பணம் சம்பாதிக்க நவீன தொழில் பணிப் பயிற்சி

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

பணம் சம்பாதிக்க நவீன தொழில் பணிப் பயிற்சி

Post by ஆதித்தன் » Sat Oct 01, 2016 8:28 am

Image
நவீன ஆன்லைன் தொழில் பணிப்பயிற்சி:

இன்பார்மேஷன் டெக்னாலாஜி என்று அரவணைப்போடு பயிற்சிக்கப்படும் ஒர் புதிய நவீன உலகத்தில் நாம் அனைவரும் இணையம் என்ற ஒன்றின் வழியாக பிணைக்கப்பட்டு உள்ளங்கைக்குள் அடங்கும் ஒர் இணைய கூடாரத்தில் அடைந்துவிட்டோம். இணைய கூடாரத்திற்குள் சுபமாய் ஒடுங்கினாலும், வாழ்வு இயக்கம் இயங்கிக் கொண்டிருக்க, தேவைக்கு ஆதாரமாய் பணம் என்ற ஒன்றினை நாம் அனைவரும் அவசியம் சம்பாதிக்க வேண்டும் என்ற கால சூழலில் மேலும் அதிகம் உந்தப்பட்டுள்ளதால், நவீன காலத்திற்கு ஏற்ப இணையம் வழியாக வீட்டிலிருந்தப்படியே பணம் சம்பாதிக்க, நமக்கு அடிப்படையாக தேவைப்படும் ஒர் தகுதித் திறமையை மொபைல் விடியோ கேம் விளையாட்டின் மூலம் பயிற்சி எடுத்து வளர்த்துக் கொள்ளுதல் என்பது உறுதியாக பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இப்பதிவினை எனது 2007 ஆம் ஆண்டு தேடங்கிய ஆன்லைன் மூலம் பணம் சம்பாதித்தல் என்ற தேடலில் கிடைத்த அனுபவத்தினைக் கொண்டு பதிகிறேன்.

மொபைல் போனில் விடியோ கேம் விளையாடுவது என்பது ஒர் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அதன் செயல்பாட்டினைச் சரியாகப் புரிந்து கொண்டால் வருவாய் கொடுக்கும் செயல்பாட்டிற்கான உற்றத்துணைக்கு ஒர் அடிப்படைப் பயிற்சியாகக் கூட நமக்கு அமையும் என்பதனை "Subway Surfers" என்ற கேமில் நான் அறிந்து கொள்ள முடிந்தது. சப்வே சர்பர்ஸ் விளையாட்டின் மூலம் பணிக்கான எத்தகைய பயிற்சி நாம் பெற இருக்கிறோம் என்பதனை மேலும் விவரமாக பார்ப்போம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

(கணியன் பூங்குன்றனார், புறநானூறு: 192)
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - என கணியன் பூங்குன்றனார் அன்றைய நாளிலேயே எங்கும் வாழ்ந்திட முடியும் என்று உலகப் பரப்புகளுக்கு எல்லாம் பரந்துவிரிந்த மாந்தர்கள் யாவருக்குமாய் தான் அறிந்த அருமை விளக்கத்தினைக் கொடுக்கிறார். அதில் நாம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, "பெரியோரை வியத்தல் இலமே"... அவர் எவ்ளோ பெரியவர்.. எவ்ளோ பெரிய பதவியில் இருக்கிறார்... எவ்ளோ பெரிய வெற்றியாளர்... எவ்ளோ பெரிய சாதனை புரிந்திருக்கிறார்... என்று உயர்ந்து வியத்தலில் ஏதும் இல்லை, அது அவசியமும் இல்லை என்பதனை வானில் உதித்து, கடலோடு இல்லாமல் போகும் மழைத்துளி போல், கடந்துவிடக்கூடிய இவ்வாழ்வின் ஊழ்பயன் என்று கூறி, சிறியோர் என்று ஒருவரை இகழ்வாய் பார்த்தல் கூடாது என்பதுதான் பெரியவர் என்று வியத்தல் அவசியமில்லை என்பதனைக்காட்டிலும் பெரிதும் கடைபிடித்தல் வேண்டும் என்பதனை உரைக்கிறார். இதனை மனதில் ஏற்றிக் கொண்டு, நமது ஆன்லைன் பணிப்பயிற்சிக்குள் செல்லலாம்.

ஆன்லைன் வேலை வாய்ப்புகள்:

ஆன்லைன் என்பது ஒர் பெரிய சமுத்திரம். அதில் என்னற்ற ஆன்லைன் வேலை வாய்ப்புகள் உள்ளன. நமக்கு ஏற்றப்படி வீட்டிலிருந்தபடியே செய்வதற்குத் தகுந்த பணி வாய்ப்புகள் என்று கூகுள், அமேசான், ஸ்னாப்டீல், இபே போன்ற பெரிய தளங்கள் மற்றும் பல சிறிய தளங்கள், அப்ளிகேட் பணி வாய்ப்புகளைக் கொடுக்கின்றன. அப்ளிகேட் என்ற பணி வாய்ப்பு என்பது நமக்கு சுதந்திரத்தினைக் கொடுப்பதோடு, கை நிறைய பணம் சம்பாதிக்கவும் உதவுகிறது.

மாதம் ரூ.30,000 முதல் இலட்சம் கூட எளிதாகச் சம்பாதிக்க முடியுமான பணிதான், இந்த அப்ளிகேட் ஆன்லைன் ஜாப். இதற்காக நாம் எந்தவொரு முதலீடும் செய்ய வேண்டிய அவசியமில்லை. இலவசமாகவே அப்ளிகேட் ஆன்லைன் ஜாப்பினை வீட்டில் இண்டர்நெட் கனெக்சன் இருந்தால் தொடங்கிவிடலாம். சேர்ந்த முதல் நாளிலிருந்தே பண வருவாயும் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

பணிக்கான தகுதி:
அப்ளிகேட் ஜாப்பிற்கு பணிக்கான தகுதி என்று நீங்கள் என்னப் படித்திருக்கிறீர்கள் என்று எந்தவொரு தகுதியும் கிடையாது. உங்களுக்கு விருப்பம் என்றால் உடனே ஒர் இமெயில் ஐடி மூலம் ரிஜிஸ்டர் செய்து, பணியினைத் தொடங்கிவிடலாம்.

உண்மையில் ஒர் பணியினைப் பற்றித் தெரியாமல், அதில் பணம் சம்பாதிப்பது என்பது கடினமான விடயம். ஆகையால், அவர்கள் உங்களிடம் இந்தத் தகுதி வேண்டும் என்று எதனையும் உங்களிடம் கேட்காவிட்டாலும், கீழ் கொடுக்கப்பட்ட மொபைல் விடியோ கேம் விளையாட்டின் மூலம் பணிக்கான பயிற்சியாக கற்றுக் கொண்டால், வேலைக்கு உதவியாக இருக்கும்.
Image
Subway Surfers:
உங்களது மொபைல் போனில் கூகுள் ப்ளே ஸ்டோர் இருந்தால், அதில் Subway Surfers என்று சர்ச் கொடுத்து, கேமினை முதலில் இன்ஸ்டால் செய்து கொண்டு விளையாட ஆரம்பியுங்கள். இது ஒர் பொழுதுபோக்கு விளையாட்டுதான், ஆனால் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னச் சின்ன டாஸ்க் மற்றும் அவார்ட் சேலஞ் போன்றவை பணிக்கான அடிப்படை மனதினையும் முயற்சிக்கான வித்தினையும் கொடுத்துவிடும்.

சப்வே சர்பர் கேம் மிக எளிமையானதும், விளையாட விளையாட விளையாட்டில் விருப்பமும் அதிகரிக்கும். ஹை ஸ்கோர் எடுக்கணும் என்ற உத்வேகம், சின்னச் சின்ன டாஸ்க் செய்யும் பொழுது கிடைக்கும் பொழுது கிடைக்கும் பாராட்டும் மாயை பரிசும் மனமகிழ்வினையும் உற்சாகத்தினையும் கொடுக்கும்.
Image
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் - (திருக்குறள்)
முயற்சி என்பது மிகவும் கட்டாயம் இருக்க வேண்டிய பண்பு. அதிலும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று வந்துவிட்டால் விடாமுயற்சியும், தளராத மனமும் கண்டிப்பாக வேண்டும்.

வேலை தேடுபவர்களுக்கு TNPSC Group IV, II Exam பற்றி நன்காகத் தெரிந்திருக்கும். ஆண்டுக்கு இருமுறை அல்லது மூன்றுமுறை குறிப்பிட்ட பணியிடங்களுக்கு என்று தேர்வுகள் வைத்து ஆட்கள் எடுப்பார்கள். கவர்மெண்ட் ஜாப் என்பதால், இலட்சக்கணக்கானவர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். வேலையில் அமர்ந்துவிட்டால் சம்பளமும் குறைந்தது ரூ.12000 முதல் ரூ.65000 கூட கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், பணியும் நிரந்தரம் என்ற உறுதியும் பலரையும் அந்த ஜாப் மீது ஒர் ஆர்வத்தினைக் கொடுக்கிறது.

கவர்மெண்ட் ஜாப் என்று ஆர்வம் இருந்துவிட்டால் போதுமா? உள்ள 4000 பணியிடத்திற்கு 4,00,000 பேர் தேர்வு எழுதுவார்கள். அதாவது, இங்கு குறிப்பிட வருவது, மூன்று இலட்சத்து முப்பத்தொன்பதாயிரம் நபர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவர்களும் தேர்வு எழுதுவார்கள், தேர்வுக்காக பல மாதங்கள் கஷ்டப்பட்டு படிப்பார்கள்.

பலர் ஒவ்வொரு தேர்விலும் கலந்து கொள்வது என்று தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து, 3 வருடங்களாக TNPSC எக்சாம்-க்கு தயார் ஆகிக் கொண்டிருக்கிறேன் என்று படித்துக் கொண்டும், தேர்வு எழுதிக்கொண்டும் இருந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

கடினப்பட்டு சிறப்பாக பயிற்சியில் படித்துக் கொண்டவர்களில் 4000 பேர் தேர்வில் வெற்றி பெறுவதோடு வேலையிலும் சேர்ந்து மகிழ்வோடு இருக்கிறார்கள். குறிப்பாக, முதலிடம் பெற்ற 4000 நபர்கள் மற்றும் குறுக்காக இட ஒதுக்கீடு பெறும் நபர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பினைப் பெறுகிறார்கள். அதற்காக மற்றவர்கள், படிக்கவில்லை... கடினப்படவில்லை என்றுச் சொல்லவில்லை, அவர்களும் கஷ்டப்படத்தான் செய்தார்கள். ஆனால் வாய்ப்பு என்பது காலி இடத்துக்கு மட்டும்தானே இருக்கிறது. நானும் ஒர் தகுதியான சதவீத அளவிற்கு மார்க் எடுத்திருக்கிறேன் என்று 55% மேல் உள்ளவர்களுக்காகவது ஒர் வாய்ப்பு கிடைக்கிறதா?? என்றால் இல்லை.

எப்படியும் இலட்சக் கணக்கான நபர்கள், பணிக்குத் தகுந்த உரிய தகுதி கொண்டிருந்தும், வேலை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியா வாய்ப்புதான் ஆப்-லைன் ஜாப். ஆனால், ஆன்லைன் ஜாப்பில் அப்படியல்ல.

ஆன்லைனில் தகுதியுள்ள அனைத்து நபர்களும் வேலை செய்யலாம், கை நிறைய தகுதிக்கு ஏற்ப சம்பாதிக்கலாம். ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து மாதம் இலட்சம் சம்பாதிப்பவர்கள் நிறைய நிறைய நபர்கள். நானும் வீட்டிலிருந்தபடியே சுதந்திரமாக வேலை செய்து மாதம் மாதம் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன் என்பதனைச் சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி.

நான் செய்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் பற்றியதுதான் இந்த விளையாட்டும். விளையாட்டுக்கும், பணிக்கும் தொடர்பு எவ்வாறு இருக்கிறது என்பதனையே கொஞ்சம் சிந்தித்துத்தான் புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் எளிதாக என்னால் முடிந்தவரை விளக்கமளிக்கிறேன்.

நமக்கான நல்லதொரு நட்பு வட்டாரம் என்பது பள்ளிப் பருவத்தில் தான் அமையும், மேலும் படிப்பு பருவத்தில் தான் சரியான நட்புகள் என்பதனை பெற முடியும். ஏனெனில் அங்குதான் பணம் என்ற ஒன்றினை குறிவைக்காமல், விருப்பம் என்று பொதுப்படையான ஒர் விடயத்தின் மூலம் ஒருவர்க்கு ஒருவர் இணைந்து நட்பு கொள்கிறோம். இந்த விருப்பம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும்.

படிப்பவர், நன்கு படிப்பவர்களோடு நட்பு வைத்துக் கொள்ளும் சிலர், விடுமுறை என்றால் அங்கும் இங்கும் சுற்றி பொழுதுபோக்கும் ஒர் நட்பு கூட்டம், விளையாட்டினை மையமாக வைத்து சேரும் ஒர் நட்பு வட்டம் என விதவிதமான நமது விருப்பத்திற்கு ஏற்ப நமக்கான ஒர் நட்பினை கண்டிப்பாக எல்லோருமே வைத்திருப்பார்கள்.

நல்ல நட்பு வட்டம் என்பது நமக்கு பல விடயங்களில் பிற்காலத்தில் உதவியாக இருப்பார்கள். குறிப்பாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவ நண்பர்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், நினைத்துப் பாருங்கள்! கூகுளில் தேடி அந்த சைட் இந்த சைட் என்று தேடி ஓடி அழைந்து, கடைசியில் நேரமும் பணமும் தான் வீண், இன்னும் சரியான ஒர் பக்குவத்தினை அடைய முடியவில்லை என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்.
Image
ஆப்-லைனில் நமக்கு நட்பு இருந்தாலும் இன்றைய சூழலில் பெரும்பான்மையானவர்களுக்கு ஆன்லைன் வேலை பற்றிய அறிதல் ஒர் சூட்சமமாகவே பிடிபடாத கேள்வியாக இருப்பதால் சரியாக ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சித்திருந்தாலும், பணம் வருவாய் வாங்கவில்லை என்ற ஒர் பக்கத்தில் தான் இருப்பார்களானால், சரியான பதில் பெற முடியாத நிலை உருவாகிவிடும்.

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கக்கூடிய ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிப்பவர்களுக்கு அடிப்படையே ஒருவர்க்கு ஒருவர் உதவிக் கொள்ளும் நெட் வட்டம் அமைத்துக் கொள்வதுதான். அப்படியிருக்க, நாமும் அவர்களைப்போல் ஆன்லைனில் ஒர் நட்பு வட்டத்தினை உருவாக்கிக் கொண்டால் எளிதாக ஆன்லைன் ஜாப் பற்றிய உதவிகளைக் கேட்டுப் பெறுதல் முடியும். குறிப்பாக பணம் பணம் என்ற அடிப்படையை மையமாகக் கொண்டு இயங்கும் படுகை.காம் வழியாக இந்த வாய்ப்பினை அறிந்து கொள்ளும் இந்த விளையாட்டுக் குழுவில் இருப்பவர்கள் எல்லோருமே ஆன்லைன் வருவாய் பார்க்கும் ஒர் முயற்சியிலும் செயல்பாட்டிலுமே இருப்பார்கள். ஆகையால், நீங்களும் சேர்ந்து கொண்டு இந்த விளையாட்டினை பேஸ்புக் நட்பு வட்டத்தோடு இணைந்து செயல்படுத்தினால், நல்ல நட்பு வட்டத்தினையும், உண்மையான நல்ல ஆன்லைன் ஜாப் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், பணம் சம்பாதிக்க ஆன்லைன் ஜாப் செய்வோர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என்று நேரடியாக நீங்கள் ஆன்லைன் ஜாப் என்று மட்டும் தேடினால் நிறைய ஏமாற்றுக்காரர்களையே சந்திக்க நேரிடலாம். ஆகையால் தான், ஒர் நபரைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கால அவகாசத்தினை இந்த ஆன்லைன் கேம் மூலம் ஆன்லைன் நட்பு வட்டாரத்தினை உருவாக்கிவிட்டு, பின்னர் அவர்களிடமிருந்து ஆன்லைன் ஜாப் விவரங்களைப் பெற்றுக் கொள்ளுதல் மிகவும் நல்லது என்பதன் எனது கருத்துப்படியே இப்பயிற்சி. மேலும், இவ்விளையாட்டில் இருக்கும் சின்னச் சின்ன டாஸ்க் எல்லாமே நாமே சரியாக முடித்தாக வேண்டிய ஆன்லைன் ஜாப்புக்கான அடிப்படை பயிற்சியாக இருப்பதாலும் இந்த விளையாட்டினை அறிமுகம் செய்கிறேன், விருப்பம் இருப்பவர்கள் இந்த விளையாட்டில் சரியாக செயல்பட்டால் உறுதியாக ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்.

சப்வே சர்பர்ஸ் விளையாட்டு:

சப்வே சர்பர்ஸ் விளையாட்டினைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், சப்வே சர்பர்ஸ் கேம் அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோர்க்குள் சென்று இன்ஸ்டால் செய்துவிட்டாலே நீங்கள் விளையாட ஆரம்பித்துவிடுவீர்கள். இது ஒன்றும் பெரிய ராக்கெட் சயின்ஸ் கிடையாது, அல்ஜிப்ரா சிக்கலும் கிடையாது.. எளிதாக கைவிரலால், இடது வலது, மேல் கீழ் என்று (TAP செய்து) நகர்த்தி எளிமையாக விளையாடக்கூடிய ஒர் கேம் தான்.

நாம் கவனிக்க வேண்டியது, லெவல் உயர்வுக்காக & அவார்டுக்காக கொடுக்கப்பட்ட சின்னச் சின்ன மிஸ்சன்/டாஸ்க் பற்றித்தான். ஒவ்வொரு பணிக்கும் என்ன செயல்பாடு செய்தல் வேண்டும் என்பதனை முழுமையாகப் புரிந்து, அதனை பூர்த்தி செய்து கோல்டன் அவார்டு வரை வாங்கி பூர்த்தி செய்வதே நமது திறனையும் செயலில் கொண்டுள்ள ஈடுபாட்டுடன் கூடிய முயற்சியினையும் வெளிப்படுத்தும். இதுவே ஆன்லைன் பணிக்கும் மிகவும் மிக முக்கியம்.

ஒர் அவார்டு வாங்க, இன்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகப் பார்த்து நேர்த்தியாகச் செய்துவிட்டால், அதைப்போல் ஆன்லைன் ஜாப்பிலும் பணம் கிடைக்க இன்ன செய்தல் வேண்டும் என்று சரியாகச் செய்து முடிக்கும் பொழுது கையில் உண்மையாகப் பணத்தினைப் பார்க்கலாம், நாங்கள் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஒவ்வொரு அவார்டினையும் நாம் முயற்சித்து பெறுதல் நலம் என்றுச் சொன்னாலும் நான் குறிப்பிட்டுச் சொல்ல வருவது இரண்டு அவார்டுகள், அவை 1. டாப் ரன்னர் & 2. பெஸ்ட் ஆப் பிரண்ட்ஸ்.

இந்த இரண்டு அவார்டும் நீங்கள் பேஸ்புக் வழியாக நட்பு வட்டாரங்களை உருவாக்கி மட்டுமே செய்தல் முடியும். இன்று ஆன்லைன் ஜாப் மற்றும் தொழில் ஆகிய இரண்டுக்குமே பேஸ்புக் ஒர் முக்கிய இடமாக ஆகிவிட்டது. நமக்கான ஆன்லைன் தொழில் வட்டம் அங்கிருந்துதான் உடனடியாக வருவாய் பார்க்க ஏதுவாக அமைகிறது. மற்ற முறைகள் எல்லாம் நீண்ட நாட்களுக்குப் பின்னரே வருவாய் கொடுக்கும் ஆகையால், அந்த முறைகளில் பலர் சோர்வடைந்து போய்விடுகிறார்கள் என்று எனது முந்தைய பயிற்சிகளின் வாயிலாக அறிந்தப்பின்னரே இந்த நவீன ஆன்லைன் தொழில் பயிற்சியினை பேஸ்புக் நட்பு வட்டத்தினை விளையாட்டின் வழியாக வளர்ப்பதின் மூலம் வருவாய் தொழில்க்கு பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடியும், சம்பாதிக்கிறார்கள் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து, உங்களையும் ஆன்லைன் ஜாப்புக்கான ஒர் பயிற்சியாக இந்த விளையாட்டின் மூலம் இந்த இரண்டு பேஸ்புக் அவார்ட்சினையும் பெற்று தகுதியினை வளர்த்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
Image
50 பேஸ்புக் நண்பர்களை சப்வே சர்பர்ஸ் கேம்ஸ் அப் இன்ஸ்டால் செய்ய வைத்து, அவர்களோடு நீங்களும் விளையாடுவது என்பது கடினமான ஒர் செயல்பாடு என்பதனை நீங்கள் தெரிந்திருக்கிறீர்களோ இல்லையோ, இது ஒர் கடினமான செயல்பாடுதான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

டிஎன்பிஎஸ்சி குரூப் எக்ஸாம் எழுதி வெற்றியடைய எவ்வளவு கஷ்டப்படுகிறோம், அதைப்போன்று இதிலும் உங்களது நேரத்தினை ஒதுக்கி இந்த இரண்டு அவார்டுகளையும் வெல்ல முயன்று வென்றால், கண்டிப்பாக உங்களால் ஆன்லைனில் மாதம் ரூ.30,000 முதல் ஒர் இலட்சம் வரை சம்பாதிக்க முடியும். இது உண்மையிலும் உண்மை. இதற்கான வாய்ப்பினை கூகுள், அமேஷான், ஸ்னாப்டீல், இபே போன்ற பல முன்னணி ஆன்லைன் அப்ளிகேட் ஜாப் வழங்கும் தளங்களின் வாய்ப்பினைப் பயன்படுத்தி, தொழில்முறையில் உங்களது பேஸ்புக் நெட்வொர்க் முறையினை விரிவு செய்தால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும், பலர் செய்கிறார்கள்.

தகுதிகள் என்பவை எல்லாம் நாம் நீண்ட நாட்கள் பயிற்சியின் மூலம் பெற்றுக் கொண்டவைதான். ஆகையால், இந்த விளையாட்டின் மூலம் உங்களுக்கான ஆன்லைன் நெட்வொர்க் தகுதியினை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பது என்பது வீண்போகாது.

பட்டப்படிப்பு படிக்க மூன்று ஆண்டுகள் நாம் செலவழித்துள்ளோம், ஆன்லைன் நெட்வொர்க் என்ற தகுதியினை நிரூபணம் செய்ய நீங்கள் கொஞ்சம் நாட்கள் செலவிடுவது என்பது மிகவும் பயன் உடையது என்பது மட்டுமில்லாமல், இன்றைய நவீன ஆன்லைன் உலகில் பணம் சம்பாதிப்பதற்கான அடிப்படை தகுதிகளுள் இதுவே ஒன்று என்பதனை எந்தவொரு தளத்தில் சென்று, ஆன்லைன் தொழில் விரித்திப் பற்றிப் படித்தாலும் சொல்லப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். ஆகையால், இந்தப் பயிற்சியில் என்ன இருக்கிறது என்று நினையாமல் கண்டிப்பாகச் செய்யுங்கள், ஆன்லைன் தொழிலில் நீங்களும் ஒர் மகத்தான வெற்றியடைய அடிப்படைத் தகுதியினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Subway Surfers ஒரு கேம் என்பதால் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று, இதில் இவ்வளவு பெரிய ஸ்கோர் எடுத்திருக்கிறார்.. நிறைய அவார்ட்ஸ் நிறைவு செய்துவிட்டார் என்று வியத்தல் பேசி நேரத்தினை வீணடிப்பதற்கு பதில், தன் பிறப்பு, விரும்பியதில் விருப்புடன் மகிழ்வாய் இயங்கிக் கிடைப்பதே என்று முயற்சித்தால், நற்பலன் நிறைவாய் கிடைக்கும் என்பதனை மனதில் கொண்டு செயல்படுங்கள், கண்டிப்பாக பயிற்சிப்பலனை முழுமையாகப் பெறலாம்.

கீழ் உள்ள விடியோவில் மேலும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது ... பாருங்கள்..

[youtube]https://www.youtube.com/watch?v=k_TJnKilD30[/youtube]
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”