ஆன்லைன் சுமால் பிசினஸ் & கூகுள் SEO

வீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12040
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

ஆன்லைன் சுமால் பிசினஸ் & கூகுள் SEO

Post by ஆதித்தன் » Fri Sep 23, 2016 8:09 pm

Image
நம் கைக்குள் அடங்கியிருக்கும் ஆன்லைன் உலகம் மூலம் மிக எளிதாக சிறுதொழில் செய்து கோடி கோடியாய் வீட்டிலிருந்தப்படியே பணம் சம்பாதிக்கலாம். ஆன்லைன் சிறுதொழில் செய்ய பெரியதாக முதலீடு தேவையில்லை ரூ.10,000 இருந்தால் போதும், நீங்களும் இப்பொழுதே ஆன்லைன் சிறுதொழிலை தொடங்கிவிடலாம்.

பணம் சம்பாதிக்கப் போகிறோம் என்றுச் சொன்னால், மற்றொருவரிடமிருந்து பணம் வாங்கப்போகிறோம் என்று அர்த்தோம், அவ்வாறு ஒருவரிடமிருந்து பணம் வாங்குகிறோம் என்றால் அவருக்கு நாம் சேவையை செய்ய வேண்டும் அல்லது பொருளைக் கொடுக்க வேண்டும். இதுதானே ஆப்லைனில் நடந்து கொண்டிருக்கும் தொழில்முறை? அதாவது, ஏர்டெல் ரிசார்ச் செய்ய பணம் கொடுக்கிறோம், அவரும் ரிசார்ச் செய்து தருகிறார், 1% வருவாய் பார்க்கிறார்... மொபைல் போன் வாங்க பணம் கொடுக்கிறோம், அவர் மொபைல் போன் கொடுக்கிறார், அதன் மூலம் இலாபம் பார்க்கிறார்.

இதனையே ஆன்லைன் வழியாகவும் செய்தல் முடியும். மொபைல் ரிசார்ஜ் சர்வீஸ் கொடுக்க முடியும்.. மொபைல் விற்பனை முடியும் .. இப்படி பல வாய்ப்புகள் பணம் சம்பாதிக்க ஆப்லைன் போலவே ஆன்லைனிலும் உள்ளது.

எல்லோரும் செய்வது இருக்கட்டும், நமக்குத் தகுந்த, பெரிய அளவில் சம்பாதிக்க என்றால், புதிய ஐடியாவோடு மக்கள் விரும்பும் சேவை அல்லது பொருளை நாம் முதன்மையாக மார்க்கெட்டில் கொண்டு வருவதுதான்.

மக்கள் விரும்பும் பொருளாக/சேவையாக இருந்தாலும் அதனை சரியாகத் திட்டமிட்டு மார்க்கெட்டிங் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் நல்ல வருவாயும் பார்க்கமுடியும்.
Image

மக்களிடம் கொண்டுச் சேர்க்க முதன்மையாக ஒர் அலுவலகம்/ஷோரூம் தொடங்குவது என்பது ஆப்லைன் பிசினஸ் நடைமுறை. ஆன்லைன் பிசினஸ் என்றுச் சொல்லிவிட்டால், மக்களிடம் கொண்டுச் சேர்க்க முதன்மையாக ஒர் வெப்சைட் தொடங்கிவிடுதல் வேண்டும். வெப்சைட்டில் தலைப்பே நமது பொருளை அல்லது சேவையை மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பாக தேர்ந்தெடுத்துவிடுதல் வேண்டும். இரண்டாவதாக, தளத்தின் செயல்பாடுகளை உடனே மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிதான வகையில் மெனு லிங்குகளைக் கொடுத்திடுதல் வேண்டும். அடுத்து மிக முக்கியமாக தளத்தில் டிசைன் ரெஸ்பான்ஸிவ் டிசைனாக இருக்கிறதா? என்றுப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் இன்றைய ஆன்லைன் மக்களில் பாதிபேர் மொபைல் போனில் தான் வெப்சைட்டிற்குள் வருகிறார்கள். ஆகையால், சிஸ்டம், டேப்லெட், மொபைல் என எதில் திறந்தாலும் நமது வெப்சைட் ஒழுங்குமுறையில் திறக்கும் வகையில் வடிவமைத்துவிடுதல் வேண்டும்.
Image

வெப்சைட்டில் நமது சேவை அல்லது பொருளைப் பற்றி விரிவாகக் கொடுத்திருந்தாலும், மக்களுக்கு வழிகாட்ட மற்றும் செயல்பாட்டிற்கு உதவ என்று ஒர் சப்போர்ட் லைன் உதவியாளரை நியமித்தல் வேண்டும். ஏனெனில் விவரங்களை பேசித் தெரிந்து கொள்ளலாம் என்று விரும்புவர்களே அதிகம். ஆகையால் தெளிவாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறி, வாசகரை வாடிக்கையாளராக மாற்றும் திறமை கொண்ட உதவியாளரை நியமித்தல் என்பது கட்டாயம்.

வெப்சைட்டை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டாகிவிட்டது என்றுச் சொன்னால் அடுத்தக்கட்டமாக பார்வையாளர்களைக் கொண்டுவருதல் வேண்டும்.
Image
பார்வையாளர்களைக் கவர, முதல் கட்டமாக சோசியல் மீடியா வெப்சைட்களான யுடியூப், பேஸ்புக், டுவிட்டர் மற்று கூகுள் ப்ளஸினை பயன்படுத்த ஆரம்பியுங்கள். இந்த நான்கு தளங்களுமே நமது வருவாய்த்தொழிலை இலவசமாக விளம்பரப்படுத்த அனுமதி கொடுக்கின்றன.

ஆன்லைன் உலகில் இருக்கும் அனைத்து நபர்களும் இதில் ஏதேனும் ஒர் தளத்தினை ரெகுலாராக பயன்படுத்தும் ஒர் நபராக கண்டிப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது.

மிக நேர்த்தியாக தனது பொருளின் அல்லது சேவையில் உள்ள நேர்மறையான தகவல்களைச் சேகரித்து, பிறவற்றினைக் காட்டிலும் இது சிறந்தது என்பதனை மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தனது ப்ரோமோசன் பேனர் இமேஜ் & விடியோ தயாரித்து சோசியல் மீடியா தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் புதிய படைப்புகளுடன் சோசியல் மீடியா பக்கங்களை அப்டேட்டில் வைத்திருப்பது என்பது மிக முக்கியம். விடாமுயற்சி என்று வைத்துக் கொண்டாலும் சரி, தன் கடமை என்று சரியாக செய்தாலும் சரி, தினம் செய்தல் என்பது கட்டாயம்.
Image
ஆன்லைன் தொழிலில் வாடிக்கையாளர்களை வழங்குவதில் முதன்மையாக இருப்பது கூகுள். கூகுள் சர்ச் தளத்தினை தினம் மில்லியன் மில்லியன் மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கூகுள் சர்ச் வழியாக வரும் பார்வையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நமக்கு வாடிக்கையாளராக மாறிவிடுவார்கள். ஆகையால், நமது தளத்தினை கூகுள் சர்ச் பேஜ்-க்குள் கொண்டு செல்வதனை முக்கியப் பணியாகச் செய்தல் வேண்டும். இதனை சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேசன் என்று சொல்வார்கள்.

எந்தவொரு கீவேர்டில் தேடினாலும் பல்லாயிரக்கணக்கான வலைத்தளங்கள் லிஸ்ட் கூகுளில் கொடுக்கப்படுகிறது. அதில் நமது வலைத்தளம் முதல் பக்கத்தில் டாபில் வர வேண்டும் என்பதனையே குறிக்கோளாகச் செய்தல் வேண்டும்.

கூகுள் ரிசல்ட் பேஜின் பர்ஸ்ட் வர, கூகுள் தனது சர்ச் இன்ஜினுக்குள் புதிய தளங்களை நுழைக்கும் பொழுது கொடுக்கும் ரேங்கிக்கிற்காக பயன்படுத்தும் சூத்திரத்தின்படி செயல்பட வேண்டும்.

தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வலைத்தளங்களைக் காட்டுவதற்காக சர்ச் ரிசல்ட்டுக்குள் தளத்தினை நுழைக்க கூகுள் நான்கு விதமான சூத்திரத்தினை பயன்படுத்துகிறது. அவை, 1.பென்குவின், 2. பாண்டா, 3. ஹம்மிங் பர்டு & 4. போஸ்சம் (லோகல் பிசினஸ்).

பென்குவின் சூத்திரப்படி, நமது தளத்தினை பிறதளங்கள் ரெபர் செய்கின்றன என்பதனை பார்க்கிறது. அதாவது நாம் சிறப்பாக தளத்தினை நடத்தும் பொழுது, பிறதளங்கள் நம் தளத்தினை ரெக்கமண்ட் செய்வதனைப் பார்த்து, அதன் மூலம் ரேங்கிக் கொடுப்பது.

பாண்டா சூத்திரப்படி, நமது தளத்தில் சிறப்பான கட்டுரைகள் வாசகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்பதனைப் பார்க்கிறது. ஆகையால், வாசகர்களுக்கு தேவையான தகவல்களை முழுமையான கட்டுரையாகக் கொடுத்தல் வேண்டும். கட்டுரைகளுக்கு நடுவே இமேஜ் செய்து கொள்வது நல்லது

ஹம்மிங் பர்டு சூத்திரப்படி, ரெலவண்ட் கீவேர்டு தேர்ந்தெடுத்து, அதற்குத்தகுந்த நல்ல பேஜினை வழங்குவது. நமது கட்டுரைகளை வாடிக்கையாளர்கள் எந்த கீவேர்டில் தேடிவார்கள் என்பதனை மனதில் கொண்டு, அதற்குத் தகுந்த பதிலுரை கட்டுரையை தெளிவாக எழுதுவதோடு, கீவேர்டுகளை சப் டைட்டிலாக கொடுத்துக் கொள்ள வேண்டும்.
Image
போஸ்சம் - லோகல் பிசினஸ் சூத்திரப்படி, வாடிக்கையாளர்களுக்கு அருகாமை பிசினஸ் செண்டர்களின் தகவல்களை வழங்குவதால், கண்டிப்பாக நமது வலைத்தளத்தினை லோகல் பிசினஸ் பகுதியில் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும். இதன் மூலம் நமது அருகாமை பார்வையாளர்களைப் பெற முடிவதோடு, நார்மலாக நடக்கும் பார்வையாளரிலிந்து வாடிக்கையாளராகும் கன்வர்சனைக் காட்டிலும் 400% அதிகப்படியான வாடிக்கையாளர் கன்வர்சன் கிடைக்கும் வாய்ப்பினையும் பெறலாம்.
Image
இத்தனைச் சூத்திரங்களைக் கையாண்டு நமது வலைத்தளத்தினை கூகுளுக்கு நுழைத்து வருவாய்ப் பார்க்க கொஞ்ச நாட்கள் அல்லது மாதங்கள்கூட ஆகலாம். ஆகையால் தான் பலர் ஆன்லைன் பிசினஸ் விரைவில் சோர்ந்துவிடுகிறார்கள்.

உடனடி தொழில் விரித்திச் செய்ய, பலரும் தற்பொழுது நாடி வருவது, விளம்பரம்தான். கூகுள் அட்வர்ட்ஸில் பணம் கொடுத்து விளம்பரம் செய்வதன் மூலம் விரைவாக தனக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்து கொள்கின்றனர்.

சமீபத்தில், லாண்டரிபாய் என்றொரு விளம்பரத்தினைக்கூட நீங்கள் கூகுளில் பார்த்திருக்கலாம். இதுஒர் புதிய ஐடியா, ஆன்லைன் மூலம் தனக்கான வாடிக்கையாளர்களை புதிய ஜெனரேஷன் மக்கள் மூலம் பெற்றுக் கொள்ள ஆன்லைனில் கொடுக்கப்பட்ட விளம்பரம். ஆரம்பத்தில் கொஞ்சம் பணத்தினைச் செலவழித்தாலும், வாடிக்கையாளர்கள் நிறைவாகக் கிடைக்கும் பொழுது வருவாய் அதனை சரிகட்டி நிரந்தர தொழில்வாய்ப்பினைக் கொடுத்துவிடும்.

தொழில் என்று வந்துவிட்டாலோ போட்டிகள் இருக்கத்தான் செய்யும். அதிலும் பல கீவேர்டுகள், 1 டாலர், 2 டாலர் என்று பெரிய கம்பெனிகளால் கூகுள் முதல் பக்கத்தில் பிட் செய்யப்பட்டுள்ளன.

Samsung என்ற கீவேர்டு மொபைல் போனைக் குறிக்கும். நீங்கள் சம்சங் மொபைல் விற்பனை செய்ய, கூகுளில் சேம்சங் என்றுத் தேடும் நபர்களைப் பார்வையாளர்களாப் பெற அட்வர்ட்ஸில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றுச் சொன்னால், ஏற்கனவே இத்தொழிலில் இருக்கும் அமேஷான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற பெரிய நிறுவனங்கள் செய்துள்ள பிட் காட்டிலும் அதிகத்தொகையிலான பிட் கொடுக்கும் பொழுது மட்டுமே முதல் இடத்தினைப் பிடிக்க முடியும்.

கூகுள் அட்வர்டில் சில முக்கிய கீவேர்டுகள் 60 டாலர் கூட பிட் செய்யப்பட்டுள்ளது. ஒர் டாலர் இரண்டு டாலர் பத்து டாலர் என்பது எல்லாம் இப்பொழுது சர்வ சாதரணமாக அட்வர்டில் பிட் செய்யப்படுகின்றன. ஆகையால் கூகுளில் இடம் பிடிக்க வேண்டும் என்றுச் சொன்னால் அதிகப்படியான தொகையை செலவு செய்யவும் தயாராக இருந்தால், விரைவாகப் தொழில் வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளலாம்.

கூகுளுக்கு மாற்றாக பலதளங்கள் விளம்பர வாய்ப்புகளை வழங்குகின்றன. நமது தொழிலுக்கு ஏற்ப பிற வாய்ப்புகளையும் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
Image

ஆன்லைன் பிசினஸ் வீட்டிலிருந்தப்படியே செய்ய முடியும் என்றுச் சொன்னாலும், விளம்பரச் செலவுகளை மனதில் கொண்டு நல்ல இலாபம் கொடுக்கும் சேவை அல்லது பொருளை கையாள்வது நல்லது.

ஆன்லைனில் எளிதாக வருவாய் பார்க்க மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் உதவுகிறது. ரூ.8000 செலவில் கேஸ் பீடர் எம்.எல்.எம் புரோக்கிராமில் சேர்ந்து கொண்டால் எளிதாக சோசியல் மிடியாவான பேஸ்புக் & யுடியூப் தளத்தில் விடியோ பகிர்ந்தே வருவாய் பார்க்கலாம். இதற்கு அதிகப்படியான செலவு கிடையாது. வருவாய் வாய்ப்பு நாற்பது இலட்சம்.

கேஸ் பீடர் புரோக்கிராம் ஒர் அணி வடிவம் என்பதால் நம்மோடு உழைக்கவும் உதவும் ஒர் அணி நபர்கள் உள்ளார்கள் என்பதால் எளிமையாக முதலீடு பணமான ரூ.8000 கைப்பற்றிக் கொள்வதோடு, இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கவும் முடியும்.

ஆன்லைன் உலகம் ஒர் பெரிய கடல், அதிக பல வாய்ப்புகள் பணம் சம்பாதிக்க உள்ளன. நல்ல வாய்ப்புகளைச் சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்தினால் கைநிறைய வருவாய் பார்க்கலாம்.

[youtube]https://www.youtube.com/watch?v=fuyIkGKhYdw[/youtube]

நன்றி.
Post Reply

Return to “பணம் சம்பாதிக்கலாம் வாங்க”