ஆன்லைன் வேலை-ஒரு அலசல்.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

ஆன்லைன் வேலை-ஒரு அலசல்.

Post by umajana1950 » Fri Apr 27, 2012 10:26 pm

ஆன்லைன் வேலை-ஒரு அலசல்.


இணைய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

முதலில் இணையத்தில் வேலை தேடுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால், வீட்டில் இருந்தே ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் மாணவர்களாக இருக்கலாம்,பெண்களாக இருக்கலாம், இளைஞர்களாக இருக்கலாம், வயதானவர்களாகக் கூட இருக்கலாம்.

இவர்கள் எல்லோருமே சில மணி நேரங்களை செலவு செய்து, தங்களுக்கு தேவையான பணத்தை இணையம் மூலமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களாகத் தான் இருக்கிறார்கள். இது போன்று இணையத்தில் வேலை தேடி, ஆராய்ந்து பார்த்து விரக்தி அடைந்தவர்கள் ஏராளம். தங்கள் பணத்தை இழந்தவர்களும் ஏராளம்.

ஆன்லைன் ஜாப் தேடுபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் முழு நேர ஆன்லைன் ஜாப் தேடுபவர்கள் முதல் ரகம். பகுதி நேரமாக உழைக்க விரும்புபவர்கள் இரண்டாவது ரகம். முழு நேர வேலை தேடுபவர்கள் தொழில் நுட்ப ரீதியாக தங்களை தயார் படுத்திக் கொண்டவர்களே அதிகமாக இருப்பார்கள். இரண்டாவது ரகத்திலும் சிலர் தொழில் நுட்ப அறிவு உடையவர்களாக இருப்பார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ரகத்தினருக்கும் freelancer.com சில தளங்கள் வேலை கொடுக்கின்றன. அவற்றில் தங்களை ரெஜிஸ்டர் செய்து கொண்டால், அவர்களுக்கேற்ற வேலை அந்த தளத்தில் வரும் போது அதனை எடுத்து செய்யலாம். அதன் மூலம் ஒரு கணிசமான வருவாயை அவர்கள் ஈட்ட முடியும்.

இரண்டாவது ரகத்தில் இன்னும் ஒரு பிரிவு இருக்கிறது. பகுதி நேரம் வேலை பார்க்க விரும்புபவர்கள். அதுவும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ள முடியும் என்று நம்புபவர்கள். ஆனால், இவர்களுக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இருக்காது. கணினியை இயக்கத் தெரியும். ஓரளவுக்கு ஆங்கிலமோ, தமிழோ தெரியும்.

இரண்டாவது ரகத்தில் இன்னும் ஒரு பிரிவு இருக்கிறது. பகுதி நேரம் வேலை பார்க்க விரும்புபவர்கள். அதுவும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வேலை செய்ய விரும்புபவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ள முடியும் என்று நம்புபவர்கள். ஆனால், இவர்களுக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இருக்காது. கணினியை இயக்கத் தெரியும். ஓரளவுக்கு ஆங்கிலமோ, தமிழோ தெரியும்.

இப்போது இவர்களைப் பற்றித் தான் நாம் பார்க்கப் போகிறோம். இவர்கள் ஆன்லைனில் சம்பாதிக்க சில
வழிகள் இருக்கின்றன. அவை மெயில் பார்ப்பது, எஸ். எம். எஸ் பார்ப்பது, விளம்பரம் பார்ப்பது இன்னும் இது மாதிரி சில. இந்த வேலைகளுக்கு பெரிய தொழில் நுட்பம் எதுவும் தேவை இல்லை. மேலும், இது மாதிரி வேலை இணையத்தில் கொடுக்கும் தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அவற்றில் மிகச் சிலவையே உண்மையாக பணம் தருகின்றன.

இந்த தளங்களில் இது மாதிரி வேலைகளை செய்து நாம் சம்பாதிப்பதற்கு நமது ஆயுள் போதாது. ஏதோ சும்மா இருப்பதற்கு பதிலாக ஒரு சிறு தொகையை நாம் ஈட்ட முடியும். இதை விட சற்று அதிகமாக சம்பாதிக்கக் கூடிய ஒரு எளிய வழி ஒன்று இருக்கிறது. அதனை அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
-மீண்டும் சிந்திக்கலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் வேலை-ஒரு அலசல்.

Post by umajana1950 » Sat Apr 28, 2012 5:54 pm

வணக்கம் நண்பர்களே,
இணையத்தில் நம்பக்கூடிய தளங்களும், ஏமாற்றும் தளங்களும் ஏராளமாக இருக்கின்றன. அவை எல்லாமே சொல்லக் கூடிய தாரக மந்திரம் "வீட்டிலிருந்தே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க வைப்போம்" என்பது தான். இன்னும் கூட லட்சக் கணக்கில் மக்கள் இணையத்தில் நல்ல தளம் எது என்று ஆராய்ச்சி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

இவைகளில் பெரும்பாலும் நாம் கேள்விப்படுவது ‘data entry jobs, typing for cash, blogging, affiliate marketing, get paid to click, surf, survey and read emails, and freelance writing‘ இவைதான். இணையத்துக்கு புதியவராக ஒருவர் இருக்கும் பட்சத்தில் இதனில் எதை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆனாலும் கூட நாம் எல்ல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து நம்முடைய திறமைக்கும், உழைப்புக்கும் எது சிறப்பாக இருக்கும் என்று சற்று நன்றாகவே அறிந்து தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

data entry jobs, typing for cash போன்றவை புதியவர்களுக்கு ஓரளவு பணம் ஈட்டித் தரும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் நமது கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறிய விஷயம் தான்.

ஆன்லைன் வேலை தேடும் புதியவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்துகொண்டால், அது அவர்களுக்கு தான் மேற்கொள்ளும் வேலை செய்வதற்கு ஒரு தெம்பையும் தைரியத்தையும் தரும்.

உங்கள் முதல் சம்பாத்தியம் உங்களுக்கு கிடைக்க அதிக நாட்கள் ஆகலாம். அதற்கு பொறுமை அவசியம்.

நீங்கள் ஆன்லைன் வேலை ஆரம்பித்த உடனேயே, நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்களால் பிரகாசிக்க முடியாது.

வீட்டிலிருந்தே மிகக் குறுகிய காலத்தில் லட்சாதிபதியாகி விடலாம் என்று கனவு காணாதீர்கள். மிகச் சிலரே குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். சிறந்த வெற்றியாலர்களுக்குக் கூட, தாங்கள் போக வேண்டிய தூரத்தை எட்டிப் பிடிக்க குறைந்தது இரண்டு மூன்று வருடங்கள் தேவைப் பட்டிருக்கிறது.

மிகக் குறுகிய காலத்தில் உங்களை கோடீஸ்வரர்களாக ஆக்கி விடுகிறோம் என்று விளம்பரம் செய்யும் வலைத் தளங்களை நம்பி விடாதீர்கள். வேலை செய்யாமலே சும்மா இருந்து கொண்டே லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டும் தளங்களை அறவே ஒதுக்கி விடுங்கள்.

work from home forums பல தளங்களில் வருகின்றன. அவைகளில் சம்பாதித்துக் கொண்டு இருக்கும் நண்பர்களின் அனுபவங்களைப் படித்து அதன் மூலம் நல்ல தளங்களை கண்டறியுங்கள். அவர்களுடைய அனுபவங்கள், மற்ற எல்லாவற்றையும் விட உங்களுக்கு உதவும்.

ஆன்லைன் வேலையில் புதிய உத்திகளையும், புதிய யோசனைகளையும் கடைப் பிடியுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடின உழைப்பும், விடா முயற்சியும் தான் உயரத்துக்கு இட்டுச் செல்லும் என்பதனை உறுதியாக நம்புங்கள்.

சர்வே ஜாப்ஸ் பற்றிய சில தளங்கள் பற்றி நாம் அடுத்த கட்டுரையில் விரிவாக அலசலாம்.

-மீண்டும் சிந்திக்கலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் வேலை-ஒரு அலசல்.

Post by umajana1950 » Mon Apr 30, 2012 10:11 pm

Paid to Survey
வணக்கம் நண்பர்களே,
ஆன்லைன் ஜாப் பற்றி பார்க்கும் போது, அதன் ஒரு பிரிவாக சர்வே ஜாப் வருகிறது. இதற்கும் அதிகமான படிப்போ, தொழில்நுட்ப அறிவோ தேவை இல்லை. ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு பரவலாக பல பொருட்களின் செய்திகள் தெரிந்திருந்தால், நீங்கள் ஓரளவு இந்த சர்வே ஜாபில் சம்பாதிக்கலாம்.

ஆன்லைனில் Paid to Survey என்ற பகுதியில் ஆயிரக்கணக்கான தளங்கள் மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வலம் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆயிரக்கணக்கில் மிகவும் சுலபமாக, வெகு சீக்கிரத்தில் சம்பாதிக்கலாம் என்று விளம்பரங்கள் நாளும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால். இதிலும் அதிகமான தொகையை நாம் சம்பாதித்து விடலாம் என்று கனவு காண்பது நிறைவேறுமா என்பது சந்தேகமே.

சில தளங்கள், உண்மையாகவே பணம் தருகின்றன. அவற்றைக் கண்டறிவது தான் மிகவும் கடினமான வேலை. சில தளங்கள், ஒரு குறிப்பிட்ட நாட்டினர் மட்டும் தான் வேலை செய்ய முடியும் என்று, வட்டத்தை சுருக்கி விடுவர். சிலவற்றில் இன்ன இன்ன பொருட்களைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்கிறதா என்று முன்கூட்டியே ஒரு சோதனை சர்வே வைப்பார்கள். இதை எல்லாம் தாண்டி அவை நமக்கு முக்கியமாக, பணம் தரக்கூடிய தளம் தானா என்பதை நாம் தான் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.

பே டூ சர்வே தளங்களில் sign up பண்ணும் முன்பு கீழ்க்காணும் சில விஷயங்களை கடைப் பிடித்தால் நமக்கு நல்லது.

பெரும்பாலான சர்வே கம்பனிகள் பணமாகத் தருவதில்லை. அதற்கு பதிலாக gift vouchers,sweepstakes ,இதுமாதிரி இன்னும் பிற வழிகளில் நமது உழைப்புக்கு விலையாகத் தருகிறார்கள். அதன் மூலம் நாம் பணம் ஈட்டுமுன் படாத பாடு பட வேண்டி இருக்கும்.

அவர்களுடைய கம்பனி சட்ட திட்டங்களினாலும், பணம் கொடுக்கும் வழிமுறைகளினாலும் நாம் மிகவும் சோர்வடைந்து அதிலிருந்து பின்வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு நல்ல தொகையைப் பெற வேண்டுமானால், நீண்ட நாள் உழைப்பும், கிடைக்கும் சர்வேக்களை முழுமையாகப் பயன்படுத்துதலும் வேண்டும்.

பெரும்பாலானவர்கள் மிக விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வருவதால் இம்மாதிரியான தளங்களில் வேலை செய்து பின் விரைவிலேயே சோர்வடைந்து விடுகிறார்கள்.
கிட்டத்தத்ட்ட பல கம்பனிகள் மிகக் குறைவான பணத்தையே தருகிறார்கள். கொஞ்சம் அதிகம் தரக்கூடிய தளங்களைக் கண்டறிய நாட்கள் ஆகும். அதனால், இதுவே தங்கள் முழு நேர வருவாயை ஈட்டித் தரும் என்று நம்பக்கூடாது.

அதிகமாகப் பணம் தரக்கூடிய கம்பனிகள் நம்மை நன்றாக ஃ பில்டர் செய்து தான் தங்கள் சர்வேக்கு தேர்ந்தெடுப்பார்கள்.
இதற்கும் survey forum களையே பார்த்து நல்ல உண்மையிலேயே பணம் தரக்கூடிய தளங்களை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

சாதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் வரை நாம் ஓரளவு தெரிந்து வைத்திருந்தாலே இந்த பிரிவில் பணம் பண்ணுவது கொஞ்சம் எளிதாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த சில தளங்களை இங்கே பட்டியலிடுகிறேன். நீங்கள் அவைகளில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசனை செய்துபார்த்துவிட்டு, sign up செய்யுங்கள். எனக்குத் தெரிந்தவரை எல்லாமே நல்ல கம்பனிகள் தான். இவை அனைத்தும் நான் ஒரு தளத்தில் சேர்ந்து பணம் கட்டி, அவர்கள் தந்தவை.

Global test market
Ciao. surveys.com
Panel Place.com
Permission Research
Panel pulse
e-research-Global.com
Pure Profile.com
Testspin
ARC Survey
Beta Research
C2 consumer research
Clear Voice Research
Datateiigence
E Global Panel
G think
Inside Heads
Focus line
Opinion World
Opinion Square
Survey.com
Survey lion
Avante
Corpscan


இப்போதைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன். இவைகளை நீங்கள் முயற்சி செய்து பார்த்தாலே உங்களுக்கு ஒரு ஐடியா தோன்றி விடும்.

எனது அடுத்த கட்டுரையில் இன்னும் வேறொரு ஆன்லைன் வேலை பற்றி எழுதுகிறேன்.

-மீண்டும் சிந்திக்கலாம்.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: ஆன்லைன் வேலை-ஒரு அலசல்.

Post by umajana1950 » Fri May 04, 2012 8:06 pm

வணக்கம் நண்பர்களே,

ஆன்லைன் வேலை தேடுபவர்களில், பெரும்பாலானவர்கள் data entry job செய்வதையே விரும்புகிறார்கள். ஏனெனில், அது வீட்டில் இருந்த படியே தங்கள் ஒய்வு நேரத்தில் செய்யக் கூடியதாக இருக்கிறது என்று நம்புகிறார்கள். Data entry என்று வரும்போது டைப்பிங் ஜாப்களையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த வேலை செய்வதற்கு பெரிய தொழில்நுட்பம் எதுவும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கொஞ்சம் டைப்பிங் செய்யவும், சிறிது கம்பூட்டர் அறிவும் ப்ரூப் ரீடிங் செய்யக்கூடிய திறனும் இருந்தாலே போதுமானது.

டேட்டா என்ட்ரி டைப்பிங் ஜாப்கள் பல வகைகளாக உள்ளன. ஒவ்வொரு கம்பனிக்கும் ஒவ்வொரு விதமான டேட்டா என்ட்ரி ஜாப் தேவைப்படலாம். சில கம்பனிகளுக்கு தங்களுடைய முக்கியமான விவரங்களை டிஜிட்டல் பார்மில் PDF ஃ பைல்களாகவும், வோர்ட் ப்ரோசெச்சிங் போர்மட்டகாவும் மாற்ற வேண்டிய தேவை இருக்கலாம்.

அதற்காக அந்த கம்பனிகள் இது மாதிரியான பணிகளுக்கு ஆட்களைத் தேடுகிறார்கள். இந்தப் பணியில் துல்லியம் மிகவும் முக்கியம். கொடுக்கப்பட்ட பணியை மிகத் துல்லியமாக யார் செய்கிறார்களோ, அவர்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் வாய்ப்புக்கள் தேடி வரும். உங்களுக்கு கொடுக்கப் பட்ட வேலையை பிழையில்லாமல் செய்வது மிகவும் அவசியம்.

பல பிரசுரம் செய்து வெளியிடும் கம்பனிகள், இது போன்ற வேலைகளை வீட்டிலிருந்து செய்யக் கூடிய நபர்களைத் தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இதில் அவர்களுக்கு பல வழிகளில் பணம் மிச்சமாகிறது. அலுவலகம் தேவை இல்லை. அதற்கென்று வேலையாட்கள், பொருட்கள், எந்திர சாதனங்கள் இப்படி எதுவுமே தேவை இல்லை. மேலும் ஒப்பந்த அடிப்படையில் உங்களை ஏற்பாடு செய்வதால், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் அவர்களுக்கு தங்கள் வேலை முடிந்து விடுகிறது.

நீங்கள் ஒரு திறமையான தட்டச்சராக இருக்கும் பட்சத்தில், அவர்கள் கேட்கும் வடிவத்தில் நீங்கள் உங்கள் வேலையை செய்து முடித்தால் போதுமானது. குறைந்த பட்சம் 60 முதல் 65wpm வேகம் உங்களுக்கு இருந்தால் நீங்களும் இந்த வேலையில் ஜெயிக்கலாம்.

அவர்கள் கொடுக்கக் கூடிய வேலை Form Filling ஆக இருக்கலாம். ஒப்பந்த பாரங்களாக இருக்கலாம். அல்லது அவர்களுடைய data baseகளை நீங்கள் டைப் செய்து கொடுக்க வேண்டியதாக இருக்கலாம். இந்த விஷயத்தில் நீங்கள் சரியான் வார்த்தைகளையும், எண்களையும் பிழை இல்லாமல் அடித்துக் கொடுத்தால் உங்களை அவர்கள் விடவே மாட்டார்கள்.
இது போன்ற திறமை மிக்கவர்களை, ஆயிரக்கணக்கான கம்பனிகள் எதிர்பார்த்துக் கொண்டு தான் இன்றும் இருக்கின்றன.

சர்வே ஜாபில், டைப் செய்வதும் ஒரு வகையான டேட்டா என்ட்ரி டைப்பிங் ஜாப் தான். இந்த சர்வே ஜாபில் நீங்கள் பாசிடிவ் ஆக பதில் சொல்வதைத் தான், பெரும்பாலும் பல கம்பனிகள் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால் எல்லா கம்பனிகளும் தாங்கள் முதல் இடத்தில் இருக்கிறோமா இல்லையா என்று இப்படிப்பட்ட சர்வேக்களின் மூலம் தான் அறிந்து கொள்கின்றன.

புத்தக வெளியீட்டாளர்கள், மிக அதிக அளவில் இந்த மாதிரி ட்ட என்ட்ரி டைப்பிங் ஜாப்ஸ்
வேலை தருகிறார்கள். Freelance writing கூட டேட்டா என்ட்ரி ஜாபுக்கு ஒரு சிறந்த உதாரணம். வீட்டில் இருந்தே செய்யும் வேலைகளில் இந்த வேலைக்கு எப்போதும் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இறுதியாக, இந்தData Entry Typing வேலை, ஆன்லைன் ஜாப்பில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. நல்ல typing skillலும், எழுத்துப் பிழை இல்லாத வேகமான டைப்பிங்கில் அனுபவமும் உள்ள ஆன்லைன் வேலை தேடும் அனைவருக்கும் நிச்சயமான வருமானத்தை தரக்கூடியது இது.

எனது அடுத்த கட்டுரையில் இன்னொரு ஆன்லைன் ஜாப் பற்றிய விளக்கங்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி வணக்கம்.

-மீண்டும் சிந்திக்கலாம்.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”