பில்லியன் என்பது நூறு கோடி. (1 Billion = 100 Crores)
$ 3.4 Billion = $ 340 Crore = Rs. 22,950 கோடி
3.4 $ பில்லியன் வருவாய் என்பது இந்திய ரூபாயில் இருபத்தி இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது கோடி.
கூகுள் அட்சன்ஸ் தனது வருவாயில் 65% ஐ பப்ளிசர்களுக்கு கொடுக்கிறது. அதாவது, கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப் செய்வோர்க்கான பேமண்ட், கிடைத்த வருவாயான 22,950 கோடியில் 14950 கோடியினை அட்சன்ஸ் ஜாப் செய்வோர்க்கு கொடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடியினை தனது அட்சன்ஸ் ஜாப் செய்வோர்க்கு வழங்கி வரும் கூகுள் கம்பெனி, தனது அட்சன்ஸ் ப்ரோக்கிராமில் பலதரப்பட்ட மாறுதல்களை தற்போதைய நிலையில் செய்துள்ளது.
கூகுள் வழங்கியுள்ள அட்சன்ஸ் வேலை வாய்ப்பினைப் பயன்படுத்தி, பிரபல வெப்சைட் நடத்துனர்கள் பலர் இலட்சக் கணக்கில் மாதந்தோறும் வருவாயாகப் பெற்று வருகின்றனர்.
தனிமனிதர்கள் பலரும் கூகுள் அட்சன்ஸ் ஜாப்பினை வெப் ப்ளாக் மூலம் செய்து வருவாய் பார்த்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை, கூகுள் அட்சன்ஸ் ஜாப்புக்கு மிகப் பெரிய வரவேற்பு ஆன்லைன் வேலை தேடுபவர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், பெற்ற வேலையினை எவ்வாறு செய்வது என்றுத் தெரியாமல், வருவாய் எடுக்க முடியாமல் திரும்பியவர்கள் 90% பேர்.
10 பேர் மத்தியில், பெரும்பான்மையானவர்கள் பேச்சே சட்டம் என்பது நமக்கு நன்றாகவேத் தெரியும். அந்த வகையில், கூகுள் அட்சன்சில் ஆரம்பக்கட்டத்தில் சேர்ந்து பணம் பெற்றவர்களின் ஆதாரங்களைப் பார்த்து, நான் நீ என்று எல்லோரும் ஓடி வந்தார்கள்... ஆனால், வந்து வேலை செய்ய முடியாமல் திரும்பிச் சென்ற பலர், அது ரொம்ப கஷ்டம்பா.... என்று சொல்லிய வார்த்தைகள் எங்கும் நிறைந்ததால், தற்பொழுது கூகுள் அட்சன்ஸ் ஜாப் தேடி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆம், கூகுள் அட்சன்ஸ் ஜாப் என்றதும்... கண்டிப்பா ஆன்லைன் வேலை தேடிய பலர்க்கும் அது தெரிந்திருப்பதால், உடனே அது கஷ்டம் என்று சொல்லிவிடுவதால், அடுத்தக்கட்டமாக அதனைத் தேடிச் செய்வோர்களின் எண்ணிக்கைத் தற்பொழுது குறைந்துவிட்டது.
என்னதான் புதியவர்கள் எண்ணிக்கைக் குறைந்தாலும், கூகுள் தன்னிடம் இருக்கும் பழைய அட்சன்ஸ் பணியாளர்களுக்கு வழங்கி வரும் மற்ற கம்பெனியினைக் காட்டிலும் கூடுதல் தொகையின் காரணமாக, அவர்கள் தொடர்ந்து கூகுளிலே இருந்து வருகின்றனர். ஆக, தனக்குத் தேவையான அனைத்து முக்கியத் தளங்களிலும் கூகுள் தன் காலடியினை வைத்துவிட்டதால், புதியதாக சேர்பவர்களுக்கு பல கண்டிஷனை வைக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், ஒர் குறிப்பிட்ட இணையதளங்கள் தான் மிகவும் பாப்புலராக இருக்கும்.. அதற்குப் போட்டியாக ஒர் பாப்புலரான தளத்தினை எல்லோராலும் கொண்டு வரமுடியாது... அதற்கு என்று பெரிதும் கடினப்பட்டே பாப்புலர் லிஸ்டினைப் பிடிக்க முடியும். ஆக, அவ்வாறு மிகவும் கஷ்டப்பட்டு தளங்களின் ரேட்டிங்கில் தனக்கான ரேட்டிங்காக குறைந்தப்பட்சமாக தினம் 1000 வாசகர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே கூகுளில் ஒரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
கஷ்டப்பட்டு செய்யும் பணிகள் எல்லாவற்றிற்கும் எளிதாகச் செய்ய என்று புதிய வழிமுறைகளை அன்றைய நாள் முதல் இன்றைய நாள் வரையிலும் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறோம். அந்த வகையில், கூகுள் அட்சன்ஸ் ஐடி எவ்வாறு மிக எளிதாகப் பெறுவது மற்றும் மாதந்தோறும் ஒர் பேமண்டினை கூகுள் அட்சன்ஸ் மூலம் சம்பாதிப்பது எப்படி என்ற எளிமையான முறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்குமாயின், இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கூகுள் அட்சன்ஸ் பற்றிய சந்தேகக் கேள்விகள் இருக்குமாயினும் கேட்கலாம், தெரிந்தவைக்கு பதில்கள் கிடைக்கும்.