#GBDgift மூலம் சமூக வலைத்தளங்களில் வேலை

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

#GBDgift மூலம் சமூக வலைத்தளங்களில் வேலை

Post by ஆதித்தன் » Sat Oct 10, 2015 5:07 pm

Image

சமூக வலைத்தளங்களில் முக்கியத்தளங்கள், Facebook, Twitter & Google Plus. இந்த மூன்று தளங்களுமே ஆன்லைனில் அனைவருக்கும் என்று சொல்லும் அளவிற்கு 80% மக்களுக்கு அறிமுகம் ஆனதுதான்.

மூன்று தளங்களுமே அரட்டை மற்றும் கருத்து பகிர்வினை முதன்மையாகக் கொண்டது தான். ஆனாலும் தனித்தனி கம்பெனி ஒவ்வொன்றும் தனக்கென தனித்துவத்தினை காட்டுதல் என முயன்று போட்டியிட்டு ஒருவர்க்கு ஒருவர் விடாமல் வளர்ந்து வளருகின்றனர்.

இவர்களின் வளர்ச்சியினையும், புதியவர்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் செயல்பாட்டினையும் கண்டு தனக்கான வாய்ப்பாக இண்டர்னெட் மார்க்கெட்டிங் துறையினரும் பயன்படுத்தத் தவறுவதில்லை.

ட்ராபிக் இருக்கிறது என்றுச் சொன்னால் அங்கே கண்டிப்பாக விளம்பரமும்/மார்க்கெட்டிங்கும் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களும் மார்க்கெட்டிங்கிற்கு உகந்த இடம் ஆகும்.

இந்த மூன்று சமூக வலைத்தளங்களிலும் HashTag # என்று ஏதேனும் முக்கிய கீவேர்டினை உருவாக்கி அவ்வப்பொழுது பொதுவாக அரட்டை/கருத்து பகிர்வது என்பது பிரபலமாக இருந்து வருகிறது.

ஒர் பொருளை விளம்பரப்படுத்தும் நாமும் நமது பொருளை விளம்பரப்படுத்துவது என்பது மிக முக்கியம். அதிலும் குறிப்பாக முழு நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் கொண்டு செல்லுதல் மிக மிக அவசியம். அப்பொழுதுதான் அதில் வெற்றியடைய முடியும்.

பீடர்மேட்ரிக்ஸ் என்ற ப்ரோக்கிராமை எவ்வளவு நான் எடுத்துச் சென்றாலும், சேர்ந்தவர்கள் அனைவரும் அதனை எவ்வாறு பாசிட்டிவாக எடுத்துச் செல்லுதல் என்று தெரியாமல்... அவரவர் தனக்கு ரெபரல் கிடைக்கவில்லை... எனக்கு இன்னும் காசு வரவில்லை என்று 10 நாட்களில் பேச ஆரம்பித்து, வேலை செய்யாமல் இருந்தும் சும்மா இருக்கத் தெரியாமல் எனது கடின உழைப்பினை மிக எளிதாக கீழே சரித்துவிட்டனர்.

விளம்பரம், மார்க்கெட்டிங்க் , பணத்தினை புரட்டுதல் என எதுவுமே தெரியாமல்.. அவர்கள் செய்த தவறினை நீங்கள் யவரும் செய்திடுதல் கூடாது. அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு சரியாக ஆன்லைனை பயன்படுத்தவும் தெரியாது, பணம் வாங்குதல் மற்றும் செலுத்துதல் என்பதனைக்கூட அறிந்து கொள்ள தயாராக இல்லாதவர்கள். இப்படியானவர்களை சேர்த்ததன் விளைவாகத்தான் அடுத்தக்கட்ட நகர்வு என்பது இல்லாமல் தொய்ந்து கிடக்கிறது. ஆனால், இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன... அவர்கள் தங்களது தவறுகளை திருத்தி சரியாக செயல்பட்டால் 110 திட்டம் விரைவாக வளர்ச்சியினை அடையும்.

நமது இலக்கு என்பது வெற்றியினை எட்டுதல் என்பதுதான். அவ்வாறு எட்டும் வரை நமது விடா முயற்சியினையும் முழு நம்பிக்கையுடன் தொடர வேண்டும்.

எப்பொழுது வெற்றியடைவோம் என்ற எண்ணத்தினைத் தவிர்த்து வேறு இருத்தல் கூடாது. வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என ஒவ்வொன்றாக சிந்தித்து முடிந்த அளவுக்கு செய்து கொண்டிருந்தாலே போதும், கண்டிப்பாக வெற்றியடைந்துவிடலாம்.

இப்பணியில் செய்யும் ஒன்றிற்கும் பணம் உடனே கிடைக்காது. அதற்காக பலர் நான் சொல்லும் பணிகளைச் செய்வது கிடையாது. அதற்குப் பதிலாக உடனே பணம் கிடைக்கிறது என்கிற பணிகளைச் செய்கிறார்கள்.

பணம் வருகிறது என்றுச் சொன்னால் செய்வதில் தவறில்லை, ஆனால் அதனைக் காட்டிலும் நான் சொல்லும் GBDgift பயிற்சி பணி ஒன்றும் வருவாயில் குறைவு என்று சொல்வதற்கு இல்லை.

#GBDgift பயிற்சியினை நன்றாகக் கற்றுக் கொண்டால் நாளை விரைவாக பல ஆயிரங்களைச் சம்பாதிக்கத் துணையாக நிற்கும்.

தொழிலை மூன்றாகப் பிரித்துவிடலாம் 1. Production 2. Marketing 3. Retails

உற்பத்தி செய்வது என்பது பயன்பாட்டிற்காகத்தான். அவ்வாறு பயன்பாட்டாளர்களை அடைவதற்கு மார்க்கெட்டிங்க் பெரிதும் துணை புரிகின்றன. அதுமட்டுமில்லாமல், இன்று மிகவும் கடினமாக இருக்கும் பணிகளில் ஒன்று பயன்பாட்டாளர்களை கவரும் மார்க்கெட்டிங்க் யுக்திதான்... ஆகையால் மார்க்கெட்டிங்கினை அவ்ள எளிதாக ஒதுக்கிவிட முடியாது.

மார்கெட்டிங் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம்... அத்தனை எளிதானது என்றாலும் கொஞ்சம் விடா முயற்சி வேண்டும். அப்பொழுதுதான் ஜெயிக்க முடியும். அதுமட்டுமில்லாமல், சில வழிமுறைகளை சரியாக பின்பற்றுதல் வேண்டும்.

அவ்வாறு சரியான வழிமுறைகளை பின்பற்றி ஜெயிப்பதற்கான பயிற்சியாகத்தான் GBDgift பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஒர் உதாரணத்திற்காக, ஏதோ சொன்னார்.. ஒர் ஆர்ட்டிகள் செய்தேன்.. ஒன்றும் நடக்கல .. விடியோ செய்தேன், அதுலயும் எதுவுமே நடக்கல,,, ஆக காசு என்பது நீங்கள் சொல்வதன் மூலம் வரல ... என்று நினைத்தீர்கள் என்றுச் சொன்னால் அது உங்களுடைய பெரிய தவறு.

ஆர்ட்டிகளும் சரி, விடியோவும் சரி உடனே ரிசல்ட் கொடுப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் அவற்றினை ரிசல்ட் கொடுக்கும் அளவிற்கு மாற்றுவது என்பதும் ஒன்று இரண்டு விடியோ/ஆர்ட்டிகளில் நடந்துவிடுவதில்லை...

தொடர்ந்து எழுத வேண்டும்.. தொடர்ந்து விடியோ செய்ய வேண்டும்.. வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

அவ்வாறு ஒர் ப்ரோக்கிராமை எடுத்து வெற்றி கண்டுவிட்டீர்கள் என்றுச் சொன்னால் உங்களால் எந்தவொரு அப்ளிகேட் ப்ரோக்கிராமையும் சரிபார்த்து எடுத்து வெற்றியடைய முடியும்/.

ஒகே இன்று சொல்ல வந்தது, GBDgift பற்றி எழுதிய ஆர்ட்டிகள் மற்றும் விடியோக்களில் லிங்குகளை Facebook , Google Plus மற்றும் Twitter என்ற மூன்றிலும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள். பகிரும் பொழுது HashTag ஆக #GBDgift என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள்.

நாம் அனைவரும் #GBDgift என்ற ஹஸ்டேக்கினை முன்னெடுத்து பிரபலப்படுத்தினால் இலட்சம் என்பது உறுதி.

:thanks:
kavinayagam
Posts: 104
Joined: Fri Jun 12, 2015 10:57 pm
Cash on hand: Locked

Re: #GBDgift மூலம் சமூக வலைத்தளங்களில் வேலை

Post by kavinayagam » Sat Oct 10, 2015 7:41 pm

கgbd gift ன் முதல் பயிற்சி என்ன. பணம் என்ற தலைப்பில் மட்டும்தான் ஆர்டிகிள் எழுத வேண்டுமா.இல்லை எந்தவொரு தலைப்பிலும் எழுதலாமா.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: #GBDgift மூலம் சமூக வலைத்தளங்களில் வேலை

Post by ஆதித்தன் » Sat Oct 10, 2015 7:53 pm

kavinayagam wrote:கgbd gift ன் முதல் பயிற்சி என்ன. பணம் என்ற தலைப்பில் மட்டும்தான் ஆர்டிகிள் எழுத வேண்டுமா.இல்லை எந்தவொரு தலைப்பிலும் எழுதலாமா.

உங்களுக்கு எது தேவையோ அதனையே தலைப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மொத்தம் 15 பதிவுகள் தான் இருக்கும் அதுவும் இலட்சமே இலட்சியம் என்ற பகுதியின் முதல் பக்கத்தில் இருப்பது மட்டுமே. ஆகையால் தேதியை கணக்கிட்டு முதல் ... இரண்டாவது என வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், பணம் பற்றிய தலைப்பே நல்லது.
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”