தொழில் வெற்றிக்கு வள்ளுவன் வழங்கும் 8 காரணிகள்

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

தொழில் வெற்றிக்கு வள்ளுவன் வழங்கும் 8 காரணிகள்

Post by ஆதித்தன் » Thu Sep 29, 2016 8:27 pm

Image
[youtube]https://www.youtube.com/watch?v=KlRYg0_Ereo[/youtube]

தமிழ் மொழி எத்தனை உயர்வானது என்பதனை அதில் கொடுத்துள்ள பொருளை முழுமையாக உள்வாங்கி அறிந்து கொள்ளும் பொழுதுதான் புரிந்து கொண்டுள்ளேன். இன்று நாம் பேசிக் கொண்டிருக்கும் ஒன்றினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறளில் அழுத்தமாக கொடுத்துள்ளார் என தெரியும் பொழுது மகிழ்வாக இருக்கிறது. மாந்தரின் முதல் மொழியான தமிழ் மொழி என் தாய்மொழி என்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.

தொழில் வெற்றிக்கு என்ன செய்தல் வேண்டும் என்று எப்படி சக்சஸ் பண்றது.. என்ன பண்ணலாம் என்று தேடித்தேடி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது, தமிழ் மொழியில் வள்ளுவர் குறளில் கொடுத்துள்ளார் என்பதனை பார்க்கையில் மகிழ்ச்சி. நானும் தமிழன் என்றுச் சொல்கிறேன், ஆனால் 1330 குறட்பாக்கள் என்ன என்னக்கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியாது. ஏதோ கொஞ்ச குறட்பாக்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள், இலக்கியம் என்ற வகையில் தமிழ் மொழி என்ற வகையில் படித்தேன். ஆனால், அது அறிவியல் பா, தொழில் பா என்பது தெரியாமலே இருந்துவிட்டேன்.

மிகத் தெளிவாக மிகச் சரியாக தொழில் வெற்றிக்கு என்ன செய்தல் வேண்டும் என்பதனை வள்ளுவர் குறளில் கொடுத்துள்ளார் என்பதனை நான் அறிந்ததை, நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் அதனை நான் பகிர்ந்து கொள்வதில் ஒர் மனநிறைவு.
Image
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்


இந்த குறளில் உள்ள எட்டுச் சொற்களுமே தொழில் வெற்றிக்குப் போதும் என்பதனை தெளிவாக சிந்தித்து வள்ளுவர் நமக்குக் கொடுத்துள்ளார். இதனைப் பார்க்கும் பொழுது நமது மூதாதையர் அறிவினைக் கண்டு வியக்கிறேன், தஞ்சை பெரிய கோவிலை பூஜ்ஜிய கோணத்தில் கட்டியதனைக் கண்டும் வியக்கும் பொழுது, இன்றைய படித்த அறிஞர்களைக் காட்டிலும் நமது முன்னோர்கள் சிறப்பானவர்கள் என்பதனை உண்மையாக அறிந்துகொண்டேன்.

எட்டு சொற்களைக் கொண்டு சொன்னதனை, அச்சொற்களை வள்ளுவர் தன் பிற குறட்பாக்களிலும் பயன்படுத்தியுள்ளார் என்பதனை விரிவாக விடியோவில் கொடுத்துள்ளேன். பார்க்க > https://www.youtube.com/watch?v=KlRYg0_Ereo

1. எண்ணம்
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்

2. முதலீடு
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை
3. வினை இடர்
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
செயலை முடிக்கும் வகையும், வரக்குடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்
4. கருவி
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?

5. வினை வலு
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்
6. இடம்
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
தக்த இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்
7. காலம்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
ஒருவன் இந்த உலகம் முழுவதையும் வெல்ல வேண்டும் என்று கருதினாலும் அது கை கூட வாய்ப்பு உள்ளது. எப்போது? அந்தச் செயலைச் செய்வதற்குரிய காலத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்குரிய இடத்தில் செயதால் உலகமும் ஒருவன் கையில் வரும்
8. செயல்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
பிறர் பொருளையும் தம் பொருள் போல் கருதி நடுவு நிலைமையுடன் கொண்டும் கொடுத்தும் வாணிகம் செய்தால் அஃது அவ்வாணிகர்க்குப் பொருள் வாணிகத்தோடு அற வாணிகமுமாம்

நன்றி.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”