GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

CashFeeder.Net தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், மற்றும் இதுபோன்ற Matrix தளங்களுக்கான டாலர் பணப்பரிமாற்ற சேவை, சந்தேகங்கள் மற்றும் உதவிகளைப் கேட்டுப் பெறுவதற்கான இடம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Fri Oct 02, 2015 11:07 pm

இலட்சத்தினை சம்பாதிக்க நாம் இலக்காகக் கொண்டுள்ள கால அளவு என்பது 90 நாட்கள் மட்டுமே... அதில் நான் பயிற்சியாக கொண்டிருக்கும் நாட்கள் 50... இருக்கும் மொத்த 90 நாட்களில் இலட்சத்தினை அடைய வேண்டும். அதற்காக நீங்கள் கண்டிப்பாக உழைத்தே ஆக வேண்டும்.

நீங்க ஒர் இலட்சம் சம்பாதிக்க கொஞ்சம் உழைப்பினைக் கொடுக்க வேண்டும்... ஒர் 2 மணி நேரத்தினையாவது அதில் செலவிட வேண்டும், நான் பதிவிற்காக மட்டும் தினம் 4 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகிறேன்.

தினம் 2 மணி நேரம் பணம் பற்றி எழுத செலவிட தயாராக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இலட்சம் சம்பாதிக்க தகுதியாக முடியாது.

கொஞ்சம் முயற்சி செய்தால் சொந்தமாகவே பதிவு செய்துவிடலாம்... சொந்தமாக எழுத முடியவில்லை என்பவர்களுக்கு அம்முயற்சியினை உசுப்பி எழுப்பிவிட கடமைப்பட்டுள்ளேன்.

இப்பத்தான் நான்கு நபர்களின் வலைப்பூவினையும் போய் பார்த்தேன்...

ஒருவர் சொந்தமாக எடிட் பண்ணி எழுத ஆரம்பித்துவிட்டார்.. மகிழ்ச்சி...

மற்றொருவரும் சொந்தமாக எழுதியிருக்கிறார், அவரிடமிருந்து ஒன்றை நானும் மனதில் ஏற்றிக் கொண்டேன்,,, பின்னாளில் அது என் பதிவிலும் வரலாம். வாழ்த்துகள்

மற்றொருவர் காப்பி பேஸ்ட் செய்கிறார்..,, அடுத்தக்கட்ட லெவலுக்கு முயன்று எழும்புவார் என நம்புகிறேன்.

ஆனால் ஒருவர், எடுத்த உடனே காப்பி செய்ததோடு சரி, அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார் ஏன்???


ஒர் பதிவு எழுதி பப்ளிஸ் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்??? 2 மணி நேரம் ஆகுமா???? ஒர் வருடத்தில் ஒர் இலட்சம் சம்பாதிக்க இருக்கிற பணிக்கு நீங்கள் 2 மணி நேரம் கூட செலவு செய்யமாட்டீர்களா?.. கொஞ்சம் வொர்க் பண்ணுங்க...

ஊர்ல கிணறு வெட்டுவாங்க... வெட்டுவாங்க... வெட்டுவாங்க 60 அடி வெட்டியிருப்பாங்க... தண்ணீர் வரவில்லை என்றால் தண்ணீரைப் பார்க்கும் வரைக்கும் தோண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.. அது 120 அடியாக இருந்தாலும் சரி, 200 அடியாக இருந்தாலும் சரி... தோண்டி தண்ணீரைப் பார்த்தால் மட்டுமே, இலக்கினை தொட்டுவிட்டோம் என்பதாகும்.

60 அடிய தோண்டிப்புட்டு... இதற்கு மேல் என்னால் முடியாது என்று விலகுவதற்கு, ஆரம்பத்திலேயே தோண்டாமல் இருந்தால்... உடம்பு சவுகரியமாக இருக்கும். ஏன்னா, 60 அடி தோண்டியிருக்கிறோம் என்று அந்த உழைப்பு அளவுக்கு தண்ணீரைக் கொடுப்போம் என்று பூமித்தாய் தண்ணீரைக் கொடுப்பது இல்லை. நீர் இருக்கும் ஆழம் வரை நாம் தான் தேவை என்றால் போக வேண்டும்... இல்லை என்றால் வானத்தினை நோக்கி காத்திருக்க வேண்டியதுதான். வீணாக கொஞ்சம் தோண்டுவானேன்?... ஒர் வேளை 60 அடியில் கிடைச்சிட்டா?

இப்படி ஒர் வேளை கிடைச்சிட்டா என்று எல்லாம் கொஞ்சம் முயற்சிக்கிறது எல்லாம் இங்க வேண்டாம். ஏனெனில், அப்படி கொஞ்சமா செய்து ஒன்றும் கிடைக்காது.

ஏற்கனவே கொஞ்சமா செய்து பார்த்தவர்கள் ஏமாந்துவிட்டார்கள், அந்த லிஸ்டில் நீங்கள் யாரும் இருந்திர வேண்டாம்.

உங்களை வலைப்பூ உருவாக்கச் சொன்னதன் காரணம், GBDgift தளத்திற்காக மட்டும் அல்ல... அனைத்து தள ஆன்லைன் ஜாப் பயிற்சியினையும் நீங்கள் அந்த ஒரே தளத்தில் தான் செய்ய இருக்கிறீர்கள்.. ஒன்றுக்கு நான் கற்றுக் கொடுத்துவிட்டால், அதனைக் கொண்டே மற்ற தளங்களுக்கும் நீங்களே செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை... அதுமட்டுமில்லாமல், ஒரே தளத்தினை மட்டும் நம்பியிராமல் 10 தளங்களை கைவசம் கொண்டிருக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.. அதற்காக ஒவ்வொரு தளத்திற்கும் ஒர் தளம் என்று சுழண்டு கொண்டிருந்தால் நேரம் இல்லாமல் போய்விடும்.

நமது இலக்கு 1 இலட்சத்தினை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான். இங்கு முதல் இலக்கு பணம்.

பணம் வேண்டும் என்றுச் சொன்னால், நமது ஆள்மன சிந்தனையை பணத்தினை நோக்கி மையப்படுத்த வேண்டும்.

ப்ளாக்கில் சொந்தமாக தினம் ஒர் பதிவினைச் செய்தல் வேண்டும். ஒர் பதிவு என்றுச் சொன்னால், அதில் 50 வரிகள் இருக்க வேண்டும்... சும்மா...5 லைன் 10 லைன் என்று எழுதுவது எல்லாம் ஒர் பதிவுக்குள் வராது... 5 லைன் என்று 10 பதிவு செய்தாலும் ஒர் பதிவுக்குள் வராது. ஒர் பதிவு செய்தாலும் உறுப்படியாக 50 லைனில் எழுதிவிடுங்கள்.

என்னடா? முதலில் காப்பி பேஸ்ட் என்று சொன்னான்... இரண்டாவது கொஞ்சம் எடிட் பண்ணுங்க என்று சொன்னான்... இப்ப நீங்களே சொந்தமாக எழுதிக்கோங்க என்று சொல்கிறான்.. மொத்தத்தில் இரண்டே நாளில் கையை விட்டுட்டானே என்று நினைக்காதீர்கள். ஏதோ கடமைக்கு பதிவுகளை எழுதினீர்கள் என்றுச் சொன்னாலும் சரி, காப்பி பேஸ்ட் செய்தாலும் சரி... உங்களால் அதன் பலனை அடைய முடியாது.

கைவிட்டாலும், விடாது முயன்று எழும்பும் குழந்தை நடப்பதனைப் பார்க்க அழகாக இருக்கும்... விழுந்தாலும், கைவிட்டு நடக்கவே ஆசைப்படுவோம்.

நீங்க என்ன சின்னக் குழந்தையா, கைவிட்டா விழுந்திடுவீங்க என்று நான் அச்சப்படுவதற்கு??

விழுந்தா எழும்ப மாட்டீங்களா என்ன? எப்படி விழுந்தோம் என்று சொல்லத் தெரியாதா என்ன?

இரண்டுமே தெரியுமுங்க... எல்லாமே தெரியுங்க... தெரியும் என்கிறதை நான் சொல்லணும் அவ்ளதான். அதனைத்தான் இப்ப சொல்ல இருக்கிறேன்.

ஒன்றுமே இல்லை... நான் இப்போ உங்களிடம் கேட்பது எல்லாம்... தினம் ஒர் பதிவு செய்யுங்க.. அதுவும் பணத்தினை பற்றி எழுதுங்க, 50 வரி எழுதுங்க என்றுச் சொல்கிறேன்... இப்படி முதல் 10 நாட்கள் தினம் ஒர் பதிவு என்று 10 நாட்கள் செய்யலாம் என்று நினைக்காதீர்கள்... 5 நாட்களில் முடிச்சிடுங்க..

50 வரியும் தமிழில் தான் எழுதச் சொல்கிறேன்... தமிழ் உங்க அனைவருக்கும் நன்றாகவேத் தெரியும். அதனால் பிரச்சனை இல்லை.

50 வரிக்கு என்னத்த எழுதுறது????



நமக்கு என்ன தேவையோ அதனை சரியாக அடையும் அளவிற்கு தெளிவாக எழுதினாலே வெற்றியடைந்துவிடலாம்.

உங்களுக்கு 50 வரி எழுதுவதற்கு கஷ்டமாக இருக்கலாம், ஆனால், இந்த பதிவினைப் படிக்கும் பொழுது உங்கள் மனம் நினைத்தது இருக்கே... அதனை அப்படியே எழுதினீர்கள் என்றுச் சொன்னால் 100 லைன் வரும்.

ஆமாங்க, மனம் சும்மா இருப்பதே கிடையாது. எதனையாவது நினைச்சிக்கிட்டே இருக்கும்... உங்கள் வாய் பேசாமல் இருந்தாலும் மனம் பேசாமல் இருப்பதில்லை.

மனம் என்பது அது இது என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும்... அப்படி சிந்திக்கிறது அப்படியே எழுதிடுங்க... யாரோ படிக்கிறாங்க... நாம யாரென்றே தெரியாது என்று... முகமூடிப் போட்டுக்கிட்டு, உங்கப்பாட்டுக்கு எழுதுங்க...

அது நெகட்டிவாக இருந்தாலும் சரி, பாசிட்டிவாக இருந்தாலும் சரி... எல்லாவற்றையும் எழுதுங்க... எதுவானாலும் உங்களுக்கு பாசிட்டிவ் கொடுகலைன்னு வருத்தத்தை சொல்லப் போறீங்க, அல்லது உங்களுக்கு பாசிட்டிவாக அமைந்ததை சொல்லப் போறீங்க... ஆக மொத்ததில் உங்கள் பாசிட்டிவ்வுக்காக.. அதாவது உங்கள் பணத் தேடல் ஆசைக்கு அது எவ்வாறு தோன்றுகிறதோ அதனை அப்படியே எழுதுறீங்க அவ்ளதான்.


இன்னும் சொல்லப் போனால்... எழுத ஆரம்பிப்பதற்கு முன் 1 மணி நேரம், பல நிகழ்வுகளைச் சிந்தித்து... என்ன எழுதலாம் என்று யோசியுங்கள்.... யோசனையில் என்ன தோன்றியதோ அதனை எழுதுங்கள்....

யோசிச்சேன் எதுவுமே தோனலை என்றுச் சொன்னாலும்... எதுவுமே தோனல தோனல... எதுவுமே தோனல... இப்படியே 1 மணி நேரமும் இருந்துச்சா? அப்படி என்றால் நீங்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள்... ஆனால் அப்படி இருப்பதில்லை.


நான் சொன்னது போலவே...

இன்று நான் பணம் பற்றி எழுதலாம் என்று சோபாவில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன்.. தலைப்பு பணம்.. பணம் எப்படி சம்பாதிக்கலாம்? எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்... உங்களுக்கு எதாவது தெரிந்தா சொல்லுங்களேன்... நான் பணம் பற்றி ஒர் கட்டுரை எழுதணும் என்று கேட்டேன்... அவங்களும் தெரியாது என்று கைவிட்டுவிட்டார்கள்... மீண்டும் யோசித்தேன்.. ஒன்றுமே தோணலை... பேசால எழுதாமல் விட்டுவிடலாம் என்று நினைத்தாலும், ஆதித்தன் வருத்தப்படுவானே என்பதற்காக எழுதிதான் ஆக வேண்டும்.

பேனா கொண்டு எழுதி வைத்துவிட்டு பின்னர் கம்ப்யூட்டரில் எழுதலாம் என்று மொட்டை மாடிக்கு சென்று எழுத நினைத்தாலும் எதுவுமே தோனலை... காக்கா மட்டும் தான் கண்ணில் தோன்றுகிறது... அதைப்பார்த்தால் பணம் பற்றிய எண்ணமா வரும்... விவேக் திண்ண காக்கா பிரியாணிதான் நினைவுக்கு வருகிறது.

பிரியாணி என்றதும்... ப்ரியாணி ஆசை வந்துவிட்டது... இந்த வாரம் சண்டே கண்டிப்பா பிரியாணி செய்திடச் சொல்லணும்.. அல்லது ஓட்டலில் வாங்கியாவது சாப்பிடணும்... யாரோ வீட்டிற்கு வந்த மாதிரி இருந்தது... மொட்டை மாடியிலிருந்து தாளை மொட்டையாகவே கொண்டுவந்துவிட்டேன்.

இந்த மொட்டைத்தாளைக் கொண்டு என்னத்தை டைப் செய்வது என்று அந்த தாளையும் வரும் வழியிலேயே மாடிப்படி ஜன்னல் வழியாக வெளியில் தூங்கி ஏறிந்துவிட்டேன்..

கீழே வந்தால்... பணம் கேட்டு வந்திருக்கிறார்கள்... இங்கே நானே பணத்துக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறேன்.. இவர்கள் என்னிடம் கடன் கேட்டு வந்திருக்கிறார்கள்... இவர்களிடம் என்ன சொல்வது... நல்ல யோசிச்சிட்டு... சரி வந்தது போன் பண்ணி சொல்றேன்னு சொல்லி அனுப்பிட்டேன்... வந்தவுடனே கேட்டு பதிலைச் சொல்லணும்... இந்த இரவல் பிரச்சனை ஒர் பிரச்சனை... இதுவே அவங்க கேட்டா கொடுத்திருப்பேன்... அவங்க ரொம்ப நல்லவங்க... அவசரத்துக்கு கேட்பாங்க... வந்தவுடனே கொடுத்திடுவாங்க...நாம கேட்க வேண்டியதே இல்லை... என் அவசரத்துக்குக்கூட கொடுத்து உதவுவாங்க..

அய்யோ... பணம் பற்றி எழுதலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தா இப்படி, இடையில் ஒவ்வொருத்தரா தொந்தரவு செய்றாங்க...

இப்படி என்ன நிகழ்வுகள் அந்த ஒர் மணி நேரத்தில் நடக்கிறதோ... அதில் கண்டிப்பாக பணம் சம்பந்தப்பட்டிருக்கலாம்... அல்லது ஏதோ... அது நடந்ததைக் கொண்டு சேர்த்து எழுதுங்கள்... அதுவே ஒர் 30 வரிகளுக்கு மேல் வந்துவிடும்...

இந்த 30 வரியினை கொஞ்சம் திருத்திவிட்டால் 50 ஆக்கிவிடலாம்...


சினிமா பாடல்களில் பணம் பற்றி இருந்தால், அந்த பாடலைப் பற்றி உங்கள் கருத்துகளைக் கொண்டு கூட ஒர் பதிவு எழுதுறேன் என்று அப்பணத்தினைப் பற்றி எழுதலாம்...

ரஜினி சம்பளம் எவ்வளவு தெரியுமா என்று ஒவ்வொரு சம்பளத்தினைப் பற்றிக்கூட லிஸ்ட் போடலாம்.

வீடு வாங்க எவ்வளவு பணம் தேவைப்படுது... வீட்டை கட்டி முடிப்பதற்குள் கடனாளி ஆகிடுவேன் போல என்று அதுபோன்ற கனவுகளை எழுதலாம்...

எது எப்படியோ, உங்களுக்கு பணம் எதற்கு.. அந்த பணம் பற்றிய நிகழ்வுகள்... அதனை சிந்தித்து அப்படியே எழுதுங்கள்,...

இப்படி எதார்த்தமாக மனதில் தோன்றுவதை எழுதுவதும் ஒர் வகை ப்ளாக்கிங்க்தான்.

இடை இடையே ஏதேனும் சேர்க்கணும் என்று கொஞ்சம் சேர்த்துங்கள்... அப்படி சேர்க்க நீங்கள் ஏதேனும் படிக்க வேண்டும்... கதைப்புத்தகத்தினை படித்தால் கூட அதில் ஒர் ஐடியா கிடைக்கும்,

இப்படி GBDgift.com பற்றி மட்டும் என்று இல்லாமல் பொதுவாக பணம் பணம் என்றும் எழுத வேண்டும்...அப்படி எழுதினால் தான் தினம் ஒர் பதிவு செய்ய முடியும்.

தினமும் ஒர் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும்... அதற்கு தகுந்தவாறு மனமும் மாற்றி மாறி ஒரே விடயத்தினை சொல்லும்... நீங்களும் மாற்றி மாற்றி எழுதுங்கள்..

ஒர் பதிவினை படித்தீர்கள் என்றால்... அதனை காப்பி பேஸ்ட் செய்தீர்கள் என்றுச் சொன்னால்... அந்த பதிவில் சொல்லுங்கள், அடுத்த பதிவில் வேண்டாம்.

அப்புறம்... இதில் நான் என்ன சொன்னேன் என்பதனைவிட... நீங்கள் அடுத்த இரண்டு நாட்கள் 5 பதிவுகள் செய்ய எவ்வாறு எல்லாம் முயற்சித்தீர்கள், கஷ்டப்பட்டீர்கள்... எத்தனை எழுதினீர்கள் என்று, இப்பதிவின் பின்னூட்டமாக கண்டிப்பாக சொல்லுங்கள்.

நீங்கள் உங்கள் நிலையினை விரிவாக 50 வரியில் சொல்லிவிட்டால்... அதனைக் கொண்டு பிறரின் கஷ்டத்தினையும் அறிந்து அதற்கும் எளிதான வழி வகை கண்டு கொள்ள முடியும்.

முயற்சியுங்கள்..
User avatar
satkunan
Posts: 496
Joined: Sat Nov 29, 2014 11:20 pm
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by satkunan » Sat Oct 03, 2015 10:05 am

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

கிளிக் கிளிக் என்று கிளிக் பண்ணினேன் கிலுக்க கூட காசு கிடைக்கவில்லை

முதலாளி ஆகலாம் என்று முதலீடு செய்தேன் முதலும் கிடைக்கவில்லை

முழுவதும் போனாலும் என் நம்பிக்கை மட்டும் என்னை விட்டு போகவில்லை

இலட்சம் கிடைக்கும் வரை இலட்சம் வரிகளுக்கு மேல் இனி எழுத போகிறேன்

சற்று பொறுங்கள்

போனால் போகடும் போடா இன்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..??
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Sat Oct 03, 2015 10:15 pm

நான் இன்று இரண்டு பதிவுகள் எழுதி உள்ளேன். எனக்கு என்ன தலைப்பில் எழுதுவது என்று குழப்பமாக இருந்தது. ஒரு தலைப்பு பணம் நீங்கள் கொடுத்த பதிவில் இருந்து எடுத்துக் கொண்டேன். மற்றொன்று முதல் பதிவில் என்ன எழூதலாம் என்று யோசிக்கும் போது கிடைத்து. தலைப்பை வைத்து மனதில் தோன்றுவதைதான்
எழுதினேன்.
மின்னல் வேகத்தில் எண்ணங்கள் வந்து போயிருது அதை எழுதுவதற்குள் வேறு தோன்றுகிறது அதனால் நான் சரியாக் எழுதியிருக்கிறேனா குழ்ப்பிவிட்டேனா? என்று தெரியவில்லை.
35 லைன் 40 லைன் தான் பதிவு செய்தேன். நாளைக்கு ஒரு தலைப்பு யோசித்து
வைத்திருக்கிறேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Sun Oct 04, 2015 1:55 am

satkunan wrote:
இலட்சம் கிடைக்கும் வரை இலட்சம் வரிகளுக்கு மேல் இனி எழுத போகிறேன்

நான் இலட்சம் வரிகள் எழுதியிருப்பேன் என்று நம்புகிறேன்... அடுத்ததாக, உங்களையும் எனது வரிசையில் காண இருக்கிறேன் என்பதனை உங்கள் மனதில் இருந்து வரவைத்து காண்பதில் மகிழ்ச்சி.

சொன்ன வேலைக்கு சொன்ன காசக் கொடுத்தாலே இன்று பெரிது, அப்படி வாங்கிவிட்டால் மகிழத்தான் வேண்டும். அந்த செல்லாத காசை வைத்தே செல்வந்தவர் ஆக வைப்பதுதான் நமது எழுத்து. ஆகையால், எழுத்தினை மையப்படுத்தியே படுகை பயிற்சிகள் இருந்தும், அதனை சரியாக புரிந்து கொண்டவர் கிருஷ்ணன் சார் மட்டும்.... அவர் படுகையில் கோல்டன் மெம்பர் ஆகி, பயிற்சிகளை படிக்க சிறிது நாட்கள் எடுத்துவிட்டு இங்கு பதிவுகள் செய்ய ஆரம்பித்தவுடனே சொன்ன வார்த்தை, மீண்டும் எனது வலைப்பூக்கு புத்துயிர் கொடுக்கப்போகிறேன் என்பதுதான்... அவ்வலைப்பூ தற்பொழுது அவருக்கு வருவாய் கொடுக்கும் மைய அலுவல் இடமாக மாறிவிட்டது. கிருஷ்ணன் சார் அளவுக்கு என்னிடம் கடின உழைப்பு கிடையாது, ஒர் நிலைத்தன்மை கிடையாது... இருந்தாலும் நான் அதிகம் சம்பாதிக்கிறேன் என்றுச் சொன்னால் பழையவன், பலருக்கும் அறிமுகமானவன்... புத்திசாலித்தனமாக தேவைக்கு தகுந்தவாறு காய் நகர்த்திக் கொள்வது. கிருஷ்ணன் சார், கடின உழைப்பாளியாக இருந்தாலும் அவரது அந்த கடின பணியாள் உழைப்பே அவரது அதிகப்படியான வருவாய்க்கு தேவையான நேரத்தினை கொடுக்காமல் பிடிங்கிக் கொள்கிறது.

உங்களை கிளிக் கிளிக் என்று கிளிக் செய்து கிடைக்கிற 4 மணி நேரத்தினையும் கிளிக் செய்து கொண்டே இருக்கச் சொல்லவில்லை. அப்படி நாலு மணி நேரமும் கிளிக் பண்ணிக்கவே நேரம் சரியாகப் போவதுன்னா... அதுல இரண்டு மணி நேர வேலையை கட் செய்துவிட்டு, பதிவு செய்வதற்கு 2 மணி நேரத்தினை ஒதுக்குங்கள். பின்னாளில் மொத்தமாக அந்த 2 மணி நேர பணி செய்யாததால் இழந்ததைக் காட்டிலும் பலமடங்காக மொத்தமாக வாங்கலாம்.

படுகைப் பயிற்சிகள், உங்களை ஒர் பணியாளாக மாற்ற வேண்டும் என்ற இலக்கில் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. பலரையையும் தனக்கு கீழே வைத்து வேலை வாங்கும் அளவிற்கு சிறப்பான பதிவுகளை செய்து, ஒர் லீடராக நிறைய சம்பாதிக்க வேண்டும்.. பதிவாக அப்ளிகேட் மார்க்கெட்டிங்க் செய்து, பலரிடம் விற்பனை செய்வது என்பதுதான். அவ்வாறு இருந்தால் தான் கை நிறைய சம்பாதிக்க முடியும்... அதற்காக சின்னச் சின்னப் பணிகளைக் கொடுத்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் உங்களது சிந்தனையை தூண்டும் அளவிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.

ஸ்ரீலங்காவிலிருந்து, எத்தனையோ நபர்கள் ஆன்லைன் ஜாப் என்று தொடர்பு கொண்டிருக்கிறார்கள்... இப்பொழுதும் மாதம் இரண்டு பேர் என்ற ரீதியில் போன் வந்து கொண்டுதான் இருக்கிறது.. ஆனால் அவர்களை என்னால் தேவையான உதவி செய்து வழிநடத்த முடிவதில்லை.

இவர்களை எல்லாம் உங்களுக்கு கீழ் கொண்டு வந்துவிட்டாலே உங்களால் நல்ல வருவாயினைப் பார்க்க முடியும். அவர்களை உங்களுக்குக் கீழ் கொண்டுவர, தேவையான தகுதிகள் உங்களிடம் இருக்கிறது... அதனை எப்படி பயன்படுத்துவது என்பது மட்டுமே தெரியவில்லை... அது உங்களது சொந்தப் பதிவுகள் எழுத ஆரம்பித்தப் பின்னரே தெரிய ஆரம்பிக்கும்... உங்களது திறன் வெளிப்படும்.

படுகையில் நீங்கள் நன்றாக உலா வருகிறீர்கள், இனி பின்னூட்டம் மட்டும் என்று நில்லாமல், நல்ல கட்டுரைப் பதிவுகள் அவ்வப்பொழுது செய்து இருங்கள்.. அப்படி நல்ல பதிவுகள் மூலம் ஸ்ரீலாங்காவைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்தினை நிலை நிறுத்தினால்... அவ்வப்பொழுது படுகைக்கு வரும் இலங்கையச் சேர்ந்தவர்கள், உங்கள் வழியாக பயன் பெறுவார்கள், உங்களுக்கான பலனும் கிடைக்கும்.

ஒர் நேரத்தில் எங்கு பார்த்தாலும் படுகை நபர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக பல பல வலைப்பூக்களை உருவாக்கிக் கொடுத்தேன்.. இன்றும் இருக்கின்றன ஆனால் ஒருத்தர் கூட சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இப்பொழுது புதியதாக பல தளங்கள் தமிழில் வந்திருக்கின்றன... அவர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் அவைகள் நிலை பெறுவதற்கு முன், நிலையாக மேலும் பல படுகை நபர்களை முன்னெடுத்துச் சென்றுவிட வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய இலக்கு. இலக்கோடு இலக்காக வருவாயினையும் பார்த்துவிட வேண்டும்.

நீங்கள் தினம் ஒர் பதிவு என்று எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் என்றுச் சொன்னால், உங்களை ஒர் நல்ல வருவாய் நிலைக்கு வரும் அளவிற்கு உந்து சக்தியாக இருந்து, தேவையான எனது ஆலோசனைகள் நேரடியாக என்று இல்லாமல், ஒவ்வொரு புதிய பதிவிலும் வரும் ... அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால்... நீங்கள் பெரிய பணக்காரன் ஆகிவிடலாம்.

குறிப்பாக இலங்கையில் உங்களை ஒர் நல்ல லீடாராக பார்க்க ஆசைப்படுகிறேன்... அதற்கு உங்களது திறனை நீங்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே என்னால் உதவ முடியுமே தவிர... மற்றப்படி முடியாது.

ஆசையற்ற நபரினை முன்னேற்ற நினைக்கும் விருப்பம் வீணாகும் என்ற கருத்து உண்மைதான், ஆனால் ஆசையுள்ளவரை முயற்சியுள்ளவராக மாற்ற முடியும் என்ற எனது எண்ணத்தினை பொய்யாக்கிவிடாது, முயலுங்கள்... கண்டிப்பாக இலட்சத்தினை கைக் கொள்ளலாம்.

விரைவில் உங்களது முயற்சிகள் பதிவுகள் பக்கம் அமைவதோடு நிறைய பதிவுகள் எழுத ஆரம்பிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Sun Oct 04, 2015 3:30 am

சாந்திவி wrote:நான் இன்று இரண்டு பதிவுகள் எழுதி உள்ளேன். எனக்கு என்ன தலைப்பில் எழுதுவது என்று குழப்பமாக இருந்தது. ஒரு தலைப்பு பணம் நீங்கள் கொடுத்த பதிவில் இருந்து எடுத்துக் கொண்டேன். மற்றொன்று முதல் பதிவில் என்ன எழூதலாம் என்று யோசிக்கும் போது கிடைத்து. தலைப்பை வைத்து மனதில் தோன்றுவதைதான்
எழுதினேன்.
மின்னல் வேகத்தில் எண்ணங்கள் வந்து போயிருது அதை எழுதுவதற்குள் வேறு தோன்றுகிறது அதனால் நான் சரியாக் எழுதியிருக்கிறேனா குழ்ப்பிவிட்டேனா? என்று தெரியவில்லை.
35 லைன் 40 லைன் தான் பதிவு செய்தேன். நாளைக்கு ஒரு தலைப்பு யோசித்து
வைத்திருக்கிறேன்
:great: :great: :great:

மனதின் வேகத்தினையும் ஆற்றலையும் இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் மேலும் உண்மையாக உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.


பதிவு சூப்பர் .... அடுத்தடுத்து வரும் பதிவுகளையும் தொடருங்கள் ...

உங்களுக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை...
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Sun Oct 04, 2015 11:39 pm

நன்றி சார்
இன்று 2 பதிவுகள் செய்துள்ளேன். வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கும் இணையம் என்ற தலைப்பிலும் 'தேர்வில் தோல்வி அடைந்தவரா படிக்க விருப்பமில்லையா'
என்ற தலைப்பிலும் பதிவு செய்திருக்கிறேன். நாளைக்கு என்ன தலைப்பு என்று இதுவரை ஒன்றும் தோன்ற்வில்லை.

இன்று 2 பதிவுகளை பதிவிட நீணட நேரமாகிவிட்டது எழுத கருத்துக்கள் தான் தோன்றவில்லை

நாளை அதிகமாக பதிவு செய்ய முயற்சிக்கிறேன்
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Sun Oct 04, 2015 11:56 pm

சாந்திவி wrote:நன்றி சார்
இன்று 2 பதிவுகள் செய்துள்ளேன். வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கும் இணையம் என்ற தலைப்பிலும் 'தேர்வில் தோல்வி அடைந்தவரா படிக்க விருப்பமில்லையா'
என்ற தலைப்பிலும் பதிவு செய்திருக்கிறேன். நாளைக்கு என்ன தலைப்பு என்று இதுவரை ஒன்றும் தோன்ற்வில்லை.

இன்று 2 பதிவுகளை பதிவிட நீணட நேரமாகிவிட்டது எழுத கருத்துக்கள் தான் தோன்றவில்லை

நாளை அதிகமாக பதிவு செய்ய முயற்சிக்கிறேன்

:great: :great: :great:


இரண்டு பதிவுகளுமே சூப்பர் ....

50 பதிவுகள் சேரத்தான் கஷ்டப்பட வேண்டும்... பின் அவ்வப்பொழுது எழுதினால் போதும்... உதாரணத்திற்கு கடந்த 5 மாதத்தில் என்னிடமிருந்து எந்தவொரு கட்டுரையையும் பார்த்திருக்க முடியாது.... ஆனாலும் வருவாய் என்பது குறையாது அப்படியே வந்து கொண்டிருந்தது.

உங்கள் மனதிலிருந்து எழுதும் பொழுது விரைவாக அது காலி ஆவது என்பது இயல்பு.

அடுத்தடுத்து பதிவுகள் எழுத, எதிர் இருப்பவர்கள் ஆன்லைன் ஜாப் பற்றி என்னச் சொல்கிறார்கள் என்பதனைக் கொண்டு, அவர்கள் கருத்தின் சரி/தவறினை ஆராய்ந்து எழுத ஆரம்பிக்க வேண்டும்.

இப்படி எழுத ஆரம்பித்தால்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக் கொண்டிருப்பார்கள்.. ஆக நமது எழுத்தும் ஆன்லைன் வேலை என்ற ஒரே தலைப்பில் பல பல கட்டுரைகளை கொண்டு எண்ணிக்கை பல பல என தொடரும்.

படுகையில் ஆன்லைன் ஜாப் பற்றி அதிக பதிவுகள் வரக்காரணம், இந்த ஜாப் இப்படி செய்ய வேண்டும் என்று என் மனநிலையில் மட்டும் எழுதாமல், ஒவ்வொருவரின் மன நிலையும் கவனித்து, அவர்களுக்கு தகுந்தவாறு என்று அவ்வப் பொழுது நான் எழுதிக் கொண்டே இருப்பதுதான்.

இப்பொழுது நீங்கள் நிறைவேற்ற வேண்டியது குறைந்தப்பற்ற பதிவாக 20 பதிவுகளை முடித்துவிடுங்கள்... அடுத்தக்கட்ட நகர்வாக செய்ய வேண்டியதனையும்.. விரைவாக உங்களது பதிவுகளின் மூலம் உங்களது மனதினையும் சேர்த்தே படித்து, உங்களுக்கு ஏற்ற வகையில் அதனையும் சொல்கிறேன்...
சாந்திவி
Posts: 351
Joined: Fri Jun 28, 2013 4:07 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாந்திவி » Tue Oct 06, 2015 2:25 pm

நன்றி சார்
நான் நேற்று'சொந்த தொழில் சுய தொழிலி முன்னேற" என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்தேன்
இன்று 'கணணியும் தேவையில்லை கைப்பேசி போதும் பணம் சம்பாதிக்க ' என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு பதிவுகள் இன்று செய்ய முயற்சி செய்கிறேன் .
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by ஆதித்தன் » Tue Oct 06, 2015 2:56 pm

சாந்திவி wrote:நன்றி சார்
நான் நேற்று'சொந்த தொழில் சுய தொழிலி முன்னேற" என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்தேன்
இன்று 'கணணியும் தேவையில்லை கைப்பேசி போதும் பணம் சம்பாதிக்க ' என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு பதிவுகள் இன்று செய்ய முயற்சி செய்கிறேன் .
:great: :great: :great:
சூப்பர்..


உங்கள் எழுத்து நடையில் படுகையில் பயிற்சி பெற்றேன்... , இப்பொழுது சிறப்பாக ஆன்லைன் ஜாப் செய்து வருவாய் பெறுகிறேன் என்று உங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

GBDgift.com என்று மொட்டையாக கொடுத்தால் உங்களுக்கான வருவாய் இல்லாது போய்விடும், ஆகையால் ரெபரல் லிங்கினை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்... அதற்காக ஒவ்வொரு பதிவிலும் பயன்படுத்தினாலும் கூகுள் நமது ப்ளாக்கினை டெலிட் செய்ய வாய்ப்பிருக்கிறது. GBDgift தளத்தின் ப்ரோக்கிராமினை எழுதி எனது இரண்டு ப்ளாக் கடந்த வாரத்தில் டெலிட் ஆகியிருக்கிறது.

ஆகையால், பதிவுகளை பொதுவான கட்டுரையாக எழுதிவிட்டு GBDgift தளத்தினை ஒவ்வொரு பதிவிலும் கொடுப்பதற்கு பதில் வலது பக்கம் ஒர் விளம்பரமாக அமைத்துவிடுங்கள்.

வலப்பக்கம், உங்களது டெம்ப்ளேட் இரு பிரிவாக (மொத்தம் 3) இருக்கும் என்று நினைக்கிறேன்... அதிலிருந்து அந்த பாக்சினை டெலிட் செய்துவிட்டு, அதற்கு கீழே அந்த இரு பிரிவையும் சேர்த்து ஒர் பிரிவாக மொத்தம் 2 என்று இடப்பக்கம் வலப்பக்கம் என்று இருக்கலாம்... அதற்குள் பதிவு aRchive பாக்சினை போட்டுவிடுங்கள். அனைத்தினையும் அவ்விடத்திலேயே பயன்படுத்துங்கள்.

இல்லை மொத்தமே 2 பிரிவுதான் என்றால், Template > Customize > என்பதற்குள் சென்று வலப்பக்க width பெரிதாக்கிக் கொள்ளுங்கள்/.

அதிக பதிவுகள் செய்ய மற்றொரு தலைப்பு,,,, நாம் வாங்கியிருக்கும் பேமண்ட்... ஆம், எந்தவொரு ஆன்லைன் ஜாப்பிலிருந்து பேமண்ட் வாங்கினாலும் உடனே பேமண்ட் ப்ரூப் + நம்பிக்கை வார்த்தைகள் என்று ஒர் பதிவு செய்துவிட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் பேமண்ட் வாங்கிக் கொண்டிருந்தால் நமது வாசகர்கள் மேலும் ஆர்வம் கொள்வார்கள் என்பதற்காக குறைந்தப்பற்ற பேமண்ட் வந்தவுடன் உடனே பேமண்டினை வாங்கிக் கொள்வது எனது வழக்கமாக ஆரம்பத்திலிருந்தே கொண்டிருக்கிறேன்..

ஆகையால் 1 டாலர் கிடைக்குது என்றால் உடனே வாங்கி, அதன் பேமண்ட் ப்ரூப் பதிவு செய்வதனை மறவாதீர்கள்.
User avatar
சாதிக்
Posts: 407
Joined: Wed Oct 08, 2014 11:46 am
Cash on hand: Locked

Re: GBDgift - தினசரி பதிவுக்கு என்ன செய்வது?

Post by சாதிக் » Tue Oct 06, 2015 5:27 pm

சார் நான் பணம் என்னும் தலைப்பில் ஒரு பதிவு செய்து இருக்கிறேன் அடுத்த ஒரு பதிவிற்கு ரெடி ஆகி கொண்டிருக்கிறேன்.. அடுத்து வேற தளங்களின் வருவாய் பற்றி எழுதல்லாமா இந்த blog ல்?
Post Reply

Return to “இலட்சமே இலட்சியம்”