Page 1 of 1

கூகுள் அட்சன்ஸில் ஆறே மாதத்தில் ஆறு இலட்சம் வருவாய்

Posted: Sat Dec 31, 2016 4:40 pm
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=rZn1xsdMjjw[/youtube]
கூகுள் அட்சன்ஸ் என்பது மிகப் பெரிய வருவாய் கொடுக்கக்கூடிய பணி. இதில் நமது நேரத்தினை அர்ப்பணிப்புடன் புத்திசாலித்தனமாக வித்தியாசமான கோணத்தில் வழங்கும் பொழுது மிகப் பெரிய வரவேற்பினை பார்வையாளர்களிடத்தில் பெருவதோடு சிறந்த வருவாயினையும் கொடுக்கும்.

குறிப்பாக யுடியூப்பில் அதனைச் செய்யும் பொழுது பார்வையாளர்களை யுடியூப் தளமே தனது உறுப்பினர்களுக்கு முன்னெடுத்துச் செல்லும் என்பதால் சிறப்பான முறையில் விடியோ எடுத்து லோடு செய்வதுதான் நமது பணி. பணியினை சிறப்பாகச் செய்தால் மிகப்பெரிய வருவாய் பெறலாம்.

சமீபத்தில் Village Food Factory என்ற யுடியூப் சேனலில் பெரிய அளவில் சமையல் செய்வதனை விடியோவாக எடுத்துப் போட்டார்கள். இது நமது ஊர்களில் வீட்டு நிகழ்ச்சிகளில் பெரிய அண்டாவில் கல் கூட்டி ஆண்கள் செய்யும் சமையல் முறைதான் என்றாலும், இத்தகைய நிகழ்வுகளை இதற்கு முன் பிறர் செய்திருக்கவில்லை. அதிலும் பழைமையான கிராமத்து ஸ்டைல் என்பதால் வரவேற்பு கூடியது.

ஆகையால், ஒன்றுக்கு நான்கு சேனலில் இதுபோன்ற விடியோக்களையே எடுத்து அப்லோடிங்க் செய்ய ஆரம்பித்தனர் அந்த குழுவினர். ஒர் விடியோ பார்க்கும் பொழுதே அதுபோன்ற மற்ற விடியோக்களையும் யுடியூப் தளம் தன் வாசகர்க்கு வழங்கும் என்பதால், இவர்களது விடியோக்களே பக்கம் முழுமையாக கிடைத்ததோடு, பார்வையாளர்களின் பெரும்பான்மை நேரத்தினை தங்களது விடியோக்கள் மூலமாகவே ஆட்கொண்டனர்.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்னரே யுடியூப்பில் இவர்களது சேனல் கிட் அடிக்க ஆரம்பித்துவிட்டதால், என் பார்வைக்கும் கிடைத்தன.. பல விடியோக்களைப் பார்த்து நானே வியந்திருக்கிறேன். அவ்வளவு செலவு செய்து சமையல் விடியோ எடுத்திருப்பார்கள்.

பட்ட கஷ்டத்திற்கு பலனாய் கூகுளும் இலட்சம் இலட்சமாக வருவாயாக கொடுக்க ஆரம்பித்துவிட்டது என்பதில் அவர்கள் மகிழ்வாக இருக்கிறார்கள்.

நீங்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கூகுள் அட்சன்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டால் விரைவில் பல்லாயிரம், இலட்சம் என்று சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.

வில்லேஜ் பூட் பேக்டரி பற்றிய ஆர்ட்டிகள் தினமலர் நாளிதழில் கூட வெளிவந்துள்ளது. பார்க்க > http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93

Re: கூகுள் அட்சன்ஸில் ஆறே மாதத்தில் ஆறு இலட்சம் வருவாய்

Posted: Sun Jan 01, 2017 9:31 am
by suthan85
ஒரு கூகுள் அட்சன்ஸ் கணக்கில் எத்தனை யுடியூப் சேனல்கள் இணைக்க முடியும். sir

Re: கூகுள் அட்சன்ஸில் ஆறே மாதத்தில் ஆறு இலட்சம் வருவாய்

Posted: Sun Jan 01, 2017 9:38 am
by ஆதித்தன்
suthan85 wrote:ஒரு கூகுள் அட்சன்ஸ் கணக்கில் எத்தனை யுடியூப் சேனல்கள் இணைக்க முடியும். sir

no limit

Re: கூகுள் அட்சன்ஸில் ஆறே மாதத்தில் ஆறு இலட்சம் வருவாய்

Posted: Mon Jan 30, 2017 4:00 pm
by AmInfoTech
Video paatha matum google adsense la amount varathu , athula show agura ads ah click panatha amount varum , and nenga use pandra google adsense account just hosted account , use for Non- Hosted Pin verified account , and you will place for add in any website and youtube , and also , place ads post on mutilpe website in Non-Hosted google adsense account