PhotoShop online Tutorial Training Free in Tamil - போட்டோ ஷாப் கத்துக்கலாம் வாங்க!

படுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.
Post Reply
revathipaapa
Posts: 26
Joined: Mon Apr 30, 2012 6:54 pm
Cash on hand: Locked

PhotoShop online Tutorial Training Free in Tamil - போட்டோ ஷாப் கத்துக்கலாம் வாங்க!

Post by revathipaapa » Sat Mar 17, 2012 12:06 pm

Image
பழைய படுகையில் பப்பா என செல்லமாக அழைக்கப்பட்ட, Revathimani2011-அவர்கள் போட்டோஷாப்பில் நடத்திய விடியோ டூட்டோரியல் பாடத்தினை அப்படியே உங்களுக்காக காப்பி பேஸ்ட் செய்துள்ளேன். படித்து விளக்கம் வேண்டும் எனில் கேளுங்கள், நான் சொல்லித்தருகிறேன்.
Image
part - 1 Marquee tools
Move tool


மூவ் டூல் மிகவும் சுலபம் நாம் செய்த படத்தை நகர்த்த மிகவும் பயன்படும்...........
நாம் போட்டோஷாப்பில் ஒரு படத்தை நகர்த்த இந்த டூல்ஸை கிளிக் செய்த பிறகே நகர்த்த முடியும்......

விடியோவை பாருங்க......
லேயர் (Layer)


போட்டோஷாப் கற்றுக்கொள்ளும் போது முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியதில் ஒன்று லேயர்...

இந்த லேயர் பத்தி நான் சுருக்கமா சொல்லிடறேன்.

லேயர் என்பதை தமிழில் அடுக்கு என்போம்.. அதாவது அடுக்கு அடுக்கா நாம் ஒரு படத்தில் சேர்க்க விரும்புவதை சேர்க்கலாம். அதை நீஙகள் அழிக்கும் போதும் சரி. திருத்தும் போது சரி நாம் சேர்த்திருக்கும் மற்ற சேர்ப்புகள் பாதிக்கபடாது.

ஆனால் எல்லாவற்றையும் ஒரு அடுக்கில் செய்துவிட்டு பாதித்ததே என கூறக்கூடாது..

உதாரணமாக நாம் ஒரு சாமி படத்தை வைத்திருக்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அதன் தலையில் பூ வைப்பது போல் செய்ய நினைத்தீர்கள் என நினைத்தால் பூவை கட் செய்து அதனை தனி லேயராக போட வேண்டும். அப்போது தான். சாமியின் தலையில் சரியாக நகர்த்தி வைக்க முடியும். அந்த சாமி படத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் செய்ய முடியும்...

லேயர் பற்றி இன்னும் சொல்ல வேண்டி இருக்கு இப்போ இது பேசிக் தான் இதை புரிஞ்சிகிட்டாதான் நான் லேயரில் அடுத்து அடுத்து சொல்லி தர முடியும்.....

இந்த வீடியோவை பாருங்க............. புரியாததை கேளுங்க...

நீளமாக இருந்ததால் இரண்டாக பிரித்து போட்டுள்ளேன்
Lasso Tool


வணக்கம் நண்பர்களே.... நாம் வரிசையா போட்டோ ஷாப் டூல்ஸ் பற்றி பார்த்துகிட்டு வருகிறோம். இதுல நாம் இன்னைக்கு பார்க்க இருப்பது Lasso Tool.

இதனுடைய பயன் என்ன்?

போட்டோஷாப்பில் முக்கிய வேலையான ஒரு போட்டோவை வெட்டி ஒட்ட இது பயன்படுகிறது.

இப்போ உங்களுக்கு ஒரு படத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஒரு நபரை நீங்கள் செலக்ட் செய்ய விரும்பினால் அதற்கு இந்த டூல் பயன்படும்..

உங்களுக்கு இந்த வகுப்பை படத்துடன் விளக்கியுள்ளேன் ...........

நீங்கள் செய்து பார்த்து முடிந்தால் ஒரு படம் போடுங்கள்...... பெருசாக வேண்டாம் கட் பண்ணி பேஸ்ட் பண்ணி போட்ட போதும்.. Magic wand tool


இன்னைக்கு நம்ம பார்க்க போற டூல் magic wand tool .

இதை பயன் படுத்தி நாம் ஒரே நிறத்தில் இருப்பவதை ஒரே கிளிக்கில் செலக்ட் செய்ய முடியும்......

நீங்கள் கிளிக் செய்யும் இடத்தில் இருக்கும் கலர்களை மாட்டுமே செலக்ட் செய்யும். சிறிது டார்க்காகவோ அல்லது லைட்டாகவோ இருந்தால் அதனை செலக்ட் செய்யாது.

நீங்கள் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.........
Crop Tool


இந்த டூலும் மிகவும் சுலபமானது. ஒரு போட்டோ இது போட்டோவை வெட்டுவதற்கு பயன்படுகிறது. ஒரு போட்டோவில் குறிப்பிட்ட பகுதி வரைக்கு மட்டும் போதும் என நினைத்தால் அதனை நாம் கட்டமாக வெட்டி விடலாம். மற்ற பகுதிகள் போட்டோவை விட்டு நீங்கி விடும்.

இதையும் செய்து பாருங்கள்..............

[youtube]http://www.youtube.com/watch?v=Vo2pleUa ... r_embedded[/youtube]

Slice Tool

ஒரு மாங்காய எப்படி ஸ்லைஸ் போடுவீங்கலோ அப்படி ஒரு படத்தை சிலைஸ் போடப்போறோம்..... அது தான் இந்த டூல்ஸ் உடைய வேலை. இன்னும் இருக்கலாம். எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்.....
Healing & Patch Tool

இந்த டூல்களை எனக்கு ஓரள்வு மட்டுமே எனக்கு தெரியும். அதை பயன்படுத்தி செய்ததை உங்களுக்கு வகுப்பாக அமைத்துள்ளேன்.

Ground Tool


அடுத்த டூல் எல்லாம் பார்க்கிறத்துக்கு முன்னாடி நாம் இந்த Ground tool பார்த்துடுவோம். அப்பதான் அடுத்த வர டூல். ஈசியா இருக்கும். முதலில் இதை கற்று கொள்ளுங்கள். ரொம்ப ஈசி. கலர் எப்படி செலக்ட் செய்வது எப்படி என்பதை மட்டுமே சொல்லி இருக்கிறேன்
Brush & pencil Tool

இந்த டூல் பற்றி அவ்வளவு விளக்கம் தரவேண்டியது இல்லை என நினைக்கிறேன்

வீடியோவை பாருங்கள்
stamp tool

இந்த் ஸ்டாம் டூல் ஒரு படத்தை மற்றும் ஒரு டிசைனை ஸ்டாம்ப் செய்ய பயன்படுகிறது. இந்த வீடியோவை பாருங்கள் History brush Tool

இதில் இரண்டு டூல் இருக்கிறது. இரண்டையும் வீடியோவில் எனக்கு தெரிந்த அளவு விளக்கியுள்ளேன்.

முதல் டூல் தான் ரொம்ப முக்கியம். அதாவது நாம் பயன்படுத்தும் brushing model டூல்ஸ் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

அதாவது நாம் பயன்படுத்திய(stamp tool , brush, pencil, healing brush) இவற்றிற்கு எல்லாவற்றிற்கும் பொருந்தும். ஏன் blurக்கு கூட பொருந்தும்...

என்ன பயன் என்றால் ஒரு இடத்தை விட்டு விட்டு மாட்டும் பிரஷ் செய்ய வேண்டும் என நினைத்து இருப்போம். ஆனால் அதன்மீது செய்து இருப்போம். அதனை அழிக்க இந்த டூல்....

வீடியோவை பாருங்கள் உங்களுக்கு புரியும்..........
Eraser Tool


இது அழிக்கறத்துக்கு என்பது உங்களுக்கு தெரியும். ஆனா இதில் மூன்று விதம் இருக்கிறது. அதில் எனக்கு இரண்டு மட்டுமே தெரியும். அதனை உங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கிறேன். வீடியோவை பாருங்கள். feather option
படத்தில் கட் செய்த பிசுறு தெரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் (feather option)

இந்த வீடியோவில் நான் ஷூம் செய்வது எப்படி என்பதை கூறி இருப்பேன்

ஷூம் அதிகரிக்க ctrl + space bar இரண்டையும் பிடித்து கொண்டு மவுஸின் இடது பட்டனை அழுத்தவும்
அதே போல் ஷூம் குறைக்க Alt+ space bar இரண்டையும் பிடித்து கொண்டு மவுஸின் இடது பட்டனை அழுத்தவும்

zoom அதிகமாக இருக்கும் போது மேலே கீழே நகர்வது கடினமாக இருக்கும் அப்போது space bar ஐ பிடித்துக்கொண்டு, மவுசின் இடத்து பொத்தானை அழுத்தி இருக்காவும்.

நீங்கள் எந்த டூலில் இருந்தாலும் இப்படி செய்யலாம். நீங்கள் ஸ்பேஸ் பார் அழுத்தும் போது அது கை போன்ற உருவத்தில் மாறிவிடும். ஸ்பேஸ்பார் விட்டது நார்மலாக மாறிவிடும்.

சரி வீடியோவை பார்த்து படத்தை பிசிறு இல்லாமல் செய்வது எப்படி என்பதை கற்றுகொள்ளுங்கள்
ஒர் சின்ன குறிப்பு:

இந்த விடியோவில் feather எனும் வார்த்தைக்கு பதில் feature எனக் கூறப்பட்டுள்ளது. ஆகையால், select என்ற டூலில் சென்று feature என்பதனை தேடாமல், சரியான feather என்பதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும், feather உருவாக்கும் பொழுது கேட்கும் எண், எத்தனையாவது லேயர் என்பதற்கானது. ஆகவே, அதில் வரும் ஆட்டோ எண்ணை அப்படியே விட்டாலும் சரி.

Gradient & Paint bucket Tools
Text Tool

Text tool - இரண்டாக பிரித்து போட்டுள்ளேன். shape Drawing (shape tool)

நான் வீடியோவில் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். அதை உங்களுக்கு இங்கு சொல்லிவிடுகிறேன். அதாவது இந்த ஷேப் டூலுக்கும் செலக்‌ஷன் டூலில் உள்ளவாறு shape கூட கூட்ட கழிக்க என்ற ஆப்ஷன் இருக்குது. புரியலையா
normal , add shape, minus shape என நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். அதை தான் சொன்னேன். புரியலைன்னா திரும்பவும் கேளுங்க

Image

Image
வகுப்பு 18 Blur, sharpen, smudge Tools

Image
இந்த டூலில் எனக்கு தெரிந்த அளவு நடத்தியுள்ளேன். இனி வரும் டூல்கள் எனக்கு ஓரளவு மட்டுமே தெரியும். நான் இந்த டூல்களை அதிகம் பயன்படுத்தியது இல்லை. எனக்கு தெரிந்ததை மட்டுமே சொல்கிறேன் :thanks:
revathipaapa
Post Reply

Return to “உதவிக் களம்”