online jobs-தமிழில்.

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

online jobs-தமிழில்.

Post by umajana1950 » Fri Apr 06, 2012 4:07 pm

இணைய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஆன்லைன் ஜாப்ஸ் தேடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

முதலில் இணையத்தில் வேலை தேடுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால், வீட்டில் இருந்தே ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் மாணவர்களாக இருக்கலாம்,பெண்களாக இருக்கலாம், இளைஞர்களாக இருக்கலாம், வயதானவர்களாகக் கூட இருக்கலாம்.

இவர்கள் எல்லோருமே சில மணி நேரங்களை செலவு செய்து, தங்களுக்கு தேவையான பணத்தை இணையம் மூலமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களாகத் தான் இருக்கிறார்கள். இது போன்று இணையத்தில் வேலை தேடி, ஆராய்ந்து பார்த்து விரக்தி அடைந்தவர்கள் ஏராளம். தங்கள் பணத்தை இழந்தவர்களும் ஏராளம். இவர்களுக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டியாக, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி பெற்று தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்று காட்டக் கூடிய ஒரு தளத்தைப் பற்றி நான் இங்கே உங்களுக்கு விளக்கப் போகிறேன்.


இணையத்தில் வேலை என்பது, நாம் அலுவலகத்தில் போய் வேலை பார்ப்பது போல் அல்ல. இது நம்முடைய வசதிக்கு ஏற்றார்போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்யலாம். இதற்கு முக்கியமாக நமக்குத் தேவைப் படுவது நட்பு வட்டாரம்.இதனை பெருக்கிக் கொள்வதன் மூலம் நாம் எந்த நோக்கத்திற்காக இணையத்தில் நுழைநதோமோ அதனை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

அடுத்ததாக, நாம் செய்யக் கூடிய வேலை நமக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், நமது ஆசைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து உழைத்து நாம் நமது இலக்கை அடைய முடியும்.

இந்த, மேலே சொன்ன எல்லா வழிகளிலும் நமக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு தளம் தான் படுகை.காம்.

ஒரு வேலை செய்யும் போது நமக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத மொழியில் செயல் படுவது கொஞ்சம் கடினம். அதுவே நமது தாய் மொழியாக இருந்து விட்டால் நம் எண்ணங்களை எளிதில் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கு உதவுவது தான் இந்த No.1 Tamil Online Job தளம் என்ற படுகை.காம்.

இந்த தளத்தில் நீங்கள் மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டே வந்தாலே படுகை உறவுகளைப் பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு பிறக்கும். இந்த தளத்தில் உங்களுக்கு தீனி போட, பல்வேறு டாபிக்குகள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமான டாபிக்கில் நீங்கள் எந்த ஒரு செய்தியையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட டாபிக்கில் நீங்கள் தேர்ந்தவராக ஆகும் போது உங்களுக்கே உங்களைப் பற்றிய அபிப்பிராயம் உயர்ந்து காணப்படும்.

இந்த மாதிரி உங்களைப் புடம் போட்ட தங்கமாக மாற்ற, படுகை என்னவெல்லாம் செய்கிறது என்பதை வரப் போகும் பதிவுகளில் உங்களுக்கு விலாவாரியாக நான் சொல்லப் போகிறேன். அதுவரை ஆவலோடு காத்திருங்கள்.

மீண்டும் சிந்திப்போம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: online jobs-தமிழில்.

Post by ஆதித்தன் » Fri Apr 06, 2012 7:53 pm

umajana1950 wrote:உங்களைப் புடம் போட்ட தங்கமாக மாற்ற, படுகை என்னவெல்லாம் செய்கிறது என்பதை வரப் போகும் பதிவுகளில் உங்களுக்கு விலாவாரியாக நான் சொல்லப் போகிறேன். அதுவரை ஆவலோடு காத்திருங்கள்.
இக்கேள்வி தான் எல்லோர் மனதினிலும் நிறைந்து நிற்கின்றது. அதற்கு நீங்கள் தக்க பதில் கொடுப்பீர்கள், என்ற ஆவலோடு காத்திருக்கிறோம்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: online jobs-தமிழில்.

Post by muthulakshmi123 » Sat Apr 07, 2012 10:09 pm

அருமை உமாஜனா..புடம் போட்ட தங்கமாக உங்களை மட்டுமல்ல உறுப்பினர்களை இல்லை கோல்ட் உறுப்பினர்களை மாற்றுகிறது.உஙக்ள் பதிவு நல்ல இருக்கு. வாழ்த்துக்கள்...
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”