உழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்தியமா?சவுடாலா

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

உழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்தியமா?சவுடாலா

Post by கிருஷ்ணன் » Mon Jul 01, 2013 10:37 am

நாம் அடிக்கடி செய்யும் பதிவின் தலைப்பு "உழைத்தால் ஒரே நாளில் வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை" என்பதுதான். பலருக்கும் தலைப்பைப் பார்த்தவுடனே இது எல்லாம்ஆன்லைனில் சாத்தியமல்ல,வெறும் சவுடால் என்பது போலத் தோன்றக்கூடும்.இதனாலேயே பலரும் அதனை முயற்சி செய்யாமல் அலட்சியப் படுத்திவிட்டு பதிவைக் கடந்து விடுகின்றனர்.புதிதாக முயற்சி செய்பவர்களும் விடா முயற்சியின்றி விட்டு விடுகின்றனர்.ஆதி சார் குறிப்பிடுவது போல‌ ஆன்லைன் ஜாப்பின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் கட்டற்ற சுதந்திரம் என்பதுதான் மேலும் நிரூபிக்கப்படும் உண்மை.எளிதான பணிகள் கிடைக்கும் பொழுதான் நாம் இதனைக் குறிப்பிடுகிறோம்.இதோ கடந்த வாரத்தில் ஒரே நாளில் நான்கு தளங்களிலும் நான் டாஸ்க்குகள் செய்து பெற்ற பணம் சுமார் ரூ 1400க்கும் (25$)மேல். எளிதான பணிகள் கிடைக்கும்பொழுது முயற்சி செய்தால் இதனைவிட அதிகமாக சம்பாதிக்கலாம்.CROWD FLOWER ல் DEDICATOR பதவியை அடைந்தால் ஒரு டாஸ்க்குக்கு 0.25$ முதல் 1$ வரை கூட உங்களுக்கு டாஸ்க்குகள் கிடைக்கும்.எனவே மனம் தளராமல் முயற்சி செய்து உங்கள் வருவாயினைப் பெருக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
Image
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்தியமா?சவு

Post by ஆதித்தன் » Mon Jul 01, 2013 11:19 am

:great:


எனக்கும், இந்த வாரத்தில் $25(ரூ.1500) கிளிக் ஆகிவிட்டது.... ஒவ்வொரு பேமண்ட் ப்ரூப்பாக இணைக்கலாம் என்று இருக்கிறேன்.
narasi
Posts: 52
Joined: Fri May 24, 2013 7:30 am
Cash on hand: Locked

Re: உழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்தியமா?சவு

Post by narasi » Mon Jul 01, 2013 11:24 am

நானும் கடந்த வாரத்தில் 11 டாலர்ஸ் எடுத்துள்ளேன் மிகவும் சந்தோசமாக உள்ளது
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

Re: உழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்தியமா?சவு

Post by கிருஷ்ணன் » Thu Nov 07, 2013 11:58 pm

ஆன்லைன் ஜாப்பில் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் பலருக்கும் ஒரே நாளில் ஒரு டாலர் (ரூ 60/) சம்பாதிப்பது கூட பெரும்பாடாகத்தான் தோன்றும்.இந்த நிலையில் நான் அடிக்கடி ஒரே நாளில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றால் அது எல்லோருக்கும் அப்பட்டமான பொய்யாகவேத் தோன்றும்.கடும் பயிற்சியும் பழக்கமும் இருந்தால் பழகிய டாஸ்குகள் மட்டுமல்ல புதிதாக நீங்கள் முதன் முதலில் செய்யும் டாஸ்குகளில் கூட ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பது சாத்தியமே.இதற்கு நான் ஏற்கன‌வே பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன்.ஒரு சின்ன குறை உழைப்புடன் சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும்.அதாவது பணிகள் கிடைக்கும் நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இருப்பதோடு பணிகளைத் தொடர்ந்து பத்து மணி நேரத்திற்கும் மேலாகச் செய்ய உங்களுக்கு அவகாசமும் இருக்க வேண்டும்.அதனோடு க்ரௌட் ஃப்ளவர் கம்பெனி ஒரு குறிப்பிட்ட பணிகளுக்குப் பிறகு பணிகள் மீதம் இருந்தாலும் உங்கள் அக்குயுரெசி அதிகமாக இருந்தாலும் பல நேரங்களில் உங்களுக்கு தேங்கஸ் கொடுத்து வெளியேற்றி விடுவார்கள்.அவ்வாறு வெளியேற்றாமல் இருக்க சிறிது அதிர்ஷ்டமும் வேண்டும்.அப்படியே வெளியேற்றினாலும் மற்ற பிடிசி தளங்களில் அதே பணியில் நீங்கள் தொடர்ந்து சம்பாதிக்கலாம். இப்படி ஒரே பணியில் இன்று க்ளிக் சென்ஸில் நான் 166 டாஸ்குகள் முடித்து சுமார் 1300 ரூ ஒரே நாளில் சம்பாதித்து உள்ளேன்.மற்ற பணிகளையும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 27$ (ரூ 1700/‍) பே அவுட் ரெடி செய்து விட்டேன்.நாளை என் பேபால் கணக்கிற்கு வந்து விடும்.

செய்த டாஸ்கின் பெயர்

What are the dominant formats of these Youtube Channels?

ஒரு டாஸ்கிற்கு 0.13$ பேமெண்ட்.முதலில் ஒரு டாஸ்கினை முடிப்பதற்கு பத்து நிமிடம் எடுத்துக் கொண்டது.ஒரு மணி நேரத்தில் சுமார் 6 டாஸ்குகளே செய்ய முடிந்தது.அதுவும் பணியினை மிகவும் பெர்ஃபெக்டாகச் செய்ய வேண்டியிருந்தது.சிறு தவறு செய்தால் கூட அக்குய்ரெசி வேகமாகக் குறைய ஆரம்பித்தது.எனது மற்ற பணிகளில் பயன்படுத்தும் விரைவான ட்ரிக்ஸ்கள் எதுவும் எடுபடவில்லை.ஆனால் பணிக்கேற்ற ஊதியம் உள்ளதால் விடாமல் முயன்றேன்.சித்திரமும் கைப்பழ‌க்கம் என்பது போல போகப் போக டாஸ்குகளின் சூட்சமம் புரிந்தது.கடைசியில் ஒரு மணி நேரத்தில் 20 டாஸ்குகளுக்கும் மேல் அக்குய்ரெசி குறையாமல் செய்ய ஆரம்பித்தேன்.இன்னும் அந்த பணிகள் ஆயிரட்த்திற்கு மேல் இருக்கும் நிலையில் என்னை வெளியேற்றி விட்டார்கள்.

Image
Image

Image

எனவே உழைத்தால் ஒரே நாளில் ஆன்லைன் ஜாப்பில் இரண்டாயிரம் ரூபாய் பார்ப்பது சாத்தியமே என்ற விவாதத்திற்கு ஆதாரம் சேர்த்துள்ளேன்.சவுடால் என்பவர்கள் ஆன்லைன் ஜாப்பினைப் பற்றிய அறியாமை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்.ஆனால் பதினெட்டு மணி நேர விடா உழைப்பால் மட்டுமே ஒரே நாளில் இந்த 1700 ரூபாயினைச் சம்பாதிக்க முடிந்தது.உழைப்பு என்றும் உயர்வு தரும்தானே.


மேலும் சர்வே ஜாப்ஸ்,டாஸ்குகள் பற்றிய டிப்ஸ்கள் படுகை கோல்டன மெம்பர் பகுதியில் தினமும் அப்டேட் ஆவதால் நீங்களும் படுகை கோல்டன் மெம்பராகி பலன் பெற வாழ்த்துக்கள்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: உழைத்தால் ஒரே நாளில் ரூ1000 முதல் 2000 வரை:சாத்தியமா?சவு

Post by ஆதித்தன் » Fri Nov 08, 2013 12:13 am

டபுள் வாழ்த்துகள் சார்,

நேற்றிலிருந்து எளிதான யூடியூப் பணி கிடைத்தாலும் என் மனநிலை ஒத்துவராத காரணத்தினால் ஒர் டாஸ்க் கூட செய்ய முடியாமல் போனது.


ஆனால், இன்று Offernation or Rewardways என்ற ஏதேனும் ஒர் தளத்தில் பேஅவுட் வாங்கி, அதனைப் பற்றிய முழு விவரமான பதிவினைக் கொடுத்துவிட வேண்டும் என்று சாப்பிட்டு வந்ததும், உட்கார்ந்தேன் .. யூடியுப் டாஸ்க் மூலம் 1 டாலர் பேஅவுட்டுக்கு ரெடியாகிவிட்டதோடு, என்னும் அக்யூரசி இருக்கிறது. இனி விரைவாக முடித்துவிட்டு, ஒர் விடியோ க்ளிப் இன்று இரவோடு இரவாக முடித்துவிட வேண்டும் என்று நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறேன்.


பணம் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுங்கள் ...

நாங்கள் செய்யும் அதே பணியில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்... எங்களுக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”