ஆன்லைன் வேலைக் குறிப்புகள் டாட் காம்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் வேலைக் குறிப்புகள் டாட் காம்

Post by ஆதித்தன் » Mon Sep 23, 2013 11:56 pm

http://3.bp.blogspot.com/-MnHAvVeof_Q/T ... 0/food.jpg[/fi]இணையதளப் பணிகளைப் பற்றி சிறப்பாகத் தொகுத்தெடுத்து குறிப்புகள் கொடுக்கும் தளங்கள் கொஞ்சம் இருக்கின்றன என்றாலும் தமிழில் இருப்பது என்பது விரல்விட்டு எண்ணும் வகையில் தான் அமைந்துள்ளன. அதிலும் பெரும்பான்மையான தளங்களில் தகவல்களை வரிசைப்படுத்தி படிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நமது படுகையிலும் பல பல முழுமையான தகவல்களும், சின்னச் சின்னக் குறிப்புகளும் இருந்தாலும், எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில் சொல்வது கஷ்டம் என்பதால்.. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பதிவாகக் கொடுத்திருப்பதுடன், முக்கியமானவற்றினை அங்காங்கே லிங்காக தேவைப்படும் இடத்தில் தொகுத்து வைத்திருக்கிறோம். இருந்தாலும் தொடர்பு கொள்ள கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தற்செயலாக குறிப்புகள் என்ற தமிழ் ஆன்லைன் வேலை சம்பந்தமான டாட் காம் பார்க்க நேரிட்டது. மிக விவரமாக நியோபக்ஸ் (PTC) ஜாப் பற்றிய தகவல்களை ஒரே பக்கத்தில் கொடுத்திருந்ததோடு, துணைக்கு க்ளிக்சென்ஸ், அட் ஹிட்ஸ், ப்ரிலன்ஸ், ஒடெஸ்க் என 9 தளங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


நியோபக்ஸ் ஒர் நம்பகமானத் தளம் என்பதில் எனக்கு எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. 2010 ஆண்டில், அத்தளத்தில் இணைந்து பிறர்க்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்த நான், பின் அவர்கள் எடுத்த சில விலைக் குறைப்பால் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால், அந்த சிறிய விலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது தொடர்ந்துள்ளேன். இவர்கள் வழங்கும் ரெண்டல் ப்ரோக்கிரம் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு ப்ராபிட் வரும் என்று அன்றைய நாளிலும் சரியாக கணக்கிட முடியவில்லை. இன்றும் சரியாக என்னால் கணக்கிட முடியவில்லை. ஆவரேஜ் வேல்யூவ் குறைவாக இருக்கிறது என்பது நன்றாக தெரிவதோடு, ரின்யூவல், ரீசைக்கிள் என மாற்றிப் பார்த்தும் மிகவும் சிரமாகவே இருந்தது, சாதாரண உறுப்பினராய் இருந்து செலவுகளைக் கடந்து இலாபம் ஈட்டுவது என்பது. ரெண்டல் ரெபரல்களைக் காட்டிலும் நேரடி ரெபரல்கள் மூலமாகத்தான் நல்ல வருவாய் உண்மையாக பார்க்க முடியும் என்பதுதான் எனது கருத்தாக இன்று மாறியுள்ளது. ஏனெனில், நாம் பல ஆயிரம் டாலர்கள் சம்பாதித்து வரும் நபர்களை பெரும்பான்மையாக கண்டு கொள்வது, அவர்கள் நேரடி ரெபரல்களைச் சேர்க்க செய்யும் விளம்பரத்தின் வாயிலாகத்தானே தவிர... தன் வேலை உண்டு, தன் ரெண்டல் ரெபரல் உண்டு என்று உட்கார்ந்திருக்கும் பொழுது அல்ல என்பதே பெரிதான வாய்ப்பு.

ரெண்டல் ரெபரல்களைக் காட்டிலும் நேரடி ரெபரல்கலே நியோவுக்கு சிறப்பு என்பது என்னுடைய கருத்து மட்டுமே. சிலர்க்கு நல்ல டவுன்லைன் கிடைத்து சிறப்பாக வருவாய் பார்த்து வரலாம். எப்படியாயினும், சரியாக செய்து வந்தால் நியோவில் அதற்கான வருவாய் பார்க்கலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ரெண்டல் ரெபரல் திட்டத்தில் எளிதாக வருவாய் கொடுக்கும் தளம் ப்ரோபக்ஸ். இதில், சாதரண உறுப்பினராக இருந்து கூட வெறும் 5 நிமிடப் பணியான விளம்பரம் மட்டும் பார்த்து, நமது இணையப்பில்லினைக் கட்டிவிடலாம். அதைப்போல், க்ளிக்சென்ஸ் என்ற தளத்தினையும் ஒர் கண்ணில் வைத்து, ஆர்ட்டிகள் ரைட்டிங்க் மூலம் நம் வலைப்பூ மூலம் விளம்பரப்படுத்தி வந்தால், நேரடி ரெபரல் என்று இதிலும் காசு ... ப்ரோவிலும் நேரடி ரெபரல் வருவாய் என மாதம் ரூ.5000/-க்கும் மேல் பார்க்கலாம் என்பதும் சாத்தியமான ஒன்று.


ஆனால் என்ன, இதனை நம்பிச் செய்வோர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. குறிப்பாகச் சொன்னால், நான் ப்ரோபக்ஸில் 100 நேரடி ரெபரல்களை என்றோ எட்டிவிட்டேன்.. ஆனால் அதில் சரியாக தினம் க்ளிக் செய்வோர்கள் வெறும் 5 நபர்கள் மட்டுமே. 70க்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்ததோடு சரி, அடுத்த நாள் முதல் அந்த தளத்தின் பக்கமே வரவில்லை. மீதம் இருப்பவர்களில் சிலர் முதல் நாள் மட்டும் க்ளிக் செய்திருக்கிறார்கள் அத்தோடு காணாமல் போய்விட்டனர். 100 நபர்களைச் சேர்ந்த என்னோட வருவாய், 5 நிமிடப் பணியில் ஒர் நாளைக்கு அவ்ரேஜ் ஆக $0.0005 * 4 * 100 = $ 0.200 > என ஒர் மாதத்திற்கு 8 டாலர்க்கும் மேல் வர வேண்டும். ஆனால் வெறும் 5 நபர்களே செய்வதால் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் ரெண்டல் ரெபரல் மூலம் மாதம் 10 டாலர் வந்துவிடுகிறது.


பிறர் செய்யாமைக்கான முதன்மையான காரணம், 5 செண்ட் என்பது அவர்களுக்கு மிகவும் குறைவாகத் தெரிவதோடு, மாதம் ஆனால் 30000 ஆயிரம் வேண்டும் அல்லது 10 ஆயிரம் கொடுத்தாலும் போதும் என்ற மனோபாவமே தவிர, அந்த 10000 ரூபாய் வருவதற்கான பணியினைச் செய்வேன் என்பது கிடையவே கிடையாது என்பதுதான்.


ப்ரோபக்ஸில் 100 நபர்களை என்றோ சேர்த்து முடிக்க நான் செய்தது இதோ..இப்போது படிக்கிறீர்களே.. இதற்கு முன்னர் பணம் சம்பாதிக்கலாம் வாங்க என எழுதியதனைப் படித்தீர்களே.. அதனைப் போன்ற ஆர்ட்டிகள் தான். அதே ஆர்ட்டிகள் தான், க்ளிக்சென்ஸில் என்னை 543 ரெபரல்களைத் தாண்டி கூட்டிச் சென்று கொண்டிருக்கிறது. ப்ரோவில் 100-க்கு மேல் சேர்க்க முடியாது என்ற காரணத்தினால் அந்த ரவுண்ட் அப்படியே நின்றுவிட்டது. ஆனால் க்ளிக்சென்ஸீல் அன்லிமிடட் என்பதால் எண்ணிக்கை வளர்ந்தாலும் இங்கும் அதே நிலைதான். இதிலும் சுமார் 13 நபர்கள் மட்டுமே தினமும் ஆக்டிவாக க்ளிக் செய்கிறார்கள். 500 நபர்களும் அக்டிவாக ஒர் 5 நிமிடம் ஒதுக்கியிருந்தால் என்னுடைய வருவாய் இந்த தளத்தில் தலைக்கு $0.008 என்று வைத்துக் கொண்டால், 0.008 * 500 > 0.40 + அடிசனல் கோல்டன் போனஸ் 0.50 என ஒர் நாளைக்கு 1 டாலர் வீதம் , மாதம் 30+ டாலர் பார்க்க முடியும். ஆனால், ஒர் சிலரே செய்வதால் மாதம் 12 டாலர் தான் பார்க்க முடிகிறது.

இதற்கும் மேலான ஒர் அடிப்படை, நான் ஆர்ட்டிகள் எழுதி 500-க்கும் மேற்பட்ட நபர்களைச் சேர்த்திருக்கிறேன், நீங்களும் அதனைப் போல் ஆர்ட்டிகள் எழுதி + விளம்பரம் செய்து தங்களுக்கு கீழ் நபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றுச் சொன்னால், ஏதோ நாய் பிடிக்க சங்கிலியினைக் கொடுத்தது போல மிரட்சி அடைகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் உங்களை நான் தொடர்பு கொண்டு பிடிக்கவில்லை, நீங்களாகவே வந்து இணைந்து கொண்டீர்கள் என்ற ஆர்ட்டிகள் + விளம்பர வலிமையைப் பார்க்க தவறிவிடுகிறீர்கள்.

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... நான் ஒர் பக்கம் ஆர்ட்டிகள் எழுதுகிறேன் என்றால் நீங்களும் ஒர் பக்கம் ஆர்ட்டிகள் எழுதுங்கள், அப்பொழுதுதான் நீங்களும் வெற்றியடைய முடியும். நான் எழுதிவிட்டேன் என்று வேடிக்கை பார்ப்பது என்பது பக்கத்து இலைக்காரன் சாப்பிடுறான், அதனை பார்த்துக் கொண்டிருக்கிற எனக்கும் வயிறு நிறைந்துவிடும் என்பது போல் தான் இருக்கிறது. அதைவிட மிக மோசமானது, இவர் சாப்பிட்டுட்டாரு இனி நமக்கு சாப்பாடே கிடைக்காது என்பது. அதாவது, நான் 500 நபர்களைச் சேர்த்துவிட்டதால், தனக்கு ஆளே கிடைக்காது என நினைப்பது. உலகில் தினமும் இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டே இருக்கிறது. அதைப்போல் தினமும் இணைய உலகிற்குள் புதியவர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அதில் உங்களுக்கான நபர்களாக நிர்ணயிக்கப் போவது உங்களது சிறந்த ஆர்ட்டிகள் தான். ஆகையால், நிறைய ஆர்ட்டிகள் எழுதினீர்கள் என்றால், இணையத்தில் வெல்வது கொஞ்சம் எளிது.

நீங்களும் செய்யும் ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் பற்றியும் தெளிவாக ஆர்ட்டிகள் எழுதுங்கள். அந்த தெளிவான ஆர்ட்டிகளே உங்களை அந்த இலக்கினை நோக்கிப் பயணிக்கு உதவியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால், க்ளிக் சென்ஸ் மூலம் 1 டாலர் தினம் சம்பாதிக்க முடியும் ... ப்ரோ மூலம் ஒர் நாளைக்கு 50 செண்ட் பார்க்க முடியும் ... நியோ மூலம் 50 செண்ட் பார்க்க முடியும் என்ற என்பது திட்டமிடுதல் தான், அதற்குத் தேவையான ரெபரல்களை நோக்கிய பயணங்கள் தான் இந்த ஆர்ட்டிகள்/கட்டுரைகள்.

இதைப்போல், பாரக்ஸ் பற்றிய எனது கட்டுரைகளையும் கடந்த 6 மாதமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்... அதன் பலனாய் தற்பொழுது சிறிய வாசகர் வட்டத்தினைப் பெற்றுவிட்டேன். விரைவில் அதற்கும் நல்ல வாசகர்கள் வட்டத்தினை அடைவதோடு வருவாயினையும் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். இப்படி எந்தவொரு துறையினை எடுத்துக் கொண்டாலும் நமது அடித்தளத்தினைப் பொறுத்துத்தான் வருவாய் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், சிரமம் பார்க்கமால் ஒர் 3 மாதம் சொந்தமாக ஆன்லைன் ஜாப் பற்றிய ஆர்டிகள் தினம் 1 வீதம் எழுத ஆரம்பியுங்கள்... பின்னர் வாரம் ஒன்று எழுதினால் கூட போதும்.. முந்தையதனை வலுவாக்கி நமக்கான வருவாய்க்கு ஏதுவாக அமையும்.
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி, ஆன்லைன் வேலைகள், டேட்டா என்ட்ரி வேலை, இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம், இணையதளம், குறிப்புகள், ஆன்லைன், வெற்றி, தமிழ், ரூபாய், டாலர், உதவி, தகவல், வழிகாட்டி, வேலைவாய்ப்பு, kurippugal, ஆன்லைன் வேலை குறிப்புகள் டாட் காம், kurippugal.com
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”