு வந்தவர், அப்படியிருக்க நீங்கள் ஆன்லைன் ஜாப் என்று சொல்லும் பொழுது உங்களை மற்றவர் பார்க்கை அனுமதி கொடுக்க வேண்டும் அல்லவா? ஆகையால் நீங்கள் மொபைல் எண்ணையும் கொடுத்து செயல்பட்டால் முன்னேற்றம் காண முடியும்... ஆன்லைன் வேலை என்று விடியோ செய்ய ஆரம்பியுங்கள்....மொபைல் எண் கொடுங்கள் விரைவான வளர்ச்சி கிடைக்கும்...

====================================

http://www.moneygain2015.blogspot.in/
பதிவில் நீண்ட இடைவெளி காணப்படுகிறது..
இங்கு அங்கு என்று ஓடினால் எதிலும் நிலை கொள்ள முடியாது.... ஒன்றிற்கான அடிப்படையை செம்மையாக முடித்துவிட்டு, அடுத்ததுக்கு செல்லுங்கள்... இல்லை இதில் நம்பிக்கை இல்லாமல் மற்றொன்றுக்கு தாவினால்...இதற்கு திரும்பும் எண்ணம் கொள்ளாமல், புதியதாக நம்பியதையாவது முழு நம்பிக்கையோடு அடிப்படையை செம்மையாகச் செய்யுங்கள்... எப்பணிக்கும் இதுவே முக்கியம்.

==============================================

http://gbdgiftjob.blogspot.in/

உங்களுக்கு போதிய நேரம் இல்லாவிட்டால்.. கிடைக்கும் நேரத்தில் இங்கு கொடுக்கப்படும் அனைத்து பதிவுகளையும் படித்து தெரிந்து முழுமையாக தெரிந்து கொள்வதோடு, அனைத்து பதிவிலும் சரியாக பின்னூட்டம் கொடுங்கள்... கிடைக்கும் நேரத்தில் நமக்கான பணிகள் யாவை என்ற பதிவுகளை உள்வாங்கி பதிவுகளை வலைப்பூவில் செய்துவிடுங்கள்... 10 தான் இருக்கும்... அதாவது டாலர் கொடுப்பது பெறுவது, ஐந்து நபரினை பெற எவ்வாறு ஆன்லைன் வேலை செய்வது அவ்ளதான்... வேலை செய்வது பற்றிய பயிற்சி படுகையில் கொடுக்கப்பட்டுள்ளதால்... பணம் வாங்குவது பெறுவது பற்றிய தகவலை மட்டும் சரியாக சொல்லிக் கொடுத்துவிட்டு, பயிற்சிக்கு படுகை பதிவுகளைச் சுட்டிக் காட்டி பின்பற்ற அறிவுறுத்தி வந்தாலே போதுமானது.

அதுமட்டுமில்லாமல் கையொப்பப் பகுதியில் மொபைல் எண் கொடுத்து வையுங்கள்... ஸ்கைப் அடி/பேஸ்புக் ஐடி கொடுத்து வையுங்கள்...

உங்களுக்கு எழுத நேரமில்லாவிட்டாலும்... உங்களிடம் விளக்கம் கேட்டாவது போன் செய்பவர்கள் மூலம் உங்களுக்கான ஐந்து நபர்களை பெற்றுக் கொள்வதோடு...அவர்களை கைக்குள் வைப்பதன் மூலமாவது அணியினை வளர்க்கலாம்.

===========================================================

http://gbdgifttutorial.blogspot.in/

நீங்கள் தினமும் உழைக்கிறீர்கள்... அதில் கிடைக்கும் ரிசல்ட் யாவையும் பதிவாகச் செய்திடுங்கள் ... உங்களுக்கான பலமே எழுத்துதான். ஆகையால் அதில் தொய்வு வேண்டாம்... குறிப்பாக கடந்த இரண்டு நாள் பதிவு செய்யவில்லை... ஆனால் ஒர் டைட்டில் இமேஜ் செய்திருக்கிறீர்கள்... அந்த இமேஜ்-ஐக்கூட பதிவிலும் அப்லோடிங்க் செய்து அதனை செய்ய எடுத்துக் கொண்ட சிரமத்தினையும் அதனை முடித்து வெளியிடுவதில் இருக்கும் மகிழ்வு என்று மனதில் உள்ளதனை எழுதலாம்... அல்லது அந்த இமேஜ் உருவாக என்ன காரணம் என்பது பற்றிய ஆன்லைன் ஜாப் பற்றி எழுதலாம்.. இப்படி ஏதேனும் எழுதிக் கொண்டே இருங்கள்...

இன்னும் பதிவில் கவனம் செலுத்தி, எனது பதிவினை படித்தாலே அடுத்த கேள்வியில்லாமல் ஒருவர் வேலை செய்ய முடியும் என்ற ரீதியில் பதிவுகளை எழுதும் அளவிற்கு முன்னேற்றத்தினைக் காணுங்கள். இதற்கு சிறிய காலம் ஆகும், அதுவரை நீங்கள் படும் கஷ்டமே உண்மையான மகிழ்ச்சியான தருணங்கள்... வெற்றிக்குப் பின் எதுவுமே மகிழ்ச்சி கிடையாது, வெற்றிக்காக போராடும் நமது உழைப்பே உண்மையான மகிழ்ச்சி, அதன் கடைசி முழு வெளிப்பாடே வெற்றி என்ற ஒர் நாள் கொண்டாட்டம்...அத்தோடு முடிந்தது... அதன் பின்னர் அடுத்த இலக்கு தானாக தொத்திக் கொள்ளும்/. ஆகையால், வெற்றியினை மகிழ்ச்சியாக கொள்ளாமல் உழைப்பினை மகிழ்ச்சியாக நினைத்து செய்யுங்கள், சோர்வுகள் தவிர்க்கப்படும்.


அதுமட்டுமில்லாமல்... படுகையில் நீங்கள் அக்டிவாக பதிவு செய்தல் வேண்டும்... உங்களது பதிவுக்கு பின்னூட்டம் கேட்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும்... அது இலவச மெம்பரானாலும் சரி... அனைவருக்கும் உங்களுக்கு தெரிந்தது என்பதனை எல்லாம் பதிவாகச் செய்து, அதில் எவர் சந்தேகம் கேட்டாலும் சொல்லிக் கொடுக்க வேண்டும்...

இது நீண்டகால கஷ்டமாக தெரிந்தாலும்... அதன் பிறகு கிடைக்க இருக்கும் பலன் என்பது இலட்சம் இலட்சமாக இருக்கும்..


நீங்கள் என்னிடம் மொபைலில் கூட தொடர்பு கொண்டவர் இல்லாதவர் என்பதனால், உங்களிடம் உள்ள உழைப்பு குணாதியசத்திற்கு ஏற்ப இதனை சொல்லியிருக்கிறேன்...

===================================================================================

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டவர்கள்... அவரவர் தனக்கான குணாதிசயங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்களது பணியின் அமைப்பினை மாற்றிக் கொள்ள வேண்டும்...

இப்படித்தான் பதிவாக கஷ்டப்பட்டு டைப் செய்ய வேண்டும் என்பது இல்லை... மொபைலில் பேசி ரெக்கார்டு செய்து யூடியூப்பில் லோடிங்க் செய்வதும் ஒர் வகையில் பதிவுக்கு இணையான மதிப்பினைக் கொடுக்கும்... அவ்வாறு விடியோவாக பேசி செய்பவர்கள்... தன்னை தொடர்பு கொள்ள எண் கொடுத்து அவர்களிடமும் பேசத் தயாராக இருக்க வேண்டும்.

பேசுபவர்கள் பேசுங்கள் ...

எழுதுபவர்கள் எழுதுங்கள்...

பழகுபவர்கள் பழகுங்கள்...

எதுவானாலும் சரியாக பிறர் மனங்களை உள்வாங்கி செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்...

வெற்றி கிடைக்கவில்லை என்றால் உங்களது தோல்விகள் மூலம் தான் உங்களது தவறுகளை திருத்த முடியும்... தவறுகளை கண்டுகொள்ள வேண்டும் என்றால்... உங்களது உழைப்பினையும் விடாமுயற்சியினையும் காட்ட வேண்டும்.

ஆக வெற்றி என்பது அதிர்ஷ்டம் என்பதனைத் தவிர்த்த பல அடிப்படை தொடர்புகளைக் கொண்டது.. ஒன்றை ஒன்று அறியாமல் அவ்ள எளிதில் வெற்றி காணமுடியாது.

ஆகையால் உங்கள் செயலை இனிதே செய்யுங்கள்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: #GBDgift பணி செய்வோர்கள் முன்னேற்றம் காண அருமையான வழி

Post by ஆதித்தன் » Thu Oct 15, 2015 1:19 pm

:great: :great:

பல பல கருத்துக்களை உள்வாங்கி வைத்திருக்கும் நீங்கள், அதனை சரியாக வெளிப்படுத்தாமல் இருப்பதால் தங்களை நீங்களே குறைத்து எடை போட வழிவகை செய்திருக்கிறது.

உங்களது எழுத்து நடையை மேலும் நிதானப்படுத்தினால் சிறந்த தலைமை பண்பு மிளிரும்..


வாழ்த்துகள் ...
pradha
Posts: 65
Joined: Thu Jun 19, 2014 10:29 am
Cash on hand: Locked

Re: #GBDgift பணி செய்வோர்கள் முன்னேற்றம் காண அருமையான வழி

Post by pradha » Thu Oct 15, 2015 6:05 pm

Nandri Sir.congrats sir.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: #GBDgift பணி செய்வோர்கள் முன்னேற்றம் காண அருமையான வழி

Post by ஆதித்தன் » Thu Oct 15, 2015 6:40 pm

pradha wrote:Nandri Sir.congrats sir.

:thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: #GBDgift பணி செய்வோர்கள் முன்னேற்றம் காண அருமையான வழி

Post by ஆதித்தன் » Mon Oct 19, 2015 3:10 am

சாதிக் wrote:http://gbdgiftcash.blogspot.com :ros: :rock:

முயற்சிக்கு வாழ்த்துகள் ..

முக்கியமான இமேஜ்களை எப்பொழுதும் வலைப்பூவின் பதிவுகளில் பதிவேற்றம் செய்யுங்கள்... அது கூகுளிலும் இடம்பிடிக்கும்.
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: #GBDgift பணி செய்வோர்கள் முன்னேற்றம் காண அருமையான வழி

Post by சாதிக் » Mon Oct 19, 2015 11:08 am

Ok Thank you so much..
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”