Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

Post by ஆதித்தன் » Sun Mar 25, 2012 9:18 pm

Tamil Online job Peoples Fun & Business Chat Room
ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வெட்டிப் பேச்சு சிங்கங்கள்
வெட்டிப் பேச்சின் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒர் தளத்தினை இணையத்தில் எங்கும் நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், வெண்டியா பேசிப் பேசியே சம்பாதிக்கும் டீக்கடை குப்பண்ணன்... மேலத் தெரு ராமசாமி என ஊர்க்கு நாலு பேர் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாததா? அப்படித்தான் படுகையும் வேலை என்றால் என்ன? எனக் கேட்கும் V.O.க்களையும் பணம் சம்பாதிக்க வைக்கிறது என்பதனை உங்கள் கண் முன்னால் நிறுத்திக் காட்டவே!!!! சவால் விட்டுத் தொடங்கப்படும் தலைப்புத்தான் "பணம் சம்பாதிக்கும் வெட்டிப் பேச்சு சிங்கங்கள்"
புதுப் புது சிந்தனையுடன் தொடரை தொடங்குபவன் நானாக இருந்தாலும், அதனை சிறப்பாக வழிநடத்திச் சென்று, இணையத்தில் Tamil online business chat room, tamil online job chat room என தேடும் நபர்களுக்கு, நமது தமிழ் வெட்டிப் பேச்சு சாட் ரூம் தான் கூகுளில் முதன்மையாக வர வேண்டும் என்பதனை நினைவில் கொண்டு செயல்பட வேண்டியவர்கள், அன்பு நண்பர்களே நீங்கள் தான்.
தலைப்பை கொடுத்தாகிவிட்டது, தலைப்புக்கு ஊறுகாய் கொடுக்க வேண்டாமா????

அதனையும் நானே கொடுத்துவிடுகிறேன்.
இணையப் பணி என்று சொல்லி வந்துவிட்டாலே ஏமாற்று தளங்களின் குவியல்கள் எல்லோருக்கும் ஒர் சவாலாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியான சவால்களுக்கு நடுவிலும்... மிக எளிதாக மதுரை, திருப்பூர், சென்னை , கோவை... என பெரிய நகரங்களில் கூட ஒர் ஆபிஸ் போட்டு இ-மெயில் ரிடீங்க் ஜாப்,... இவ்வளவு ரூபாய் கெட்டினால்.. மாதம் மாதம் நிச்சயமாக இத்தனை ரூபாய்க்கான விளம்பரம் கொடுப்போம் என ஒர் அளவுக்கு அதிகமான ஆசையினை ஊட்டி ஏமாற்றிச் செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சரி, ஆன்லைன் ஜாப்பில் இப்படியான இமெயில் ரீடிங்க் என்ற ஒர் குழு இருக்க... ஒர் பக்கம் டேட்டா எண்ட்ரி எனச் சொல்லி, ப்ராஜக்ட் கொடுத்துட்டு பின்னால ஆப்பு வைக்கிற குழு ஒர் பக்கம். இவங்க மேலையும் தப்புன்னு சொல்ல முடியாது, ஆழம் தெரியாமல் கால வைக்கிற நம்மைத்தான் நொந்துக்கணும். அதிலும் ஆழம் தெரியாமல் கால விடுறது என்பது மற்றொரு குழுவுக்கும் ரொம்ப ரொம்பப் பொருந்தும். அவங்க யார் தெரியுமா???? நா ஆன்லைனில் ட்ரேடிங்க் பண்றேன்... ஆன்லைன் போரக்ஸ் பண்றேன்னு சொல்றாங்களே!!! அச்சு அசலா அவங்களே தான்.

இப்படி எல்லாம் பேசினாலும், நாமும் ஆன்லைன் ஜாப் தான் பண்றோம்னு மறந்திடக் கூடாது. யாராவது அடிச்சி மிரட்டினாலும், ஆன்லைன் ஜாப் தான் பண்றோம்ங்கிறத மறந்துடக் கூடாது. அதனால் என்ன சொல்ல வர்றேன்னா.... அவங்க எல்லாம் ரொம்ப ரொம்ப புத்திசாலிங்க!!!! நாம எல்லாம் அதி அதி அதிபயங்கர ...... :edu: முட்டுக் கொடுத்து புடலங்காய் நடுன்னு சொன்னா, பாகக்காய்க்கு பந்தல் எதுக்குன்னு கேட்பானாம் கொத்தவச்சாவடி குறுக்குச் சந்துல நிற்கும் கொய்யா மரத்துல ஏன்னு கேட்க ஆளில்லாமல் பழமிருந்தும் பறித்துத் திங்கத் தெரியாதவன் என்ற கதையா ஆகிடக் கூடாது.

ஆகவே, tamil online job chat room-ல் இருக்கும் நாம், கனி இருக்கக் காய் கவர்ந்தற்று என்று சொல்வது போல, ஆன்லைன் ஜாப்பில் ஏமாற்றுகள் இருக்கலாம், ஆனால் எங்களைப் போன்ற நேர்மையானவர்கள் ஆன்லைன் ஜாப்பில் இருக்கும் பொழுது, அவ்விடத்தில் தாங்கள் ஏன் விழுகிறீர்கள்??? என்று கேட்கும் அளவிற்கு நமது ஆன்லைன் ஜாப் பயிற்சிக் கூடத்தை வழிநடத்த வேண்டும். :rock:

அதற்கு முன்னர், நம்மை நாம் அறிமுகம் காட்டிக் கொள்ள வேண்டாமா?
நம் முகத்தை அவர்களுக்குக் காட்ட வேண்டாமா????

புரியல... இத்தொடரின் வெட்டிப் பேச்சையே... ஒவ்வொருவரின் முகத்தை நோக்கித் தான் திருப்பி உள்ளேன். படுகையில், மணி அண்ணன், உதயகுமார், அருந்தா, ஓட்டக்காரன் மற்றும் ராம்குமார் ஆகியோர் தங்களது நிஜ படத்துடன் படுகையில் உலா வருகிறார்கள். மீதம் இருப்பவர்களும், தங்களது இருப்பிடம் மற்றும் போட்டோவுடன் உலா வர வேண்டும், அல்லது அவர்கள் அவ்வாறு வரும் வரை... அவர்களையே ஒர் ஊறுகாயாக வைத்து, இவர் இப்படித்தான் இருப்பார் என ஒர் ஊர்ஜிதத்துடன் படங்களைக் கொடுப்பதே... நமது வெட்டிப் பேச்சு!!!!



தொடரை தொடரலாமா????
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

Post by Aruntha » Wed Mar 28, 2012 9:03 am

ஆஹா இது நல்ல ஐடியாவே. அப்பிடி என்றால் இப்பவே நாங்க காட்டுன்ல படங்கள் கீற ஆரம்பிக்கிறன். முதல் சுமையா, அப்புறம் லக்சுமியம்மா அப்புறம் நதி என்று நான் படங்கள் செய்ய ஆரம்பிக்க போறன் சரியா.

அருந்தா உங்க படத்தை போட முதல் நீங்க எல்லாரும் படத்தை போட்டிடுங்க இல்ல அப்புறம் வம்பாகிடும்.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

Post by muthulakshmi123 » Wed Mar 28, 2012 9:29 am

[quote="Aruntha"]ஆஹா இது நல்ல ஐடியாவே. அப்பிடி என்றால் இப்பவே நாங்க காட்டுன்ல படங்கள் கீற ஆரம்பிக்கிறன். முதல் சுமையா, அப்புறம் லக்சுமியம்மா அப்புறம் நதி என்று நான் படங்கள் செய்ய ஆரம்பிக்க போறன் சரியா.

அருந்தா உங்க படத்தை போட முதல் நீங்க எல்லாரும் படத்தை போட்டிடுங்க இல்ல அப்புறம் வம்பாகிடும்.

போடுங்க அருந்தா மாடல் போட்டோ வேணுமா?
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

Post by Aruntha » Wed Mar 28, 2012 9:58 am

என்கிட்ட சுமையா போட்டோ இருக்கு. சந்துரு போட்டோ இருக்கு. லக்சுமியம்மா போட்டோ இருக்கு. போட மனசில்ல அவங்க என்ன சொல்லுவாங்களோ என்று. இருங்க பாக்கலாம்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

Post by ஆதித்தன் » Wed Mar 28, 2012 11:08 pm

Aruntha wrote:என்கிட்ட சுமையா போட்டோ இருக்கு. சந்துரு போட்டோ இருக்கு. லக்சுமியம்மா போட்டோ இருக்கு. போட மனசில்ல அவங்க என்ன சொல்லுவாங்களோ என்று. இருங்க பாக்கலாம்.
:sto: :sto:

யாருடைய போட்டோ இருந்தாலும், மற்றவருடையதை பதிவிடக்கூடாது. அவரவர் முன்வந்து போட்டுக்களைப் போடுவதே நல்லது.

================================================================

அப்படி இருப்பார்.... இப்படி இருப்பார் என ஒர் கெஸ்சிங்கிற்காக, பொதுவாழ்வில் உள்ள சினிமாக்காரங்க, அரசியல்காரங்க மற்றும் கார்ட்டூன் படங்களை போட்டு அரட்டை அடிங்கப்பா...

நிஜ போட்டோவைப் போட்டு வம்பு பண்ணாதீங்க. :non:
Aruntha
Posts: 1115
Joined: Tue Mar 06, 2012 11:59 am
Cash on hand: Locked

Re: Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

Post by Aruntha » Thu Mar 29, 2012 8:09 am

அதனால தான் நானும் பேசாமல் விட்டிட்டன். இருந்தாலும் சொல்லியிருந்தன். என்னிடம் இருக்கு. காட்டுன் செய்தால் கூட அச்சொட்டாக வரும் என்று.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

Post by muthulakshmi123 » Thu Mar 29, 2012 1:42 pm

Aruntha wrote:அதனால தான் நானும் பேசாமல் விட்டிட்டன். இருந்தாலும் சொல்லியிருந்தன். என்னிடம் இருக்கு. காட்டுன் செய்தால் கூட அச்சொட்டாக வரும் என்று.
முதலில் உங்கள் படத்தை கார்டுனாக போடுங்கள் அருந்தா..பார்க்கலாம் எப்படி இருக்கு என்று..
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: Tamil Online Job Peoples Fun Chat Room - வெட்டிப் பேச்சில் பணம் சம்பாதிக்கும் சிங்கங்கள்

Post by ஆதித்தன் » Sat Mar 31, 2012 10:34 pm

muthulakshmi123 wrote: முதலில் உங்கள் படத்தை கார்டுனாக போடுங்கள் அருந்தா..பார்க்கலாம் எப்படி இருக்கு என்று..
முகம் காட்டாதவர்கள் தானே ஊறுகா! :enn:

நீங்க மாத்தி கேட்கிறீங்களே, லெட்சுமியம்மா.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”