கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by muthulakshmi123 » Mon Mar 26, 2012 3:54 pm

mnsmani wrote:
muthulakshmi123 wrote:மணித்தம்பி எங்கேயோ போய் கிட்டு இருக்கிங்க எங்களை எல்லாம் மறந்து விடாதீர்கள் ...
லெட்சுமியக்கா, உங்களையெல்லாம் பாத்துதான் நான் இப்படியான பதிவுகளை போட்டுட்டு வர்றேன். அப்படி இருக்கும் போது உங்களை எல்லாம் மறக்க முடியுமா, முதல்ல இதுக்கெல்லம் காரனமான ஆதிக்குதான் நன்றி சொல்லனும் .

எனக்கு ஒண்ணுமே புரியவில்லை ,தொடர்ந்து படிக்க நேரம் இல்லை ..நன்கு படித்தபின் சந்தேகங்களை கேட்கிறேன்...
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Mon Mar 26, 2012 4:33 pm

நல்லது நன்பர்களே, வலைபூ முடிந்துவிட்டதா, இல்லையா, சரி அத அப்படியே வச்சுட்டு இங்க கொஞ்சம் வாங்க, ஒரு முக்கியமான விஷ்யம் பேசனும், நான் திருப்பி திருப்பி படுகைல இனைய சொல்றேன், ஏன்னு தெரியுமா, இப்ப உங்ககிட்ட ஒரு வலைபூ இருக்கு அடுத்ததா ஒரு கூகுள் ஐடியும் இருக்கு, எல்லாம் திறம்பட செஞ்சாச்சி, ஆனா உங்க தளத்துக்கு வருகையாளர்கள் வந்தாதான் உங்களுக்கு காசு. அவங்கள எப்படி வரவழைப்பீங்க. கூகுள் என்ன சொல்லுது தெரியுமா, உங்ககிட்ட அட்சென்ஸ் இருக்கறத யார் கிட்டயும் சொல்லகூடாதுன்னு. அப்படியிருக்கும் போது உங்க தளத்துக்கு பார்வையாளர்கள் எப்படி வருவாங்க.அதுக்குதான் படுகை. இன்னிய தேதில படுகைல - அடிக்கடி வர்ரவங்க, ஒருவாரத்துக்கு ஒருக்கா வரவுங்க, எப்பவாவது வந்து தலையைகாட்டிட்டு போரவங்க, பதிவு பன்னிட்டு ஒரு பதிவுகூட இடாம அப்படியே வேடிக்கைபாக்கரவங்கன்னு ஒரு 500 பேராவது உறுப்பினரா இருப்பாங்க. இவங்க போக பதிவு பன்னாம வெளில இருந்து படுகையை பாக்கரவங்க ஒரு 1000 பேர்ன்னு வைங்க. இது ஒருநாள் கனக்கு. இப்போ உங்க பதிவுல கீழ Signature ன்னு ஒரு காலம் இருக்குதா. அதுல உங்க தளத்தை PUBLISH பன்னுங்க. இப்போ என்னாகும் உங்க பதிவ பாக்க வர்றவுங்க அப்படியே உங்க தளத்துக்கும் வந்துடுவாங்க. உங்க தளம் அவங்களுக்கு பிடிச்சிருந்தா தினமும் உங்க தளத்துக்கு வந்து புதுசா நீங்க என்ன போட்ருக்கீங்கன்னு பாப்பாங்க. இதனால உங்க தளத்து பார்வையாளர்கள் என்னிக்கை கூடும் அதுக்குதான் படுகைல உறுப்பினர் ஆகுங்கன்னு சொல்றேன். நம்பமுடியலியா. இப்போ என்னோட தளத்தை கான்பிக்கிறேன். வலைபூல STATUS ன்னு ஒரு லின்க் இருக்கும். அத சொடுக்கினா, உங்க தளத்துக்கு வந்தவங்கல்லாம் எப்படி வந்தாங்கன்னு காட்டும். இப்போ இத பாருங்க.
blog screen shot.jpg
உள்ளே எழுத்து சரியா தெரியலைன்னா படத்துமேல ஒரு சொடுக்கு போடுங்க. படம் பெரிசா தெரியும். இப்போ இதுல பாத்தீங்கன்னா படுகைவழியா ஒரு 15 பேர் என்னோட தளத்துக்கு வந்திருக்காங்க. இதுக்கு நீங்க என்ன பன்னனும், படுகைல தினமும் ஒரு 6 பதிவு, பதிவுன்னா பதிவு அப்படி ஒரு பதிவு, வர்ரவங்களைஎல்லாம் அப்படியே சுண்டி இழுக்கனும். இவரு எப்ப அடுத்த பதிவ போடுவார்னு தினமும் வந்து பாக்கனும். அப்போதான் உங்க பதிவு முன்னாடி இருக்கும். எல்லாரும் பாப்பாங்க. சரியா, இப்ப உங்களுக்கு நம்பிக்கை வருதா. இதுதாங்க கூடி வாழ்ந்தா கோடி நன்மைங்கறது. ஊர் கூடி தேரிழுக்க நான் தயார்,நீங்க ரெடியாயிட்டீங்களா, வலைபூவ முடிசிட்டு சொல்லுங்க, மேல சொல்றேன். இப்பொதைக்கு இது போதும். மீண்டும் இரவு வர்ரென். அதுகுள்ள ஏதும் சந்தேகம்னா யோசிச்சி வைங்க.ஓகே பை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Mon Mar 26, 2012 6:22 pm

தொடர் மிக அருமையாக செல்கிறது.. இத்தொடர்க்கு பக்க பலமாக எனக்குத் தெரிந்த ப்ளாக்கர் டிசைனிங்க் உதவிகள் எப்பொழுதும் கிடைக்கும். அதைப் போல், சர்ச் இஞ்சின் பலத்தையும் சேர்க்க விரைவில் ஒர் ஆர்ட்டிகள் எழுதிடுவோம்.

தொடரட்டும்...
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Tue Mar 27, 2012 11:01 am

Athithan wrote:தொடர் மிக அருமையாக செல்கிறது.. இத்தொடர்க்கு பக்க பலமாக எனக்குத் தெரிந்த ப்ளாக்கர் டிசைனிங்க் உதவிகள் எப்பொழுதும் கிடைக்கும். அதைப் போல், சர்ச் இஞ்சின் பலத்தையும் சேர்க்க விரைவில் ஒர் ஆர்ட்டிகள் எழுதிடுவோம்.

தொடரட்டும்...
உண்மைதான், Search Engine Optimization என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதை திறன்பட செய்தால்தான் நமது தலம் முன்னனியில் இருக்கும்.நன்றி ஆதி, அதுவும் ஒரு தொடர் பன்னிடலாம்.
Last edited by mnsmani on Tue Mar 27, 2012 11:59 am, edited 1 time in total.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by umajana1950 » Tue Mar 27, 2012 11:26 am

உண்மைதான், Search Engine Optimization என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதை திறன்பட செய்தால்தான் நமது தலம் முன்னனியில் இருக்கும்.அன்றி ஆதி, அதுவும் ஒரு தொடர் பன்னிடலாம்.
இன்றைய சூழ்நிலையில் Search Engine Optimization நன்றாகப் போய்க கொண்டு இருக்கிறது. அதனையும் விளங்கச் செய்தால் இன்னும் பயன் உள்ளதாக இருக்கும்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Tue Mar 27, 2012 11:58 am

நல்லது நன்பர்களே, இதுவரை Google Adsense பற்றி படித்தது ஆரம்ப நிலையில் உள்ள உங்களுக்கு போதுமான ஒன்று. எனது நன்பர் ஒருவர் இத்தொடரை படித்துவிட்டு என்னிடம் கேட்டார். மணி நல்லாதான் எழுதுறீங்க. ஆனா இதுகெல்லாம் ரொம்ப நாளாவும் போல தெரியுதேன்னு. ஒரெ ஒரு விஷயத்தை மட்டும் சிந்திச்சி பாருங்க. இன்னைக்கி எங்க ஊருல ஒரு மருத்துவர், தினமும் ரூபாய் 5000 சம்பாதிகிறார். இது போக பல மருத்துவமனைல சிறப்பு மருத்துவராக இருகிறார். இதையும் தாண்டி இப்போ ஒரு மருத்துவ மனை கட்டிகொண்டிருகிறார். இதெல்லாம் எப்படி வந்துச்சு. 10 வதுல நல்ல மார்க் வாங்கி,அப்புறம் +1 ல அறிவியல் பாடம் எடுத்து, +2 வில 96% மார்க் வாங்கி, டொனேஷன் கொடுத்து மெடிகல் சீட் அதுகப்புறம் வருஷம் 2 லட்ச ரூபா செலவு பன்னி மருத்துவம் முடிச்சி வெளில வந்தா அவர மாதிரி லட்சம் பேர் வேலைக்கு தயாரா நிக்கிராங்க. மனுஷன் அசரல, அப்படியே மேல படிக்க போய்ட்டார். MD படிச்சார். இருதயம் சம்பந்தபட்ட விஷயங்களுக்கு இங்க இவர விட்டா வேற ஆளில்ல. அந்த அளவுக்கு படிச்சி மாசம் 2.50 லட்சம் சம்பாதிகிறார். நம்மல அவரோட ஒப்பிட்டு பாருங்க. அவர் இந்த நிலைக்கு வரதுக்கு கிட்டதட்ட 10 வருசத்துக்கு மேல ஆச்சி. இதே 2.50 லட்சம் சம்பாதிக்க உங்களுக்கு அதிக பட்சம் 1 வருசம் போதும். இதுக்கு கைகாசல்லாம் போட்டு செலவு பன்ன வேனாம். தினம் ஒரு மனி நேரம் சும்மா ஜாலியா கனனில உக்காந்து உங்களுக்கு தெரிஞ்சத எழுதுங்க. அவ்வளவுதான். இன்னும் நம்பலன்னா இவங்களை பாருங்க.
1.Micheal Arringtor
http://techcrunch.com/" onclick="window.open(this.href);return false; எனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார் .தொழில் நுட்ப பதிவுகளை இடுகிறார் .மாதம் 8,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .இப்போது இவர்தான் நம்பர் 1 பதிவர் .
2.Pete Cashmore
http://mashable.com/" onclick="window.open(this.href);return false; எனும் தளத்தை நடத்தி வருகிறார் .மாதத்திற்கு ஒரு கோடி பேர் இவரது தளத்தை பார்வையிடுகிறார்கள் .மாதம் 6,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
3.Mariyo Lavanderiya
http://perezhilton.com/" onclick="window.open(this.href);return false; எனும் தளத்தை நடத்தி வருகிறார் .உலகில் அதிகம் பேர் விரும்பும் தளங்களில் இதுவும் ஒன்று .மாதம் 2,00,000 டாலர் சம்பாதிக்கிறார் .
4.Timothysykes
http://www.timothysykes.com/split/" onclick="window.open(this.href);return false; எனும் தளத்தை நடத்தி வருகிறார் .இவர் இது வரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான இடுகைகளை இட்டுள்ளார்.மாதம் 1,80,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
5.Collis Taeed
http://tutsplus.com/" onclick="window.open(this.href);return false; எனும் தளத்தை நடத்தி வருகிறார் .டிசைனிங் சம்மந்தமான பாடங்களை அதிகமாக பதிகிறார் .உலகின் மிகச்சிறந்த டுட்டோரியல் பிளாக் இதுதான் .மாதம் 1,20,000 டாலர் சம்பாதிக்கிறார் .

இதெல்லாம் டாலர்ல, நம்ம ஊரு பனத்துக்கு 50ஆல பெருகிக்குங்க. இதெல்லாம் சரி இந்தியாவில யாருன்னு கேக்கரீங்கள, நம்ம தினகரன், தினமலர்,தினதந்தி இவங்களுக்கும் கூகுள் மூலமா நல்ல வருமானம் வருது. அத விடுங்க அவங்கள்ளாம் நாளிதழ் நடத்துராங்க. அதனால கூட்டம் தானா வரும். அதுவும் சரிதான், இவர பாருங்க http://ritemail.blogspot.in/" onclick="window.open(this.href);return false;, இவரோட தளத்துல கடைசீல இடதுபுறம் பாருங்க TOTAL PAGE VIEWERS ந்னு இருக்க, அதுல உள்ள மீட்டர பாருங்க, நம்ம் வண்டி speeda meeter மாதிரி டக் டக்குன்னு மாறுதா. அதாவது இவரோட தளத்துக்கு ஒரு நொடிக்கு ஒருத்தர் வந்ததிட்டுருகாங்கானு அர்த்தம். அதே போல நீங்களும் உங்க தளத்து விளம்பர சொடுக்க பத்தி கவலைபடாம் எத்தனை பேர உள்ள் கொண்டுவரமுடியுமோ அதுகான் வழிகளை செய்யுங்க. (அதையும் அடுத்த கட்டுரைல சொல்ல போறேன்)உத்தேசமா ஒரு நாளைக்கு 1000 பேர் உங்க தளத்துக்கு வர்ராங்கன்னு வைங்க page impression கணக்குள உங்களுக்கு 1000 க்கு 1 டாலர் கிடைக்கு. இதுவே மாசம் 30 டாலர் ஆச்சி, இதுபோக 1000 ல 10 பேரு ஒரு நாளைக்கு உங்க விளம்பரத்தை சொடுக்கினா , விளம்பரத்துக்கு 1 டாலர் வச்சா கூட மாசம் 300 டாலர் ஆச்சி, இப்பொ உங்களுக்கு 330 டாலர் 7ந்தேதி வீட்டுக்கு செக்கா வந்திடும். டாலர் 330 க்கு நம்ம காசு 16500 ரூபாய். இதுக்கு நீங்க பெரிசா என்ன பன்னிடீங்க, தினம் ஒரு மனி நேரம் உக்காந்து உங்களுக்கு என்ன தோனுதோ அத உங்க தளத்துல எழுதபோறிங்க. இப்போ ரெடியாயிடீங்க போல தெரியுது.

இப்போதைக்கு அறிமுக பாடத்தை முடிச்சிகலாம். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.கூகுள் ஒரு சமுத்திரம். அதனால நீங்க வலைபூ ரெடிபன்னதும் சொல்றேன். இப்போ வலை பூ ரெடிபன்னவங்க இதே பக்கதுல உங்க தகவலை பின்னூட்டமா கொடுங்க. உங்களுக்கான அட்சென்ஸ் ரெடி பன்னி தரேன்.(பாதுகாப்பு கருதி அதன் வழிமுறையை இங்கு பொதுவாக பதியவில்லை, என்வே இத்தளத்தின் தனி மடலில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்)
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Tue Mar 27, 2012 12:04 pm

மீண்டும் ஒரு பின்னோட்டம், இது வலை பூ பற்றியது.

வலைப்பூ. ஆங்கிலத்திலே Blogspot னு சொல்வாங்க. கூகுள் வழங்கும் ஒரு அற்புதமான வசதி இந்த வலைப்பூ.நீங்கள் ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது ரொம்ப ரொம்ப சுலபம். அது எந்த துறை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். உங்களுக்கு தேவை முதன் முதலில் - ஒரு G -mail account . அல்லது கூகுள் அக்கௌன்ட்.

இன்னைக்கு இணையம் மூலம் சம்பாதிக்கும் ஒரு மிகப் பெரிய வழி இந்த blogger தான்.

உங்கள் G -மெயில் , username - password இருந்தாலே போதும். www .blogger .com என்ற முகவரியில் நீங்கள் புதிதாக ஒரு வலைப்பூ பதிவு செய்யலாம் .
உங்கள் தனித்திறமை எந்த துறையில் இருக்கிறது என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த துறை சம்பந்தப்பட்ட பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வாருங்கள்.

மிக முக்கியமான விஷயம் - உங்கள் பதிவுகள் , நிறைய வாசகர்களுக்கு உதவும் வகையில் , அவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருத்தல் வேண்டும். வாசகர்கள் அதிகரிக்க , அதிகரிக்க - உங்கள் வலைப்பூவுக்கு மவுசு ஏற ஆரம்பிக்கும்.

நீங்கள் சம்பாதிப்பது என்று முடிவு கட்டிக்கொண்டால் - நீங்கள் ஆரம்பிக்கும் வலைப்பூ ஆங்கிலத்தில் இருப்பது நல்லது. ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவி இருப்பது ஒரு பெரிய பிளஸ். நிறைய வாசகர்களை இழுக்கும். தமிழ் லே இருந்தா??? தமிழ்லே இன்னும் Ads சப்போர்ட் கூகுள் கொடுக்க ஆரம்பிக்கலை. இல்லை, நீங்க ப்ளாக் ஏற்கனவே ஆரம்பிச்சு , நல்ல பேஜ் ரேங்க் இருந்தா - ads சப்போர்ட் கிடைக்கும். உடனடி பலன் வேணும்னா ... English தான் பெட்டெர். உங்கள் பதிவுகள் - புத்தம் புதியதாக , ஒரிஜினல் கன்டென்ட் ஆக இருந்தால் - கூகுள் செர்ச் என்ஜின் உடனே அதை index செய்து விடும். யாராவது கூகுளில் தேடும்போது உங்கள் வலைப்பூவை முதலில் காட்ட வேண்டுமானால் , உங்கள் படைப்பு மற்றவர்களின் படைப்புகளில் இருந்து வித்தியாசமாக , தனித்துவம் வாய்ந்ததாக இருத்தல் அவசியம்.

தொடர்ந்து நீங்கள் பதிவுகள் இட இட , வாசகர் வட்டம் பெருக பெருக - உங்கள் வலைப்பூவுக்கு ஒரு நல்ல ரேங்க் கிடைக்கும். உலக அளவில் இணைய தளங்களுக்கு traffic ரேங்க் வரிசை தெரிந்து கொள்ள - www .alexa .com என்ற தளம் உள்ளது . உங்கள் வலைப்பூ ரேங்க் குறைய , குறைய வலைப்பூவின் மதிப்பு கூடுகிறது.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by muthulakshmi123 » Tue Mar 27, 2012 3:40 pm

mnsmani wrote:மீண்டும் ஒரு பின்னோட்டம், இது வலை பூ பற்றியது.

வலைப்பூ. ஆங்கிலத்திலே Blogspot னு சொல்வாங்க. கூகுள் வழங்கும் ஒரு அற்புதமான வசதி இந்த வலைப்பூ.நீங்கள் ஒரு வலைப்பூ ஆரம்பிப்பது ரொம்ப ரொம்ப சுலபம். அது எந்த துறை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். உங்களுக்கு தேவை முதன் முதலில் - ஒரு G -mail account . அல்லது கூகுள் அக்கௌன்ட்.

இன்னைக்கு இணையம் மூலம் சம்பாதிக்கும் ஒரு மிகப் பெரிய வழி இந்த blogger தான்.

உங்கள் G -மெயில் , username - password இருந்தாலே போதும். www .blogger .com என்ற முகவரியில் நீங்கள் புதிதாக ஒரு வலைப்பூ பதிவு செய்யலாம் .
உங்கள் தனித்திறமை எந்த துறையில் இருக்கிறது என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். அந்த துறை சம்பந்தப்பட்ட பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வாருங்கள்.

மிக முக்கியமான விஷயம் - உங்கள் பதிவுகள் , நிறைய வாசகர்களுக்கு உதவும் வகையில் , அவர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருத்தல் வேண்டும். வாசகர்கள் அதிகரிக்க , அதிகரிக்க - உங்கள் வலைப்பூவுக்கு மவுசு ஏற ஆரம்பிக்கும்.

நீங்கள் சம்பாதிப்பது என்று முடிவு கட்டிக்கொண்டால் - நீங்கள் ஆரம்பிக்கும் வலைப்பூ ஆங்கிலத்தில் இருப்பது நல்லது. ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவி இருப்பது ஒரு பெரிய பிளஸ். நிறைய வாசகர்களை இழுக்கும். தமிழ் லே இருந்தா??? தமிழ்லே இன்னும் Ads சப்போர்ட் கூகுள் கொடுக்க ஆரம்பிக்கலை. இல்லை, நீங்க ப்ளாக் ஏற்கனவே ஆரம்பிச்சு , நல்ல பேஜ் ரேங்க் இருந்தா - ads சப்போர்ட் கிடைக்கும். உடனடி பலன் வேணும்னா ... English தான் பெட்டெர். உங்கள் பதிவுகள் - புத்தம் புதியதாக , ஒரிஜினல் கன்டென்ட் ஆக இருந்தால் - கூகுள் செர்ச் என்ஜின் உடனே அதை index செய்து விடும். யாராவது கூகுளில் தேடும்போது உங்கள் வலைப்பூவை முதலில் காட்ட வேண்டுமானால் , உங்கள் படைப்பு மற்றவர்களின் படைப்புகளில் இருந்து வித்தியாசமாக , தனித்துவம் வாய்ந்ததாக இருத்தல் அவசியம்.

தொடர்ந்து நீங்கள் பதிவுகள் இட இட , வாசகர் வட்டம் பெருக பெருக - உங்கள் வலைப்பூவுக்கு ஒரு நல்ல ரேங்க் கிடைக்கும். உலக அளவில் இணைய தளங்களுக்கு traffic ரேங்க் வரிசை தெரிந்து கொள்ள - www .alexa .com என்ற தளம் உள்ளது . உங்கள் வலைப்பூ ரேங்க் குறைய , குறைய வலைப்பூவின் மதிப்பு கூடுகிறது.
நன்றி தம்பி உங்கள் கட்டுரைக்கு சிவப்பு கலரில் எழுதியதும் ராஜா இங்கும் வந்திட்டாரா என நினைத்தேன்...
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by umajana1950 » Tue Mar 27, 2012 4:06 pm

நீங்களும் உங்க தளத்து விளம்பர சொடுக்க பத்தி கவலைபடாம் எத்தனை பேர உள்ள் கொண்டுவரமுடியுமோ அதுகான் வழிகளை செய்யுங்க.
சரியாச் சொன்னீங்க மணி. மற்றவங்கள நம்ம பக்கம் இழுக்கிறது என்ன அவ்வளவு சுலபமா?.....இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Tue Mar 27, 2012 4:22 pm

umajana1950 wrote:
நீங்களும் உங்க தளத்து விளம்பர சொடுக்க பத்தி கவலைபடாம் எத்தனை பேர உள்ள் கொண்டுவரமுடியுமோ அதுகான் வழிகளை செய்யுங்க.
சரியாச் சொன்னீங்க மணி. மற்றவங்கள நம்ம பக்கம் இழுக்கிறது என்ன அவ்வளவு சுலபமா?.....இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.
உன்மைதான், நான் ஏற்கனவே சொல்லியபடி SEARCH ENGINE OPTIMIZATION செய்யாமல், நாமாகவே ஒரு மாய TRAFFIC உண்டுபன்னும் விஷயம் கூட இருக்கிறது. அது எவ்வாறு எனில் நமது வலைபூவில் FEED BURNER என்றொரு SOFTWARE இருக்கிறது. இதுவும் கூகுளுடையதுதான்.இது எவ்வாறு வேலை செய்யும் என்றால் உங்கள் தளத்துக்கு வரும் பார்வையாளர்கள் இதில் சென்று அவர்தம் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால், அதன் பின்னர் உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் அனைத்து விஷயமும் அவர்களுக்கு மின்னஞ்சலில் சென்றுவிடும். அவர்கள் தினமும் உங்கள் தளத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இதிலும் நீங்கள் GOOGLE ADSENSE பயன்படுத்தலாம். உங்கள் பதிவுகளோடு விளம்பரமும் சேர்ந்து சென்றுவிடும். அவ்வமயம் உங்கள் விளம்பரங்களை உங்களது வாடிக்கையாளர்கள் சொடுக்கும்போது உங்களுக்கு பனம் வரும். அதிலும் ஒரு தில்லுமுல்லு நடக்கிறது. அதாவது உங்க FEED BURNER அக்கவுண்ட்ல் சென்று ஒரு 1500 மின்னஞ்சல் முகவரியை நேரடியாக சேர்த்து விடுகிறார்கள். இது உங்கள் தளத்தை 1500 பார்வையாளர்கள் SUBSCRIBE செய்திருப்பதாக காட்டும். (ஒருத்தர் கூட AVTIVE ஆக மாட்டார்கள்)ஆனால் ஒரு நாள் கூகுள் அதை கண்டுபிடித்தால் உடன் உங்கள் அக்கவுண்ட் முடக்கபட்டுவிடும். நானும் எனது தளத்துக்கு நன்பர் யோசனை படி ரூபாய் 500 கொடுத்து 1246 முகவரிகள் ஒரே நாளில் உட்செலுத்தபட்டது.(இத கூட கூகுள் கண்டுபிடிக்காதா என்ன, என்னெ நம்ம ஆட்கள் மூளை)நேற்று எனது மின்னஞ்சலுக்கு ஒரு தகவல் வந்தது உங்கள் கணக்கு முடக்கபட்டது என்று.கான்க(உங்களுக்கு பாடம் எடுக்க இன்னும் எத்துனை ஐடிய காலி பன்ன போறேன்னு தெரியல, இருந்தாலும் நீங்க இத செய்யாதிங்கன்னு சொல்லத்தான் இவ்வளவு முயற்சி)

Subject: Google AdSense Account Disabled
From: Google AdSense <adsense-noreply@google.com> Mon, 26 Mar 2012 08:32:54
To: You and others
Hello your name ,

While going through our records recently, we found that your AdSense
account has posed a significant risk to our AdWords advertisers. Since
keeping your account in our publisher network may financially damage
our advertisers in the future, we've decided to disable your account.

Please understand that we consider this a necessary step to protect the
interests of both our advertisers and our other AdSense publishers. We
realize the inconvenience this may cause you, and we thank you in
advance for your understanding and cooperation.

If you have any questions about your account or the actions we've
taken, please do not reply to this email. You can find more information
by visiting
https://www.google.com/adsense/support/ ... 3&hl=en_US" onclick="window.open(this.href);return false;.

Sincerely,

The Google AdSense Team
-------------------------------------------------------------------------------
This message was sent from a notification-only email address that does
not accept incoming email. Please do not reply to this message.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”