கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Thu Mar 22, 2012 4:19 pm

google adsense 2.jpg
வணக்கம் நன்பர்களே,
இந்த தலைப்பில் ஒரு தொடர் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாய் நினைத்திருந்தேன். இப்போது துவங்கியிருக்கிறேன், தொடர்ந்து படிங்க.
இன்றைய கால்த்தில் இனையம் வாயிலாக வருமாணம் பார்க்க வேண்டும் என்றால் பல வழிகள் உள்ளன. அனைத்திலும் முதன்மையாய், அனைவரும் ஆவலோடு முயற்சிப்பதும், மிகச்சுலபமானது கூகுள் அட்சென்ஸ். இன்றைய தேதியில் பெண்ணுக்கு பிள்ளை பார்பவர்கள் அரசு உத்தியோகம் அல்லது நிரந்தர தணியார் உத்தியோகம், அட அதுவும் இல்லையா ஒரு கூகுள் அட்சென்ஸ் ஐடி இருந்தால் கூட போதும், பெண்ணை கொடுத்துவிடலாம் என்கிற அளவிற்கு கூகுள் அட்சென்ஸ் இனையத்தில் வியாபித்து இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு பயிற்சிக்காக சென்னை வர நேர்ந்தது. அவ்வமயம் என்னுடன் ஒரே சமயத்தில் பணியில் சேர்ந்த நன்பர் ஹோண்டாய் காரில் வந்திறங்கினார். நான் ஆச்சரியத்தின் உச்சத்திற்க்கு சென்றேன். என்க்கு தெரிந்து அவர் கார் வாங்கும் அளவுக்கு வசதி படைத்தவர் அல்ல. இருப்பினும் இது எப்படி சாத்தியமாயிற்று என்ற என்னத்துடன் உணவு இடைவேளையில் அவரை தனியாக அழைத்து கொண்டு போய் எப்படி இதெல்லாம் என்று கேட்க, அவர், ரொம்ப சிம்பிள் பாஸ், நன்பர் ஒருத்தர் ப்ளக் போட சொல்லிகொடுத்தார். நானும் சரின்னு நம்ம நிறுவனத்தை மையமாக வைத்து ஒரு ப்ளாக் போட்டேன். அப்புறம் கூகுள் அட்சென்ஸ் ஐடி வாங்கி எனது ப்ளாகில் போட சொன்னார். அவர் சொல்லியபடி போட்டேன். முதல் இரண்டு மாசம் பெரிசா ஒன்னும் இல்லை. அப்புறம் ஆர்வத்துல இன்னும் மூனு ப்ளாக் போட்டேன். அதுல ஒன்னு கிரிக்கெட் பத்தி. அப்புறம் கேக்கனுமே, மாசம் 40 லேருந்து 55 வரைக்கும் தவறாமல் கூகுள் அட்சென்ஸ்லேருந்து செக் வந்துடுது. வாரத்துக்கு மூனு போஸ்டிங். இப்போ 5ஆவதா ஒரு ப்ளாக் ரெடி பன்னிடிருகேன். அதுல வர வருமானத்துலதான் இந்த கார். இந்த கார் என் லெட்சிய கணவு என்றார். அந்த கணவு என்னையும் தொற்றி கொண்டது. அதன் பின் அவரிடமிருந்து சில தகவல்கள் பெற்றுகொண்டு மேலும் இனையத்தை வலம் வந்து இப்போது நானும் ஒரு 4 சைட் கூகுள் அட்சென்ஸ் ஐடியோட வச்சிருகேன். தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ன்ற பரந்த நோக்கத்தில் இந்த கட்டுரை. தொடர்ந்து படிங்க.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by umajana1950 » Thu Mar 22, 2012 4:30 pm

அருமையான பதிவு. தொடர்ந்து போடுங்கள். நாங்களும் கற்றுக் கொள்கிறோம்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Thu Mar 22, 2012 5:01 pm

முதலில் கூகுள் அட்சென்ஸ்ன்னா என்னா,கூகுள் என்பது இனையத்தை ஆட்டி படைக்கும் ஒரு மாபெரும் சக்தி என்றால் அது மிகையாகாது. கூகுள் சர்ச் எஞ்ஜின், கூகுள் மேப், கூகுள் டாகுமெண்ட், கூகுள் மொழிபெயர்ப்பு,கூகுள் மின்னஞ்சல் என்று பல வசதிகளை தன்னுள் பொதித்து வைத்திருக்கும் ஒரு நிறுவணம். இவற்றுள் கூகுள் அட்சென்ஸ் என்பதும் அவர்கள் செய்து தரும் ஒரு வருமான வாய்ப்பு. எப்படி என்றால் உங்களிடம் ஒரு கடை இருக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள். அது மளிகை கடை என்று கொள்வோம். அதில் பல வகையான பிஸ்கட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இபோது ஒவ்வொரு தயாரிப்பாளரும் உங்கள் கடையில் ஒரு போஸ்டர் ஒட்டுகிறேன், எனது தயாரிப்புகள் எவ்வளவு விற்கின்றனவோ அவ்வளவு கமிஷன் உங்களுக்கு தருகிறோம் என்று கூறுகின்றனர். நீங்களும் சரி என சொல்ல, பிரிட்டானியா ,சன்ஃபீஸ்ட்,காட்பரிஸ் என பலரும் தங்கள் விளம்பரங்களை உங்கள் கடைகளில் அமைக்கின்றனர். நீங்கள் இதற்காக எதுவும் செய்ய போவதில்லை. ஜஸ்ட் ஒரு அனுமதி மட்டுமே. பின்னர், உங்கள் வாடிகையாளர்கள் உங்கள் கடைக்கு வரும்போதெல்லாம் இந்த விளம்பரங்கள் அவர்கள் குழந்தைகள் கண்ணில் பட்டு தொலைக்க, உடன் அனைத்து பிஸ்கட்களும் விற்று தீர்கின்றன. உங்களுக்கும் அதிக கமிஷன். இது தான் கூகுள் அட்சென்ஸ் செய்வது. அதாவது உங்கள் கடை என்பது உங்கள் வலைதளம்,ப்ளாக் என எதோ ஒன்று. இந்த விளம்பரங்கள் எல்லாம் கூகுள் அட்சென்ஸ் உங்களுக்கு கொடுத்துவிடும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த விளம்பரங்களை உங்கள் தளத்தில் வெளியிட செய்வது மட்டுமே. இப்போது உங்கள் தளத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதில் உள்ள் விளம்பரங்களை சொடுக்கும் போது உங்களுக்கு விளம்பரதிற்க்கு தகுந்தார்போல் டாலர் ஒன்று முதல் அதிகபட்சமாக 10 டாலர் வரை தனது விளம்பரதரரிடமிருந்து கூகுள் பெற்றுகொண்டு அதில் 68 சதவீதம் உங்களுக்கு கொடுக்கும். பாருங்கள் இதில் ஏதாவது உங்களுக்கு சிரமமிருக்கிறதா. சற்று காத்திருங்கள், தொடர்ந்து படிக்காலாம்,
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Thu Mar 22, 2012 7:45 pm

google adsense பற்றிய கருத்துக்களை tamil-ல் படிக்க ஆவலாய் இருக்கும் எனக்கு தீணி போடும் ஒர் சிறந்த தொடர்.

உங்களது கட்டுரையைப் பார்த்து, மீண்டும் அட்சன்ஸ் களத்திற்குள் குதித்திடுவேன் போலிருக்கிறது, அத்தனை உத்வேகம் கொடுக்கும் வார்த்தைகள்.

தொடரட்டும்...

நன்றி.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Thu Mar 22, 2012 11:37 pm

நன்றி ஆதி, உங்கள் வார்த்தைகள் என்னை உற்சாகத்துடன் மேலும் மேலும் எழுத தூண்டுகிறது. அது என்னாவோ தமிழுக்கு கூகுள் அட்சென்ஸ் கிடைகாதுன்னு பரவலா பேசிகிறாங்க. அப்ப தமிழ் தெரிஞ்சவங்கள்ளாம் கூகுள்ல சம்பாதிக்கவே முடியாதா, கண்டிப்பாக முடியும், அதுக்குதான் இந்த தொடர். அதுவுமில்லாம அட்சென்ஸ் பத்திய எல்லா விஷயமும் ஆங்கிலத்தில்தான் இருக்கு. இத தமிழ் மட்டுமே தெரிஞ்ச என்னை போன்றவர்கள் எப்படி படித்து, எப்ப முடித்து, சம்பாதிக்க ஆரம்பிக்கிறது. என்னோட தொடர பாத்து ஒரு 100 பேராவது அட்சென்ஸ் ஐடி வாங்கி தங்கள் தளத்தில் போட்டு நாலு காசு பாக்கனும், அது தான் என்னோட குறைந்தபட்ச ஆசை.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Fri Mar 23, 2012 6:43 am

mnsmani wrote:அது என்னாவோ தமிழுக்கு கூகுள் அட்சென்ஸ் கிடைகாதுன்னு பரவலா பேசிகிறாங்க. அப்ப தமிழ் தெரிஞ்சவங்கள்ளாம் கூகுள்ல சம்பாதிக்கவே முடியாதா, கண்டிப்பாக முடியும், அதுக்குதான் இந்த தொடர். அதுவுமில்லாம அட்சென்ஸ் பத்திய எல்லா விஷயமும் ஆங்கிலத்தில்தான் இருக்கு. இத தமிழ் மட்டுமே தெரிஞ்ச என்னை போன்றவர்கள் எப்படி படித்து, எப்ப முடித்து, சம்பாதிக்க ஆரம்பிக்கிறது. என்னோட தொடர பாத்து ஒரு 100 பேராவது அட்சென்ஸ் ஐடி வாங்கி தங்கள் தளத்தில் போட்டு நாலு காசு பாக்கனும், அது தான் என்னோட குறைந்தபட்ச ஆசை.
ஆம், கூகுள் இதுவரை தமிழ் தளங்களுக்கு தன் விளம்பர உரிமத்தை வழங்குவது இல்லை. இதற்கு விதிவிலக்கும் உண்டு, நாம் பார்க்கும் தினகரன் போன்ற தமிழ் செய்தி தளத்தில் கூகுள் விளம்பரம் இருப்பதனைப் பார்க்கலாம்.

உங்கள் ஆசைபோல், பலரும் சம்பாதிக்க வேண்டும், அதற்கான உதவிகளைக் கொடுக்கும் இத்தொடர் வளர்ந்து கொண்டே செல்லட்டும்...

:thanks:
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sat Mar 24, 2012 12:01 am

ரொம்ப நேரம் காத்திருந்தீங்களோ, கொஞ்சம் லேட்டாய்சிடுச்சி, வாங்க மேல படிக்கலாம்,கடைசியா என்ன பாத்தோம், Google Adsense உங்களுக்கு தங்கள் வருமானத்திலிருந்து 68 சதவீதம் உங்களுக்கு கொடுக்கும். ஏன் Google உங்களுக்கு 68 சதவீதம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தருகின்ற விளம்பரங்களை உங்கள் தளத்தில் விளம்பரபடுத்தியதற்க்கு உங்களுக்கு வருமானம். ஒரு விஷயம் நாம் இங்கு கவணிக்க வேண்டும். நாம் எப்படி Google Adsense ஐடி வேண்டும் என்று ரொம்ப முயற்சிக்கிறோமோ அதுபோலவே Google Adsense தங்களுக்கு ஒரு நல்ல பிரசுரிப்பாளர் (Publisher) வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. சென்ற வருட Google Adsense வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா, நம்பினால் நம்புங்கள், 2011 முதல் காலாண்டில் 8.58 பில்லியன் டாலர், இரண்டாம் கலாண்டில் 9.03 பில்லியன் டாலர்,மூன்றாம் காலாண்டில் 9.72 பில்லியன் டாலர்,என்றபடி வளர்ந்துகொண்டிருக்கிறது. மேலும் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்http://investor.google.com/financial/tables.htmlஇத்தகைய வளர்சிக்கு யார் காரணம், நாம்தான், நாமேதான். இங்கு “நாம்” என்று சொல்லபடுவது நம்மை போல இனையத்தை வளம் வந்து கொண்டிருப்பவர்கள், மற்றும் வலைதளம் வைத்திருப்பவர்கள்,இப்படி பலர். இவர்கள் இல்லை என்றால் Google க்கு வருமானம் இல்லை என்பதே உண்மை. ஆக Google தனக்கு வருமானம் தேவை என்றால் அதற்க்கு Publisher வேண்டும். அதனால் நாம் கூகுளை நம்பி இல்லை, Googleதான் நம்மை நம்பி உள்ளது. அப்படியிருக்கும் போது Google வெகு சிலரை தவிர அனைவருக்கும் ஐடி கொடுக்க மறுப்பது ஏன். இது ஒரு சிறந்த கேள்வி. முக்கியமாக இதைதான் இந்தியாவில் பலரும் கேட்கின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தான், பங்களாதேஷ், சைனா போன்ற நாடுகளுக்கும் Google மிக கடுமையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பிறகே ஐடி தருகிறது. காரணம் என்னெவெனில் இந்த நாட்டில் உள்ளவர்கள் மிக சுலபமாக Googleஐ ஏமாற்றி பெரும்பொருள் ஈட்டினர் என்பது கூகுளின் குற்றசாட்டு. Googleஐ எப்படி எமாற்றினார்கள். முன்னர் Googleல் அவ்வளவு கட்டுப்பாடுகள் கிடையாது. அதை பயன்படுத்தி பலரும் போலியான, செயற்கையான சொடுக்குகளை Google விளம்பரங்களில் சொடுக்கி அதிக டாலர் வருமானமாக பெற்றனர். இதனால் Googleக்கும் விளம்பரதாரர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இத்தகைய தவறுகளை களையவே, Google தற்போது மிக அதி நூன்னிய மென்பொருட்களை பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் உங்களது வளைதளம், அதில் Google விளம்பரங்கள் 24 X 7 என்ற அளவில் கண்கானிக்கபடுகிறது. அதுவும் மிக சமீபத்தில் Google ஐடி பெற்றவர்களின் தளங்கள் மிக நுனுக்கமாக, முதல் செக் பெரும் வரை ஆராயப்படுகிறது. ஆகவே கூகுள் ஐடி பெற்றவர்கள், இக்கட்டுரையின் இறுதியில் ஐடி பெற போகிறவர்கள் அனைவரும் கூகுளின் சட்டதிட்டங்களை அவசியம் பின்பற்றுவது தங்கள் கணக்கை இழக்காம்லிருக்க உதவும். ஏனெனில், நம் வீட்டு கண்னியில் அமர்ந்து யாருக்கும் தெரியாமல் செய்கின்ற, பரிட்சித்து பார்கின்ற அனைத்து விஷயமும் Googleக்கு தெரியும். அதன் பின் உங்கள் மெயிலுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், தங்கள் கனக்கு முடக்கபட்டது, இதற்க்கு காரணம் ஏதுமில்லை, இந்த மின்னஞ்சலுக்கு பின்னூட்டம் இடவேண்டாம், நன்றி, என்று. அதன் பின் உங்கள் முகவரியிலோ அல்லது உங்கள் முகவரியில் வேறு யார் பெயரிலோ, உங்கள் தொலைபேசி என்னுக்கொ எப்போதும் ஐடி கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும். ஏனினில் நீங்கள் மறுமுறை முயற்சிக்கும் போது கூகுள் தன்னிடம் உள்ள டேட்டா பேஸில் உள்ள தகவல்களோடு ஒத்து பார்த்தே ஐடி வழங்குகிறது. ஒரு வருடம் , இரண்டுவருடம் கழித்து முயற்சித்தாலும் அதே நிலைமையே, சரி இப்ப எப்படி ஐடி வாங்களாம், கொஞ்சம் காத்திருங்கள்
Last edited by mnsmani on Sat Mar 24, 2012 9:28 am, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by ஆதித்தன் » Sat Mar 24, 2012 7:58 am

ஆம், நீங்கள் சொல்வது போல் கூகுள் அட்சன்ஸ் ஐடி என்பது தற்பொழுது கொஞ்சம் குதிரைக் கொம்பாகத்தான் மாறிவிட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர், பாக்கி நபர் ஒருவரிடம் அட்சன்ஸ் ஐடிக்கு 30$ விலை பேசி, என்னும் என்னால் ஐடி கொடுக்க முடியவில்லை, முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அதைப் போல, பெற்ற பின்னரும் கடுமையாக நம் நடவடிக்கைகளை உற்று நோக்குகிறார்கள். தவறு நடந்தால்.. ஐடி அம்பேல் தான்.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sat Mar 24, 2012 9:32 am

Athithan wrote:ஆம், நீங்கள் சொல்வது போல் கூகுள் அட்சன்ஸ் ஐடி என்பது தற்பொழுது கொஞ்சம் குதிரைக் கொம்பாகத்தான் மாறிவிட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர், பாக்கி நபர் ஒருவரிடம் அட்சன்ஸ் ஐடிக்கு 30$ விலை பேசி, என்னும் என்னால் ஐடி கொடுக்க முடியவில்லை, முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அதைப் போல, பெற்ற பின்னரும் கடுமையாக நம் நடவடிக்கைகளை உற்று நோக்குகிறார்கள். தவறு நடந்தால்.. ஐடி அம்பேல் தான்.
ஆமாம் நீங்கள் சொலவது உன்மைதான், நானும் ஒரு ஐடி வாங்கிவிட்டு, நீண்ட நாள் ஒரு அட் கூட கிளிக் விழவில்லை, உண்மையில் கூகுள் வேலை செய்கிறதா என்று பரிட்சித்து பார்க்க ஒரு ப்ரொஸிங் செண்டர் சென்று எனது விளம்பரத்தை க்ளிக் செய்தேன். 3.25 டாலர் வந்தது. பின்னாலே, ஒரு மின்னஞ்சலும் வந்தது. உங்களுக்கு கொடுத்த ஐடி, உங்கள் நடவடிக்கைகளை ஆராய்ந்தபின் என்களுக்கு தெரியவருவது, உங்களால் என்கள் விளம்பரதாரர்கள் பாதிக்கபடுவார்கள் போல. அதனால் உங்க கணக்கு முடக்க படுகிறது என்று.
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: கூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்

Post by mnsmani » Sat Mar 24, 2012 11:49 am

சரி இப்ப எப்படி Google Adsense Publisher ID வாங்கலாம். இந்த Google Adsense Publisher ID வாங்க முதல்ல உங்களுக்குன்னு ஒரு தளம் வேனும். அது என்ன தளம் திருத்தலமான்னு கேக்காதீங்க. நமக்கே நமக்குன்னு ஒரு WEB SITE. இதுக்கு கொஞ்சம் செலவாகும். எப்படின்னா முதல்ல DOMAIN நேம் வாங்கனும், அப்புறம் HOSTING பன்னனும். இதுக்கு ஒரு வருஷத்துக்கு இவ்வளவுன்னு இருக்கு. சுமாரா ஒரு ரெண்டு வருஷத்துக்கு ஒரு 1500 ஆகும்னு வைங்க. அதுக்கப்புறம் உங்களுக்கு கொஞ்சம் Creative knowledge வேனும். அதென்ன Creative knowledge, அதாவது இன்னிய தேதில பல மில்லியன் WEB SITE இனையத்துல உலாவிட்டிருக்கு. அதுலல்லாம் இல்லாத ஒரு விஷயம் உங்க WEB SITEல இருக்கனும். (அடடா, என்ன பின் வாங்கிட்டீங்க, இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷ்யமில்லை, சரி பன்னிகலாம் வாங்க)அப்பதான் உங்க தளத்தின் பார்வையாளர்கள் அதிகம் அதிகம் வருகை தருவார்கள். உங்களுக்கும் கூகுள் மூலம் பணம் கொட்டும். சரி இப்ப எப்படி ஐடி வாங்கறது. இப்ப நேரா கூகுள் அட்சென்ஸ் கிட்ட போய், இங்க பாருங்க இதுதான் என்னொட WEB SITE, இது கண்டிப்பா என்னொடதுதான், இதுல உங்க விளம்பரங்களை போட எனக்கு ஒரு ஐடி கொடுங்கன்னு கேக்கனும். கூகுள் என்ன பன்னும் உங்க WEB SITE ட்ட நல்லா அலசி பாத்துட்டு, அதுல உள்ள விஷயங்கள் எல்லம் வேறு எங்கிருந்தும் காப்பியடிக்கல, எல்லாம் உங்க சொந்த சரக்குதான் அப்படின்னு உறுதி பன்னிட்டு உங்களுக்கு ஒரு ஐடி கொடுக்கும். நீங்களும் அந்த ஐடிய யூஸ் பன்னி விளம்பரங்களை உங்க சைட்ல விளம்பரங்களை போட்டு நல்ல காசு பாக்கலாம். இதெல்லாம் சரி, ஆனா 1500, 2000ன்னு கொடுத்து ரிஸ்க் எடுக்க நான் விரும்பலை. இத விட நல்ல வழி இருக்கா சொல்லுங்க. இருக்கு, அதெல்லாம் சொல்லதானே இந்த தொடர். நீங்க இலவசமா 1 ரூபா கூட செலவழிக்காம ஐடி வாங்கலாம். இதுக்குன்னு சில தளம் இருக்கு. அது எல்லாம் கூகுளோட ஒரு understanding ல இருக்கு. இந்த தளங்களில் போய் ஒரு கட்டுரை எழுதிட்டு இல்ல ஒரு 40, 50 படத்தபோட்டு அவங்க மூலமா அப்ளை பன்னலாம். உடனே ஐடி வந்திடும். அவங்களே உங்க பக்கத்துல விளம்பரத்தையெல்லாம் போட்டுருவாங்க. அக்கவுண்ட் உங்களதுதான். ஆனா என்ன ஒரு விஷயம்னா, இந்த தளங்கள் எல்லாம் USA, CANADA போன்ற நாடுகளை சேர்ந்தது. அதனால நீங்க எழுதற கட்டுரையெல்லாம் ரொம்ப STANDARD டா இருக்கனும்.இருந்தாதான் அவங்க தளத்துள வெளியிட அனுமதி தருவாங்க. அவங்க வெளியிட்டாதான் கூகுள் உங்களுக்கு ஐடி கொடுக்கும். சரி அப்படியே அடிச்சி பிடிச்சி ஒரு ஐடிய வங்கினாலும் உங்களுக்கு வர்ற தொகையில பாதி அவங்களுக்கு போயிடும். எப்படின்னா உங்க கட்டுரையை இலவசமா HOSTING பன்றாங்க இல்லையா, அதுக்காக 50 % HOSTING REVENUE ன்னு உங்கள் கூகுள் ஐடி பேஜ் லேயே வந்துடும். பாருங்க நிலமையை, நம்மால ஒரு டொமைன் வாங்க முடியல, ஒரு ஹோஸ்டிங் பன்ன முடியலன்றதால அவங்களுக்கு உங்க பங்குல பாதி. இப்போ இதுல என்னாவுது, உங்க திறமையை அவங்க சுலபமா பயன்படுத்தி காசு பாக்கறாங்க. சரிங்க இதுவும் வேண்டாம், வேற ஏதவது வழி இருக்கா. இருக்கே. நம்மள மதிரி உள்ளவங்க்களுக்கு கூகுளே ஒரு வசதி பன்னி தருது. அதுதான் கூகுளோட பிளாகர். தமிழ்ல வலைப்பூன்னு சொல்லலாம். இதுல கொஞ்சம் டிசைன் பன்னி ஒரு 35 போஸ்ட் போட்டு கூகுள் கிட்ட இத வச்சி ஐடி கேட்டீங்கன்னா, கண்டிப்பா உடனே ஐடி கிடைக்கும். என்ன நான் முன்னடியே சொன்ன மாதிரி இந்த நாலஞ்சு நாடுகளுக்கு தளம் ஆரம்பித்து ஒரு 6 மாசம் ஆன பின்னாடிதான் அனுமதி தருவாங்க. இதுலயும் ஒரு இக்கு இருக்கு, ஒருவேளை உங்கள் தளம் மிக நல்ல விஷயங்களை கொண்டு, ஓரளவிற்கு பார்வையாளர்கள் வருகை இருந்தா உடனே ஐடி கிடைச்சிரும். இதுக்கெல்லாம் கவலை படலாமா, நாம உடனே வாங்கறதுக்கும் வழி இருக்கு. அதுக்கு முன்னால நமக்கு ஒரு தளம் வேனும்ல, நேரா கூகுள்ள போயி ஒரு அக்கவுண்ட் போடுங்க, (வேறேங்க, ஜீமெயில்லதான்)அப்புறம் பிளாகர்க்கு போயி ஒரு தளம் வடிவமைங்க.அதுக்கு முன்னாடி நீங்க ஒரு வேலை செய்யனும், அது என்ன? கொஞ்சம் வெய்ட் பன்னுங்க.
Last edited by mnsmani on Sat Mar 24, 2012 3:32 pm, edited 1 time in total.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”